சால்வே அறிவியல் மாநாடுகள், ஒரு வரலாற்று பார்வை (Solvay Scientific Conferences, A Historical View) Physics (இயற்பியல்) - https://bookday.in/

சால்வே அறிவியல் மாநாடுகள், ஒரு வரலாற்று பார்வை

சால்வே அறிவியல் மாநாடுகள், ஒரு வரலாற்று பார்வை ஆயிஷா இரா நடராசன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியல் மந்திரவாதிகளின் கூடுகை என்று அதை அழைத்தார். பேராசிரியர் மற்றும் தனது நண்பர் மைக்கேல் பிளஸ்சோ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் ஐன்ஸ்டீன் இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்.…
உலகறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய் | World-renowned Indian quantum physicist Shasanka Mohan Roy -https://bookday.in/

உலகறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய்

உலகறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய் (Shasanka Mohan Roy)   தொடர் : 39 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 ஷசங்க மோகன் ராய் உலகம் அறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஆவார். இவர் தற்பொழுது ஜவஹர்லால்…
இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..?

  இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? பாரதமா இந்தியாவா? இந்திய தேசிய பாட நூல் கழகம் இப்போது அவசரம் அவசரமாக மத்திய அரசினுடைய பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்து விட்டு பாரதம் என்கிற பெயரை திணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல்…
ஒரு அறிவியல் எழுத்தாளரை பற்றிய ஆறு கிசுகிசுக்கள் – ஆயிஷா.இரா.நடராசன்

ஒரு அறிவியல் எழுத்தாளரை பற்றிய ஆறு கிசுகிசுக்கள் – ஆயிஷா.இரா.நடராசன்

பிரபல அறிவியல் எழுத்தாளர் லிங்கன் பார்னெட் தி யுனிவர்ஸ் அண்டு டாக்டர் ஐன்ஸ்டீன்(The Universe and Dr. Einstein) என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஒரு முன்னுரை வழங்கினார். அதில் அறிவியல் நூல் என்பது (பொது…
போராளி அறிவியல் நாயகி மேரி கியூரி ( 1867-1934 ) – பேரா.சோ. மோகனா

போராளி அறிவியல் நாயகி மேரி கியூரி ( 1867-1934 ) – பேரா.சோ. மோகனா



155 வது பிறந்த தினம்  கொண்டாடும் கியூரி..

நோபல்..பரிசு
உலகில் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்  கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. ஆல்ஃபிரெட் நோபலின்  1895ம் ஆண்டு உயில்  நிறுவப்பட்டு நோபல் அறக்கட்டளையால்  1901 லிருந்து அறிவியலில் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.. 1901லிருந்து 2017 வரை 923 பேருக்கு நோபல்  பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை  49  பெண்கள்  நோபல் பரிசு பெற்றுள்ளனர். பெறுவதற்கு அரிதான நோபல் பரிசை . மேரி குயூரி மட்டும் இருமுறை  பெற்றுள்ளார் என்றால் அவரின் திறமை மற்றும் அறிவின் பரிணாமம் பற்றி எண்ண வேண்டும். இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை

நோபல் குடும்பம் 
உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. ஆனால் மேரியின் குடும்பம் ஒட்டு மொத்தமும் நோபல் பரிசுகளை  அள்ளிச்  சென்றுள்ளது. என்றால், அது குயூரியின் குடும்பம் மட்டுமே. அவரின் இல்லத்தில் மேரி குயூரி, கணவர் பியூரி குயூரி,  மகள்ஐரீன் மற்றும் பிரெடரிக் ஜோலியட் என ஒட்டுமொத்த குடும்பம் 4 நோபல் பரிசை சுமந்து சென்றார்கள் என்றால்  ஆச்சரியம்தான்நமக்கு .வியப்பில்  விழிகள் விரிகின்றனவிழி பிதுங்குகிறது.

சாதனைப் பெண்
நூற்றாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் மேரி கியூரி. அதுவும் இயற்பியல் மற்றும் வேதியல் என இரண்டு வெவ்வேறு துறைகளில்,
அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண். என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பும் பெருமையும்  சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்த  கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. சிறுவயது முதலே  பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார்

ஏழை மரியா..
போலந்து நாட்டில் 1867 , நவம்பர் 7 ம் நாள் வார்சாவில், “மரியா ஸ்க்லடவ்ஸ்கா (Maria Skłodowska ) என்னும் பெயருடைய மேரி கியூரி ஓர் ஏழ்மையான குடும்பத்தில்   பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவா ஓர் ஆசிரியர் மற்றும் கடவுள் மறுப்பாளர்.  ன்னை  பிரோநிஸ்லாவா .  இவரும்  பிரபலமான ஆசிரியர். மேரி  கியூரியின் அன்னை ஓர் உறைவிடப் பள்ளியை  நடத்தி  வந்தார். மேரி    பிறந்த பின்னர், அந்த வேலையை  அன்னை விட்டுவிட்டார்.

போராட்ட
குடும்பம்.
போலந்தின்சுதந்திரத்திற்கானபோராட்டங்களில்மரியாவின்குடும்பம்பரம்பரைபரம்பரையாகஈடுபட்டதனால்மரியாமற்றும்அவரதுமூத்தசகோதரசகோதரிகள்தங்கள்வாழ்க்கையைவாழமிகவும்அல்லல்பட்டனர்பட்டினிகிடந்தனர்வாழ்க்கைக்கானபோராட்டம்வெல்லமுடியாமல்இருந்ததுஅம்மாவுக்குகாசநோய்இருந்ததால்பிள்ளைகளைதொட்டுதூக்கவேமாட்டார்.மேரிகியூரிக்கு  12 வயதுஆனபோதுஅவரைஅன்னையைகாசநோயின்கொடியகரங்கள்கொண்டுபோயினஉயிர்துறந்தார்அன்னையின்இறப்பால்மேரியின்இளவயதுவீட்டுவாழக்கையைஇவர்துறக்கநேரிட்டது. உறைவிடப் பள்ளியில் இருந்தே படித்தார். சிறுவயதில் மேரிக்கு அற்புதமான நினைவுத்திறனும் அறிவுத்திறனும் இருந்தது.

வேலைக்காரியாக்கிய வறுமை
அப்போது போலந்து  நாடு  ரஷ்ய ஜார் மன்னனுக்கு  அடிமைப்பட்டு  கிடந்தது. போலிஷ் மொழியை  ரகசியமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில்  மேரி இணைந்து    பணியாற்றிஇருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக  பணிசெய்து குடும்பத்தின் துயரைத் துடைத்தார்.   அப்பொழுது அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரிஎன்று சொல்லி,அவர் பணிபுரிந்த  வீட்டின் உரிமையாளர்கள் நிராகரித்தனர்.

 தியாக பிம்பம் மேரி
மேரி  தனது 15 வது  வயதில், ரஷ்ய பள்ளியில், பள்ளி இறுதி நிலையில் தங்க பதக்கம் பெற்றார். மேலே அதிகமாக அறிவியல் படிக்க எண்ணினார். அவரின் குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லைஅவர் முன்னே இரு பெரும் பிரச்சினைகள் பூதமாக நின்றன. 1.மேரி ஆசைப்படும் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க மேரியின் தந்தையிடம்  போதுமான பணம் இல்லை. 2. மேலும் பெண்களுக்கான மேற்படிப்பு போலந்து நாட்டில் இல்லை. என்ன செய்யஒரு முடிவு எடுத்தாக வேண்டும்; தமக்கையும் படிக்க வேண்டும். தீவிர சிந்தனைக்குப் பின்னர்  ஒரு முடிவு எடுத்தார்.  அதுதான்  தமக்கையை தான் படிக்க வைப்பது. மேரி , தனிக்குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என தீர்மானமாக ஒரு  முடிவு எடுத்தார். அதன்படி . அவரது அக்கா, புரோன்யா (Bronya )  பாரிசுக்குப் போய் மருத்துவம் படித்தார். .ஆனால் மேரியால் தான் விரும்பியபடி அவரால் உயர்கல்வியை எளிதாகப் படிக்க  .முடியவில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், படித்து தீர்த்தார்அறிவுப் பசி தீர்க்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் என படித்து படித்து தள்ளினார்.  ஏராளமாய் படித்தார்.

வாழ்க்கை தந்த பிரான்ஸ்
இப்படியே தமக்கைக்காகவும், எதிர்கால தனது படிப்புக்காகவும், மேரி இரண்டு வருடங்கள் பணி புரிந்து பணம் சேர்த்தார். பின்னர் அங்கேயே போலிஷ் மாணவர்களுக்கு நடத்தப்படும் , ஒரு சட்டத்திற்கு புறம்பான ஒரு சுதந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கேயே, அறிவியல் உரைகளைக் கேட்டார். ஆய்வக செயல்முறைகளையும் செய்து பார்த்தார். போலிஷ் கலாச்சாரம் கற்றுக்கொள்வதும், ஆய்வக அறிவியலையும். செய்வது. இரண்டுமே ரஷ்ய அதிகாரிகளுக்கு பிடிக்காது. எனவே  யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இவற்றை மேரி செய்தார். பறக்கும் பள்ளிக்கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி. பின்னர் 1891, நவம்பர் மாதம், 24ம் வயதில் பிரான்ஸ் நோக்கி மேற்படிப்புக்கு போனார். அங்கேயும் இவரது வறுமை துரத்தியது. பசியோடும்,பட்டினியோடும். வறுமையோடும் போராடிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். அவர் படித்த பல்கலைக்கழகம் மிகவும் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகம். அங்கே வேதியல், இயற்பியல், மற்றும் கணிதம் இவைகளை பிரென்சு மொழியிலேயே போதித்தனர். மேரியின் திறமையால், அவர் வெகு விரைவில் பிரென்சு

பனியிலும் பசியிலும் படிப்பு 
பாரிசில் கொஞ்ச காலம் தமக்கை மற்றும் அவரின் கணவருடன் இருந்தார். பின்னர் மேரி, தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்காலம் பனிப்பொழிவு வாட்டி வதைத்து விடும். வறுமை மிகுந்த  மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. . சூடாக்கப்படாத  அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய்  பாய்ச்சியது.உடல்  விறைத்தது.  சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். பசியினாலும் கூட. அங்கே காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார்.அத்துணை வேதனை, கஷ்டம், ஏழ்மையிலும்,1893 கோடையில், தனது 26 ம் வயதில், அந்த பல்கலையில்  மேரி முதல் மாணவராக வந்து சாதனை படைத்தார். அவரின்   கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது. அவருக்கு கல்வியின் மேல் உள்ள காதல் அவரை மேலும் படிக்க தூண்டியது. 1894ல்  வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். ஆனால்  வீட்டு நினைவு வாட்டியது. போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும் போதெல்லாம் வேலை தேடினார். போலந்து நாடு மேரிக்கு படிப்பும்  தரவில்லை. பணியும் தரவில்லை.

காதலால் மோதப்பட்ட மேரி
மேரி குயூரி  மீண்டும் பாரிஸ் திரும்பினார். ஆராய்ச்சிக்கு  பதிவு செய்தார்முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வுபேராசிரியர் பியரியை சந்தித்தார் ;அப்போதே  பியரி  குயுரி (1859-1906,) மேரியின் மனத்திலும்  வாழ்க்கையிலும் நுழைந்தார்பியரி மேரியிடம் தன் அன்பை பகிர்கிறார். ஆனால் மேரிக்கு காதல் எல்லாம் தனது தாய் நாட்டின் மீதே இருந்தது.. எனவே தான் போலந்து போய் அங்கேயே வாழப்போவதாக பியரியிடம் சொல்கிறார் மேரி. மேரி   சொன்னதும், பியரி தானும் அவருடன் போலந்துக்கு  வந்து வாழ்வதாக வாக்களிக்கிறார். இடையில் மேரி  போலந்துக்கு சென்று  வேலை தேடுகிறார். அங்கே அவர் பெண் என்பதாலேயே அவருக்கு அந்த  பல்கலையில் பணி தர மறுப்பு வருகிறது. வேதனையுடன் பாரிஸ் திரும்புகிறார மேரி .

பிரான்சின் முதல் முனைவர்..
பாரிசுக்கு வந்த மேரியின் ஒரே ஆதரவு பியரிதான்பியரிக்கு காந்தவியலில் கட்டுரை எழுத உதவுகிறார்.அந்த கட்டுரைதான்,   பியரி ஆய்வு முனைவர் பட்டம் பெற பெரிதும் உதவுகிறது. பியரி முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் ஆகிறார். இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சிதான்.  இருவருக்கு இடையில் எல்லா வேதியலும் ஒத்திருந்தன .   அறிவியல் ஆர்வமே இருவருக்கான இணைப்பு எளிமையாக திருமணம்  நடந்தது.  . வாழ்க்கையில் காதல் பரிணாமமும் பரிமாணமும் போட்டியிட்டன. அவர்கள் இருவருக்கும் இரண்டு விருப்பமான பொழுது போக்குகள் இருந்தன.. மிதிவண்டி பயணமும், நீள் நெடிய பயணங்களும், இருவரின் இஷ்டமான பொழுதுபோக்குகள். இவை  இருவரின்  நெருக்கத்துக்கு அதிக நெருப்பூட்டியது. காதல் மிகுந்தது. ஆனாலும் மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக்கொண்டு இருந்த ஆய்வகத்தில்தான் இருவரும்  ஆய்வுகள் செய்தார்கள். அங்கிருந்து தான் மேரி முனைவர் பட்டம் பெற்றார். பிரான்சில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் மேரி கியூரி தான்.

