பாதியும் மீதியும் (Pathiyum Mithiyum Book Review)

அன்பழகன் ஜி எழுதிய “பாதியும் மீதியும்” நூல் அறிமுகம்

தன்னை ஓர் தேர்ந்த வாசகன் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் தோழமைக்கு... அருமையான எழுத்து வாய்த்து இருக்கிறது. முகநூல் புத்துயிர்ப்பில் சிறுதூரலும் பெருமழைக்கு முகவரியல்லவா? மானுடத்தின் நேசிப்பை போராட்ட உணர்வை அவலங்களை காலம்... அவர் நன்கு அறிந்த மானுடர்களை நம் கண்முன்னே உலவவிட்டுருக்கிறார் அன்பழகன்…
கவிதை : உள்ளங்கை ரேகையாய் - ஜலீலா முஸம்மில் kavithai ; ullangai regayai - jaleela musammil

கவிதை : உள்ளங்கை ரேகையாய் – ஜலீலா முஸம்மில்

உள்ளங்கை ரேகையாய்... உள்ளார்ந்த மௌனத்தில் உதிரிப் பூக்களாகும் உன் நினைவுகள் மெல்லிய நேசவாசம் கொண்டு மேனி தழுவிப் பின் மேகந்தாண்டிப் பரவும் நிலவை வசீகரம் செய்து நெஞ்சம் நெகிழ்த்தும் விண்மீன்களில் கவிதை நெய்து பிரபஞ்சம் போர்த்தும் உள்ளார்ந்த மௌனத்தில் உன் ஸ்நேகம்…
கவிதா பிருத்வியின் – கவிதைகள்

கவிதா பிருத்வியின் – கவிதைகள்
போரற்ற உலகம்
********************
சமாதானமாக மனம் சொல்கிறது ..
போரற்ற உலகம்
நாட்டின் பெருமை
அணு சோதனைகள் நடத்தும்ம
நாடுகளில்..
யுத்தத்தின் சத்தங்கள்
காதில் ஒலிக்கத் துவங்கிவிட்டன..
குண்டுகளின் சப்தத்தில்
கண்விழிக்கும்
கனவுகள் சிதறுகின்றன.
உலகம் உருண்டை தானே!
அன்பில் விடிந்தால்..
பகைமை விலகும்.
அன்பை விதைத்தால்..
மானுடம் விடியும்.

மானுட உன்னதம்
********************

கரு உரு பெற்று
பிறந்த குழந்தை கற்றுத் தருகிறது
மானுட உண்மையை…
மழலையுடன் பழகிப் பாருங்கள்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்…
இந்த நொடி வாழ்க்கையை
வாழ்ந்து உணர்த்துகிறது பிஞ்சுகள்..
இயற்கையிடம் சரணாகதியாகும்
மனதில் அன்பு உதிக்கிறது..
அன்பின் வழி நடக்கிறபோது
மானுட உன்னதம் மலர்கிறது.

– கவிதா பிருத்வி

Anbin Nimitham Kanithal Poem by Yazh Ragavan அன்பின் நிமித்தம் கனிதல் கவிதை - யாழ்ராகவன்

அன்பின் நிமித்தம் கனிதல் கவிதை – யாழ்ராகவன்
முதன்முதலில்
காய்கறிவாங்க
ஆவலுடன் சென்ற பப்புவுக்கு
ஆயிரம் யோசனைகளை
கூறு கட்டி அனுப்பினாள் இவள்
அன்பின் பாதையில்
அடுக்கிய யாவையும்
அவளைப்போலவே சிரித்தன
பிரியங்களைக் கொடுத்து
பசுமையைப் பெற்றுவந்த
அவளின் அதிகாலை
புன்னகையைப் போலவே
சுவைகூட்டின
கண்ணாடிக்குள் இருந்த
முட்டை விழிகள்
குயுக்தியுடன் சிட்டையை
அகழாய்வு செய்ததில்
நல்லன யாவும்கொசுறாக…..
பப்பு கைகளைவிரித்து
ஓடியபடி காய்கறிகளுக்கு
முத்தமிடத் தொடங்கினாள்

அன்பூ கவிதைகள்

அன்பூ கவிதைகள்

கா கா கா தூங்கமுடியவில்லை காக்கை குருவிகளின் சத்தம் கூட்டியள்ளி மாளவில்லை குப்பைகளையென்று அலுத்துச் சலித்துக்கொண்டு வாசலுக்கு இருபுறமுமாய் நிழலுர்த்திக் கொண்டிருந்த புங்கையையும் வேங்கையையும் கூலிக்கு ஆளமர்த்தி வேரோடு தூரோடு பிடுங்கியெறிந்த எதிர்வீட்டுக்காரம்மா... இரண்டொரு நாளில் அமாவாசைச் சோற்றின் கூவலுக்கு செவி…
நூல் அறிமுகம்: வேட்டுவம் நூறு 144 – அன்பூ

நூல் அறிமுகம்: வேட்டுவம் நூறு 144 – அன்பூ

நூல்: வேட்டுவம் நூறு 144 ஆசிரியர்: மெளனன் யாத்ரிகா வெளியீடு: லாடம் வேட்டையும் வேட்டை நிமித்தமுமான காடறிதலாக கண்ணுக்குள் நிறைந்து கருத்துக்குள் விரியும் பெரும் வனத்தின் கருவறையாகக் கதவு திறக்கிறது... இயற்கையின் அறம் போற்றும் இந்த.. "வேட்டுவம் நூறு".. கவிதை நூல்.…
சிறுகதை: அடையாளம் – அன்பூ

சிறுகதை: அடையாளம் – அன்பூ

வீட்டுக்குள் நுழைந்ததும் அங்குமிங்குமாக அம்மாவைத் தேடிக்கொண்டே அடுக்களைக்குள் புகுந்தாள் நந்தினி. எதிர்பார்த்தது போலவே அங்கு எதையோ கிளறிக் கொண்டிருந்த அம்மாவைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள். "என்ன ஜானூ...என்ன செய்ற. நான் உனக்கொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன். என்னன்னு சொல்லு…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ

நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ

நூல்: கிறுகிறு வானம் ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ.35 புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/kiru-kiru-vanam-s-ramakrishnan/ ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை... அவனது கோணத்தில் இருந்து விவரிக்கும் ஒரு அழகான உலகத்தை ... நமக்குக் கையளித்திருக்கும் எஸ்.ரா.வின்…
சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ

சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ

விடிந்தால் தீபாவளி. வாங்கிய புதுத்துணிகளுக்கெல்லாம் மஞ்சள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவும் மகளும். பையிலிருந்து புது நைட்டியொன்றை உருவியெடுத்து பிள்ளையிடம் தந்து "இந்தாமா... இதுக்கும் ஒரு பொட்ட வைய்யி. உங்கம்மா...நாளைக்கி எப்புடியும் புதுசு கட்டமாட்டா. நைட்டியத் தான் போட்டுக்கப் போறா.. அது...புதுசா இருக்கட்டுமே..."…