நூல் வெளியீட்டு விழா: வ.உ.சிதம்பரனார் தன்வரலாறு

நூல் வெளியீட்டு விழா: வ.உ.சிதம்பரனார் தன்வரலாறு




நூல் : வ.உ.சிதம்பரனார் தன்வரலாறு 
ஆசிரியர் : ந.மு.தமிழ்மணி
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகலாயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

வ உ சிதம்பரனார் தன்வரலாறு ( உரைநடையாக்கம் ந.மு.தமிழ்மணி ) நூல் வெளியீட்டு விழா இன்று (5.9.2022 திங்கள்) காலை 11 மணிக்கு, பாரதி புத்தகாலயத்தில் நடைபெற்றது.

Book Launch: V U Chidambaranar Tanvaralaru நூல் வெளியீட்டு விழா: வ உ சிதம்பரனார் தன்வரலாறு தோழர் ஆர்.பத்ரி தலைமை ஏற்க
தோழர் ஜி.செல்வா வரவேற்புரை நல்கினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், வெளியிட
வஉசியின் மொத்த படைப்புகளையும் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தொகுத்தளித்த பேரா.வீ.அரசு பெற்றுக் கொண்டார்.
பாரதி புத்தகாலயத்தின் நிர்வாக மேலாளர் தோழர் ஜெயஸ்ரீ நன்றியுரை ஆற்றினார்.

வ.உ.சி.யின் தன்வரலாறு முற்றிலும் அகவற்பாவால் வ.உ.சி. அவர்களால் எழுதப்பட்டாலும் இந்திய சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக முதல் பதிப்பு 1946 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதன் பினபு வெளிவந்த போதும் செய்யுள் வடிவிலேயே வெளிவந்தது.

வ.உ.சி.யின் சுயசரிதை அக்காலச் சமூகநிகழ்வுகளோடு அவரைப் பிணைத்து காட்டுகின்ற ஓர் அரிய இலக்கிய பெட்டகம். எனவும், மேலும் இந்த சுயசரிதத்தை அரசியல் ஆவணம் என்றே ம.பொ.சி.குறிப்பிடுகிறார்.

வ.உ.சி.யின் சுயசரிதை அவரது சொந்த வாழ்க்கை மட்டுமன்று. திலகர் சகாப்தத்தின் முற்பாதியில் தமிழகத்தில் நடந்த விடுதலைப் போரின் வரலாறுமாகும். அந்த வகையில் அதனை அரசியல் தஸ்தாவேஜு என்றும் கருதலாம். கவிதை வடிவம் பெற்றுள்ளதால் தமிழ் இலக்கிய களஞ்சியத்திலேயும் சேர்க்கப்பட்டதாகும் என்றும ம.பொ.சி.கூறும் கருத்து இங்கு முக்கியமானது.

பெரியவர் வ.உ.சி. சிறைக்கோட்டத்தில் இருந்த வேளையில் பரலி சு.நெல்லையப்பர் வேண்டிக்கொண்டதற்கிணங்க தனது நுண்மான்நுழைபுலம் வாய்ந்த ஆற்றலுடன் கவிதை வடிவில் வெளிவந்தாலும் தெள்ளிய உரைநடையுடன் யாரும் பதிப்பிக்கவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது.

அக்குறையை எழுத்தாளர், வஉசி பற்றாளர் ந.மு. தமிழ் மணி உரைநடை வடிவில் தெள்ளிய நீரோடை சொற்றொடர்களுடன் அருமையான துணுக்குகள் நிறைந்த பெட்டிச் செய்திகளுடன் வாசிப்புத் தன்மையை மிகவும் இலகுவாக்கி உருவாக்கியுள்ளார்.

அய்யா ந.மு.தமிழ்மணி அவர்களது தமிழ் உரைநடையில் பெரும் பாய்ச்சலுடன் தமிழ் உலகில் வாசகர்கள் கவனத்தை பெரியவர் வ.உ.சி.யின் தன்வரலாறு சென்றடையும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

பெரியவர் 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இந்த நூலினை வெளியிட்டதில் பாரதி புத்தகாலயம் பெருமை கொள்கிறது. இப்பணியை கடுமையான உழைப்பில் சிறப்பாக செய்து முடித்த எழுத்தாளர் தோழர் த.மு.தமிழ்மணி அவர்களுக்கு மிக்க நன்றி.