Posted inPoetry
துளையற்ற மூங்கில் கவிதை – லீலா லோகநாதன்
என் கனவுகள் தழைத்திட
ஒரு துளி நீராவது கிடைத்திடாதா?
நான் துளிர் விட்டு எழ…
கண்ணீரின்றி கதறி அழும்
எனதகத்து தசைகளின் வலிகளை
கவிதையில் கழுவேற்றி களிக்கிறேன்…
பருந்தென வட்டமிட்டு கொத்தும்
செந்நிற சொற்கள் உடைத்து
தன்னம்பிக்கையிட்டு நிரப்புகிறேன்…
துளையற்ற மூங்கிலில் துயரங்களடைத்து
இசையாய் வெளியேற்ற முற்படுகிறேன்
பேறுகால பெரு வலியாய்…
இனி துளிர் விட்டு எழுவேன்….
நம்புங்கள்…