Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்

வங்க கவி சங்கா கோஷ் மற்றும் மலையாள கவி ஏ.ஜே. தாமஸ் மொழிபெயர்ப்பு கவிதைகள் | தமிழில்: மு. தனஞ்செழியன்



மறைக்கப்பட்ட முகம் – சங்கா கோஷ்

தனியே நிற்கின்றேன் குறுகிய பாதையில்
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்
நம்பிக்கையுடன் என் முகம் காண்பிப்பேன்.
ஆனால், அது விளம்பரப் பலகையில் மறைக்கப்பட்டுள்ளது.

சாதாரண வார்த்தைகள் உன்னுடன் தனிமையில்
பேச விரும்புகிறேன், யாரும் இல்லாதபோது.
ஆனால், நான் முயலும்போது
பளபளப்பான பட்டொளி விளம்பரத்துடன்
அவர்கள் திகைப்பூட்டுகிறார்கள்!

ஒருவருடைய பார்வையை என்னவென்று
புரிந்து கொள்வது கடினம்.
ஐயோ! என் சாபங்கள் அளவுக்கு மீறின.
ஐயோ! என் மகிழ்ச்சி அற்ற தாய்நாடே.

உனக்கும், எனக்கும் இடையிலான
ஒவ்வொரு பார்வையும் பறந்து போனது
பூரணமாய் விற்கப்பட்டது.
சுயங்கள் அனைத்தும் இப்போது நியான் ஒளியின்
பிரகாசத்தில் விற்பனைக்கு உள்ளது.

குறுகிய பாதையின் மூலையில் கைவிடப்பட்டு
தனியாக இருக்கின்றது என் வார்த்தைகள்.
இப்போது என் முற்றம் சோர்வடைந்தது
முகமூடி விளம்பரப் பலகையில் தொங்குகிறது.

தமிழில்: மு. தனஞ்செழியன்

Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்
Legendary Bengali Poet Shankha Ghosh

The face gets covered – Shankha Ghosh

I stand alone, waiting for you
in a corner of the alleyway
I hope to show you my face, but
it gets covered in an ad display

A few simple words, I wish to speak
to you alone, when noone’s there
but when I try, they dazzle and daze
with glitzy advertising flare

How exactly one is viewed
is so tough to understand
Oh my cursed exaggerations
Oh my hapless motherland

Every look between you and me
is hawked off and sold outright
All that’s personal is now on sale
in the glare of the neon light

My words lie abandoned and alone
in the corner of the alleyway
now just my exhausted mask
hangs in the ad display

(Mukh dheke jay bignapaney’, 1984) Translated from the Bengali

சங்கா கோஷ் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர்.

Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்
A. J. Thomas

மீண்டும் அறைக்கு – ஏ.ஜே. தாமஸ்

மீண்டும் அறைக்கு
மீண்டும் கருவில்
கருவாக
சமுதாயம் சீரழிகிறது
கட்டுபாடுகளுடன் அறையை மூடவும்

தமிழில்: மு. தனஞ்செழியன்

Back to the cave – A. J. Thomas

Back to the cave
Back to the womb
Embryonic
De-structuring society
Confining to closed rooms

(April, 2020)

இந்திய எழுத்தாளர் , ஏ.ஜே. தாமஸ் ஒரு ஆங்கில கவிஞர், புனைகதை எழுத்தாளர் மற்றும் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பாளர்