Posted inPoetry
பாலசுப்பிரமணியனின் இதயமே இயங்கு.. (கவிதை )
இரு இதயங்கள்’–
இணைந்தால்
காதல்!
உரசினால்
தாம்பத்யம்!
உணர்ந்தால்
நட்பு!
உறுத்தினால்
பகை!
உருகினால்
அன்பு!
மறுகினால்
பக்தி!
காதல் மோதல் !
பிரிதல் புரிதல்!
சேர்தல் சோர்தல்!
கனவு நினைவு !
இனிப்பு கசப்பு!
இன்பம் துன்பம்!
கோபம் தாகம்!
சலிப்பு சிலிர்ப்பு!
உயர்வு தாழ்வு!
எழுச்சி வீழ்ச்சி!
மகிழ்ச்சி நெகிழ்ச்சி!
புகழ்ச்சி இகழ்ச்சி!
இத்தனையும் தாங்கும்,
இனிய இதயமே.. நீ !
பொதிமூட்டையா?
பூச்செண்டா?
சாக்கடையா?
பூக்கடையா?
நீரோடையா?
நெருப்போடையா?
ஆப்பிளா?
அரளியா?
மூளையே! நீயே
முடிவுசெய்..!!
இதயத்தை!
இனிமையாய்,
இளமையாய்,
இனிப்பாய்,
இதமாய்,
காத்திட !
முயற்சி செய் !
இதயம் நின்றால்!
இறுதி உறுதி!
இதயம் காப்போம்!
இனிது வாழ்வோம்!
இதயபூர்வமாய்
இனிய
இதய தின!
நல்வாழ்த்துக்கள்!
மரு. உடலியங்கியல் பாலா.