உருவமரியா இசைவெளி - நூல் அறிமுகம் - Pa.Kavitha Kumar - "Uruvamariya Isaivelli" published by Puthiyakonam Book Review by DailyThanthi - https://bookday.in/

உருவமரியா இசைவெளி – நூல் அறிமுகம்

உருவமரியா இசைவெளி - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள்: நூல் : உருவமரியா இசைவெளி ஆசிரியர்: ப. கவிதா குமார் பதிப்பகம்: புதிய கோணம் விலை: ரூ.425 நூலாப் பெற : 44 2433 2924        …
மொழிபெயர்ப்புக் கவிதை – நா.வே.அருள்

மொழிபெயர்ப்புக் கவிதை – நா.வே.அருள்




The Oppressionists
**********************
Art
what do the art
suppressors
care about art
they jump on bandwagons
wallow in press clips
& stink up the planet
with their
pornographic oppression
Art
what do they care about art
they go from being
contemporary baby kissers to
old time corrupt politicians
to self-appointed censorship clerks
who won’t support art
but will support war
poverty
lung cancer
racism
colonialism
and toxic sludge
that’s their morality
that’s their religious conviction
that’s their protection of the public
& contribution to family entertainment
what do they care about art
–Jayne Cortez

கலை

கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?

அவர்கள் அணிவகுப்பில் குதிக்கின்றனர்
பத்திரிகைச் செய்திகளில் உருள்கிறார்கள்
அவர்களின் ஆபாசமான ஒடுக்குமுறைமூலம்
பூமியையே
துர்நாற்றம் வீச வைக்கிறார்கள்.
கலையை ஒடுக்குபவர்கள்
கலையைப் பற்றி ஏன்
கவலைப் படப் போகிறார்கள்?

குழந்தைக்கு முத்தங்களிடும்
தற்காலத்தவர்களிலிருந்து
பழங்கால ஊழல் அரசியல்வாதிகள்
சுயமாக நியமித்துக் கொண்ட தணிக்கை எழுத்தர்கள் வரையிலும்
அவர்கள் இருக்கிறார்கள்
கலையை ஆதரிக்காதவர்கள்
ஆனால் போர்
வறுமை
நுரையீரல் புற்றுநோய்
இனவெறி
காலனித்துவம்
நச்சு கசடு
ஆகியவற்றை ஆதரிப்பவர்கள்.

அது அவர்களின் ஒழுக்கம்
அது அவர்களின் மத நம்பிக்கை
அது அவர்களின் பொதுஜனப் பாதுகாப்பு
மற்றும் குடும்பப் பொழுதுபோக்கிற்கான
அவர்களின் பங்களிப்பு
கலை மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது?

–ஜேனி கோர்ட்டஸ்
தமிழில் நா.வே.அருள்

கலையின் – கவிதை

கலையின் – கவிதை




வெண்பனியே
வெள்ளிப் போர்வையோ
வைரத் துளியோ
மழைச்சாரலோ
மலையருவி தூரலோவென
கொஞ்சியது போதுமென்று
போகாமல்
சளிப் பிடித்திருக்கென
உழற வைத்து
பிஞ்சு பிள்ளைகளின்
முனகலில் முகம் மலர்வதை
நிறுத்திக் கொள்
முள் பனியே!
– கலை

Yathumaginai Poem By PriyaJeyakanth யாதுமாகினாய் கவிதை - பிரியா ஜெயகாந்த்

யாதுமாகினாய் கவிதை – பிரியா ஜெயகாந்த்

தீபச்சுடராய் ஒளிர்விட்ட உனை கண்டு பிரகாசித்த வேளையில் எரிமலையாய் தகித்து வெதும்பினாய்
நெருப்பென்று நினைத்தேன் !

விதைத்ததை முளைக்கவைத்த உனை விளைநிலமாய் பார்த்த வேளையில்
பாலைவனமாய் வரண்டு போனாய்
நிலமென்று நினைத்தேன் !

தென்றலென படர்ந்த உனை இன்பமென ரசித்த வேளையில்
புயலாய் மாறி நிலைகுலைய வைத்தாய்
காற்றென நினைத்தேன் !

ஒடையாய் நடனித்த உனை ஒவியமாய் உருவகித்த வேளையில் காட்டாற்று வெள்ளமாய் தறிகெட்டுத் தலும்பினாய்
நீரென்று நினைத்தேன் !

நீலக் குடையென உனை தொட்டுவிடத் துடித்த வேளையில்
முடிவற்ற வெற்றிடமாய் ஊடுருவினாய்
ஆகாயமென்று நினைத்தேன் !

