சீடர்கள் கட்டுரை – பேரா. எ.பாவலன்

சீடர்கள் கட்டுரை – பேரா. எ.பாவலன்




சீடர்கள் (COMRADES)

ஒவ்வொரு சமயமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டே தோற்றம் பெற்றது. அவ்வந்த சமயத்தின் கொள்கைக் கோட்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நல்வழிப்படுத்துவது சமயத்தின் முக்கிய நோக்கம். அதனால்தான், தன் ஒருவரால் மட்டும் எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதனால் அத்தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சீடர்கள் தேவைப்பட்டனர். முதலில் அந்த சீடர்களே அந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். அவர்களால்தான் உலகம் முழுவதும் சமயங்கள் பரவத் தொடங்கின.

ஒவ்வொரு சீடர்களும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணப்பட்டனர். ஒவ்வொரு ஊராகச் செல்லத் தொடங்கினர். பிந்நாளில் நாடு விட்டு நாடு தாண்டியும், கண்டம் விட்டு கண்டங்கள் தாண்டியும் சென்றனர். கிறிஸ்துவ சமயமும், பௌத்த மார்க்கமும், இஸ்லாமும், சமணமும்,  கன்பூசியஸ் உள்ளிட்டு பல சமயங்கள் அனைத்தும் இப்படி மக்களிடம் சென்று சேர்ந்ததில் சீடர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

பல சமயங்கள், அவர்களை சீடர் என்கின்ற பொதுச் சொல்லால் அழைக்கப்படுவதுண்டு. கிருத்துவ சமயத்தில் அப்போஸ்தலர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தில் தோழர்கள் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் COMRADES என்ற சொல்லால் அழைக்கப்படுவதையும் காணமுடியும். 

தமிழில்  சீடர்கள், தோழர்கள் என்பது ஆங்கிலத்தில் Comrades என்ற சொல்லில் பயன்படுத்தப்பட்டாலும், Seed என்ற ஆங்கில சொல்லுக்கு விதை என்பது பொருள். ஒருவேளை ஆங்கிலச் சொல்லுக்கு விதை என்ற சொல்லில் சீடர்களைப் பொருள் கொள்ளலாம். காரணம் எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்யப்படுவாய் என்பது பொது தத்துவம். அந்த வகையில் இவ்வுலக மக்களிடம் ஒரு நல்ல விதையைகீ கையில் கொடுப்பதைப் போல இவ்வுலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் நற்கருத்துக்களை விதைக்கவே தோன்றின.

இங்கு பௌத்த சமயத்தையும் கிருத்துவ சமயத்தையும் ஒப்பிட்டு சீடர்களின் தொண்டையும், அவர்களின் பணியையும் வெளிக்கொணரும் தன்மையில் இவ்வாய்வு கட்டுரை அமைகிறது. 

முதலில் பௌத்த சமயத்தின் தத்துவங்களையும், கிறிஸ்துவ சமயத்தின் தத்துவங்களையும் காணலாம்.

சமயம்

சமையம் என்கின்ற வேர்ச்சொல்லிலிருந்து சமயம் உருவானது. நாம் அனைவரும் உணவுப் பொருட்களை சமைத்து உண்ணுவதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறோம். உடல் வலிமை அடைகிறது. நலன் உண்டாகிறது. ஆற்றல் பெருகுகிறது. அதேபோல மனதை சமைப்பதற்காக சமயங்கள் தோற்றம் கண்டன. சமயத்தின் மிக முக்கியமான நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவதாகும்.. இவ்வுலகில் எங்கெல்லாம் பாவங்களும், கொடுமைகளும், அக்கிரமங்களும் தோன்றியதோ அங்கெல்லாம் சமயத்தின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக ஐரோப்பிய தேசத்தில் யூத மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மன்னன் நடத்திய கொடுமைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் உண்டானது தான் கிறிஸ்தவம். அதேபோன்று அரபு தேசத்தில் நடக்கும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவே அங்கு இஸ்லாம் மார்க்கம் தோற்றம் பெற்றது. ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சமணமும், பௌத்தமும் தோற்றம் பெற்றன. பௌத்தம் மனித முரண்பாடுகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்கும் நோக்கத்தில் தோற்றம் கண்டது. குறிப்பாக மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் கொள்கையை எதிர்த்து உருவானது.

இயேசு கிறிஸ்துவம், நபிகள் நாயகமும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள். இதுவரை இவ்வுலகில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நபிகள் நாயகம் இறுதியாக வந்தவர். அவருக்கு முன்பாக இந்த பூமியில் தோன்றியவர் தான் இயேசுபிரான் என்று அந்த சமயத்தின் வேதங்கள் கூறுகின்றன.

பௌத்த சமயம்

பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு தத்துவம். பின்னாளில் அது சமயமாக மாற்றம் பெற்றது. பௌத்த மரபின்படி புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் இந்திய துணை கண்டத்தில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர். 

பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேரவாத பவுத்தம் (முதியோர் பள்ளி) மற்றும் மகா யான பௌதம் (பெரும் வாகனம்). தேரவாதம் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியா லவோஸ்,தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயானம் சீனா, கொரியா,  ஜப்பான்,  வியட்நாம்,  சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் பின்பற்ற படுகிறது.  இந்த இரண்டை திபெத்து மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும்  வைச்சிரயான பௌதம் மூன்றாவது வகையாக குறிப்பிடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் நவையான பௌத்தத்தை தொடங்கி 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரிய புரட்சி ஏற்படுத்தியவர். 

பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கிலும் காணப்படுகின்றன உலகெங்கும் சுமார் 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகில் மிக வேகமாக பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்று.

உலகின் தோற்றம்தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உடலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது. அதுவே பௌத்தத்தின் முடிவு. தேவையேற்படின் இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ?, எப்படி விதை மாத்தில் இருந்து வந்ததோ அப்படியே.

சார்பிற்தோற்றக் கொள்கை

கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பௌத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்க. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் ஆங்கிலத்தில் Dependen Origination என்றும் கூறுவர்.

இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்;

எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ?  இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து…. தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும், ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதவின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை,

முதற் காரணத்தை உடன்பட்ட கடவுள் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது. 

கடவுள் கோட்பாடு

பௌத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை. அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது. அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பௌத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது – Anatta). துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை -Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும். அது பௌத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது

அனைத்தையும் உருவாக்கும் நிர்வாகிக்கும். அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமியசக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எளினும் பௌத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவுகள் இருக்கின்றார்கள், அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள்:

புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பௌத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை. மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்

புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணம் அடைந்த பின்பு சீடர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த உபதேசங்களை எல்லாம் ஒருசேரத் தொகுத்து அந்தத் தொகுப்பை மூன்று பிரிவுகளாகச் செய்தார். அவை வருமாறு,

சுத்த பிடகம்

விநய பிடகம்

அபிதம்ம பிடகம்

இந்த மூன்று பிடகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஆயினும் ஒவ்வொரு பிடகமும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை

விவரிக்கிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம். இந்தோனேஷியா முதலிய நாடுகளில் நிலவும் பௌத்தம் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தது. இதைத் தேரவாதம் பௌத்தம் அதாவது பெரியோர் கடைப்பிடிக்கும் பௌத்தம் என்றுக் கூறுவர்.

பௌத்தர்களோ நிலையான ஆன்மா என்ற  ஒன்று கிடையாது என்றும்.  பல்பொருள்கள் தன்னிச்சையாக ஒன்று சேரும்போது, உயிர் என்பது உண்டாகிறது என்றும், பிறகு மாற்றங்களின் காரணமாக அந்தப் பொருள்கள் பிரியும்போது பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு இருக்குமானால், அந்த உயிர் சூனிய நிலையை அடைகிறது என்றும். அதுவே நிர்வாணம் என்று கூறுகின்றனர்; பந்த பாசங்களலிருந்து விடுபடாத உயிர், தத்தம் கருமத்துக்கு ஏற்றவாறு புகழ் பரவிவரும் என்றும் கூறுகின்றனர்.

