மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள் – வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள் – வசந்ததீபன்




மேற்குத் தொடர்ச்சி மலையில்
இடி மின்னல்
தருமபுரியின் பரந்த சமவெளியிலிருந்து,
சத்தியமங்கலம் காடுகள் வழியாக, கொங்கனின் மலபார் கடற்கரைக்கு
அவர்களின் கடினமான கேள்விகள்,
நிலையற்ற காற்று
பின்னர் அவர்களின் பயிற்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கியது.

தண்டகாரண்யத்தின் ஆவியை உறிஞ்சுதல்
ஆயுதப் படைகளின் அணிவகுப்புடன்,
வளைந்து நெளியும் காவேரி நதி
சிவப்பு நிறமாக மாறியது.
(ஜெயா, ‘இது தென்மேற்கு பருவமழைக்கான நேரம்’, தெலுங்கு)

தெலுங்கு : வரவரராவ்
ஆங்கிலம் மூலம் தமிழில் : வசந்ததீபன்
நன்றி : Manitha Mugam

போஸ்மார்டம் ரிப்போர்ட்
******************************

குண்டடிபட்டு __
ஒரு வாயிலிருந்து வெளிவந்தது
” ராம் ”

இன்னொரு வாயிலிருந்து
வெளிவந்தது
” மாவோ ”

ஆனால்
மூன்றாவது வாயிலிருந்து வெளி வந்தது
” உருளைக்கிழங்கு ”

போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்
முதல் இரண்டு வயிறுகள்
நிரம்பி இருந்தன.

ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்ஸேனா
தமிழில் : வசந்ததீபன்

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்




குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!

*********

பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு

********

நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!

********

கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!

********

கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!

********

தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!

*******
சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
********
சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கவிதா பிருத்வி
தஞ்சை

பச்சைக்கிளி கவிதை – புதியமாதவி

பச்சைக்கிளி கவிதை – புதியமாதவி




நீ எழுதிய எந்தப் பக்கங்களிலும்
நானில்லை.
நெற்றியில் விபூதியுடன்
மனதுருகி வேண்டும் உன்
கோவில் பூஜைகள்
எனக்கானவை அல்ல.
உன் இரவுகளை இனிமையாக்கும்
தேனிசைப்பாடல்களில்
நானில்லை.
கடற்கரையில் சிந்திய
உன் கண்ணீர்த்துளிகளில்
என் நினைவுகளின் ஈரமில்லை.
உன் தியாக வரலாற்றில்
யார் யாருக்கோ வாழ்க்கை.
எனக்கு?
அதில் ஒதுங்கிக்கொள்ளவும்
நிழலில்லை.
வந்துப்போனவர்கள்
இடையில் வந்தவர்கள்
இவர்களுக்கு நடுவில்
என்னைத் தேடாதே.
உன் சந்தனசோப்புக் கரைசலில்
கரைந்துப்போகிறவள் அல்ல நான்.
ரத்தத்தின் ரத்தமாய்
நீ அறியாத மரபணுக்கடலில்
யுகங்களாக
உன் பாற்கடலைக் கடைந்தெடுத்து
அமுதூட்டியவள்..
ஹே சென்னிமல்லிகார்ஜூனா
உன் அமுதூறும் முத்தங்களுக்காக
செத்து செத்து
பிழைத்திருக்கும் பச்சைக்கிளி
மதுரைக்காஞ்சியின்
அந்த ஓரிரவை
விஷமருந்தி பாடட்டும்.

புதியமாதவி

வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




* இயற்கை உள்ளம் செய்ததென்ன பிழையா
கருணை இன்றி கழுத்தறுக்கப் பெரும் படையா
கெட்டவர் வாழும் பூமி
இங்கு வாழ தகுதியில்லை சாமி

ஏனோ
நல்லோரை மட்டும் தேடிச் செல்வதென்ன பூமி

**********************

* கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
ஒரு வேலை உணவுக்காக
தொடர்ந்து கையேந்தி நிற்கும்
முதியவரின் பசி அறியாமல் விரட்டிவிடும் மகனையும்
மன்னித்துத் தான் விடுகிறார் அப்பா

– வெ.நரேஷ்

சே.கார்கவி கவிதைகள்

சே.கார்கவி கவிதைகள்




வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை……
*************************************************************
எத்தனை மௌனங்களை இடிகளாய் ஏற்பது
எத்தனை இன்னல்களை மின்னல்களாய் ஏற்பது
மேகம் விலகுமென
நீண்டநேரமாக நிலவிற்கு காத்திருக்கிறது
மண்ணில் வாழ் குழந்தை…..!