நீ யாரென்று கூறாது
ஒரு நிலையில்லா உருகொண்டு எனை

பல நேரம் அழ வைத்தாய்
சில நேரம் மகிழ வைத்தாய்
துயர் வரும் தருணம் துணிவை அளித்தாய்
அச்சத்தை அகற்றி அடியெடுக்க வைத்தாய்
சினம் கொண்ட சூழலில் நிதானிக்க செய்தாய்

உனை எதிர்கொள்ள போராடி
தோற்று துவண்டு

கட்டி இழுக்காமலும் வெட்டித் தள்ளாமலும் அமர்ந்த போது,
நான் நெருப்பல்ல நிலமல்ல காற்றல்ல நீரல்ல ஆகாயமல்ல
உன் மனம் என உணர்த்தி அமைதியை அளித்தாய் !!!.

Anal Thazhuviya Kalam Poem By Chandru RC. அனல் தழுவிய காலம் கவிதை - சந்துரு.ஆர். சி

அனல் தழுவிய காலம் கவிதை – சந்துரு.ஆர். சி




எங்கள் சிறகுகளின் மேல் வலுவேற்றுவதாய்ச் சொல்லி
நுகர்ந்தறியா
சில திரவியங்களை
வலிந்து பூசினார்கள்.

சந்தேகத்தின் கண்கொண்டு
நாங்களதை மறுதலித்தபோது
பசித்திருந்த எங்களின்
இரைப்பைகள்
அறுசுவை கனவுகளால் பூட்டபட்டன.

சொப்பனங்கள் மெல்ல இளைத்து
நாங்கள்
அலைகழிக்கப்பட்டபோது
வேர்கள் அழுகிய புற்களின் வனாந்திரத்தில்
எங்கள் நம்பிக்கைகள்
குடியேற்றப்பட்டன.

இருண்ட Cகளில்
கார்மேகச் சித்திரங்களை
எழுதி தினமும் ரசிக்கச்சொல்கிறார்கள்.
ஏமாற்றங்களால்
எங்கள் கனவின் நிறங்கள்
ஒவ்வொன்றாய் உதிர்வதை தினமும் காண்கிறோம்.

முந்தைய நாட்களில் நறுமணங்களுடன்
கை வீசிச்சென்ற இவ்வழியில்
தீய்ந்த வாசமொன்று
எங்களை விடாமல்
துரத்திக்கொண்டே வருகிறது.

திணறடிக்கும் அவ்வாடை
வருகின்ற திசையை
கண்ணுக்கெட்டியவரை
பார்வைகளால் அகழ்ந்து
யூகிக்க முடியாமல் திகைக்கிறோம்.

தீய்ந்த வாடை மேலும் எங்களை சமீபிக்கிறது.
அனல் காற்றின் பெருஞ்சூடு
அடி வயிற்றில்
சுள்ளென உரைக்கும் போதுதான்
அறிந்துகொண்டோம்
திரவியம் பூசப்பட்ட
எங்கள் சிறகுகள்
பொசுங்கும் வாடையை…

Kalaiya Kalaiya Poem by Sa Lingarasu கலையா? களையா? கவிதை - ச.லிங்கராசு

கலையா? களையா? கவிதை – ச.லிங்கராசு




காதலையே இன்னும் எத்தனை காலம் பாடிக்கொண்டிருப்போம்?
எங்காவது எவராவது காதலிக்கத்தான் செய்வார்கள்
நாம் பாடாது விட்டாலும்

உதிப்பதும் மறைவதும் உதிர்வதும்
மலர்வதும் கூட
எவர் அதைப் பாடாது விட்டாலும்
நடக்கும்
பாடாது விட்டதால் இயற்கை
தன் இயல்பை மாற்றிக் கொள்ளுமா என்ன?

வர்ணாசிரமம் என்னும் வக்ரம்
இன்று வரிசை கட்டி நிற்கிறது
வர்க்க வித்தியாசமோ வானத்தைத்
தொட்டுப் பார்க்கிறது
உழுதவனை தொழுத காலம்
உயிரிழந்தே போய் விட்டது

சமூதாய வீதியிலே எத்தனையோ
சவக்குழிகள்!
சற்றாவது யோசிப்போம்
நாம் இது வரை
செய்தது சரிதானா?
கலை கலைக்காகவா?
இல்லை…… கலை வாழ்க்கை எனும்
போராட்டக் களத்திற்காகவா?

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக "விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்" கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது... அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்... பாலாஜி…
விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக "விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்" கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது... அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்... இப்படத்திற்கான…
விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – மாணவி தேஜா

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – மாணவி தேஜா

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக "விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்" கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது... அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்... தேஜா…