ச. இராஜ்குமார் கவிதை Raj Kumar Kavithaikal , Poetry by Raj Kumar - அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடுஇப்போது வீடும் இல்லை அப்பாவும் - https://bookday.in/

ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை   அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடு இப்போது வீடும் இல்லை அப்பாவும் இல்லை .. அங்கே பூரானும் , பல்லியும், தவளையும், குருவிகளுமே வாழ்கின்றன ..! எழுதியவர்: ச. இராஜ்குமார்   இப்பதிவு குறித்த…
Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
சங்கீதா கந்தநின் கவிதைகள்

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்... சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது...   2. அப்பா பாதை முடிந்ததென்று பயணத்தை நிறுத்திக் கொண்டார்... உருண்டோடும் இந்த…
appa

அப்பா…!!! | கவிஞர் ச சக்தி கவிதைகள்

அப்பா....!!!! தன்னுடைய கைக்குக் கிடைத்த யார் யாரோ குடித்துவிட்டு வைத்த ஒவ்வொரு தேநீர்க் குவளையையும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் தன் அப்பாவின் உழைப்பால் நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில் தன் மகனின் கைகளில் மிளிர்கிறது வியர்வையால் அகப்பட்ட‌ புத்தகப்பையொன்று , கவிஞர்…
kavithai ; karisoru - kavignar s.sakthi கவிதை: கறிச்சோறு - கவிஞர் ச.சக்தி

கவிதை: கறிச்சோறு – கவிஞர் ச.சக்தி

ஏண்டா மொவனே இன்னைக்கி ஞாயித்து கிழமடா உனக்கு ஆட்டுக்கறி எடுக்கவா இல்ல கோழி கறி எடுக்கவாடா‌ யென மழுங்கும் என் அப்பனின் சொல்லுக்கு ஏம்பா இன்னைக்கி ஒரு நாளாச்சியும்‌ மாட்டுக்கறி வாங்கிட்டு வாயேம்பா யென நீளும் ‌தன் மகனுடைய ‌சொற்களுக்குள் தான்…
கவிதை : அம்மாவாகிய அப்பா..! - கவிஞர் ச.சக்திkavithai : ammavaakiya appa..! - kavignar sa.sakthi

கவிதை : அம்மாவாகிய அப்பா..! – கவிஞர் ச.சக்தி

மீசை மழித்து பெண் வேடம் தரித்து மேடையேறி ஆடிக்கொண்டிருக்கும் தன் ‌அப்பாவை தூரத்து தெருமுனையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனின் கண்களுக்குள் நிஜங்களாக நிழலாடுகிறது தான் இதுவரை பார்க்காத தன் அம்மாவினுடைய மறு உருவத்தின் பிம்பம் ,
கவிதை : ச.சக்தி kavithai : sa.sakthi

கவிதை : ச.சக்தி



சைக்கிள் ….!

அப்பா
ஆசையாக
வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
பழுதாகி பழைய
இரும்புக் கடையில்
ஒரு மூளையில் கிடக்கிறது

அந்த
சைக்கிளில் தான்
பள்ளிக்கு சென்று வந்தேன்,
அம்மாவுக்காக
மளிகை கடைக்கு
போயிட்டு வந்தேன்,
அக்காவுக்காக
டைலர் கடைக்கு போயிட்டு வந்தேன்,
அண்ணனுக்காக
டிபன் கடைக்கு போயிட்டு‌ வந்தேன்,
என் காதலிக்காக
களத்துமேட்டுக்கு போயிட்டு ‌ வந்தேன்,

எல்லா இடத்திற்கும்
போயிட்டு வந்த
அப்பா வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
போகாத
இடத்திற்கு போய்விட்டது
பழுதடைந்த
பழைய சைக்கிளாய் ……!!!!

கவிஞர் ச.சக்தி
பண்ருட்டி.

அப்பா, சாட்டை படத்துக்கெல்லாம் இதுதான் அடிப்படை மேடையில் நெகிழ்ந்த சமுத்திரகனி

அப்பா, சாட்டை படத்துக்கெல்லாம் இதுதான் அடிப்படை மேடையில் நெகிழ்ந்த சமுத்திரகனி




ஆயிஷா நூல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி.

