Hindi Poet Bhagwat Rawat Three Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்



(1) பாறைகள்

நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.

பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.

தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.

இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.



(2) மாறிய பருவத்தின் சுபாவம்

எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்

இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.

பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.

ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.

ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.

பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்

மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்

இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.



(3) இந்த அந்நிய நகரத்தில்

சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி

மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.

ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்

பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.

முக்கிய படைப்புகள் :

(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)