Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை – Forest owlet | முனைவர். வெ. கிருபாநந்தினி



காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை – Forest owlet

நூற்றி பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை.

தமிழ் நாட்டில் மொத்தம் 14 வகை ஆந்தைகள் உள்ளன. அதில் சிறிய வகை ஆந்தைகளான காட்டுச் சிறு ஆந்தை (Jungle Owlet) மற்றும் புள்ளி ஆந்தை (Spotted Owlet) இரண்டு உள்ளன.

Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
காட்டுச் சிறு ஆந்தை (Jungle Owlet)  (Glaucidium radiatum radiatum) 
Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
புள்ளி ஆந்தை (Spotted Owlet) (Athene brama brama)  (படங்கள் – https://birdsoftheworld.org/)

முதலில் மத்திய இந்தியாவில் கண்டறியப்பட்ட ஆந்தையையும் ஆரம்பத்தில் புள்ளி  ஆந்தை (Athene brama brama) என்று நினைத்தனர், பின்னர் சில மாற்றங்களைக் கவனித்த பிறகே சிற்றினத்தை மாற்றினார். புள்ளி ஆந்தை (Spotted Owlet) வேறு, காட்டு சிறு ஆந்தை (Forest Owlet) வேறு. நாம் தற்போது பார்க்க இருப்பது மத்திய இந்தியாவில் மட்டுமே உள்ள காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை பற்றிய தகவல்களைத் தான்.

காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை கருஞ்சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் புள்ளிகளற்ற உச்சந்தலை மற்றும் பிடரி, லேசான வெள்ளை புள்ளிகளுடன் இருக்கும் இவற்றிற்க்கு   கழுத்துப்பட்டை இருக்காது. புள்ளியாந்தையை ஒத்திருக்கும் ஆனால் அதைவிட அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவையின் அடிப்பாகங்கள் புள்ளியாந்தையை விட சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும்.

Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
காட்டுப்  புள்ளிச் சிறு ஆந்தை – Forest owlet (Athene blewitti) (படம் – https://birdsoftheworld.org/bow/species/brnowl/cur/introduction)

இயற்கை அமைவுகளுக்கும் உயிரினங்களுக்கும் நாம் கடவுளின் பெயர்களை வைத்துள்ளோம்.  ஆறுகளைக் கடவுளாக்கி வைத்துள்ளோம். மயில், குரங்கு, கழுகு, மாடு, புலியை கடவுளுக்கு வாகனம் ஆக்கியுள்ளோம். மொத்தத்தில் இந்த பூமியையே, ‘பூமாதேவி’ என்று சொல்லி வணங்குகிறோம்.

ஆனால் உண்மை நிலை என்னவோ அதற்கு நேர் எதிராகவே உள்ளது. ஆம் ஆற்றில் பிணங்களையும், கழிவுகளையும் மிதக்க விடுகிறோம், பிற உயிரினங்களை விஷம் வைத்து கொலை செய்கின்றோம், யானையின் வழித்தடங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருக்கிறோம், கோவில்களில் யானைகளைப் பிச்சை எடுக்க வைக்கின்றோம், புலிகளை வேட்டையாடுகின்றோம் இதோடு நிற்காமல் நமது சுயநலத்திற்காக, அலங்காரப்பொருட்களுக்காக பல உயிரினங்களை வேட்டையாடுகின்றோம். ஆகமொத்தம் பூமாதேவியையே சிதைத்து ஊனப்படுத்துகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

“பூமித்தாய்னு சொல்லாம ஒரு வேலை பூமி தந்தை” என்று சொல்லியிருந்தால் இயற்கையை இவ்வளவு அழித்திருக்க மாட்டோமோ” என்று 31ஆம் தேதி கால நிலை மாற்றம் தொடர்பாகச் சென்னையில் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது நடக்கும் நிகழ்வுகளும் அதற்கு ஏற்றபடி தான் உள்ளன. இயற்கைக்கும், பெண்களுக்கும் எங்கெல்லாம் புனிதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறதோ அங்கேயெல்லாம் தவறுகள் தாராளமாகவே நடக்கிறது என்றே சொல்லலாம்.