Samuthirakani Latest Photos And HD Wallpapers - MalayalamFun.co.in

ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதி புத்தக வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள அரும்பு நூல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, தோழர் ஜி. ராமகிருஷ்ணன், எழுத்தாளர் பவா செல்லதுரை உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதியை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட, அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மானசி அதை பெற்றுக்கொண்டார்.

May be art of 9 people, people standing and indoor

விழாவின்போது, ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “ஒரு பெண்ணாக இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் மேடம் கியூரி மட்டுமே. அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, ஹரிஷ் ஸ்பீச்சேர் எழுதிய `அங்கிள் டாம் கேபின்’ என்ற நூல். இது கறுப்பின மக்களின் விடுதலைக்காக பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ரூபி பிரிட்ஜ் என்னும் குழந்தை, கறுப்பின மக்களுக்குகான பள்ளியில் படிக்க மறுத்து வெள்ளையர்கள் பயிலும் பள்ளியில் போராடி படித்து பட்டம் பெற்றது. இப்படி கறுப்பின மக்களுக்கு எதிரான போரட்டத்தில் குழந்தைகளின் பங்கு பெரியது. அதே போல் இந்த ஆயிஷா நூல் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிஷாவிற்கு முன் மற்றும் பின் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த புத்தகத்தில் மந்திர சக்தி உள்ளது. ஆசிரியர்கள் பயிற்று முறையில் பல்வேறு மாற்றத்தை இது ஏற்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், “ஆயிஷா நூலை திரும்ப திரும்ப 3 முறை படித்தேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல நினைவுகளை சிந்தைக்கு கொண்டுவந்தது. ராஜேந்திரன் என்னும் என் பள்ளி தோழன் வகுப்பறையில் அதிக கேள்வி கேட்பான். விடை தெரியாமல் ஆசிரியர்களும் அவனை `உட்காரு’ என்பார்கள். உடனே அனைத்து மாணவர்களும் ஆசிரியரை பார்த்து சிரிப்பார்கள். இதனால் கோபமுற்று அவனை அடிப்பார் எங்கள் ஆசிரியர். அவன் தற்போது ராஜபாளையத்தில் ஏதோ ஓர் இடத்தில் மூக்குத்தி செய்து வருகிறான். அன்று ஆசிரியர்கள் அவனை ஊக்கபடுத்தி இருந்தால் பெரிய நிலைமைக்கு வந்திருப்பான். என் படங்களான சாட்டை, அப்பா போன்றவைக்கெல்லாம் காரணம் ஆயிஷா போன்ற மாணவர்கள் தான். தைரிய லக்ஷ்மி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் உலுக்கியது. இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனை விதமாக உள்ளனர் என்று யோசித்தேன். அப்போது தான் அப்பா படம் எடுத்தேன்.

அந்த போலீஸ்காரரை இன்றும் தேடுகிறேன்...சமுத்திரக்கனி நெகிழ்ச்சி! | Actor Samuthirakani motivational speechActor Samuthirakani motivational speech - Tamil Filmibeat

இங்கு ஆசிரியர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். படித்த ஆசிரியர்கள், படித்துக்கொண்டு இருக்க கூடிய ஆசிரியர்கள். மாணவர்களும் 4 விதம் உள்ளனர். அவற்றை குறித்து எடுக்கப்பட்டது தான் சாட்டை திரைப்படம். அப்படமும் பெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கற்க வேண்டும். மாற்றம் வரவேண்டும். ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களிடையே சக மாணவனாக பழக வேண்டும். ஆங்கிலம் என்றால் எனக்கு பயம். என்னுடைய ஆசிரியர் ஒருநாள் வந்து, `நான் எழுதின கதையை வாசி’ என்றார். வாசித்து முடித்ததும் கைதட்டுங்கள் என்று பிற மாணவர்களிடம் சொன்னார். அப்போது தான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

இப்போது நான் இங்கு இயக்குனராக உள்ளேன் என்றால், அந்த ஊக்கமே அதற்கான காரணம். கல்லூரியிலும் எனக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் வழி நடத்தியதால் மட்டுமே நான் பட்டம் பெற்றேன். இந்த உலகத்தில் அநேக நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். பிற ஆசிரியர்களும் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம்” என்றார்

நன்றி: புதிய தலைமுறை

Veettukku Pogalam Vanga Appa Poem By Pesum Prabhakaran. வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை - பேசும் பிரபாகரன்

வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை – பேசும் பிரபாகரன்




அப்பா ,
காலம் என்னும் காரிகை
என் தலையை வெளுத்தாள்
நான் அப்பாவானேன் !
உங்கள் தலையை சுத்தம் செய்தாள்
நீங்கள் தாத்தாவானீர்கள் !
Veettukku Pogalam Vanga Appa Poem By Pesum Prabhakaran. வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை - பேசும் பிரபாகரன்
இருவரின் வயதும் கடந்தது
ஆனால் ,
ஏனப்பா இருவரின் பேச்சு மட்டும் குறைந்தது !

