ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு
இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து
இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள்
வெந்து தணிந்திட வேதனை கொண்டு
வீதியில் நின்றாரே-நம்
சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்
செவிட்டில் அறைந்தாரே-மோடி
செயலால் இறந்தாரே!
இந்திய வீரர் இறப்பது மோடியின்
இழிந்த அரசியலாம்-அவர்
சொந்தம் அழுது சோர்ந்திடக் கண்டும்
சொகுசாய் வாழ்பவராம் -அட
பந்தம் இலாதவர் பாசம் இதுதான்
பாருங்கள் மக்களே-பகை
தீருங்கள் மக்களே!
சிலையால் அரசியல் சில்லறை மதவெறி
சீர்கெட்ட ஆட்சியாம் -இவர்
கொலைகள் செய்வது கொள்கை என்றாகும்
கொடுமைக் காட்சியாம்-அட
மலைபோல் பொய்யை மனதாரச் சொல்லும்
மோடியே சாட்சியாம்-அவர்
தேடிடும் வீழ்ச்சியாம்!
வங்கியின் பணத்தை வாரிச் செல்வர்கள்
வளம்பெறக் கொடுத்தவராம்-அவர்
வாங்கிய பணத்துடன் வெளிநாடு ஓடிட
வசதியும் செய்தவராம்-மோடி
ஏங்கிடும் மக்களை ஏழ்மையில் தள்ளி
ஏளனம் செய்பவராம்-மோடி
ஏளனம் செய்பவராம்!
வரியாய் ஜிஎஸ்டி விதித்து மக்களை
வாடிட வைத்தாரே-நாட்டில்
சிறுகுறு தொழிற் சாலைகள் எல்லாம்
சிதைந்திடச் செய்தாரே-மோடி
நரியாய்ச் செய்த வேலை அதனால்
நாட்டை அழித்தாரே-மோடி
நாட்டை அழித்தாரே!
ஊழல் மதவெறி உலுத்த சாதி
ஒழிந்திடச் சங்கூது-அவர்
வீழ உழைத்திடு வீதியில் களமிடு
வெற்றி என்றோது-பாஜகாவை
ஆழப் புதைத்திடு ஆக்கம் நிலைத்திடு
அதற்கிணை ஏது-இனி
அதற்கிணை ஏது!