ஆந்தையின் அழிவு

மூட பழக்கத்தால் குருட்டு நம்பிக்கையுடன்,  ஆந்தைகளை  வடநாடுகளில் கடவுளின் பெயரில் கொன்றதன் விளைவு இன்றைக்கு அது அற்றுப் போய்விட்டது. இதில் கொடுமையான தகவல் என்னவெனில் உலகம் முழுவதும் பயன்படுத்தும் அறிவியல் பெயரிலேயே கடவுளின் பெயரை வைத்துள்ளோம் என்பது தான்.

Athene blewitti

Athene என்று பேரினமாக வைத்துள்ளோம்  கிரேக்க மொழியில் புராணக் கதைகளின் அடிப்படையில் அறிவு, போர் மற்றும் கலை ஆகியவற்றுக்கான பெண் கடவுளின் பெயர், இரவின் தெய்வம். ஆனால் மற்றொரு புறம்  கெட்ட சகுனம், சூனியம் என்றும் சொல்லி சட்டவிரோதமாக இதனைக் கையாளுகின்றனர்

blewitti  என்பது சிற்றினம்

blewitti – William Turnbull Blewitt

வில்லியம் டர்ன்புல் பிளெவிட் (1816–1889) மற்றும் அவரது சகோதரர் பிரான்ஸ்  ராபர்ட் பிளெவிட் (1815-1881) ஆகிய இருவரின் பெயரையும் குறிக்கிறது. சகோதரர்கள் இருவருமே பறவைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் பறவைகளின் மாதிரிகள் மற்றும் அதன் முட்டைகளைச் சேகரித்தனர். இருவரும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் புல்ஜார் நெடுஞ்சாலையில் பஸ்னா அருகே உள்ள புஸ்னா-ஃபுல்ஜானில் இருந்து டிசம்பர் 1872 இல் சேகரித்த எஃப். ஆர். ப்ளெவிட்டிலிருந்து பெறப்பட்ட இந்த குறிப்பிட்ட ஆந்தையை ஹியூம் அவர்களுக்கு அனுப்பினர், 1873ஆம் ஆண்டு தான் இனத்தை உறுதி செய்தார் ஹியூம். ஆனால் இந்த மாதிரிகளில் வில்லியம் டர்ன்புல் பிளெவிட் அவர்களின் பெயரை மட்டுமே லேபில்களில் குறித்துள்ளனர்.

Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

(வில்லியம் பற்றி ஹியூம் அவர்கள் எழுதியது)

ஹியூம் சுங்கத் துறையின் தலைவராக இருந்தார். அவருடன் வில்லியமும் சுங்க அதிகாரியாக பணிபுரிந்தபோது, இராணுவத்தில் பணியாற்றிய ராபர்ட்டின் பெயர் கேள்விக்கு உட்படுத்தாமல் இருக்க வில்லியம் தனது பெயரையே குறிப்புகளில் எழுதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவர்கள் இருவருடைய புகைப்படங்களும் எங்கேயும் ஆவணம் செய்யவில்லை. இவர்களுக்குப் பிறகு இந்த ஆந்தையை 113 ஆண்டுகள் கழித்தே 1997ல் மீண்டும் பார்த்துள்ளனர்.

ஏன் இத்தனை அரிதாக இருக்கிறது இப்பறவை?

இப்பறவை ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே வாழ்விடமாகத் தேர்வு செய்து வாழ்கிறது. மத்திய இந்தியா,  மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, யாவல் மற்றும்  புர்னா  வன விலங்கு சரணாலயம், மேல்காட் புலிகள் காப்பகம், டோர்னமல் மலைப் பகுதி ஆகிய இடங்களில், இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் ஆங்காங்கே தென்படும் சிதறி காணப்படுகிறது.

இப்பகுதிகளில் சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதாலும், அதிகரித்துக் கொண்டே இருக்கும் சுற்றுலாப் பயணிகளின் தொல்லைகளாலும் மற்றும் காட்டுத்தீ, சிறிய அணைக்கட்டுகள் கட்டுவது என அனைத்துமே ஒன்று சேர்கையில் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.

Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. - Barn Owl (alba)
கூகை ஆந்தை (Barn Owl)

(படம் – https://birdsoftheworld.org/bow/species/brnowl/cur/introduction)

இப்பறவை பகலில் வெட்டுக்கிளி, பல்லி, தவளை, எலி, சிறிய பறவைகள் ஆகியவையே உணவாக உட்கொள்கிறது. ஒரு முறை அதனுடைய இரு குஞ்சுகளையுமே உண்டதாக பறவை ஆராய்ச்சியாளர் பதிவு செய்துள்ளனர். இதன் உணவுகள் கால நிலை மாற்றத்தால் அருகிவிட்டன என்று சில ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் எரியும் நெருப்பில் என்னை ஊற்றுவது போலச் சூதாட்டம், பில்லி சூனியம், சகுனம்,  மந்திரவித்தை போன்ற மூட நம்பிக்கைகளினால்  லட்சுமி பூஜையின் போது ஆந்தைகளை  விலைக்கு வாங்கி அதனைக் கொன்று பூஜை செய்யும் வழக்கம்  இருப்பதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொருளாதார தேவைக்காக  அங்குள்ள பூர்வ குடியினர் ஆந்தைகளை வேட்டையாடுகின்றனர். இதன் விளைவாகவே இன்றைக்கு அழியும் நிலையில் இவ்வினம் உள்ளது.

தமிழ் நாட்டிலும் கூகையை அரியவகை ஆந்தை என்று தான் இன்னும் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இதுபோன்று  செய்தி எழுதும் அவலநிலையில் தான் நாம்  இருக்கிறோம். ஆனால் கூகையைப் பற்றிப் பரவலாகக் காணப்படும் மக்களிடம் போதிய  விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம்.            Jungle Owl Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

ஆந்தைகள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் அறிந்துகொள்ள இளைஞர்களையும்  குழந்தைகளையும்  ஊக்குவிப்பது அவசியம். இதன் மூலம் நமது இயற்கை சூழலுக்கு ஆந்தை இனங்களின் பங்கு பற்றிய அறிவியல் தெளிவு ஏற்படுத்தப்பட்டால் அதன் மூலமாக ஆந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளைச் சமுதாயத்திலிருந்த அழித்து ஒழிக்கமுடியும்.

குறிப்புகள்

  1. ஹியூம் – Allan Octavian Hume – இந்தியத் தேசிய காங்கிரஸ் நிறுவனர். இந்தியப் பறவைகளில் ஆய்வு செய்தார்.
  2. பேரினம் (Genus) – இது ஒரு உயிரினத்திற்கான வகைப்பாட்டின் அடிப்படை நிலை.ஒரு பேரினத்தின் கீழ் நிறையச் சிற்றினங்கள் உள்ளன.

  3. சிற்றினம் (Species) – உயிரினங்களின் வகைப்பாட்டின் உயிரியல் அமைப்பில் மிக அடிப்படையான அலகு. ஒரே வகை  உயிரினம் இனப்பெருக்கம் செய்து, அதன் சந்ததிகளை உருவாக்குமானால் அவை ஒரே சிற்றினத்தைச் சார்ந்தவை.

தரவுகள்

  1. https://uyiri.wordpress.com/?s=Forest+owlet&submit=Search

  2. https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/2385/3421

  3. https://www.conservationindia.org/articles/the-enigma-of-the-forest-owlet

  4. Hume, A.O. (1873). Novelties? Stray Featheres I(6) (December): 464–483.

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி

Mrs.Hume's Pheasant or Bar-tailed pheasant (Syrmaticus humiae) Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book day

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பட்டை வால் சிங்காரக்கோழி or Mrs.ஹுயும் பெசான்ட் இதன் பெயரிலேயே தனி சிறப்பு உள்ளது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) அவர்களின் மனைவிக்கு (Maria Burnley) மரியாதை செலுத்தும் விதமாக பெயர் வைத்துள்ளனர்.  மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய…