தொடர் 18 :சமகால சுற்றுச்சூழல் சவால்கள் – முனைவர் பா. ராம் மனோகர்
நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – பூங்கொடி கதைசொல்லி
நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 112
விலை : ₹95.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
குழந்தைகளை அறிதல் என்ற ஒரு முக்கியமான பாடநூல் இல்லாத பாடத்தை, ஆசிரியர்கள் அறிந்து கொண்டால், ஒரு வன்முறை இல்லாத வகுப்பறையை உருவாக்கலாம் என்பதுதான் இந்த நூலின் உயிர்நாடியான கருத்து. கல்வியாளர்கள், கல்வி நிலைய அமைப்பினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லாருக்குமே பயன்படுகின்ற வகையில், இந்த நூலை ஆயிஷா நடராஜன் அவர்கள் அற்புதமாய் உருவாக்கித் தந்துள்ளார்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், துன்புறுத்தும் சம்பவங்கள் வகுப்பறையில் நடைபெறாமல் இருக்க , ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை 25 கட்டுரைகளின் வழியாக ஆசிரியர், விளக்கியுள்ளார்.
” மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் போல, ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது” என்ற கரோலின் டிவிக் ( குழந்தை உளவியலாளர்) அவர்களின் வரிகளோடு, குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்? என்ற கட்டுரை ஆரம்பிக்கிறது.
தேசிய கல்வி கணக்கெடுப்பு 2006 தந்த இறுதி முடிவில்
1) 99.1 குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
2) பெரும்பான்மை குழந்தைகள் புரிந்து கற்பது இல்லை.
3) மனச்சோர்வு அவமதிப்பு பெரும் பதற்றம் இவற்றோடு வீடு திரும்புகிறார்கள்.
இந்த மூன்று காட்டமான முடிவுகளை முன்வைத்தது.
இவற்றுக்கெல்லாம் தீர்வு குழந்தைகள் தைரியமாகக் குதூகலிக்கும் ஒரு வகுப்பறை. ஆசிரியர் மாணவர் உறவில் நேர்மறை, குழந்தைகள் தங்களைப் பாதுகாப்பாக உணருகிற, கற்றல் தடையின்றி நடக்கும் ஒரு வகுப்பறை. அதற்கு முதலில் குழந்தைகள் ஏன் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருத்தை வலியுறுத்துகிறது முதல் கட்டுரை.
பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது, என்ன எடுத்துச் செல்கிறார்கள்? குட்டி முயற்சிகளால், பெற்ற ஏராளமான பாராட்டுகள், மதிப்பு மிக்க ஆளுமை தன்னம்பிக்கை இவைகளையா ? அல்லது உடல் வருத்தும் தண்டனையோ மனம் வருந்தும் தண்டனையோ பெற்றுச் செல்கிறார்களா? இதற்கான விடை தான் நீங்கள் ஆசிரியரா? இல்லை குருவா? நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா? இல்லை ஆசிரியப் பணியாளரா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும்.
அவர்களின் ஒவ்வொரு ஒழுங்கீனமான செயல்களுக்கும், பிறழ் நடத்தைக்கும் பின்னேயும் ஒரு காரணம், ஒரு நோக்கம் இருக்கிறது. அதை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரின் முக்கியமான கடமையாகும். ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தை எவ்வளவு கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், அவர் குழந்தை உளவியலை எந்த அளவுக்குத் தெரிந்து வைக்கிறார் என்பது அதைவிட முக்கியம் என்று பேராசிரியர் யஷ்பால் அவர்கள் சொல்வது முக்கியமான ஒன்று.
அப்படி எனில் அந்த சூழலை, குழந்தைகளின் பார்வையிலிருந்து அணுகும் போது அவர்கள் நடத்தையின் காரணம் கண்டிப்பாகப் பிடிபடும். இந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பல கட்டுரைகள் மிக சிறப்பாக விளக்குகின்றன.
மீண்டும் மீண்டும் மன அழுத்தமும் வலியும் தரும் சூழலை சமாளிக்கத் தெரியாமல், குழந்தைகளுடைய ஹார்மோன்களில் வசோப் ரேசின் என்ற ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கிறது. எதிர்த்து நில் அல்லது தப்பி ஓடு என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் பதட்ட நிலையை அடைகிறது. இந்த மனநிலையில் கற்றல் சாத்தியமில்லை என்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபரின் கருத்தை ஆசிரியர் மிக சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
வளரிளம் பருவத்தினர் அதிகம் நாடுவது அங்கீகாரம்தான், என்ற உளவியல் அறிஞர் ஃபைனஸ்டீன் என்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தி, அந்த வளர் இளம் பருவ குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை, உற்சாகம், ஊக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டியது அவசியம் என்று அறுதியிட்டு உரைக்கிறார்.
மேலும் குழந்தைகள் ஏன் தவறு செய்கிறார்கள்? மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் காரணம், குழந்தைகளின் நடத்தையை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதையெல்லாம் அறிவியல் விளக்கங்களோடு, சில கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
சமூகநீதியை, மனிதநேயத்தை, இயற்கை பாதுகாப்பைக் கடைப்பிடிக்கப் பயிற்றுவிப்பது தான் கல்வி. அதற்கு குழந்தைகளின் செயல்களுக்குத் தண்டனை தருவதை விட அவர்களை நெறிப்படுத்துவது தான் சாலச் சிறந்தது.
இன்றைய ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைச் சவாலாக உள்ளது. குழந்தைகளை அடிக்கக் கூடாது. எதுவுமே சொல்லக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன? ஒருபுறம் குழந்தைகளின் தலையைத் திறந்து பாடப்பொருளைக் கொட்டித் தீர்க்கத் தூண்டும் பாடச்சுமை. மற்றொருபுறம் குழந்தைகள் உரிமை என்னும் பெயரில் மிரட்டல்… தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக் காட்டாத ஆசிரியர்களுக்கு துறை நடவடிக்கை. இந்தச் சூழல் களையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு சிறந்த ஆசிரியராக இருக்கலாம் என்பதற்கு வழிகாட்டுகிறது இந்த நூல்.
T- Tolerance ( சகிப்புத்தன்மை)
E – Example for all ( அனைவருக்கும் முன்னுதாரணம்)
A – Ability to read child’s mind ( குழந்தை மன நிலையை அறியும் வல்லுநர்)
C- Character builder ( பண்பு நலன் வளர்ப்பவர்)
H – Humanitarian approach ( மனிதநேய அணுகுமுறையாளர்)
E – Enthusiastic ( முயற்சிகளை உற்சாகப் படுத்துவர்)
இத்தனையும் சேரும் போது அந்த ஆசிரியர்
R – Respectable ( மரியாதைக்கு உரியவர்) ..
இப்படியான குணநலன்கள் உள்ள ஆசிரியர்களால், வன்முறை இல்லாத வகுப்பறையைத் தாண்டி, வாழ்வின் அடிநாதமான அன்பான வகுப்பறையைக் கட்டமைக்க முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக அறிவியல் விளக்கங்களோடு எடுத்துரைக்கிறது.
– பூங்கொடி கதைசொல்லி
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: தமிழகத்தின் கல்வியை ’’முன்னுதாரணம்” ஆக்குவோம் – ஆசிரியர் குழு
♻️ முத்துக்கள் பத்து: நான் வாசித்தேன் நீங்கள்? – ஆயிஷா இரா. நடராசன்
♻️புத்தகக் காதல் 5: 13 எழுத்தாளர்கள் 28 கேள்விகள் – ச.சுப்பாராவ்
♻️நூல் அறிமுகம்: அறிவியலை இப்படியும் கற்பிக்கலாம் – வெ.பிரித்திகா
♻️நூல் அறிமுகம்: பணமதிப்பு நீக்கம் : இந்திய நாணயப்பரிசோதனை குறித்த பார்வை – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: இன்றைய தேவையை உணர்த்தும் இருநூல்கள் – சா. ஜார்ஜ்டேவிட்
♻️ நூல் அறிமுகம்: கைத்தறியிலிருந்து கணிப்பொறி – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிம்கம்: பெரம்பலூர் சான்றோர்கள் வளர்த்த ஆளுமை உ.வே.சா -ஆ. தினேஷ்குமார்
♻️நேர்காணல்: மாற்றம் – இளைஞர்கள் இதுவே என் நம்பிக்கை – அ. சவுந்தரராஜன்
♻️வாசிப்பு ரசனை வாழ்க்கை 18: வாசகரின் சொர்க்கம் – எஸ் வி வேணுகோபாலன்
♻️கட்டுரை: இளம்பெண்களின் இலக்கிய வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்த 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – வே.தூயவன்
♻️நூல் அறிமுகம்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்- மோகனப் பிரியா. G
♻️ கட்டுரை: சூழலியல் எழுத்து: நம்பிக்கை தரும் ஆழமான முயற்சிகள் – அமிதா
♻️நூல் அறிமுகம்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் – சு. அழகேஸ்வரன்
புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: உலக புத்தக தின எழுச்சி மலரட்டும்! – ஆசிரியர் குழு
♻️ முத்துக்கள் பத்து: நான் வாசித்தேன் நீங்கள்? – ஆயிஷா இரா. நடராசன்
♻️புத்தகக் காதல் 4: இதற்குத் தானே ஆசைப்பட்டாய்… – ச.சுப்பாராவ்
♻️நூல் அறிமுகம்: தமிழ்மணியின் முகாமி – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம்: உதிர்ந்த இலை மீண்டும் தழைக்கும் – தேனி சீருடையான்
♻️ நூல் அறிமுகம்: ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: நம்மை இப்படியும் பேச வைக்கும் “இப்போது உயிரோடிருக்கிறே ன்” – சா. ஜார்ஜ் டேவிட்
♻️கட்டுரை: அய்ஜாஸ் அகமது: பயணத்தை முடித்துக் கொண்ட சகபயணி! – ராஜசங்கீதன்
♻️நேர்காணல்: மனிதனின் கண்ணீருக்கான காரணத்தைத் தேடுவதுதான் என் எழுத்து – இமையம்
♻️நூல் அறிமுகம்: வைர மனம் கொண்டவர்களின் கதை – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️வாசிப்பு ரசனை வாழ்க்கை 17: மனமெல்லாம் வாசிப்பாக இருப்பது – எஸ் வி வேணுகோபாலன்
♻️கட்டுரை: பொருநை நெல்லை புத்தகத்திருவிழா – 2022 – செ.கா – நாறும்பூநாதன்
♻️நேர்காணல்: “Fire of Sumatra’ நாவலாசிரியர் ரமணகைலாஷ்-வுடன் நேர்காணல்- கி. ரமேஷ்
♻️ கட்டுரை: சூழலியல் எழுத்து: நம்பிக்கை தரும் ஆழமான முயற்சிகள் – அமிதா
♻️நூல் அறிமுகம்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் – சு. அழகேஸ்வரன்
புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: புத்தகக் காட்சியில் புத்துயிர் பெறுவோம்! – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: ரொமிலா தாப்பரும் இந்திய வரலாற்றெழுதியலும் – கோ.கணேஷ்
♻️புத்தகக் காதல் 3: கொடியது கேட்கின்… – ச.சுப்பாராவ்
♻️நூல் அறிமுகம்: தமிழ்மணியின் முகாமி – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம்: பாழடிக்கப்பட்ட பூமிகளின் கதை – சு.அழகேஸ்வரன்
♻️ நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ் – க்கு எதிராக இந்தியா – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: நம்மையும் எழுதத் தூண்டும் எழுத்து – சா. ஜார்ஜ் டேவிட்
♻️அஞ்சலி: தோழர் பிரபலன் – பேரா. அ.மார்க்ஸ். முகநூலிருந்து…
♻️நேர்காணல்: இந்தியா முன்னேற மாணவர்களை அறிவியல் துறை சார்ந்து இயங்கிட ஊக்குவிப்பதே ஒரே வழி – முனைவர். ச. சௌந்தரராஜப்பெருமாள்
♻️நேர்காணல்: கிராமங்களை நோக்கிய புத்தகப் பயணம் – செ.கா
♻️ நூல் அறிமுகம்: “குற்றவியல் நீதி அமைப்பில் ஓங்கி ஒலிக்கும் சமூகநீதிக்கான குரல்”- முனைவர் இரா. செங்கொடி
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 16: நல்லொழுக்கம் பற்றிய ஞானம் – எஸ் வி வேணுகோபாலன்
♻️நூல் அறிமுகம்: பார்வையாளரே இங்கு படைப்பாளராகிறார்… – சி. முத்துகந்தன்
♻️நூல் அறிமுகம்: உடல் வடித்தான் – லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
♻️நூல் அறிமுகம்: குழந்தை மனதின் யுரேகா.. யுரேகா..! – பேரா. நா.மணி
புதிய புத்தகம் பேசுது – பிப்ரவரி மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – பிப்ரவரி மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: அறிவியல் சமுதாயம் அமைந்திட உழைப்போம் – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா – ஜெ. பாலசுப்பிரமணியம்
♻️புத்தகக் காதல் 2: யுத்த பூமியில் ஒரு நூலகம் – ச.சுப்பாராவ்
♻️கட்டுரை: பள்ளி நூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய தமிழ் நூல்கள் பகுதி 2 – ஆயிஷா இரா. நடராசன்
♻️நூல் அறிமுகம்: யானிஸ் வருஃ பாகிஸின் அகில உலக பகாசுரன் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: வாசகர் இதயத் துடிப்பிலும் ஒலிப்பதாய்…. – எஸ் வி வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: காம்ரேட் ஷபின்னாவும் தோழர் பழனியும்… – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️நேர்காணல்: மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – அய்ஜாஸ் அகமது
♻️ நூல் அறிமுகம்: சிற்பிகளான சிற்பங்கள் – ஸ்ரீதர் மணியன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 15: ஆதித் தோழன் சொல்ல வருவது… – எஸ்.வி.வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: “சட்டத்தின் ஆட்சி” – எனும் அரசியல் சொல்லாடல் – ஜமாலன்
♻️நூல் அறிமுகம்: அதிதிகளின் உலகு – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம்: ‘கசபத்’ – வேலைவெட்டியில்லாதவன் – கொள்ளு நதீம்
புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: பள்ளித்தளம் அனைத்தும் வாசிப்பை விதைப்போம்! – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: கப்பலோட்டிய ஒரு கனவின் கதை… – கமலாலயன்
♻️புத்தகக் காதல் 1: ஒரு எளிய வாசகியின் புத்தகக் காதல் – ச.சுப்பாராவ்
♻️கட்டுரை: பள்ளி நூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய தமிழ் நூல்கள் – ஆயிஷா இரா. நடராசன்
♻️நூல் அறிமுகம்: மாணவரும் மக்களும் தான் இப்படைப்பின் ஆதாரம் – தேனி சுந்தர்
♻️ நூல் அறிமுகம்: டெலஸ்கோப் மாமா சாகசங்கள் – கிருபாநந்தினி
♻️ நூல் அறிமுகம்: அறிவியல் கோட்பாட்டு மார்க்சிய சிந்தனையை எளிய முறையில் விளக்கிடும் கையேடு – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️நேர்காணல்: இலக்கியம் உலகப் பார்வையை அளித்தது; இயக்கம் வர்க்கச் சார்பை அளித்தது – நீதியரசர் கே. சந்துரு
♻️ நூல் அறிமுகம்: மனக்கீற்றுகளில் மெல்ல மெல்ல மீதுருவாகும் கவிதைகள்.! – கவிஞர் சூர்யநிலா
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 14: இனி, மக்கள் உரக்கப் பேசப் போவது எப்போது? – எஸ்.வி.வேணுகோபாலன்
♻️ கட்டுரை: நான் கருணாவை, ஒரு பரிவிராஜகனாக, பௌத்த பிக்குவாக, பண்பாட்டு ஊழியனாக, என் தோழனாக உணர்ந்தேன்… – சைதை ஜெ.
