Amma kavithai அம்மா கவிதை

அம்மா (கவிதை) – சாந்தி சரவணன்



காவியம் படைக்க
அவள்
காவியத் தலைவியல்ல!
பாடகி அல்ல !
தாலாட்டு பாடி
என்னை தூங்க வைத்த “பாடகி” எனது அம்மா
ஆசிரியர் அல்ல!
“அ” எழுத சொல்லி கொடுத்த
*ஆசிரியர்’ எனது அம்மா
மருத்துவர் அல்ல!
எனது ஆரோக்கியத்தை காத்த
“மருத்துவர்” என் அம்மா
வக்கீல் அல்ல !
அனைத்து நிகழ்வுகளிலும்
எனக்காக வாதிட்ட
“வக்கீல்” என் அம்மா
சமையல்காரி அல்ல!
ருசிக்க சமைத்து தந்த
“சமையல்கலை நிபுணர்” எனது அம்மா
வளர்பிறையாக நான் வளர
தேய்பிறையாக தேய்ந்து போனவர் என் அம்மா
என் ஒவ்வொரு அணுவிலும் மறைபொருள்
என் அம்மா!
கவிபடைக்க எழுத்துகள்
சத்தமிடுகின்றன