Batrachostomus harterti: Name Telling Birds Series 23 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 23 - தவளைவாயன் Dulit frogmouth

பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி




“தவளை தன் வாயால் கெடும்” என்று நாம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாத தகவலை பேசி மாட்டிக்கொள்ளும் போது கூறுகிறோம். தவளைகள் இரவில் அதன் வாழ்விடங்களில் அவைகளின் குறள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்தை கொண்டே ஒப்பிடுகிறோம். பறவைகளில் தவளை வாயின் வடிவமைப்பில் 14 வகையான பறவைகள் உள்ளன. அதனாலேயே அதன் பெயர் தவளைவாயன், ஆங்கில பெயர் Frogmouth. இது பக்கிப்பறவை குடும்பத்தை சார்ந்தது. இரண்டுமே இரவில் பூச்சிகளை பிடித்து உண்ணும் இயல்புடையது.

நாம் இன்றைக்கு பார்க்கவிருப்பது Dulit frogmouth. DULIT என்ற ஆங்கில பெயர் போர்னியோ காடுகளில் உள்ள ஒரு மலையின் பெயர். அம்மலையில் 600 மீட்டர் உயரத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒலி வெளிச்சத்தை நோக்கி வந்த பொழுது சேகரிக்கப்பட்டதால் அம்மலையின் பெயரையே ஆங்கிலப்பெயராக வைத்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் Batrachostomus harterti.

harterti – எர்னஸ்ட் ஜான் ஓட்டோ ஹாட்டர்ட் ஒரு பறவையியலாளர். ஹார்டெர்ட் 1859 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் பிறந்தார். ஜூலை 1891 இல், அவர் கிளாடியா பெர்னாடின் எலிசபெத் ஹார்டெர்ட் என்ற ஓவியர் மற்றும் பறவையியலாளரை மணந்தார். இவர் மனைவியுடன் சேர்ந்து சென்ற பயணத்தின் போது blue-tailed Buffon hummingbird என்ற பறவையின் புதிய இனத்தை கண்டறிந்தார்.

Batrachostomus harterti: Name Telling Birds Series 23 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 23 - தவளைவாயன் Dulit frogmouth
Ernst Johann Otto Hartert (29 October 1859 – 11 November 1933)

இங்கிலாந்தில் உள்ள டிரிங்கில் உள்ள ரோத்ஷில்டின் தனியார் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பறவையியல் கண்காணிப்பாளராக வால்டர் ரோத்ஸ்சைல்ட், 2வது பரோன் ரோத்ஸ்சைல்ட் என்பவரால் 1892 முதல் 1929 வரை பணியமர்த்தப்பட்டார். இங்கு ஹார்டெர்ட் காலாண்டு அருங்காட்சியக கால இதழான Novitates Zoologicae ஐ வெளியிட்டார். The Hand-List of British Birds என்ற புத்தகத்தை 1912 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சார்லஸ் ராபர்ட் ஜோர்டெய்ன், நார்மன் ஃபிரடெரிக் டைஸ்ஹர்ஸ்ட் மற்றும் ஹாரி ஃபோர்ப்ஸ் விதர்பி ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார்.

இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருந்த தாவரங்களை பற்றிய நூலையும் வெளியிட்டுள்ளார். ஹார்டெர்ட்டின் அவர்கள் 1930 ல் பெர்லினுக்கு திரும்பிய பிறகு 1933 ஆம் ஆண்டு இறந்தார்.

Batrachostomus harterti: Name Telling Birds Series 23 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 23 - தவளைவாயன் Dulit frogmouth
ஆசிரியர் – Ernst Johann Otto Hartert  மாணவர் – Erwin Friedrich Theodor Stresemann

ஹார்டெர்ட் எர்வின் ஸ்ட்ரெஸ்மனுக்கு வழிகாட்டியாக இருந்தார், ஹார்டெர்ட் எர்வின் 1972 இல் ஆசிரியர் ஹார்டெர்ட்டின் அவர்களின் கல்லறையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த பறவை தவிர 12 பறவைகளுக்கும் ஒரு பல்லி இனத்திற்கும் இவருடைய பெயரை வைத்து சிறப்பித்துள்ளனர்.

Batrachostomus harterti: Name Telling Birds Series 23 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 23 - தவளைவாயன் Dulit frogmouth
Erwin Friedrich Theodor Stresemann  (22 November 1889 – 20 November 1972)

 இவர் சேகரித்ததில் நவம்பர் மாதம் கிடைத்த ஒரு பறவையின் இரைப்பையில் நிறைய வெட்டுக்கிளிகளும், அதன் முட்டைப்பையிலதயாராக பெரிய முட்டைகளும் இருந்துள்ளன. இவை இந்தோனேசிய மற்றும் மலேசியா தீவில் மட்டுமே காணப்படுகின்றன. அழிந்து வரும் பறவைகளில் இதுவும் ஒன்று.

Batrachostomus harterti: Name Telling Birds Series 23 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 23 - தவளைவாயன் Dulit frogmouth
படம் – Birds of the world Image Credit: ebird

இது பெரிய, இருண்ட, பழுப்பு நிறமுடையது, நீளம் 32 முதல் 37 செ.மீ வரை இருக்கும். இறக்கையின் நீளம் 220 முதல் 250 மிமீ ஆகும். அதன் கழுத்தின் பின்புறம் கொண்டை உள்ளது. இறகுகளின் மறைப்புகளில் பெரிய வெள்ளை திட்டுகள் உள்ளன. கீழ்ப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும். பாலினங்கள் ஒரே மாதிரியானவை.

தவளைவாயன்களின் விருப்பமான வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1500 மீ உயரத்தில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்ச்சியின் கீழ் வரும் மலைக்காடுகளாகும். டுலிட் மலையில், இது மிகவும் பரவலான மற்றும் உயரமான பகுதிகளில் காணப்பட்டது ஆனால் தற்போது கீழ் பகுதிகளிலேயே இப்பறவைகள் வசிக்கின்றன.

டுப்லிட் தவளை வாய் பறவை வாழும் பரப்பளவு 127,000 km2 என மதிப்பிடப்பட்டு குறைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழ்வதாலும், அந்த பகுதிகளில் மரம் வெட்டுதல் மற்றும் விவசாய வளர்ச்சியின் மூலம் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுவதாலும் இப்பறவையின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. தவளைவாயன் போன்ற சிறப்பினங்கள் அழியாமல் காப்பது ஒல்வொரு அரசின் கடமையாகும். அதுவே சூழலுக்கு செய்யும் மாபெரும் நன்மையாக இருக்கமுடியும். ஒவ்வொன்றின் வாழ்விடங்கள் காக்கப்படும் போது அதையொற்றி வாழும் கண்களுக்குப் புலப்படாத எண்ணற்ற உயிரினங்களும் காப்பாற்றப்படும்.

தரவுகள்:
1) Phillipps, Quentin & Phillipps, Karen (2011). Phillipps’ Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. ISBN 978-1-906780-56-2.
 2)https://www.researchgate.net/profile/RobertHutchinson2/publication/277146262_Nesting_records_of_Dulit_Frogmouth_Batrachostomus_harterti_with_notes_on_plumage_and_vocalisations/links/55640bf108ae86c06b695d54/Nesting-records-of-Dulit-Frogmouth-Batrachostomus-harterti-with-notes-on-plumage-and-vocalisations.pdf
3) https://en.wikipedia.org/wiki/Ernst_Hartert

முந்தைய தொடரை வாசிக்க :

பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி