Essential requirements for internet classroom 70th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70 – சுகந்தி நாடார்




                                                                                                  கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்

கல்வி என்பது வரலாற்றில் காலத்திற்கு ஏற்பவும் மனிதனின் பொருளாதாரத் தேவைக்காகவும், புத்தாகச் சிந்தனைகளை செயல்படுத்தத் தேவையான மனித வளத்தைத் தயாரிக்கவும் மாறிக் கொண்டே வருகிறது. குருகுலப் பயிற்சியிலிருந்து தொழிற்சாலைகளை இயக்கத் தேவையான திறன்களைக் கொடுக்கக் கூடிய கல்வி என்று மாறிய கல்வி, சட்டம் மருத்துவம் வணிகம் என்ற மனிதத் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது இப்பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வி முறை மாறவேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். தேர்வுகளின் அடிப்படையில் நடக்கும் கற்றலும் படித்து முடிந்ததும் பணிக்குச் செல்வதும் 18- 19ம் நூற்றாண்டுகளின் தேவையாக இருந்தது. 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து, இப்போதுவரை நமது வாழ்க்கை முறை அதிவேகமாக மாறிவிட்டது.

ஆனால் அந்த மாற்றத்திற்கும் நமதுக் கல்விக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. 19ம் நூற்றாண்டுக் கல்விக்கு அன்றையத் தொழிற் சாலைகளின் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய வேலை மட்டுமே இருந்தது. ஆனால் இன்றையக் கல்வி எதிர்கால சந்ததியையும் அவர்களின் செயல்பாடுகளையும் மனதில் கொண்டு அமைய வேண்டியிருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தால் நமக்குக் கிடைக்கும் வளங்கள் நமக்குப் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்தப் பற்றாக்குறை எதிர்காலத்தில் குறையுமா அதிகரிக்குமா என்பது நாம் செய்யப் போகும் வாழ்க்கை முறை மாற்றத்தில் இருக்கின்றது.

ஒருவரின் வாழ்க்கை முறை மாற வேண்டுமென்றால் அங்கு கண்டிப்பாக ஒரு ஆசிரியரின் பணி இருக்கும். நம் எதிர்காலத் தேவை, ஒரு தனிமனித வாழ்க்கை முறையின் மாற்றம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம். அத்தகைய மாற்றத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு கருவி கல்வி. எதிர்காலப் பற்றாக்குறைக்கு தயார் செய்யக் கூடிய கல்வி முறை ஒரு அவசியத்தேவை.

நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றுத் தெரிந்தால் தான் நம் கல்வியின் பரிணாமம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்கு வரும். இன்றைய வாழ்க்கை முறையை வைத்துப் பார்க்கும் போது மனித குலம் பல்வேறு பற்றாக்குறைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஏற்கனவே இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வும் எதிர்காலக் கல்வியின் பரிணாமத்தை எவ்வாறு நிர்ணயிக்கின்றது என்று பார்க்கலாம். ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு இன்னும் பெரிதாக விரியப்போகின்றது. அதன் முதல் அறிகுறியாக 2022ல் அமெரிக்காவில் 3G அலைபேசிகள் வேலை செய்யாதாம்.
ஏன்?

இரண்டு காரணங்கள்
முதலாவது 2022லிருந்து 2030க்குள் பல நகரங்கள் திறன் வாய்ந்த நகரங்களாக மாறிவிடும். அங்கே சாலை போக்குவரத்து முதல் நம் வீட்டுப் பொருளாதாரம் வரை நம்முடைய ஒவ்வொரு அசைவும் மின் எண்ணியியல்களாக மாறி வானில் வலம்வரும். நாம் இப்போதே ஒரளவு அப்படிப்பட்ட வாழ்க்கைக்குப் பழகி விட்டோம். ஆனால் அதை விட வேகமாகவும் அதிகமாகவும் இன்னும் எண்ணியியல் தரவுகள் வான் வழி பறக்கப்போகின்றன. அப்படி செல்லும் தகவல் தரவுகள் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் இரு கணினிக் கருவிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கணினிக் கருவிகளுடன் தொடர்பிலேயே இருக்கும். கணினி தான் நம்முடைய அன்றாட வாழ்வு எனும் போது எவ்வளவு தரவுகள் ஒவ்வோரு நாட்டிலும் உருவாகும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தத் தரவுகள் வேகமாகச் செல்ல இப்போது பயன்பாட்டிலிருக்கும் 3G போதாது. அதனால் 5Gன் வேகத்திற்கு நிறுவனங்கள் மாறுகின்றன.

இரண்டாவது காரணம் அலைவரிசைகளின் பற்றாக்குறை. அலை வரிசை என்றால் என்ன?
ஒலியோ ஒளியோ ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லும் போது உருவாகும் அலைகளின் எண்ணிக்கை தான் அலை வரிசை. மனிதன் முதன் முதலாக அலைவரிசையைப் பயன்படுத்தி பொழுது போகிற்காக உருவாக்கியத் தொழில்நுட்பம் வானொலி என்று நினைக்கின்றேன்.
வானொலித் தொழில்நுட்பத்தின் அடிப்படை20 kHz to around 300 Ghz வேகத்தில் செல்லும் மின்காந்த வான் அலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஒலி மின்காந்த அலைகளாக மாற்றபட்டு ஓரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கடத்தபடுகின்றன தொலைக்காட்சி எனும்போது ஒரு புகைப்படக்கருவியும், ஒரு ஒலி வாங்கியும் இணைந்து படத்தையும் ஒலியையும் மின்காந்த அலைகளாக மாற்றபட்டு நம்மால் தொலைகாட்சி வழியாக அனுபவிக்கப்படுகின்றது.

அலைபேசிகளின் அறிமுகம் 1979 -80 களில் நம்மின் புழக்கத்திற்கு வந்தது அப்போது அவை மின்காந்த அலைகளின் வடிவில் விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதனால் ஒலிகளே அலைபேசிகளுக்கு இடையில் பயணம் செய்தன. அடுத்து அலைபேசி வழியே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தது. இந்த அலைபேசிகள், அலைபேசிகளின் முதல் தலைமுறை என்ற பொருளில் 1G என்று அழைக்கபடுகின்றன. இவை தரவுகளை பரிமாறிக் கொள்ளத் தேவையான வேகம் ஏறத்தாழ 3 kb. இந்த அலைபேசிகள் குறைந்த அளவு bandwidth தேவைப்பட்டது. குறைவானத் தரவுகளே அனுப்பப்பட்டன. நம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையோர் இந்த மாதிரி அலைபேசிகளை பயன்படுத்துவதை நான் பார்த்து இருக்கின்றேன், இவை 800 Mhz அலை வரிசையில் வேலை செய்தன.

அடுத்து வந்தது 2G. இந்த அலைபேசிகள் 900MHZ, 1800MHz அலைவரிசைகளில் 50 kb வேகத்தில் செயல்படுகின்றன. இவை குறுஞ்செய்திகள் பல்லூடகங்கள் அனுப்ப உதவியாக இருந்தன. இன்னோரு முக்கியமான விஷயம் முதன் முதலாக தரவுகள் அலை வடிவத்திலிருந்து கணினியின் இரும எண்களாக இந்த அலைபேசிகள் வழி மாற்றப்பட்டு தகவல்கள் வான் வழி பறந்தன.
Iphone, Apple, Communication, Mobile, Modernஅடுத்து வந்தது 3G. Apple நிறுவனத்தின் முதல் திறன்பேசி கண்டுபிடிக்கப்பட்டு குறிஞ்செய்திகள் ஒலி மட்டுமின்றி இணைய உலாவல், மின்னஞ்சல் திரைப்படம் மின்னூல் என்று பல வடிவங்களில் தரவுகள் நம்மை வந்து அடைந்தன. நம்மிடமிருந்து மற்றவருக்கும் சென்றன. இன்றைய தரவு சாம்ராஜியங்களின் பலம் ஒரு பணி சார்ந்த தொழில்நுட்பத்திலிருந்து, தரவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனங்களாக மாற ஆரம்பித்தன. இணையப்பக்கங்கள் எல்லாம் குறுஞ்செயலிகளாக வடிவமைக்கப்பட்டன. இதனால் வான் வழிப்பயணம் செய்யும் தரவுகளின் அளவு அதிகரித்ததோடு, தரவிற்கான செலவும் அதிகரித்தது. நுகர்வோர் கலாச்சாரம் மெள்ள மெள்ள முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இதனால் பல நிறுவனங்கள் குறைந்தவிலையில் தங்கள் சேவைகளை விற்க ஆரம்பித்ததோடு, தரவுகளைப் பரிமாறும் வேகத்தையும் அளவையும் அதிகரித்தன.200 kps வேகத்தில் 2100HZ வேகத்தில் செயல்படுகின்றன. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 4G 850 MHz, 1800 MHz அலை வரிசைகளில்ஒரு வினாடிக்கு 100 Mb முதல் 1 Gb வரை வேகமாகச் செயல்படுகிறது. இதனால் கொளவுகணிமை, இணைய வழிக் கலந்துரையாடல்கள் இணையத் திரைப்படங்கள் என்று கணினித் தொழில்நுட்பம் தன்னை மாற்றிக்கொண்டது.
YouTube, Netflix, and Prime Video reduce streaming quality in Europe due to coronavirus - Technology Shoutதிரையரங்குகளும் வானொலிப்பெட்டிகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் போய் எல்லாமே திறன்பேசி என்று ஆகிவிட்டது. நுகர்வோர் கலாச்சாரம் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது கணினியில் எந்த ஒரு தொழில்நுட்பத்தை, அல்லது சேவையை நாம் அளித்தாலும் திறன்பேசி வழி அளிக்க வேண்டியப் பொருண்மையாகத் தயாரிக்க வேண்டியுள்ளது. இன்று Netflix, Amazon Prime,Youtube என்று காணொளிகளாக வரும் ஒவ்வோரு பொழுது போக்கு அம்சமும் இன்று இணையத்தை, ஆண்டு கொண்டு இருக்கின்றன. இப்போது 3G அலைவரிசை சார்ந்த தொழில்நுட்பத்தை நீக்கிவிட்டு முழுக்க முழுக்க 5G அலைபேசி நிறுவங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.
3G rule' › Friedrich-Alexander-Universität Erlangen-Nürnbergநம் போக்குவரத்துப் பிரச்சனையை சமாளிப்பதற்காக, சாலைகளை விரிவு படுத்துவது போல் இந்த தரவுப் போக்குவரத்தின் Band widthம் அதிகரிக்கப் போகின்றது. ஆனால் ஏன் 3G திறன்பேசித் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும்? இரு அலைவரிசைகளும் ஒன்றாக இணைந்து பயணிக்க இயலாதா என்றால் முடியாது என்கின்றனர் அலைபேசித் தொடர்பு நிறுவனத்தார்.

வேகமாகவும் பாதுகாப்பானதாகவும் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படக்கூடிய இந்த தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள மூன்று முக்கிய அலைபேசி நிறுவங்கள் கூறூவதாவது அரசு அலைபேசிகளுக்கென வகுத்து வைத்த விதிகளின் படி திறன்பேசிகளுக்கு என்று அலைவரிசை பங்குகள் முடிவடைந்து விட்டதாகவும் அதனால் அடுத்து வரும் தரவுப் பெருக்கத்தை எதிர் நோக்கி 3G திறன்பேசிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த அலைவரிசைகளை எதிர்காலத்திற்குப் பயன்படுத்துவதற்காக தற்போது எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பமும் அதற்கான கருவிகளும் முடக்கப்படுகின்றன.

முந்தைய தொடரை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 -(எண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்