ஆகவே ஆன்மா பற்றியும், அது மோட்ச நிலை அடைவது குறித்தும் பௌத்தர்கள் கொண்டுள்ள கருத்து. மற்ற சமயந்தவர் கொண்டுள்ள கருத்துக்கு முற்றும் மாறுபட்டது. இந்த இரண்டு போக்குகளுமே தவறானவை என்று புத்தர் கருதினார். யானையைப் பார்த்திராத பார்வையற்றவர் நால்வர், தான் நொட்டுப் பார்த்த  யானையின் உறுப்பையே யானை” என்று சாதித்ததைப் போல ஆன்மீகவாதிகளும் ஆன்மாவைப் பற்றிக் கூறுகின்றனர் என்று புத்தர் முடிவுக்கு வந்தார். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு, இடர்படுவது கூடாது என்று அவர் கருதினார்.ஆகவே, பயளற்ற ஆன்மாதத்தை விட்டு ஒழித்து மத்திய வழியை அவர் மேற்கொண்டார். அதனால் பௌத்த சமயத்தில் கேளிக்கை வாழ்வுக்கு இடம் இல்லை. சுய அனுபவத்தால் மட்டுமே. பேருண்மைகளை யாராலும் அறிய முடியுமேயன்றி, அனைத்தையும் அனைவராலும் அனுபவமில்லாமல் அறிய முடியாது.  அவற்றை எவ்வளவு தான் விளக்கிச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது. அதைப் போலவே. நீர்வாணம் என்பது சுய அனுபியத்தால் தெளிந்து தெளிய வேண்டிய மனநிலை ஆகும் என்று பௌத்தம் போதனைச் செய்கிறது. கடவுள் ஒன்று உண்டு என்னும் கொள்கைமை. பௌத்தர்கள் ஏற்பது இல்லை.  உலகில் காணப்படும் பயன்பாடுகள் யாவும் அவரவர் செய்யும் வினைகளின் பயனாய் ஏற்படுகின்றனவேயன்றி கடவுள் காரணம் அன்று என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை வாலிபன் ஒருவன் புத்தரை அணுகி, பெருமானே உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கு காரணம் என்ன? ஒருவன் அறிவாளியாகவும் மற்றொருவன் மூடனாகவும்,  ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் தீயவனாகவும்,  ஒரு நோயாளியாகவும் மற்றொருவன் திடக்காத்திரமாகவும், ஒரு ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரனாகவும் இருக்க காரணம் என்று கேட்டான்.

அதற்கு புத்தர் தாம்தாம்  செய்யும் கருமங்களின் விளைவாகவே மாந்தர்களிடையே வேற்றுமைகள் நிலவுகின்றன. பிராமணர்கள் சத்திரியர்களும் தான் தத்துவ விகாரம் செய்ய தகுதி உடையவர்கள் என்னும் குறுகிய கருத்தை முதன்முதலாக தகர்த்தவர் புத்தபெருமான். இதில் சிறிதும் ஐயமில்லை. அறிவியல் தேடலும், ஆர்வமும் உள்ளவர்களுக்கும் பௌத்த சங்கத்தின் வாயில் திறந்து இறந்தபடியால் பல்வேறு சாதிப் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் ஆர்வத்துடன் பௌத்த சங்கத்தில் விரும்பி சேர்ந்தார்கள். 

தான் மட்டும் ஈடேற்றம் பெற்று விட்டால் போதும் என்னும் கருத்து புத்தருக்கு இருந்ததில்லை. தான் பெற்ற அனுபவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் ஈடேற்றம் பெற வழிகாட்டும் வழி தமது முக்கிய கடமையாக அவர் கருதினார். பிக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் 60 என உயர்ந்தும், அவர்களை தம் அருகே வைத்துக் கொண்டு பெருமை அடைவதை அவர் விரும்பவில்லை. அவர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி பௌத்த சமயத்தைப் பரப்ப அவர் ஏற்பாடு செய்தார். பிக்குகளே தர்மத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லுங்கள். ஒரே வழியில் இருவர் சேர்ந்து செல்லாதீர்கள் என்ற யோசனை சொன்னார். சுவபாலன் என்னும் புலையனும், சுந்தன் என்னும் சிப்பந்தி வேலை செய்பவனும் பௌத்த சங்கத்தில் சேர்ந்து பெருமை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பௌத்த சங்கத்தை ஆதரிக்கவும் ஆர்வத்துடன் அதில் மக்கள் சேர்வதற்கு முக்கிய காரணம் சாதி வேற்றுமையை அகற்றியது மட்டுமல்ல புத்தரிடம் காணப்பட்ட வாதத்திறமையும் முக்கிய காரணங்களில் ஒன்று.

புத்தர் கண்ட நான்கு உண்மைகள்

  • துன்பம் (துக்கம்) மனிதர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாது. 
  • பிறப்பு நோய் முதுமை இறப்பு ஆகியவை மனிதருக்கு துன்பத்தை தருபவை. பசி பகை கொலை வெகுளி இழப்பு மயக்கம் போன்றவையும் துன்பத்தை தருபவை.
  • ஆசை/ பற்று துன்பத்திற்கான காரணம்.
  • துன்பம் நீக்கல் – ஆசையை விட்டு விடுவதே துன்பத்தை நீக்கும் முறைமை.