எனக்கு பேச்சு பழக்கிய உங்களிடம்
நான் என் பேச்சை குறைத்தேன் .
என் மகன் என்னோடு பேசியதாலா ?
இல்லை, என்மகன் உங்களோடு பேசாததாலா ?
Veettukku Pogalam Vanga Appa Poem By Pesum Prabhakaran. வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை - பேசும் பிரபாகரன்
இருவரும் மனதிற்குள் பேசிக்கொள்கின்றோம்
எனக்கு மணமான பிறகு
இருவரும் மனதிற்குள் பேசிக்கொள்கின்றோம்
எனக்கு மணமான பிறகு
அளந்து அளந்து பேசுகிறோமே அப்பா
அளவற்ற பாசத்தினை மனதிற்குள் வைத்துக்கொண்டு
Veettukku Pogalam Vanga Appa Poem By Pesum Prabhakaran. வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை - பேசும் பிரபாகரன்
யார் பேச ஆரம்பிப்போம்? என்று
நமக்குள் எப்போதும் போட்டிதான்
பேசாமலிருப்பேன் என்று
நீங்கள் வெற்றி பெறும்போது
நான் தோல்வியுருகின்றேன்
Veettukku Pogalam Vanga Appa Poem By Pesum Prabhakaran. வீட்டுக்கு போகலாம் வாங்க அப்பா கவிதை - பேசும் பிரபாகரன்
நான் தோல்வியுற்றால் தான்
நான் வெற்றி பெறுவேன் என்று
எனக்கு துன்பம் வரும் போது மட்டும்
வாய்திறக்கும் என் வாழ்வே !
அப்பா நீங்கள் என்றும் என் வாழ்வே !

மனைவி இல்லாத போது மட்டும் பேசிக் கொள்கின்றோம்
உங்களுக்கு மறு மகள் இல்லாததாலா ?
என் மகனோடு மட்டும் பேசுங்கள்
உங்கள் மகன் கேட்கின்றேன்

அறியாதவன் தானப்பா
உங்களை நான் அறியாதவன் தானப்பா
அறிந்தவர் நீங்கள் என் குணத்தினை அறிந்தவர்
தெரிந்துமே இப்படி இருக்கின்றோமே
இன்னும் என்னென்னவெல்லாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோமே

இருமினால் ஓடி வருவாயே அப்பா
உன் இருமலை எரிமலையாய் ஏன் பார்க்கின்றேன்
நீங்கள் பாச மலையாய் அன்று என்னை பார்த்ததற்கா
விழித்துக்கொண்டே தூங்குகின்றாயே
நான் விழித்துக்கொண்டிருக்கும் போது மட்டும்

நான் தூங்கும் போதெல்லாம்
விழித்து பார்த்த உங்களுக்கு துணை இப்போது
தூக்கம் மட்டும்

கேட்டு கேட்டு உண்ணக்கொடுத்தாயே அப்பா
நீங்கள் கேட்டால் கொடுக்கலாம் என்றிருந்தேனே தப்பா

நான் சத்தம் போடும் போதெல்லாம்
நான் போய்விடுகின்றேன் என்பாயே
அது நீ என்னை சுத்திகரிக்க கொடுத்த ஒரு நேரம்

சந்தி சிரிக்கக் கூடாதென்று
முந்தி பேசாமலிருக்கும்
தந்தையே நீங்கள் என்றும் என் தாயே
பேசாமல் இருப்பது சாதாரணம்
அப்பா நீங்கள் பேசாமல் இருப்பது ஆரா ரணம்

புரிந்து கொண்டேன் அப்பா
நீங்கள் புதிரல்ல
நான் உங்கள் புத்திரனென்று
வாருங்கள் வீட்டுக்கு போகலாம்