♻️நூல் அறிமுகம்: லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில… – அ. மார்க்ஸ்
நூல் அறிமுகம் : கிருபானந்தனின் குவிகம் 100 – ஜி.பி.சதுர்புஜன்
தற்கால தமிழ் இலக்கிய பஃபே உணவைச் சுவைக்க வாருங்கள் !
நூல்களைப் படிக்கும் பழக்கம் அருகி விட்டது, அதுவும் தமிழ் நூல்களைப் படிப்பவர்களை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும் என்றெல்லாம் சில காலம் முன்பு வரை தமிழ் பிடிக்கும், தமிழ் படிக்கும் ஆர்வம் கொண்ட தலைமுறையைச் சேர்ந்த நாமெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருந்தோம். “அவ்வளவுதான் இனி தமிழ்”, “நம்மோடு போய்விட்டது இந்தத் தமிழ் படிக்கும் தலைமுறை” என்றெல்லாம் முடிவுரை கூட எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ் படிப்பதில் ஒரு மறுமலர்ச்சியே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று நாம் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பிறந்திருக்கின்றன. புக் டே போன்ற மின்னிதழ்கள் மூலமும், பரவலாக்கப்பட்ட மின் புத்தகங்கள் மூலமும், இணையவழி தமிழ் போற்றும், தமிழ் வளர்க்கும் சந்திப்புகளின் மூலமும் தமிழ் வாசிப்பு பட்டுப் போகாமல், இன்று, மீண்டும் துளிர்த்து, தலைதூக்கி இருக்கிறது. தமிழை ஆராதிக்கும் நமக்கெல்லாம் இது ஓர் இனிமையான தருணம் அன்றோ !
தமிழிலே பலவித நூல்கள் அனுதினமும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. மின் வடிவத்திலும், அச்சு வடிவத்திலும் பல தரப்பட்ட நூல்கள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய மரபு வழி பதிப்பாளர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பரிசோதனை முயற்சிப் பதிப்பாளர்களும் தமிழ் வாசகர்களுக்கு புதிய ஜன்னல்களைத் திறந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த புதிய வசந்தத்தை வாசகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
குவிகம் என்ற சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பு (கிருபானந்தன் மற்றும் சுந்தரராஜன் என்ற இரு இலக்கிய நண்பர்கள் தலைமையேற்று நடத்தி வரும் அமைப்பு ) தமிழ் இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வருகிறது. இணைய வழி இலக்கிய சந்திப்புகள், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எழுத்துப் போட்டிகள், மின்னிதழ் வெளியீடு என்று பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்து கடந்த ஐந்து வருடங்களில் தனக்கென்று தனி இடத்தையும் நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது குவிகம் அமைப்பு.
குவிகம் என்ற மாதாந்திர மின்னிதழ் கிட்டத்தட்ட 100 மாதங்களாக பல்வேறு சுவை மிக்க படைப்புகளைத் தாங்கி வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று இருக்கிறது. பல வளரும் எழுத்தாளர்களுக்கு இப்படி ஓர் எழுத்துக் களம் அமைத்துக் கொடுத்து அவர்கள் திறமைக்கு ஓர் அங்கீகாரம் அளித்து வருகிறது. குவிகம் லாப நோக்கமின்றி குறைந்த செலவில் தமிழ் நூல்களையும் பதிப்பித்து வருகின்றது.
சமீபத்தில் தன்னுடைய நூறாவது நூலான குவிகம் 100 என்ற நூலை குவிகம் வெளியிட்டுள்ளது வாசகர்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. 170 பக்கங்கள் ஓடும் இந்த குவிகம் 100 தற்காலத் தமிழ் இலக்கியத்தை சுவைத்துப் பார்க்க ஓர் அருமையான வாய்ப்பு.
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்ற மூன்று இலக்கிய வடிவத்தையும் தன்னுள்ளே தாங்கி வருகிறது குவிகம் 100. கொசுறாக ஒரு சிறிய நாடகமும் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
குவிகம் 100 நூலில் நமக்கு காணக் கிடைக்கும் சுவையான படைப்புகளைப் பற்றி ஒரு பருந்துப் பார்வையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் கவிதைகள். ஏழு கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. கவிஞர் வைத்தீஸ்வரன், மீ.விசுவநாதன், “கவிஞாயிறு” துரை தனபாலன், தில்லை வேந்தன், கானப்ரியன், மதுவந்தி, தீபா மகேஷ் ஆகிய கவிஞர்களின் கவிதைகள் சுவைக்கத் தகுந்தன. மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் இவற்றில் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, அனைத்துக் கவிதைகளும் எளிமையான நடையில், பயிற்சி குறைந்த வாசகர்களும் புரிந்து ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனக்கு கூடுதல் சிறப்பாகத் தோன்றுகிறது. இந்த கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சுவைத்துப் பாருங்கள் :
எட்டும் கைகளுக்கு
எப்போதும் தப்பித்து காற்றில்
எட்டுப் போட்டுப் பழகும்
பட்டாம்பூச்சிகள் அங்கே ஏராளம்.
( “காலம் தாண்டி” – கவிஞர் வைத்தீஸ்வரன்)
கொள்ளை விலை சொல்லுகிற மால்கள் – எங்க
குலத்துக்கே குழிப்பறிக்கும் வேல்கள்
தள்ளுவண்டி காரனுங்க நாங்க – உங்க
தயவுலதான் நாளுதள்ளு ரோங்க.
( “தள்ளுவண்டிகாரனுங்க நாங்க” – மீ.விசுவநாதன்)
இல்லையினி முதியோரால் பயனே என்று
ஈன்றோரை விடுதிகளில் இடுதல் மடமை !
( “மடமையைக் கொளுத்துவோம் “ – “கவிஞாயிறு” துரை தனபாலன்)
ஒன்றுமறி யாதவர்கள் பெரிதென்றும் சிறிதென்றும்
உரைத்தலும் உலகத்தில் ஒவ்வொன்றும் ஒரு பயனே !
( “ஒவ்வொன்றும் ஒரு பயனே !” – தில்லைவேந்தன்)
உயர்ந்து கொண்டே போகிற
கூச்சலின் நீர் மட்டத்தில்
முழுமையாக
மூழ்கிப் போகின்றன
என் வார்த்தைகள்.
( “மானுடனும் அரக்கியும்” – கானப்ரியன்)
கரம் பற்றி தழல் சுற்றி
காலம் முழுவதும் உடன் வருவேனெனச்
சொன்னது கனவோ ?
( “ரத்து” – மதுவந்தி )
நீ இருக்கும் நேரங்களை விட
நீ இல்லாதபோது உன்னோடு
அதிகம் பேசுகிறேன்
( “உன்னுடனான என் உரையாடல்கள்” – தீபா மகேஷ்)
மேற்குறிப்பிட்ட கவிதை வரிகள் உங்களை வசீகரிக்கின்றனவா ? இந்தக் கவிதைகளைப் பற்றி இங்கே எழுதுவதை விட நீங்களே படித்து ரசிப்பதுதான் சரியாக இருக்கும்.
அடுத்தது கட்டுரைகளைப் பார்ப்போம். மொத்தம் 11 கட்டுரைகள். முனைவர் வ வே சு, இராய. செல்லப்பா, லதா ரகுநாதன், நாகேந்திர பாரதி, மாலதி சுவாமிநாதன், ஜி பி சதுர்புஜன், க.சிற்பி, தி. இரா. மீனா, எஸ் வி வேணுகோபாலன், எஸ் கௌரிசங்கர் மற்றும் முனைவர் தென்காசி கணேசன் ஆகிய இவர்களே இந்த கட்டுரைகளை வழங்கியிருக்கும் எழுத்தாளுமைகள். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான ஒரு கருத்தைப் பேசுகிறது. பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை வாசகனுக்கு இக்கட்டுரைகள் ஒரு பெரு விருந்தாக வழங்குகிறது.
“பாரதியும் பறவைகளும்” என்ற முனைவர் வ வே சு வின் கட்டுரை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறது. பாரதியின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பறவைகளைப் பற்றி பேசும் இந்தக் கட்டுரை கற்பனையில் சிறகடித்துப் பறக்கிறது.
“இராய செல்லப்பாவின் “சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும்” எழுத்தாளருக்கு சரித்திர நாவல் மன்னர் சாண்டில்யனோடு ஏற்பட்ட நிஜ வாழ்வு அனுபவங்களை சுவையாக விவரிக்கிறது.
“கேள்விக்குறி ???” என்ற கட்டுரையில் லதா ரகுநாதன் முதியோருக்கு வங்கிகளின் வட்டி குறைப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைப் பற்றி ஆராய்கிறார்.
“ஆகாய அவஸ்தை” நாகேந்திர பாரதியின் பயணத்தைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரை.
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் “எளிதான நற்செயல்” என்ற கட்டுரையில் மகிழ்ச்சியைப் பெருக்க சுலபமான உபாயம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார்.
ஜி.பி.சதுர்புஜனின் “வெண்பாக்களில் கிரேஸி மோகன்” நாம் பரவலாக அறியாத நகைச்சுவை மன்னனின் வாழ்க்கைப் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
க.சிற்பி “புருஷ லட்சணம்” என்ற கட்டுரையில் வித்தியாசமான கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார்.
“காலம் கடந்து நிற்கும் வசனங்களும் வசனக்காரர்களும்” என்ற கட்டுரையில் தி. இரா. மீனா நாம் அறிந்திராத கன்னட வசனக்காரர்களைப் பற்றி புதிய விஷயங்களைப் பகிர்கிறார்.
எஸ் வி வேணுகோபாலனின் “பாவப்பட்ட பாட்டியும் பேரன்களும்” கதையா கட்டுரையா என்று இனம் பிரிக்க முடியாத ஒன்றாய், சுவையும் கருத்தும் கலந்த விருந்தாய் பரிமளிக்கிறது.
“பரிபூர்ண கலைஞர்” என்ற எஸ் கௌரிசங்கரின் கட்டுரை தமிழ் நாடக முடிசூடா மன்னர் பூர்ணம் விஸ்வநாதனை நினைவு கூர்கிறது.
முனைவர் தென்காசி கணேசன் “மழை” என்ற கட்டுரையில் நம்மை மகிழ்ச்சி மழையில் நனைய வைக்கிறார்.
ஆக, இந்தக் கட்டுரைக் கலவை மிகவும் ருசிகரமாகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இப்போது குவிகம் 100 ல் இடம்பெற்றுள்ள 15 சிறு கதைகளுக்கு வருவோம். வளவ. துரையன், பி ஆர்.கிரிஜா, ஜெ.பாஸ்கரன், அழகியசிங்கர், பத்மினி பட்டாபிராமன், சுரேஷ் ராஜகோபால், ஈஸ்வர், சிறகு இரவிச்சந்திரன், ஆர்க்கே, சந்திரமோகன், எஸ் எல் நாணு, மீனாக்ஷி பாலகணேஷ், யாரோ, பானுமதி. ந, ஹெச்.என்.ஹரிஹரன் ஆகியோர் இந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கருக்களையும் நடைகளையும் கொண்டவை. சிறிதும் அலுப்புத் தட்டாதவை.
வளவ துரையனின் “காற்று அசைத்து விடும்” கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவைப் பற்றிப் பேசுகிறது. அனைவரும் ரசிக்கத்தக்கது.
பி. ஆர் கிரிஜாவின் “மூன்றாமவன்” “மூன்றாமவன் யார் ?” என்ற கேள்வியை நம்முள் எழுப்பி தன் சுவையான நடையில் இறுதியில் நம்மை முறுவலிக்கச் செய்கிறது.
ஜெ.பாஸ்கரனின் “அழகு” “அழகு என்றால் என்ன ?” என்று நம்மையே கேள்வி கேட்டு நம்மை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
அழகியசிங்கரின் “மௌனம் காத்தது” அலுவலகத்தில் நடக்கும் ஆண்-பெண் சந்திப்புகளில் நம்மை சுவாரசியமாக ஈடுபட வைக்கிறது.
பத்மினி பட்டாபிராமனின் “விரட்டல் எளிது” பூனையையும் காரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. நீங்கள்தான் படித்து ரசிக்க வேண்டும்.
சுரேஷ் ராஜகோபாலனின் “அத்தையம்மா” சிறுகதை என்ற போர்வையில் வரும் சிறிய நாடகம்.
சிறகு இரவிச்சந்திரனின் “இரண்டு மக்கு” விறுவிறு நடையில் வித்தியாசமான சிறுகதை. “நாம் மக்கா இல்லையா ?” என்ற கேள்வியை நம்மையும் இறுதியில் கேட்க வைக்கிறது.
ஆர்க்கேயின் “ அக்ர சேனரின் மணிமகுடம் “ ஒரு சரித்திரச் சிறுகதை. சித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது.
சந்திரமோகனின் “இப்படியும் சில மனிதர்கள்” வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்களைக் காட்டுகிறது. ஆனால் நிதர்சனமான கசப்பு.
எஸ் எல் நாணுவின் “பிராயச்சித்தம்” இந்தத் தொகுதியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கதையில் கோபம் கொப்பளிக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமம்.
மீனாக்ஷி பாலகணேஷின் “ பயக்குறை வாழ்நாள்” பழைய கதையா, புதிய கதையா என நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. வித்தியாசமான நடை.
“யாரோ” என்ற புனைப்பெயரில் யாரோ எழுதிய “காற்றில் ஒரு காதல்” எனும் சிறுகதை நம்மை ஔரங்கசீப்பின் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. மறக்க முடியாத காதல் கதை.
பானுமதி.ந எழுதிய “புகையும் தீ” குந்தியைப் பற்றிய வித்தியாசமான புனைவு.
ஹெச்.என்.ஹரிஹரனின் “அப்பாவின் சைக்கிள்” மறைந்து வரும் ஒரு காலத்தையும் மறக்கமுடியாத அந்நாளைய மனிதர்களையும் நம் மனக்கண்முன் நிறுத்துகிறது.
மொத்தத்தில் குவிகம் 100 நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சோடை போகாத சிறுகதைகள். வாசகனை ஏமாற்றாத ரகம்.
இறுதியாக நாடகத்தை மறந்து விடக் கூடாது என்ற நல்ல நினைப்போடு எஸ் சுந்தரராஜனின் “அலெக்ஸி” நாடகத்தை நமக்காக வழங்கியிருக்கிறார் நூலின் தொகுப்பாளர் கிருபானந்தன் அவர்கள்.
அலெக்ஸி நம்மை அமெரிக்காவுக்கு அழைத்துப் போகிறது. புதிய உலகத்தை நமக்குத் திறந்து காட்டுகிறது.
குவிகம் 100 என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்கள் தவற விடக்கூடாத நூல். அவசியம் படியுங்கள்.
குவிகம் 100
தொகுப்பு : கிருபானந்தன்
குவிகம் பதிப்பகம் ( முதல் பதிப்பு : நவம்பர் 2021 )
பக்கம் 172
விலை ரூபாய் 120
விமர்சகர் : ஜி.பி.சதுர்புஜன் : ஓர் அறிமுகம்
*இயற்பெயர் : பாஸ்கர் எஸ். ஐயர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியிட்ட இதழ்கள்:ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, மங்கையர் மலர், குமுதம், குமுதம் ஜங்ஷன், குமுதம் சிநேகிதி, அமுதசுரபி, கலைமகள், குங்குமம், கணையாழி, தினகரன் வசந்தம், ராணி, இலக்கியப் பீடம், பாரத மணி, தினமலர் வாரமலர், குவிகம், நவீன விருட்சம், இலக்கிய வேல், Business India, Business World, Advertising & Marketing, Reader’s Digest, Indian Express, The Hindu Business Line, Indian Management, Caravan.
பரிசுகள் : இலக்கியச் சிந்தனை, மாதாந்திர சிறுகதை, அமரர் சேஷசாயி நினைவு சிறுகதை போட்டி, அமுதசுரபி, கலைமகள் கவிதைப் போட்டி,
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் : ஒரு கவிதை நூல், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பழமொழிகள் பற்றிய ஒரு கட்டுரை நூல், ஆங்கிலத்தில் Qualitative Market Research பற்றிய நூல், ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை, கதைகள் அடங்கிய சிறு நூல், முதல் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்க நூல்.