கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




ஆலமரத்து அடியில் விநாயகர்
ஆயிரம் பேர் வந்து போகின்றனர்
ஆரும் வணங்கவில்லை அவரை
ஆம் அது
அரசு மருத்துவமனை வளாகம்.

– சிரஞ்சீவி இராஜமோகன் 
கும்பகோணம் 
எதுவும் நல்லது  குழந்தைகள் கதை – இரா.கலையரசி

எதுவும் நல்லது குழந்தைகள் கதை – இரா.கலையரசி




மூங்கிலை வளைத்து தன் விருப்பபடி தொங்கியது குட்டி மைனா.

‘ஏய் ஜாலி! ஜாலி!’

அதன் இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுத்தது மூங்கில்.

அடுத்து ஆலமரத்திற்கு தாவியது.கிளையில் தொங்க முயன்று தோற்றது.

“.ம.ம்.மம்”னு அழுதபடி அம்மாவிடம் வந்தது.  ஆலமரத்தைக் குறை சொன்னது.

அம்மா மைனா கேட்டது.”நம்ம கூடு எங்க இருக்கு?”

“ஆலமரத்துல!”

பட்டென பதில் வந்தது.

“போன மழையில நம்ம கூடு விழுந்துச்சா?

“இல்ல”.

“சரியாச் சொன்ன.  இந்த நிழலில உக்காந்து இருக்கோமே, ஆலமரத்தால தான? ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு  விதமா பலன் தரும்”னு
சொன்னது அம்மா மைனா.