யார் இந்த லச்சித் போர்புகான்? கட்டுரை – அ.பாக்கியம்

யார் இந்த லச்சித் போர்புகான்? கட்டுரை – அ.பாக்கியம்




நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகான் 400 வயதை எட்டுகிறார்.

ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்களை நடத்தியது.

பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் லச்சித் போர்புகானின் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது.

லச்சித் போர்புகான் முகலாயர்களை வீழ்த்திய இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள்.

பாஜகவினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் கவிழ்த்தவர்கள்.

“சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணியத்தைப் பெறாத” அஹோம் ஜெனரலுக்கு “சரியான மரியாதைக்குரிய இடத்தை” உறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார் .

1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படைகளைத் தோற்கடித்த போர்புகன் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார்.

அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. சர்மா, “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாராட்டியுள்ளார் .

“இது 2016 மாநிலத் தேர்தலை ‘சராய்காட்டின் கடைசிப் போர்’ என்று பாஜக முத்திரை குத்தியது. இதில் காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவி கட்சியுடன் நெருக்கமாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.

2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, BJP இன்னும் வெளிப்படையான இந்துத்துவாவைத் தூண்டியது. மேலும் காங்கிரஸும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சட்டவிரோத குடியேறிய முஸ்லீம்களை ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார்.

சமீபத்தில், அவர் முகலாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

அஹோம் இராச்சியம்:

அஹோம் இராச்சியம் (​​1228–1826) அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றிகரமாக எதிர்த்து சண்டைபோட்டது.

சுமார் 600 ஆண்டுகள் அதன் இறையாண்மையை அது தக்கவைத்து ஆட்சிசெய்தது. மோங் மாவோவின் (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) இளவரசரான சுகபாவால் நிறுவப்பட்டது.

இது 16 ஆம் நூற்றாண்டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து. முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்களின் தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராச்சியம் பலவீனமடைந்தது.

பின்னர் அஸ்ஸாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொடரந்து தொ அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது. முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்களின் தோல்வி அடைந்தனர்.

1826 ல் யாண்டபோ உடன்படிக்கையின் மூலம், இராச்சியத்தின் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம் ராஜ்ஜியத்தின் கதை.

லச்சித் போர்புகன்:

லச்சித் போர்புகன் (24 நவம்பர் 1622 – 25 ஏப்ரல் 1672) தற்போதைய அஸ்ஸாமில் அமைந்திருந்த அஹோம் இராச்சியத்தில் தளபதி மற்றும் போர்புகன் ஆவார். போர்புகான என்றால் அமைச்சர் என்று பொருள்படும்.

லச்சித் டெக்கா பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார். அஹோம் ராஜ்ஜியத்தில் 5 போர்புகன்களில் ஒருவராக இந்த லச்சித் போர்புகான் இருந்தார். இந்த முறையை அஹோம் மன்னர் பிரதாப் சிங்கவால் உருவாக்கப்பட்டது.

அஹோம் ராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், இந்த பதவி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கியது. போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும்1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இடகுலியிலும் அமைந்திருந்தது.

அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால் சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலை கொண்டதாகவும் இருந்துசெயல்பட்டது.கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகனால் ஆளப்பட்டது.

அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர்.

ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முகலாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கானின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.

இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல் அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்காவின் தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர்.

அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங் தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட் என்ற இடத்தில போர் நடந்தது.

மொகலாயர்கள் தங்கள் பாரிய படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர். லச்சித் போர்புகன் கெரில்லா தந்திரங்களை பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார்.

சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அகோம் படைகள் வெற்றி பெற்றது.

இதற்காக லச்சித் போர்புகன் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்.

1930ம் ஆண்டிலிருந்து தளபதி லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கௌஹாத்தியிலுள்ள பிரமபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு லச்சித் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

1930ம் ஆண்டு கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடையாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும் மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடைபெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தை எதிர்த்த போராகவே அது இருந்தது.

லச்சித் போர்புகன் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை(TAI ) மொழிபேசும் பழங்குடி மதத்தைசேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள் இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது.

லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியின மதத்தைச் சேர்ந்தவர்கள்
அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர்.

உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர் இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார்.

லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா [ஒரு ராஜபுத்திரர்] என்பதால் அதற்கு எந்த மதக் கோணமும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.

போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப்பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டார் தவிர மதத்தின் சிறப்பால் அல்ல.

400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடகிழக்கின் வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வழி என்ற அளவில் பாக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

அஸ்ஸாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகானின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக மாற்றுகிற மத துவேஷ வேலை களை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.

அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் பாராட்டியுள்ளார் .

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர்களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உருவாக்கி வருகிறது.

இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடியவர்கள் என்ற மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.

பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

– அ.பாக்கியம்

மோடியின் ராஜ்யத்தில் “சிவனே” யானாலும்  சிறை தான் – அ.பாக்கியம்

மோடியின் ராஜ்யத்தில் “சிவனே” யானாலும் சிறை தான் – அ.பாக்கியம்




அசாமில் இரண்டு சமூக ஆர்வலர்கள், பிரிஞ்சி போரா மற்றும் சக பெண், பரிஷ்மிதா, சமூக பிரச்சனைகள் பற்றிய ஒரு சிறு நாடகத்திற்காகச் சிவபெருமான் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவியாக உடையணிந்தனர்.

‘சிவா’ மற்றும் ‘பார்வதி’ இருவரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​எரிபொருள் தீர்ந்ததால் வாகனம் நின்றது.

“சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே இந்த பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு ‘சிவா’ எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து மோடி அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்குகிறார்” .

அப்போது, ​​விலைவாசி உயர்விலிருந்து விடுபட நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பொதுமக்கள் வெளியே வந்து போராட்டம் நடத்துமாறு ‘சிவா’ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காணொளி வலைத்தளத்தில் வைரலானது.

சங்கிகளுக்குப் பயம் வந்துவிட்டது. எங்கே மக்கள் மோடிக்கு எதிராகத் திரும்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் கோழைத்தனத்தில், கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாமல் கைது செய்து உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) இளைஞர் பிரிவு புகார் செய்தனர்.விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பின்னர் புகார் அளித்துள்ளனர். நாடகத்தில் சிவபெருமானாக நடித்த பிரிஞ்சி போராவை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

-அ.பாக்கியம்
முகநூல் பக்கத்திலிருந்து

Repeal the terrible law of the Armed Forces (Special Powers) Act Article in tamil translated by Sa Veeramani. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிறகொடூரமான சட்டத்தை ரத்து செய்திடுக தமிழில்: ச.வீரமணி

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற கொடூரமான சட்டத்தை ரத்து செய்திடுக – தமிழில்: ச.வீரமணி




அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்னும் சிறப்புப்படையினரால் நாகாலாந்து, மோன் என்னும் மாவட்டத் தலைநகரில் 14 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பது ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற (AFSPA- Armed Forces (Special Powers) Act) மிகவும் கொடூமான சட்டம் குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கிரமமான இந்தச்சட்டத்தின்கீழ் பாதுகாப்புப் படையினர் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சாமானிய மக்கள் மீது தொடர்ந்து அட்டூழியங்களைப் புரிந்து வருகின்றனர். ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களைப் பிடிப்பதற்காக வந்திருந்த பாதுகாப்புப் படையினர் பதுங்கியிருந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய எட்டு இளைஞர்கள் ஒரு வேனில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களில் ஆறு பேரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட சமயத்தில் ஆயுதப்படையினரால் மேலும் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மோன் நகரத்தில் நடைபெற்ற அட்டூழியம் தனித்த ஒன்று அல்ல. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் சாமானிய மக்கள் தொடர்ந்து பல முறை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு படுகொலைகள் நடக்கும் போதெல்லாம், ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சுட்டோம் என்று கூறித் தப்பித்துக்கொள்கின்றனர்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் வட கிழக்கு மாநிலங்களில் 1958இலிருந்து அமலில் இருந்து வருகிறது. 1984இல் மணிப்பூரில் ஹெய்ரான்காய்தாங் என்னுமிடத்தில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது 14 பேர் கொல்லப்பட்டனர். 1995இல் ரிம்ஸ் (RIMS) நிகழ்வின்போது 9 பேர் இறந்துவிட்டார்கள். 2000இல் மணிப்பூர் மாநிலத்தில் மாலோம் என்னுமிடத்தில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப் பட்டார்கள்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் மூன்றாவது பிரிவின்கீழ் ஒன்றிய அரசு, ஒரு மாநிலத்தை, அல்லது, ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை, ஆயுதங்தாங்கிய கிளர்ச்சியாளர்கள் நிறைந்த பகுதி (disturbed area) என அறிவித்திட முடியும். பின்னர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இந்தச் சட்டத்தை அங்கே பிரயோகிக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ், ஆயுதப் படையினருக்கு வகைதொகையற்ற அளவில் அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எவரொருவரையும் அவர் சட்டத்தை மீறினார் என்றும், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எடுத்துச் சென்றார் என்றும் கூறி அவரைக் கொல்ல முடியும். எவரொருவரையும் கைது செய்யலாம். எந்தக் கட்டிடத்திற்குள்ளும் எவ்விதமான பிடியாணையும் (warrant) இல்லாமல் உள்ளே நுழைந்து ஆய்வு செய்யலாம்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1990இல் ஜம்மு-காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போதும் அது அங்கே அமலில் இருந்து வருகிறது. இந்தச்சட்டத்துடன் பொதுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர அரக்கத்தனமான நடவடிக்கைகளும் சேர்ந்து அங்கே ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்கள்மீது கடந்த முப்பதாண்டுகளாக மிகவும் கொடூரமான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் குற்றமிழைத்த பாதுகாப்புப் படையினர் எவர்மீதாவது வழக்குத்தொடர வேண்டுமெனில் அதற்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவை. இது, நடைமுறையில் சாத்தியமில்லை என்பதையே ஜம்மு-காஷ்மீர் அனுபவங்கள் காட்டுகின்றன. 2018 ஜூலை வரையில், அங்கே மாநிலத்தில் ஆட்சியிலிருந்த மாநில அரசாங்கங்கள் இவ்வாறு ஒன்றிய அரசின் அனுமதி கோரி 50 வழக்குகளை அனுப்பியிருந்தன. எனினும், இந்த வழக்குகள் அனைத்திலுமே ஒன்றிய அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. பத்ரிபால் என்னுமிடத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் இவ்வழக்கை விசாரித்த போதிலும், இக்குற்றத்தைப் புரிந்தமைக்காக பாதுகாப்புப்படையினர் சிலர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திருந்தபோதிலும், இவ்வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் (court-martial) விசாரிக்கப்படும்போது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது முதல் நோக்கிலேயே (prima facie case) ஆதாரம் இல்லை எனக்கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐரோம் சர்மிளா இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது கிட்டத்தட்ட பதினாறு ஆண்டு காலம் நீடித்தது. 2004இல் ஐமுகூ அரசாங்கம் இச்சட்டம் செயல்படும் விதம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கோரி நீதியரசர் ஜீவன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு இந்தச் சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து 2005ஆம் ஆண்டிலேயே அறிக்கையை அளித்தது. எனினும், ராணுவமும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததன் காரணமாக இது நடைபெறவில்லை.