மாடியிலிருந்து வானை கீற முயன்ற கல்
காற்றைக் கிழித்த திருப்தியில் பூமியை அடைந்தது…..!

காற்றைக் கிழித்து விழுந்த கல்
குழுந்தைகளுக்கு
ஆற்றில் கோலம் வரையும் புள்ளிகள் ஆகிவிட்டன….!

ஆற்றில் உருவான வளைய கோலம்
அடுத்த கரையை தொடும் முன் முற்றுப் பெறுகிறது,
சிறு மீன் துள்ளி மீண்டும் உருவாக்கிய இன்ப வளையத்திற்கு முன்….!

மீனின் துள்ளலும், ஆற்றின் கரையோர சிறுவர்களின் நீச்சலும்

ஒன்றாகவே மூழ்குகின்றன,
மொத்தமாக உலகை நகர்த்தும் ஆற்றின் நீரோட்டத்தில்…..!

ஓடும் ஆற்று நீரின் உச்சபட்ச தேவை என்னவென்றால்
அதன் வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை
என்பதில் எந்த மாற்றமும் இல்லை………!

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில் இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுல்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும் சற்று அதிகமாகவே பதிவுறுகிறது……..

கடற்கரைப் பாதங்கள்
***************************
உனது மொத்த தலைகணத்தையும் இறக்கி வைத்த
பள்ளத்தில் நிரம்பி வழிந்து ஆரம்பமாகிறது
அலைகளின் தலைகணநிரப்பங்கள்………….

உனது ஒட்டுமொத்த எடையை அழுத்தி நகர்ந்த உனக்கு
என்னை மிதித்து சென்றதாக கவலையில்லை
நன்றிகெட்ட முன்னேற்றச்சுவடுகளாய்……..

அழைத்து சென்றேன்
அழித்து சென்றது
எழுந்து நடந்தேன்
என்னை ஒரு நூல் இறக்கியது………..

மணற்கம்பளத்தை வரியில்லாது மிதித்து சென்று
எறி இறங்க இயலாத நண்டுகளை படைத்ததுதான்
ஆகச்சிறந்த படைத்தலாகிறது…….

உனது அருகில் நான்
எனது அருகில் நீ
பாதியாக்கப்பட்ட யாரோ ஒருவர்
இங்காவது ஒற்றுமைக் காப்போம்
அலையடிக்கும் வரையில்………

அவளுக்கான அழுத்தங்களை
எடையாக்கி மிதித்து சென்றேன்
நீரின்றி நினைவுகள் மணலாய் ஒட்டியது…
நீர்பட்டு விரக்திகள் நீரோடு வழிந்தோடியது……….

அலைகளின் ஓயாத கரையேறுதலி்ல்
பலர் அறிய இயலாமல் போய்விடுகிறது
நேற்றைய நலம் விரும்பிகளின்
உண்மையான் கடற்கரைப் பாதங்கள்………

கவிஞர் சே.கார்கவி

Oru thalai Kathal Kavithai By Sudha ஒருதலைக் காதல் கவிதை - சுதா

ஒருதலைக் காதல் கவிதை – சுதா




புயலடித்து ஓய்ந்த
சாலையில் சிதறிக்கிடக்கும்
உதிர்ந்த சருகுகளின் ஊடே…
அவனோடு நடந்த
என் கால்தடமொன்று
விசும்பி அழும் சத்தம் மட்டும்
யாரும் அறிந்திலர்…

கடல் மணல் முழுவதும்
அவன் காலடித்தடம்…
அவன் கால்பதித்த மணலை
கையில் எடுக்க நினைத்தேன்…
மணல் முழுவதும்
கடலலைகளுக்குள் காணாது போனது…

கல்லூரி முடிந்து
கதை கதைத்து…
கலைந்து செல்லும் வேளையில்
என் காதல் நாங்கள் அமர்ந்து பேசிய
மரப்பலகையில் வைத்துச் சென்ற
கைகுட்டையோடு முடிவுற்றது…

மீண்டும் சந்தித்தோம்…
மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம்…
எதேச்சையாய் பலமுறை சந்திக்கிறோம்…
அவன் மீது என் காதல்

எங்கே எனத் தேடி
ஓய்ந்து போனது மனது…
காலத்தால் காணாது போனவற்றில்
என் காதலும்…