நோபல் வந்தது இருவருக்கும்
இன்னொரு விஞ்ஞானி பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு  சொன்னார்.. முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு  செய்தார்.அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை பியரி  ஒதுக்கினார். அணுக்கருவில் இருந்தே  கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி உலகைவியப்பில் ஆழ்த்தினார். இந்த மூவருக்கும்தான் 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்த

போலந்து -பொலோனியம்
பிட்ச்ப்ளேண்டே(Pitchblende) எனும் வேறொரு   உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை மேரியும் கியூரியும்  கண்டறிந்தனர் . அதை உண்டாக்கும் தனிமத்தையும் கூட கண்டறிந்தனர்அது புதுவகை தனிமம் என்பதால் அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். மேரி தான் பிறந்த நாட்டின் மேலுள்ள காதலால் பொலோனியம்என  பெயரிட்டார்.பின் கதிரியக்க பொருட்களிலிருந்து   ரேடியம் எனும் தனிமம்  கண்டறிந்தனர்.ஆனால் நோபல் கமிட்டி, முதலில் பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் இருவருக்கு மட்டுமே நோபல் தருவதாக சொன்னது. ஆனால் பியூரி, மேரிக்கும் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று வாதாடி அவருக்கு வாங்கித்தந்தார். பின்னர்  மேரிக்கு  நோபல் பரிசு கிடைத்தது  1903ல் மேரிக்கு முனைவர் பட்டமும், நோபல் பரிசும் ஒருங்கே கிடைத்தன.; 

1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு  ,மேரி  கியூரி,, பியூரி கியூரி மற்றும் பெக்கொரல்  ஆகிய மூவருக்கும்  கிடைத்ததுநோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி  கியூரி தான்அதை வாங்கக்கூட மேரி கியூரி தம்பதியருக்கு  நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் தம்பதியர் இருவரும்.  பின்னர் ஆய்வின் மூலம்  கேன்சர் சிகிச்சைக்கு ரேடியம் பயன்படுத்தலாம் என்றும் மேரி  தெரிவித்தார்.

மேரியின் ரேடியமும் முதல் உலகப்போர்
முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம்பட்ட போர்வீரர்களைக் காப்பாற்றப் பெரிதும் பயன்பட்டன.போர்முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன.

போலந்தில் மேரி சிலை
மேரியின் கணவர் பியரி.பின்னர்  ஒரு விபத்தில் இறந்து போனார். அதன்பின் மேரி  தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார் அதற்கும் வேதியியலில் 1911ல் நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள அப்படியே கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை மேரி பிரான்ஸ் பலகலைக்கழகத்தில் ஏற்றுக்கொண்டார்.. பிரான்சில் பேராசியர் பதவி பெற்ற முதல் பெண் மேரி கியூரி. பிறகு மேரி கியூரிக்கு படிக்க, பணிபுரிய இடம் தரமாட்டேன் என்று சொன்ன போலந்து பல்கலைக் கழகம், மேரி கியூரியின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை மேரியுடையதுதான். ரேடியத்துக்கு பலர் காப்புரிமை பெறச்சொன்ன  போதும், அதனை மறுத்து  எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் மருந்தில் நான்  பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி.

 மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார்.

கண்டுபிடிப்பே பாதிப்பான துயரம்
கதிரியக்கத்தின்  ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர்.அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரிகியூரி இறந்தார். அம்மா இறந்ததற்கு அடுத்த வருடத்தில் ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியோடு இணைந்து 1935ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.

 இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே  கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்-  1956. மார்ச் 17

  இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர்களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற ஐரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார். நோபல் பரிசும் பெற்றார்.

கடவுள் மறுப்பாளர் மேரி
மேரி குயூரி வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். மேரி  கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார்.

67  வயதில்  1934 ஆண்டு  மேரி இறப்பை  தழுவினார்.. அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளாமல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான் ;ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த சமூகப் போராளி 

முறிக்கப்படாத சாதனை
ஆணாதிக்கம், சட்டதிட்ட இடையூறு, சமுதாயக் குறைபாடு, நோபல் கமிட்டியின் ஒரவஞ்சனை எனப் பல தடைகள் இருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வகையில் ஒரு கதை நோபல் வரலாற்றில் உண்டு. அதுதான் மேரி கியூரியின் பெரும் சாதனை. இருவேறு அறிவியல் துறைகளுக்காக விருது பெற்ற இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவே இல்லை 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
மேரியின் ஆய்வு அவரது வாழ்நாளில் அப்பழுக்கற்றது, எல்லையற்றது. அவர் மனித சமுதாயத்துக்கு மட்டும் அவரது பணியை  அர்ப்பணிக்கவில்லைஅவர் தனது எல்லா வேலை ஆய்வுகளையும், ஓர் நியாய தர்மத்தின் அடிப்படையிலேயே தார்மீக தரத்துடன் இருந்தது. இவ்வளவையும் மேரி ஆத்மார்த்த உணர்வுடனும், நல்ல உடல் மற்றும் உள்ள வலுவுடனும், நீதி உணர்வுடனும், செய்து முடித்தார். இப்படி அனைத்துவித அரிய நல்ல குணங்களும் ஒருவரிடம் அமைதல் அரிதுALBERT EINSTEIN

“I believe that Science has great beauty. A scientist in his laboratory is not a mere technician; he is also a child confronting natural phenomena that impress him as though they were fairy tales.”—Marie Curie

Marie Curie quotes
We must believe that we are gifted for something and that this thing must be attained.” “Nothing in life is to be feared; it is only to be understood.” “I am one of those who think like Nobel, that humanity will draw more good than evil from new discoveries.”

Sklodowska (Skłodowska) என்பது சந்திரனின் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய சந்திர பள்ளமாகும். மேரி கியூரிக்கு பெருமை சேர்க்க இப்பெயர் இடப்பட்டுள்ளது.

– பேரா.சோ. மோகனா

நூல் அறிமுகம்: நாகூர் ரூமியின் ’மாற்றுச் சாவி’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: நாகூர் ரூமியின் ’மாற்றுச் சாவி’ – து.பா.பரமேஸ்வரி




இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த உடலியல் என்பது உடல் மனம் இரண்டும் ஒரு சேர வடிவமைக்கப்பட்ட அற்புதம். உடல் தனியே மனம் தனியே பிரித்துப் பகுத்துப் பார்ப்பது அறிவின்மை. மனதின் சமநிலைக் குலைவு உடலிலும் உடல் தொந்தரவுகளின் தாக்கம் மனதிலும் பிரதிபலிக்கும். இதுவே ஒருங்கிணைந்த உடலியல். மனதின் திடவடிவம் உடல். உடலின் சூட்சம அரூபம் மனம். கண்களால் பார்க்கவியலா உடல் மனம்.