2004இல் மணிப்பூரில், தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தங்ஜம் மனோரமா என்பவர் பாதுகாப்புப் படையினரால் மிருகத்தனமானமுறையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மிகப்பெரிய இயக்கம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இம்பால் நகராட்சிப் பகுதி மட்டும், இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பெல்லையிலிருந்து நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில், ஐமுகூ அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த சமயத்தில், உமர் அப்துல்லா அரசாங்கம், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகள் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, எல்லைப் பகுதி தவிர ஏனைய அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரின் இதர பகுதிகளிலும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின. ஏனெனில் அந்த சமயத்தில் அங்கே தீவிரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்திருந்தன. அப்போதைய உள்துறை அமைச்சர் இதற்கு செவிமடுத்தபோதிலும், ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அரசாங்கம் இதனை நிறைவேற்றிட வில்லை.

ஆயுதப் படையினரை அப்பாவி மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான இந்தச் சட்டத்தை இத்தனை ஆண்டு காலமாக உச்சநீதிமன்றம் அடித்து வீழ்த்தாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

மோடி அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளை மிகவும் கொடூரமான முறையில் மிதித்துத் துவைத்து, நாட்டில் ஒரு ராணுவ அரசை நிறுவுவதற்காக, இத்தகைய ஜனநாயக விரோத, அரக்கத்தனமான சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு ஆகியவற்றுடன் இந்த ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும் தங்களுடைய எதேச்சாதிகார ராணுவக் கட்டமைப்பு ஆட்சியின் ஓர் அங்கமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகார வரம்பெல்லையை, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து, 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டர் வரைக்கும் நீட்டித்திருப்பதை, இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியூ ரியோ அவர்களும், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா அவர்களும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ரத்து செய்திட வேண்டும் என்று கோரியிருப்பது நல்லது. 2015இல் திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

எனினும், சில மாநிலங்களில் மட்டும் இந்தச் சட்டத்தை ரத்து செய்வது போதுமானதல்ல. நாகரிகமுள்ள ஒரு ஜனநாயக சமூகத்தில் இத்தகையதொரு சட்டத்திற்கு இடம் இருக்கக் கூடாது. இந்தச் சட்டம் முழுமையாக ரத்துசெய்யப்படுவதற்கு இதுவே தருணமாகும்.

(டிசம்பர் 8, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Jaicheng Jai Dohutia's ‘Haanduk’ The hidden Corner Assam Movie Review in Tamil. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam

மறைந்திருக்கும் மூலை (The Hidden Corner) அஸ்ஸாமிய திரைப்பட விமர்சனம் – இளங்கோ சதாசிவம்

  மறைந்திருக்கும் மூலை (The Hidden Corner) 2016 / அஸ்ஸாமிய சினிமா / 90 நிமிடங்கள் 1979 இல் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அஸ்ஸாம் மாநிலத்தின் அன்றைய சமூக, அரசியல் சூழல்…
நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

ஜானு பரூவா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் விவசாயிகள் தலைவரான அகில் கோகோயை விடுவிக்கக் கோருவதானாலும் சரி, தனது சொந்த மாநிலமான அசாம் தொடர்பான பல விஷயங்களில் பொது நிலைப்பாட்டை பிரபல…