Manitham Kavithai By V. S. Vasantha மனிதம் கவிதை - வ. சு. வசந்தா

மனிதம் கவிதை – வ. சு. வசந்தா

மனிதம் செத்தால் மாளும் உலகம்.
அன்பே அனைத்தும்
அன்பு அறிவு ஆளுமை
மனிதனாய் இரு மனிதனை
வாழ விடு.

தன்னைப் போல் பிறரை நினை
தலைக்கனம் நீங்கி தலை சிறந்து விளங்கு
வன்முறை, பாலியல், சாதிவெறி நீங்கி நல் சமுதாயம் படைத்திடு!

நன்றியை நட்டாற்றில் விடாதே
கொன்ற பாவத்தை தின்று
தீர்க்காதே

பாவத்தைப் போக்க பரதேசம் போகாதே
வினையை விதைத்து விட்டு விளைவை எதிர்பார்த்திரு
விடிந்தால் நல்வினை
முடிந்தால் தீவினை

நீ நீயாக இரு! தனித்து ஒளிர்வாய்!
பேசு பழகு பொய் கலக்காமல்
கொடு பிரதிபலன் பார்க்காமல்
தடுக்காதே கொடுப்பதை

வல்லவனாய் இரு வன்முறைக்கு அல்ல
சமுதாயம் உயர்த்து
உன் தலை தெரியும்