மனம் அதுவொரு  ஒரு மந்திரவாதி. உடலை கையாள்வதைக் காட்டிலும் மனம் என்னும் மகானை நெறியாகக் கையாள்வதே பிரச்சனைகளற்ற வாழ்விற்கான ஒரே வழி. நம்மைத் தொடரும் அனைத்துப் பிரச்சனைகளும் பூட்டானால் தீர்வாக சாவிகள் பல உண்டு என்ற தேடலிலேயே நம் வாழ்நாள் கழிகிறது. இவ்வனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாக ஒரே ஒரு ஒற்றைச்சாவி மாஸ்டர் கீ  கிடைக்குமானால் அந்த மாஸ்டர் கீ மாற்றுச் சாவியைக் கண்டடைய நாம் எதையும் செய்யலாம்.

“மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்..” திருமூலர் திருமந்திரம்.

நம் மனதை நாம் செம்மையாக சீர்மையாக  சிறப்பாக சமநிலையாகக் கையாளத் தெரிந்துக் கொண்டால் மனதை அடக்க நாம் மேற்கொள்ளவிருக்கும் எண்ணற்ற பயிற்சிகளும் மருத்துவங்களும் ஆன்மீகமும் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் அவலம் ஏற்பட வாய்ப்பிருக்காது. அப்படியானால் மனதை எவ்வாறு கையாள்வது? நோயற்ற மனம் எப்படி வாய்க்கும்?

பிரச்சனைகள் தொந்தரவுகள் தான் நம் மனதை ஆட்டிப்படைக்கும் சாத்தான் என்றால் அவற்றை வெல்லும் வழி தான் என்ன?

தொடர் வெற்றிகளுக்கும் நீடித்த மகிழ்ச்சிக்குமான சாவி நம்மிடமே தான் இருக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் உபாதையை வழங்கும் சாத்தானை அழிக்கும் வல்லமையும் மீண்டும் அந்த சாத்தான் மனதில் ஜனிக்கா வண்ணம் மனதைப் பரிசுத்தப்படுத்தும் திறவுகோல் நம்மிடமே உள்ளது. திரு நாகூர் ரூமி அவர்களின் மாற்றுச் சாவி என்கிற இந்த நூலைக் கைக்கொண்டு கட்டுண்டுக் கிடக்கும் அனைத்து பூட்டுகளையும் மாற்றுச் சாவிக் கொண்டுத் திறந்திருங்கள். இந்த நூல் இப்படியான ஒரு மந்திரச்சாவியை உங்கள் கைகளில் வழங்கத் தயாராக உள்ளது.

நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் மனம் பற்றிய தெளிவான பார்வையையும் புரிதலையும், வழங்கப்பட்ட வாழ்க்கையை நமககானதாக்க வழிவகுக்கும்.

அற்புதங்களால் நிரம்பப்பட்ட மனித வாழ்வில் எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது எதை மதிக்க வேண்டும் மதிக்கக்கூடாது என்ற தெளிவான மனநிலைக்குக் கரம் பற்றி அழைத்துச் செல்லும் சில பக்கங்கள், உணர்ச்சிவசப்படாத எதிர்மறை உணர்ச்சிகளின் பிடியில் சிக்காத மனமே வெற்றி பெற்ற மனம் என்கிற போதனையைக் கொண்ட பகுதியாக சில புத்தர் பரமஹம்சர் போன்ற மகான்கள் வாழ்ந்துக்காட்டி உணர்த்திச் சென்ற பொறுமையே வாழ்வின் ஆதாரம் பொறுமை இல்லாமல் நம் கஷ்டத்தை, சந்தோஷத்தை, கோபத்தை, நோயை ஆரோக்கியத்தை, பணத்தை செல்வாக்கை எல்லாம் நாம் வெளிப்படுத்தத் துடிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் வரும் விளைவுகளைப் பற்றிய சம்பவங்கள் நிகழ்வுகளைப் பதிவிட்டுப் புரிதலை ஏற்படுத்திய ஒரு சில பத்திகளும், ஒரு மனிதனை தமது வாழும் காலத்தில் வாழ வைப்பதும் சாகடிப்பதும் அவனது மனமாகவே வாய்த்து விடுகிறது. மனமே வெல்லும் மனமே கொல்லும் என்கிற ஆத்மார்த்த தத்துவத்தைச் சூடியுள்ள அனேகங்களும், கவலை குழப்பம் கோபம் காமம் அச்சம் எரிச்சல் பொறாமை போன்ற எதிர்மறையான எண்ணங்களை நம் மனம் என்னும் குப்பை தொட்டிக்குள் கொட்டினால் கூட்டினால் மனம் என்னும் இந்த மாயக் குப்பைத் தொட்டி தேவையற்ற உணர்ச்சிகளைப் பல்கிப் பெருகச் செய்திடும். நம் மன சமநிலையை குலைத்து நிரந்தர நிர்பந்த நோயாளி மனநிலைக்குத் தள்ளிடும் என்கிற நிதர்சனங்கள் பலவும், தெளிவான மனதிலேயே அனைத்து தீர்வுகளுக்குமான அறியப்படாத கதவுகள் திறக்கும், உணர்ச்சிவசப்படும் மனத்தால் எந்த ஒரு பிரச்சனைகளுக்குமான தீர்வைக் கண்டடைய முடியாது, உணர்ச்சி வசத்திலிருந்து நாம் வெளியில் வர முடிந்தாலொழிய மனதில் புதிய சிந்தனைகளின் தோற்றம் நிகழும் என்கிற மனதின் படிப்பினைகள் சில வரிகளாகவும், ஒரு மனிதனின் கோபம் இன்னொரு மனிதனை காயப்படுத்தும், ஆனால் அது கோபப்படும் மனிதனுக்கு ஒருவகையில் வெற்றி என்று கருதினாலும் கோபமானது கோபப்படும் மனிதரையும் நிச்சயமாக பாதிப்புக்குள்ளாகும் என்கிற ‘பார்க் ட்வைனின்’ பதிவைச் சுட்டிக்காட்டிய சில இடங்கள், கோபம் நம்மை அதன் அடிமையாக்கி விடும் அதே சமயம் தார்மீகமான கோபமும் அவசியம் வர வேண்டும்; அநியாயத்தை அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுந்த கோபம் ஒருவகையில் நியாயமானது என்றும் இவ்விரண்டு கோபங்களுக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்றும் முட்டாள்களின் இதயத்தில் தான் கோபம் குடியிருக்கும் என்கிற ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்’ சொல்லாடலோடு பற்பல பேரறிஞர்களின் பொன்மொழிகளும் தனக்குள் உள்ளொடுக்கிய நூலாக, கோபவுணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், கோபம்  ஏற்படும்போது மனதையும் செயலையும் கையாலும் நெறிகளைப் பதிவுகளாகக் கொண்டும் என கொட்டிக்கிடக்கும் பொற்குவியல்களாக நூலெங்கும் மனிதவாழ்வின் துயரங்கற்ற பாடங்களும் போதனைகளும் அத்யாயம் ஒவ்வோன்றிலும் ஆண்டு வருகின்றன.

ஒவ்வோர் மனிதவாழ்விலும் மனதை சமநிலையுடன் ஆள்வதற்கான வெற்றி விதிகளாக நாம் நமது தவறுகளுக்கான தோல்விகளுக்கான காரணங்களை வெளியில் தேடிக் கொண்டும், உள்ளே அகத்தில் மாறாவிட்டால் வெளியே புறத்தே நம்மைச் சுற்றிய சூழ்நிலைகளில் எந்தவித மாற்றத்தையும் உணர முடியாது என்கிற மற்றொரு விதியுடன் நமது இந்த அற்புத வாழ்வின் நோக்கம் நமக்குத் தெரிந்து விட்டால் அதை உடன் எழுதி வைத்துக்கொண்டு தினம் அதை வாசித்தால் நமது ஆழ்மனதில் இங்கு வந்த நோக்கத்திற்கான வாழ்வு மெல்ல மெல்ல வெற்றி காணும். நம் வாழ்வின் மீதும் படைப்பின் பெரிது சார் செயலூக்கத்தின் மீதும் அடர் நம்பிக்கை வைத்து பிரபஞ்ச விதிக்குட்பட்டு வாழ்ந்தால் அந்த நம்பிக்கை பிறருக்கு சில நேரம் பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றலாம்.ஆனால் நாம் அவற்றை மனதில் அடாது ஏற்றுக் கொண்டோமேயானால் அவை நம்மைப் பொருத்தவரை உண்மையாகிவிடும்.

அவை நம் வாழ்க்கையாகவும் பரிணமிக்கும் என்ற பிரபஞ்ச நான்காம் விதிக்கும், ஒத்த விஷயங்கள் ஒத்த விஷயங்களை நோக்கி இழுத்துக்கொள்ளும் என்கிற ஈர்ப்பு விதி உருவாக காரணம் இயற்கை விதியின் வழி நடத்தலே அதாவது நல்லது நல்லதையும் கெட்டது கெட்டதையும் விரைவாகவும் இயல்பாகவும் தம்முடன் இணைத்துக் கொள்ளும் என்பதே ஐந்தாம் விதி உணர்த்துகிறது. நம்மால் முடியாது என்று நம்பி விட்டால் ஆண்டவனே உதவினாலும் நம்மால் முடியவே முடியாது. ஒரு துளி கடல் நீரில் கடலின் அத்தனை குணங்களும் இருப்பது போல நமக்குள் எல்லாம் இருக்கிறது அதை உணர்ந்துக் கொள்வது தான் நாம் யார் என்பதை புரிந்துக் கொள்ள வழி வகுக்கும்.}

ஆறாவது விதியானது மற்றவர்களை வெறுப்பதும் நம்மை நாமே வெறுப்பதும் ஒன்றுதான் என்கிற உடல் மனம் சார்ந்த படைப்பின் அடிப்படையை விரியப்படுத்துகிறது. நாம் அடுத்தவரை வெறுத்தால் நமக்குள் உள்ள கோடிக்கணக்கான செல்கள் நம்மை வெறுக்க ஆரம்பித்து விடும் என்ற உடலறிவியல் நமது முன்னோர்களின் மெய்ஞானத்தை நிரூபிக்கிறது. அதாவது பகைவரையும் நேசி என்பதே கண்ணுக்குத் தெரியாத எல்லாமே கண்ணுக்குத் தெரிபவற்றை விட கற்பனை செய்ய முடியாத அளவு சக்தி வாய்ந்ததாகவே உள்ளன. காற்று மின்சாரம் ஏன்… நாம் வணங்கும் கடவுள் உட்பட புறக்கண்களுக்கு புலப்படாத அனேகங்கள் இந்த பிரபஞ்ச வெளியில் நிரம்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இறுதியான ஏழாவது விதியாக நூலின் நடுப்பக்கங்கள்  மனித வாழ்வை எளிமைப்படுத்துகின்றன.

தொடரும் சாவிகள் மனம் பற்றி நாகூர் ரூமி அவர்களின் எளிமையான விளக்கங்கள், சாவிகளின் ஆய்வுகளும், கண்டுபிடிப்பும்,  பயன்பாடுகளும் புரிதல்களும் என அனைத்தும் மனித மனம் அதை செம்மைப்படுத்தவே ஆக்கிரமித்துள்ளன. அந்த மனதை உணர்ந்து விட்டால் நமது ஜீவிதம் அர்த்தம் கண்டு விடும். உடலை மாற்ற முடியாது; நிறத்தை உயரத்தை முகத்தை என ஒரு முறை பிரபஞ்சத்திடமிருந்து வழங்கப்பட்ட நமக்கானதை ஒருபோதும் மாற்ற இயலாது. ஆனால் ஒன்றை மாற்றினால் எல்லாமே சுற்றியுள்ள நெருக்கடியான சூழல்களை மாற்ற முடியும் என்கிறார்  ஆசிரியர்.

அதுதான் மனம்.

அப்படியான மனதை நிதானமான நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு தியானம் தான் சிறந்த வழி என்கிறார் நாகூர் ரூமி.

தியானம் மனதை அமைதிப்படுத்தும். உடலையும் மனதையும் நிதானம் அடையச் செய்யும். நம்மைச் சிந்திக்க விடாது. எண்ணங்களற்ற வெறுமையில் மனம் சில கணங்கள் இருக்கும். மனமற்ற நிலை சில கணங்களுக்கு உண்டாகும். இரண்டிற்கும் இடையில் வருகிற ஏதுமற்ற கணங்களை உண்டு செய்யும். நாம் யார் என்பதை உணர்த்தும். அந்த நிலைக்குப் பழகி விட்டால் நன்மைகள் நிரந்தரமாகும் என்கிறார் ஆசிரியர்.

இறுதி பக்கங்கள் தியானத்தின் வழியே அற்புதமான மாற்றுச் சாவியை வழங்கி நமது பிரச்சனைகளுக்கான பூட்டை உடைத்து மனம் என்னும் திராபகக் கதவை இலகுவாகி திறந்து விடுகிறார்.

வாழ்வில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன.நாம் சரியான மனிதராக இருக்கும் பட்சத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாக மாறக் கூடும். மனிதன் செய்யும் எந்த காரியமும் இறைவணக்கத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதாவது எந்த காரியத்தையும் இறை வணக்கமாக ஒரு தியானமாக மாற்ற முடியும். இதையே நம் முன்னோர்கள்

“செய்யும் தொழிலே தெய்வம்.” என்று எளிமையாக நம்மை வழி நடத்தி வாழ்க்கைக்கான பாடத்தை கற்பித்தனர்.

தியானம் என்றால் பெரிதாக தவம் யோகம் வேள்வி என்பதல்ல. புத்தர் கூறியது போல மூச்சு விடுவதும், சாப்பிடுவதும், அமருவதும், நடப்பதும் இன்னும் நாம் அன்றாடம் அனிச்சையாய் மற்றும் இச்சையாய் செய்யும் இதர தியாதிகள் தியானத்திற்கு உட்பட்டவையே. அதாவது மூச்சு விடும் போது மூச்சு மட்டுமே விட வேண்டும் உட்காரும்போது உட்கார மட்டுமே சாப்பிடும் போது சாப்பிடுவது மட்டுமே நடக்கும்போது நடப்பது மட்டுமே என ஒவ்வொரு செயல் நாம் செய்யும்போது முழு ஈடுபாட்டுடன் ஒற்றை சிந்தனைக்குரிய கவனத்துடன் செயல்படுத்தினால் தனியே தியானம் என்பது ஒன்று அல்ல. இங்கு திரு மௌலானா அலாவுதீன் ரூமி அவர்களின் பொன்மொழியை சுட்டிக்காட்டும் ஆசிரியர் மனிதன் செய்வதை எல்லாம் மனிதக் குரங்கும் செய்யும். ஆனால் அதனால் அது மனிதனாகி விட முடியாது. அதேபோல் பண்படுத்தப்படாத மனம் அவிழ்த்துக் கொட்டப்பட்ட கடுகு பொட்டலம் போலத்தான் உள்ளது ஒரு நிமிஷத்துக்குக் கூட மனதை ஒரு விஷயத்தில் நிறுத்தி வைக்க முடியாது. ஒரு சில வினாடிகளில் மனதுக்குள் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடுகின்றன .அவற்றில் பெரும்பாலானவை எதிர்மறையான எண்ணங்கள் தான் என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
ஆக, தியானம் என்பது ஒன்றும் தனியே அவதானத்திற்குட்பட்ட மிகைப்படுத்திக் கூடிய பெரிய விஷயம் அல்ல என வலியுறுத்தும் ஆசிரியர், அதேசமயம் மனதைப் பண்படுத்த ஒரு சில எளிய பயிற்சி முறைகளையும் கற்றுத் தருகிறார். தியானத்தின் அடிப்படையான மூச்சுப் பயிற்சியே நாம் செய்ய வேண்டிய முதல் பயிற்சி என்கிறார் ஆசிரியர். அதாவது சுவாசித்தலை கவனமாக இயல்பாக கவனித்தாலே மிகப்பெரிய தியானம். அவ்வாறு நாம் மூச்சை கவனிக்கும் சமயம் எண்ணங்கள் ஓட்டங்களாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றை சற்றும் பொருட்படுத்தாது கடத்தி விட வேண்டும். மெல்ல மெல்ல மூச்சில் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் அவை யாவும் வடிகட்டப்பட்டு மனம் எண்ணங்களற்ற தெளிந்த நீரோடையாக மாறும். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தப் போராட வேண்டிய அவசியம் இல்லை. அது நமது வேலையும் அல்ல என்கிறார் நூலாசிரியர். மூச்சுப் பயிற்சி துவங்கி ரியாலத் ஒன்று முதல் 8 வரையிலான தியானத்தில் ஒவ்வொரு படி நிலையாக விளக்குகிறார் ஒன்பதாவது அத்தியாயத்தில்.
இறுதியான ரியாலத் 8 இல் முறையே ஆல்ஃபா தியான முறை என்ற நமது வாழ்க்கையில் மூச்சு, காற்று, தண்ணீர், நெருப்பு, பூமி, ஆகாயம் என இலவசமாக வழங்கிய படைப்பூக்கம் ஆல்பா என்னும் இந்த அற்புதமான மனநிலையையும் இயற்கையாகவே இயல்பாகவே இலவசமாக வழங்கியுள்ளது என்கிறார் ஆசிரியர்.
இவ்வாறாக ஆல்பா தியான முறையை நமக்கு படிப்பினையாக வழங்கும் ஆசிரியர் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவிடவும் மறக்கவில்லை. எந்த விழிப்புணர்வுடன் ஆல்ஃபா தியானத்திற்குள் நுழைந்தோமோ அதே விழிப்புணர்வுடன் அதை விட்டு வெளியில் வரவேண்டும். ஏனெனில் நாம் யாருக்கும் எதற்கும் அடிமை அல்ல. மனிதனுக்காக தான் ஆல்ஃபா. ஆல்ஃபாவுக்காக மனிதன் அல்ல. இதை மறக்காமல் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
உலகில் பிராணயாமா, கம்யமா, யோகா என பற்பல தியான முறைகள் அவரவர் வழிபாட்டு முறைக்கும் மதம் சார்ந்தும் மதம் அல்லாதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை யாவும் ஒரு மதம் சார்ந்த வழிமுறையாக அல்லாது உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாக இன்றைய காலகட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அசலில் இதன் தாத்பரியம் என்பது வேறு. சித்தர்களும் புத்தர்களும் தியானத்தை அணுகிய முறையே அலாதியானது. மதம் என்ற மதம் எப்போது இதற்குள் நுழைந்ததோ ஒவ்வொரு மதத்தினரும் இதை அறிவியலாக உடலியலாக மன ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகக் கொள்ளாமல் தத்தம் இறைச்சார்ந்து அணுக முற்பட்ட போது தியானம் என்பது ஒரு கட்டாயத் திணிப்பாகவே மதம் சார்ந்த வழிபாடாகவே மாறிப்போனது. ஆனால் அதில் தியானம் என்கிற நமது ஒருங்கிணைந்த ஒத்திசைவான செயல்களை உணர்த்த செம்மை படுத்த சீராக்க ஞானிகள் ஞானம் பெற்றனர். மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இயற்கையின் அசல் நிலைக்கு வந்து சேர்ந்தனர்.
தியானம் கற்றால் ஞானியாகலாம், தண்ணீரில் நடக்கலாம், காற்றில் மிதக்கலாம், பறவைகளைப் போல் பறக்கலாம் என்கிற மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட அசாத்தியங்கள்  செயல்கள் அற்புதங்கள்  பிரபஞ்ச இரகசியங்கள் அறிய முற்பட்டவரா ஞானிகள்…
 அல்லவே….
ஞானிகள் அற்புதங்களை ஒருபோதும் மதித்திரவில்லை என்பதை விட அற்புதங்களில் தங்கள் மனதை அவர்கள் பறிகொடுத்து விடவுமில்லை. எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது எதை மதிக்க வேண்டும் மதிக்கக்கூடாது என்கிற தெளிவு அவர்களிடம் இருந்தது‌ அந்த மனம் மட்டும் நமக்கு வாய்த்து விட்டால் எல்லா பூட்டுகளுக்குமான ஒற்றை மாற்று சாவியைக் கண்டடைந்திட முடியும் என்கிறார் ஆசிரியர் நாகூர் ரூமி இந்நூல் வழியே. நமக்கு போதித்துமுள்ளார்.
இந்தப் புத்தகத்தைக் கொண்டு மனதை ஒழுங்குப்படுத்த பக்குவப்படுத்த நான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் ஒரு தியானமாகவே நினைத்து செயல்படுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி காண முடியும். சிடுக்குகளும் சிக்கல்களும் கொண்ட இந்த மனித வாழ்வை எளிமையாக இனிமையாக ஆனந்தமாக வாழ்ந்து முடித்திட முடியும் என்பதே இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. உடல் மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்து இன்றிலிருந்து நமக்கான சாவியை கண்டடையும் முயற்சியில் இறங்குவோம். வெற்றியை நோக்கிய பயணத்திற்கான வாழ்த்துதலுடன்… நன்றி.
நூல் : மாற்றுச் சாவி
ஆசிரியர் : நாகூர ரூமி
விலை : ரூ. ₹120
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024

Ayesha Era. Natarasan's Newton Kadavulai Nambiyathu Yen Book Review by Thandapani Thendral. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்? – தண்டபாணி தென்றல்



நியூட்டன் – கடவுளை நம்பியது ஏன்? 
ஆயிஷா. இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்

விலை: ₹145.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

வெளிநாட்டுல புதுசுபுதுசாக் கண்டுபிடிச்சு சாப்டுறாங்க. அதுல பெஸ்டா இருக்குற உணவு வகைகள ஒவ்வொரு பகுதில இருந்தும் வரவழச்சு 13 வாழ இலைல மொத்தமா படையல் போட்டு ஏறக்குறைய முனி லாரன்ஸ் மாதிரி உட்கார்ந்து ஒவ்வொன்னா சாப்டா எப்டி இருக்குமோ அந்த சுவையனுபவத்த இந்த புத்தகம் கொடுக்கும்.

என்னடா அறிவியல்னு திங்குறதுல ஆரம்பிக்குறானேனு பாக்காதீங்க. 13 வாழ இலைல வந்து உட்காரப்போர பதார்த்தங்களும் 13புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறந்த 13 அத்தியாயங்கள். ஆக மேற்சொன்ன வரையறை இப்போது தெளிந்திருக்கும்.

முதலில் பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து துவங்குகிறது. பெருவெடிப்பு விசைகள், துகள்கள், உயிர்கள் உருவாகி கோள்கள், சூரியக்குடும்பம், அண்டம் அமைந்த விதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார். இக்கட்டுரையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பு. நியூட்டன் ஏன் கடவுளை நம்பினார் என்று கேட்டால் எல்லாம் அவர் நேரம். ஒருபக்கம் மதம் என்கிற வீச்சரிவாள் இன்னொரு பக்கம் பாலமில்லாத தட் போதிய அறிவியல் முன்னேற்றங்களை அடையாத புதைகுழி. இடையில் மாட்டிய நீயூட்டன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார். ஆனால் இதை ஸ்டீபன் ஹாக்கிங் நொறுக்கினார்.

அடுத்து வேதியியல் புத்தகத்துல வேலூர் கோட்டை மாதிரி ஒன்ன பாத்துருப்போம். அதாங்க தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்த அட்டவணை. எப்படி உயிரியலுக்கு டார்வினோ அதேமாதிரி வேதியலுக்கு நம்ம மெண்டலீவ். முன்னவர் உயிரை அதன் தோற்றம் கொண்டு நோக்கினார். பின்னவர் தனிமங்களைக் கையாண்டார். ஆனா மெண்டலீவ் ஏறக்குறைய தஸ்தாயேவ்ஸ்கி மாதிரிதான். சூதாட்டக் கடன்களை அடைக்க சூதாடி எழுதுனமாதிரி இவரு ஆர்கானிக் பத்தி புத்தகம் எழுதியிருக்கார். கடைசி வாரம் தகவல்களை அட்டவணைப்படுத்தினா நல்லா இருக்குமே, வேலைப்பளுவும் குறையுமேனு யோசிச்சு எழுதியிருக்கார். புத்தகம் வெளிவந்தப்ப அட்டவணைல நிறைய காலி இடங்கள் இருந்துருக்கு. எங்கடா கோட்டைல பாதி செங்கல்ல காணோம்னு வேதியியல் படை கிளம்பித் தாக்க, இனிமே கண்டுபிடிக்குற தனிமத்துக்கு அந்த இடத்த ரிசர்வ் பண்ணிட்டேன்னு சொன்னார். இந்த அட்டவணைல அடங்காத தனிமத்த கண்டுபிடிச்சுட்டன்னு கத்துன பிராங்காயிஸ்க்கு அப்போ தெரியல அதுவும் அந்தக் கோட்டையோட செங்கல்தான்னு. வழக்கம்போல அதற்கான இடத்துல எடுத்து வெச்சாரு மெண்டலீப். அந்த கல் சாரி தனிமம்தான் காலியன்.

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? - ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா.  இரா.நடராசன்) - Bookday

அடுத்து ஐன்ஸ்டீனோட E=mc^2 சமன்பாட்ட பத்தின கட்டுரை. இதை நூலகத்தில் நுழையும் குழந்தை அங்கு காணும் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புதிர்த்தன்மையைக் கண்டறிந்து ஒரேயொரு புத்தகத்தை எடுக்கிறது என்பதன் மூலம் விளக்கியுள்ளார். அதாகப்பட்டது எல்லாரும் தனித்தனியா சோறு குழம்புனு வச்சுட்டிருந்தப்ப ஐன்ஸ்டீன் மொத்தமா அரிசிம்பரும்பாக்கினார். அதுதான் அந்த ஒன்றுபடுத்திப் பார்க்கும் தன்மைதான் ஐன்ஸ்டீனுக்கு மாபெரும் புகழைக் கொடுத்தது.

டார்வினால் மட்டுமே டார்வினாக முடிந்தது ஏன்? இது யாவரும் அறிந்த மீம்ஸின் விதைபோட்ட ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியது. டார்வின் கடல் பயணத்தில் கொண்டுசென்ற நூல்கள். எத்தனை புத்தகங்கள் படித்தார். அவற்றின் பொருண்மை பற்றியும் இருக்கிறது. குறிப்பா ஓரிடத்தில் கிடக்கும் கல், கடிகாரம் கொண்டு டார்வினின் பரிணாமம் பிரிச்சுப் பிரிச்சு வைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ-14,15ன் மூலம் மனிதன் சந்திரனில் இறங்கியது உண்மையா?? என்று கேட்டு உண்மைதான் என்று கொண்டுபோன கட்டுரை முடிக்கையில் நமக்கும் உண்மையா? என்றே தோன்றுகிறது.

அடுத்து கணிதம். பயப்படாதீங்க. எப்படி பிதாகரஸ் தேற்றத்த என்னனு நிரூபிக்க 400வருசமாச்சோ அதேமாதிரி அதோட அடுத்த கட்டமான அதாவது க்யூப் பெர்மட்டோட தேற்றத்த நிரூபிக்க 358வருடங்கள் ஆன கதையத்தான் இந்தப் பகுதி பேசுது.

எப்படி உயிரின் அடிப்படை அலகு டி.என்.ஏவோ அதேமாதிரி நம்மோட மனசுக்கு மூளையோட மென்படலம்தான் அடிப்படை என்கிற கட்டுரை. யாரும் அறிந்த விளையனூர் எஸ். ராமச்சந்திரனின் புகழ்பெற்ற கட்டுரை. அவரின் ஆய்வுகள் பிரதானமாக மூளை பற்றியது. அவருடைய சில நூல்களும் கூட.

இதனைத் தொடர்ந்து எதிர்கால இயற்பியல் குறித்தும் அதில் என்னென்ன கண்டடைய வேண்டி இருக்கு. அதாவது ஐன்ஸ்டீன் மாதிரி தொடர்புபடுத்துனீங்கனா நீங்கதான் ஐன்ஸ்டீன் என்று நம்முன் 5 சவால்களை வைக்கிறது.என் ஏரியாவுக்கு (உயிரியல்) வாங்கயா வாங்கயானு இத கடக்கவேண்டியதாகிடுச்சு. பை த பை எனி பிசிக்ஸ் ஸ்டூடன்ட்ஸ் கேன் டிரை திஸ்.

அப்புறம் பிளாஸ்டிக். ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா?? ஒருபக்கம் நீங்க வந்ததால யானைகளைக் கொன்று தந்தத்துல பூரா பயலும் தனக்குத் தேவையான வெளாட்டு சாமான்ல இருந்து விருந்து சாமான்கள் வரைக்கும் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் முற்றிலும் கைவிட்டதால் யானைகள் பிழைத்தது. இன்னொரு பக்கம் யூஸ் அன் த்ரோ சூழலியல் சீர்கேடு(சூழலியலையும் கவர் பண்ணுவோம்). அன்புள்ள ப்ளாஸ்டிக் மதில்மேல் பூனையாவே இருக்கீங்களே. பீனால் (அதாங்க பெனாயிலு) ஆரம்பிச்சு பாலி வினைல் குளோரைடு அப்புறம் பாலி எத்திலீன் சோ கால்டு பாலித்தீன்னு அசுர வளர்ச்சி. எதிர்காலத்துல பிரமீடுக்கு பதிலா ப்ளாஸ்டிக் சவக்குழி பண்ணுவாங்க பாருங்க.

அடுத்து நம்ம சிதம்பரத்துக்காரர். வெங்கி ராமகிருஷ்ணனின் கட்டுரை. இந்த நூலை ஆங்கிலத்துலயே படிச்சு ரிவ்யூவும் எழுதியிருக்கேன். தேடிப் பாருங்க. X கதிர் மூலம் எப்படி மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் காண்பது எனும் பெர்னார்டு டோரத்தி ஆகியோரின் ஆய்வியல் பயணம்.

அடுத்து இப்ப நாம விண்வெளி வீரர் ஒருத்தர மீட் பண்ணி ஒரு கேள்வி கேட்குறோம். விண்வெளியில புத்தகம் வாசிக்க முடியுமா ? முடியும். இதுபோன்ற கேள்வியும் அதற்கான ஆழமான பதில்களுமே இக்கட்டுரை.

சமீபத்துல ஸ்க்ரோடிஞ்சர் பிறந்தநாள் வந்ததே. இவரோட பூனை எக்ஸ்பரிமண்ட். ரொம்ப ஆர்வத்த கொடுக்கும். டார்வின் தொடாத உயிரற்ற மூலக்கூறுல இருந்து உயிர் எவ்வாறு தோன்றி இருக்கும் என்பதை எழுதினார். குவாண்டமை உயிரியலுடன் இணைத்துப் பார்த்தவர்.
குட்டிச் சாத்தான் மூலக்கூறு வரைக்கும் அலசிறுக்காங்க.

கடைசியா மீண்டும் ஹாக்கிங் எழுதிய கட்டுரைக்கு வருகிறோம். நம் குழும ஜெயராஜ் சார் சொன்னமாதிரி சொல்லனும்னா மெது வடைய பதமா பொரிச்ச மாதிரி இருந்த கருந்துளையோட படத்த பாத்துருப்போம். ஆனா அத போட்டோ எடுக்காததற்கு முன்பே அது எப்படியிருக்கும்னு அச்சு பிசகாம கணித்திருக்கார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அதாவது இந்த 13 கட்டுரைகளும் எடுக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்னனு சொல்லலைனா வாசிப்புக் குத்தமாயிடும்கற காரணத்துனால அதயும் சொல்லிடறேன்

1. The grand design- Stephen Hawking
2. The disappearing spoon- Sam Kean
3. E=mc^2- David Bodanis
4. The God delusion- Richard Dawkins
5. It’s not Rocket science- Ben Miller
6. Fermat’s Last theorem- Simon Singh
7. This Explains Everything -Edited by John Brockman
8. The trouble with physics- Lee Smolin
9. Napoleon’s Buttons- Couteur, Burreson
10. Gene Machine- Venki Ramakrishnan
11. Ask an Astronaut- Tim Peak
12. The Demon in the Machine -Paul Devis
13. The theory of everything – Stephen Hawking

ஆக மொத்தத்துல சொல்லனும்னா இதுவொரு அறிவியல் ஆல்ரவுண்டர்.

-Thandapani Thendral (தண்டபாணி தென்றல்)

மனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்

மனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புகழின் உச்சத்தில் இருப்பவர். கோட்பாட்டு இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் செய்த பணிக்காக என்றென்றும் கொண்டாடப்படுவார். 2. 1879-ம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தேன். சின்ன வயதிலேயே கணிதத்தின் மீதும்…