எட்டு நெறிகள் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள்.

நற்காட்சி – RIGHT VIEW

நல்லெண்ணம் – RIGHT THOUGHT

நன்மொழி – RIGHT SPEECH

நற்செயகை – RIGHT CONTACT

நல்வாழ்த்துக்கள் – RIGHT LIVELIHOOD 

நன் முயற்சி – RIGHT EFFORT

நற்கடை பிடி – RIGHT MINDFULNESS

நற் தியானம் – WRITE MEDITATION

இந்த எட்டு செயல்கள் செய்தாலே போதும் மக்கள் எப்பொழுதும் எந்த சிக்கலும் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான காரணம் என்று புத்தர் வலியுறுத்தினார்.

கிருத்துவம்

கிருத்துவ சமயம் மக்கள் வாழ்க்கையில் அக்கறைக் கொண்டது. இவ்வுலகம் எப்பொழுதும் உய்வுப் பெற வேண்டும் என்ற சிந்தனைக் கோட்பாடு கொண்ட சமயம். அதனால்தான் கிருத்துவம் சமாதானத்தை விரும்பும் சமயமாக விளங்குகிறது. எல்லோரிடமும் அன்பை போதிக்க கற்றுத் தருகிறது. அதன் தாக்கம் தான் இயேசுபிரான் ஒரு படி மேலே சென்று ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கனத்தை காட்டு என்ற உயர்ந்த தத்துவத்தை உலகறியச் செய்தவர். இயேசுபிரானை பற்றிய புரிதல் இவ்வுலகில் மிகப் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய சமயம் கிருத்துவமாக திகழ்வதற்கு இதுவே காரணம். இன்றைக்கு உலகில் அதிக சிலைகளை கொண்டவர் இயேசுவும் புத்தரும் அவர். 

அதனால்தான் நடைமுறை வாழ்க்கை தொடங்கி தமிழ் சினிமாக்களில் தாக்கம் நிறைந்தவர்களாக இவ்விருவரும் இருந்துள்ளன. ஒரு திரைப்படப் பாடலில் புத்தன், இயேசு,  காந்தி பிறந்தது பூமியில் எதற்காக என்ற அற்புதமான ஒரு தத்துவத்தை காணமுடியும். 

கிறிஸ்துவ மார்க்கத்தின் ஆராதனை முறைகள், ஆன்மீக போதனைகள், சட்ட திட்டங்கள், இம்மைக்குரிய வாழ்க்கை நெறிமுறைகள், மறுமைக்குரிய வாழ்வு பற்றிய வெளிபாடுகள் இவைகளைக் குறித்த ஆதார நூல்தான் வேதாகமம். இதை விவிலியம், பைபிள், திருமறை, என்றெல்லாம் அழைப்பர்.

கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கை உடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின் படி சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவரு சொற்களின் பொருளும் திருப்பொழிவு பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியில் இருந்தும்,  கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை.

சுமார் 24 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு ( 31.3%) உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியது. கிறிஸ்தவம் கிபி முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவுக்காக இருந்ததாலும் யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு எனும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இஸ்லாம் போலவே கிறிஸ்துவமும் தன்னை ஆப்ரகாம் வழிவந்த சமய நம்பிக்கையாக கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கை.

பத்து கட்டளைகள்

கிறிஸ்துவத்திலும் பத்து முக்கியமான கட்டளைகள் இருப்பதை அறிய முடிகிறது. பத்து கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரை தொகுப்புகளுல் முதன்மையானது. இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில்  இடம்பெறுகின்றது. 

பத்து கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவுகளாக உள்ளன. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள். இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக் கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தில் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.

  1. உண்மையான கடவுளை நம்பி ஏறிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
  2. ஆண்டவரின் பெயரை வீணாக பயன்படுத்துதல் ஆகாது.
  3. ஓய்வு நாளை தூயதாகக் கடைபிடி
  4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
  5. கொலை செய்யாதே.
  6. விபச்சாரம் செய்யாதே‌
  7. களவு செய்யாதே‌
  8. பொய் சாட்சி சொல்லாதே.
  9. பிறர் மனைவியை விரும்பாதே
  10. பிறர் உடமையை விரும்பாதே.

