Porunai Nellai Book Fair - 2022 பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022

திருநெல்வேலி புத்தகத் திருவிழா – 2022 அறிவிப்பு



Porunai Nellai Book Fair - 2022 பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022

மார்ச். 18 முதல் 27 வரை வ உ சி மைதானம் பாளையங்கோட்டை.

Porunai Nellai Book Fair - 2022 பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பப்பாசி செயலாளரை அழைத்திருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து புத்தகத் திருவிழா நடத்துவது சம்பந்தமாக பல்வேறு தகவல்கள் எடுத்து கூறியதை பிரஸ்மீட்டில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிகழ்வு.

Create libraries in all schools and colleges for the benefit of students - BAPASI request மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் - பபாசி (BAPASI) வேண்டுகோள்

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் – பபாசி (BAPASI) வேண்டுகோள்



சென்னை, டிச. 7-

அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்…

அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக கருதுகிறோம். முன்பெல்லாம் நீதி வகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நூலக வாசிப்புக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு என நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணாக்கர்களிடையே இருந்தது.

பள்ளி படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களைப் படிக்கும் போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அதோடு மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய சூழலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் எனவும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் எனவும் இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்…ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோன்று 2022ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணியை பபாசி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பபாசி தலைவர் எஸ்.வயிரவன்,

செயலாளர் எஸ்.கே.முருகன்.

Library letter to all ceo's (1)
S Vairavan Wins as Bapasi Leader. பபாசி தலைவராக எஸ் வைரவன் வெற்றி

பபாசி தலைவராக வைரவன் பதவியேற்பு



இடது புறமிருந்து வலது புறம் செயற்குழு உறுப்பினற் – தனுஷ், இணைச் செயலாளர் – முல்லை பழனி, துணைத்தலைவர்(தமிழ்) – பெ. மயிலவேலன், தலைவர் – S. வைரவன், துணைத்தலைவர்(ஆங்கிலம்) – புருஷோத்தமன், பொதுச் செயலாளர் – S.K. முருகன், பொருளாளர் – A. குமரன், துணை இணைச் செயலாளர்(தமிழ்) – இராம மெய்யப்பன், துணை இணைச் செயலாளர்(ஆங்கிலம்) – S. சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை 26.11.2021 அன்று வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. பப்பாசி சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் 29-11-2021 இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் குமரன் பதிப்பகம் எஸ் வைரவன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாதம் கீதம் எஸ்.கே.முருகன் செயலாளராகவும், லியோ புக்ஸ் ஏ.குமரன் பொருளாளராகவும், வனிதா பதிப்பகம் பெ.மயிலவேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), இணை செயலாளர் M. பழநி(முல்லை பதிப்பகம்), இராம மெய்யப்பன்(உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்) துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), எஸ் சுப்பிரமணியன்( டைகர் புக்ஸ்) துணை இணைச் செயலாளராகவும் ஆங்கிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகக்குழு தமிழ் உறுப்பினர்களாக ஆர்.தனுஷ்(நக்கீரன்), ஐ.ஜலாலுதீன்(ஐஎஃப்டி), லோகநாதன்(புலம்), எஸ்.பிரபாகரன்(தமிழ்ச் சோலை பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிர்வாகக்குழு ஆங்கிலம் உறுப்பினர்களாக ஏ.கேளியப்பன்(மயூரா புக்ஸ்), ஐ.முபாரக்(ஸ்பைடர் புக்ஸ்), நந்த் கிஷோர்(டெக்னோ புக்ஸ்), கே.ஸ்ரீராம்(ஜெய்கோ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினரர்களாக ஜே.ஹரிபிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களது பொறுப்பு காலம் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

2021 Muthamil Dr.Kalaignar Porkili BAPASI Award Announced. 2021-ம் ஆண்டுக்கான 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி' விருது அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிப்பு



2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:

1. அபி – கவிதை

2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை

4. வெளி ரங்கராஜன் – நாடகம்

5. மருதநாயகம் – ஆங்கிலம்

6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.

இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.