அக அரசுவின் ஆறு கவிதைகள்
1. மேகம்
ஒரே இடத்தில்
நின்று குளிக்காமல்
நீந்திக்கொண்டே இருக்கிறது
வான் நதியில்
மேகம்!
2. காதல் கல்வெட்டு
கடற்கரையில்
உதிரும்
மணலெழுத்தாய்
உதிர்ந்து
போகுதடி உங்காதல்…
கல்மலையில்
அதிரும்
கல்வெட்டெழுத்தாய்
உறைந்து போகுதடி
எங்காதல்!
3. குருவி
குளித்து முடித்த
சிறகோடு
தெளித்துச்
செல்கிறது
குருவிகள்
குளிர்விக்கும்
அருவிகளை
சுறுசுறுப்பாய் விளையாடும்
சிறுவர்களிடம்!
4. புகைக்கும் வாகனம்
கச்சா
அருந்தி கண்ணீர்ப் புகையைக்
கசக்கிச் செல்கிறது
வேகமாக
திருகிய
மனவேதனையில்
வாகனம்!
5. கருங்கடல்
இருளை தன்னால்
முடிந்தளவு வாரி
இறக்கைக்குள்
அணைத்துத் தழுவி
அரைகுறையாகவே
அனுபவித்து அனுப்பிவிட்டது
கருங்கடல்
கரையில் காதலர்கள் போல…
வைகறையில் விறுவிறுவென வெய்யோன் வந்து
அம்பலப்படுத்தி
விடுவானென!
6. ஆகாயக்கூரை