இந்த 10 கட்டைகளை கிருத்துவ சபைகளுக்குள் வரிசை முறை மாறி இருப்பதை காண முடியும்.

சீடராகுதல் என்னும் சொற்கள் அதிக அளவில் கிருத்துவ மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. தங்களது சிந்தைக்கேற்ப அவர்கள் சொற்களுக்கு பல அர்த்தங்களை கொண்டு வருகின்றனர். ஆயினும் சீடர் ஆகுதல் என்பதை குறித்து இயேசுநாதர் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை உற்று காண வேண்டும். 

சீடர் என்பவர் ஒரு மாணவராக அதாவது கற்றுக் கொள்கின்ற ஒருவராக இருக்கிறார் என்று அறிய முடியும். குரு அல்லது ஆசிரியர் தம்முடைய மனதிற்கு தமது நடைமுறை பயிற்சி அளிக்கும் முறையையே சீடர் ஆகுதல் எனும் சொல் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசு தமது 12 சீடர்களை நியமித்த விதத்தை பார்க்கும் பொழுது அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் பிரசங்கம் பண்ணும் படியாக தான் அவர்களை அனுப்பவும் என்று எழுதி இருக்கிறது. அந்த மனிதர்கள் இரட்சகரோடு வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை கேட்டார்கள். அவருடைய வாழ்க்கை முறையை கண்டார்கள். அதன் பிறகு அவரது செய்தியை பரப்புகிறவர்களாக அவரிடம் இருந்து சென்றனர். அது செயல்முறைப் பயிற்சியாக விளங்கியது.

ஓர் ஆசிரியர் தான் அடைந்த நிலையைக் காட்டிலும் மேலான நிலையை தனது மாணவர் அடையும்படி வழிநடத்த முடியாது. சீடர் தன் குருவுக்கு மேர்ப்பட்டவன் அல்ல. தேறினவன் எவரும் தன் குருவைப் போல் இருப்பர்  (லூக்‌6.40) நீ அறியாததை உன்னால் சொல்லித் தர முடியாது உனக்கு தெரியாத இடத்திற்கு உன்னால் வழி காட்ட முடியாது.

இயேசு கிறிஸ்துவின்சீடர்கள்

  1. சீமோன் 
  2. அந்திரேயா 
  3. யாக்கோபு 
  4. பரிசுந்த யோவான்
  5. பிலிப்பு 
  6. பர்த்தலேமியு 
  7. தோமாக 
  8. மத்தேயு 
  9. யாக்கோபு
  10. பரிசுத்த ததேயு 
  11. சீமோன் 
  12. யூதாஸ் காரியோத்

புனித பேதுரு 

புனித பேதுரு அல்லது புனித இராயப்பர்  என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும் இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு ” என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்.இப்பெயரின் தமிழ் வடிவம் பேதுரு இராயப்பர் என்பதாகும்.

பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராசுத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக்  கருதப்படுகிறார். 

கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திரு தூதராகிய பேதுரு முதல் திருத்தந்தை (Pope) என்று அறிக்கை கூறுகிறது. இயேசு தம் நெருங்கிய சீடராக தெரிந்து கொண்ட திருத்தூதர்கள் பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருக்கு அளிக்கப்பட்டது. 

அந்திரேயா

முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர். மீன்பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்தவர். பின்னர் இயேசுவோடு சேர்ந்தவர். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமூழுக்கு யோவான் அவரை சுட்டிக்காட்டி இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்றார். உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கு இணங்கி ஓர் இரவும், பகலும் அவரோடு தங்கினார். மறுநாள் தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தனர். இயேசு அப்பங்களை பலுக்கச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் உள்ளது என்று சொன்னவர் இவரே. கோயிலில் அழிவை முன்னறிவித்த போது அழிவு எப்போது வரும் எனக் கேட்டவர். இவரே தூய ஆவியின் வருகைக்கு பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டையன்,  மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தவர்.  பத்ராஸில் ‘X’ வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர். சிலுவையை கண்டதும் உன்னில் தொங்கி என்னை மீட்பவர் உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக என்றவர். 

பிலிப்பு

திருத்தூதரான புனித பிலிப்பு யேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறித்தவப் பாரம்பரியப்படி இவரே கிரேக்கம். சிரியா முதலிய நாடுகளுக்கு கிறித்தவத்தைக் கொண்டுச்சென்றவர். பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அம்மாடி 

நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே ஆகும். இவரின் விழா நாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு மே மூன்றில் கொண்டாடப்படுகிறது.

பர்த்தலமேயு

புனித பத்துல மேயு அல்லது புனித நந்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும்.  எனவே இது குடும்பப் பெயர் என்பர். யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நந்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு இவர் உண்மையான இஸ்ரேலியர், கபடற்றவர் என்று இவரை குறித்து கூறினார். மேலும் மத்தேயு மார்க் லுக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம்பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பு கண்டவர்களுள் இவரும் ஒருவர். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மேனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி

மத்தேயு

திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். மேலும் இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் படி இயேசுவின் உழைப்புக்கும் விண்ணேற்றத்திற்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். இத்தகைய சூழலில் தான் இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். இயேசுப்பாவிகளோடும் வரி தண்டுபவர்களோடும் உண்பதை பரிசேயரை சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு அவருடைய சீடரிடம் இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன் என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி நோயற்றவர்களுக்கு அல்ல நோய் உற்றவர்க்கே மருத்துவத் தேவை நேர்மையானவர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.

தோமா

புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர் இயேசு கிறித்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் சந்தேக தோமா’ (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் (யோவான் 20:30) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.

உரோமைப் பேரரசுக்கு வெளியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா. இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் தற்போதைய கேரளம், தமிழ்நாடு பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் பாரம்பரியத்தின்படி திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு இல் திருமுழுக்கு 53 அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.

ததயு

சீமோன் அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி 1.13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவர் பெயரைத் தவிர விவிலியத்தில் இவரைப் பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைச்சாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேவின் கல்லரையினோடு வைக்கப்பட்டு இருக்கிறது.

பர்தலமேயு

புனித பர்த்தலமேயு, புனித பார்த்தொலொமேயு அல்லது புனித நத்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் (Prolemy) மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.

யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு. இவர் உண்மையான இஸ்ரயேலர். சுபடற்றவர் என்று இவரைக் குறித்துக் கூறினார். மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் நிருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி

மத்தேயு

திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் உயிப்புக்கும். விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.

யூதாஸ் காரியோத்து:

சீடர்கள் பட்டியலில், கடைசியாய் இடம் பெரும் நபர். வேறு வழி இல்லாமல் நற் செய்தியாளர் இவரின் பெயரை கடைசியில் சேர்த்து, “துரோகி”, “காட்டிக் கொடுத்தவன் என்றும் குறிப்பிட்டனர். நான் செய்ய இருக்கும் காரியம் இன்னது என்று நன்கு தெரிந்தும், பலமுறை நம் ஆண்டவரால் எச்சரிக்கப் பட்டும், மனக்கடினம் கொண்டு தனது குருவை முத்தம் கொடுத்து காட்டி கொடுத்த செயல். அவர் தன்னை சாத்தானுக்கு முழுதும் விட்டு கொடுத்ததை காட்டுகிறது. பின்பு தான் செய்தது தவறு என்று அறிந்தபின் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்த கிடைத்த வாய்ப்பை தவற விட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது நமக்கு சோசு நிகழ்வாய் – துக்கம் தருகிறது குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டிகொடுத்து விட்டேனே என அறிந்த யின் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பி இருக்கலாம் தவற்றை உணர்ந்தபின் பிரதான ஆசாரியனிடம் செல்லாமல், இயேசுவிடமே சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, இயேசுவை ஏற்காத, அவரை குற்றமற்றவர் என்று அறிய மறுத்த கூட்டத்திடம் சென்று தனது செயலுக்கு மனஸ்தாபப் பட்டது தவிர்க்க வேண்டிய செயல் உயிர் மூச்சு உள்ளவரை, சுய உணர்வு உள்ளவரை எவ்வளவு கொடிய பாவம் செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்டு மனம் திரும்ப மானிடர் நமக்கு வாய்ப்பு உள்ளது – மன்னிப்பதற்கு அவர் கிருபையும் தயவும் நிறைந்த ஆண்டவர். யூதாஸ் தான் செய்தது தவறு என உணர்ந்தார்; தான் பெற்ற அநீதியின் கூலியை விட்டெறிந்தார்.
தொடரும்…

பேரா. எ.பாவலன்