kavignar thamizholi nootraanduth thodar katturai - 4 கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை - 4 கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். காளியும் கூளியும் காக்கவில்லை: இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால் நீங்கள் விடையைச் சொல்லி…
ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி

ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி



ஓங்கில் கூட்டத் திருவிழா!

அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் ஆதிவள்ளியப்பன், பஞ்சுமிட்டாய் பிரபு, இ.பா.சிந்தன், உதயசங்கர், நாராயணி சுப்பிரமணியன், ஹேமபிரபா, நா.பெரியசாமி, ராஜேஷ் கனகராஜன், திவ்யா பிரபு ஆகியோரின் 10 புத்தகங்களை 04.04.2023 அன்று ஓங்கில் கூட்டம், பாரதி புத்தகாலயம், சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டனர்.

தோழர் Udhaya Sankar அவர்கள் தலைமையேற்க, தோழர் Vishnupuram Saravanan அவர்கள் ஒருங்கிணைக்க, நூல்கள் பற்றி எழுத்தாளர்கள் நாராயணி சுப்பிரமணியன், சாந்த சீலா, ஜோசப் பிரபாகர், வெற்றிச்செழியன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க தோழர் க.நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

யதார்த்தமாக தோழர் Chinthan Ep மற்றும் Prabhu Rajendran அவர்களின் முகநூல் பதிவை பார்க்க நேரிட்டது “சென்னை பாரதி புத்தகாலயம் அரும்பு நிலையத்தில் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா” என்று.

ஏதோ பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டு வரலாம் என்பது போல புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை சரியாக 6.15 மணிக்கு சென்னை சென்றேன். விழா சரியாக 6.30 மணிக்கு தொடங்கியது. ஆளுமைகளின் நூல்களை ஆளுமைகள் பலர் வெளியிட குழந்தைகள் அவர்களைக் குழந்தைகள் என்று சொல்லமுடியாது அவ்வளவு சிறப்பாகவும், பொறுமையாகவும் அமர்ந்து நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை பெற்று நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். அவ்வப்போது திரும்பித் திரும்பி புன்னகைப் பூக்களை உதிர்த்துக்கொண்டே இருந்தனர்.

சரியாக இரவு 8.40 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. மறுபடியும் டீ குடித்து வீட்டுக்குத் திரும்புவது போல் அவசரமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன் இரவு 2.30 மணிக்கு.

வாசிப்பு மனிதனை பல தளங்களுக்கு பரந்து விரிந்து அழைத்துச் செல்லும் என்பதை புத்தகங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு உலகில் நுழைந்தவர்களுக்கு அது நன்குத் தெரியும். பறவை கூட்டுக்குத் திரும்பும் நேரம் போக மற்ற நேரங்களில் வானில் சிறகை விரித்து பறப்பது போல புத்தகங்களின் பக்கங்களை புரட்டுபவர்களுக்கு வானம் வசப்படுவது நன்குத் தெரியும். அந்த வாசிப்பு வான்வெளியை தமிழக மக்களுக்கு நன்கு திறந்து காண்பிக்கும் பணியை #பாரதிபுத்தகாலயம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. அதில் ஒரு அடுத்தக்கட்ட நகர்வுதான் #ஓங்கில்கூட்டம் வழியாக சிறுவர், பதின்பருவ குழந்தைகளுக்கான நூல்களை வழங்கும் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட வெளியீடு தான் மேற்கண்ட நிகழ்வின் பாத்திரம்.

04.04.2023 நிகழ்வு மிகச்சிறப்பு. அதற்காக பாடுபட்ட அத்தனை தோழர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் உரித்தாக்ககிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!