Posted inPoetry
பாசிச பாரதமா?….. ஓர் இசைப் பாடல் – ஹரிஷ்
பாரதமா இது பாசிசமா !!
கல்வி நாடா இது காவி நாடா
ஏழை சோத்துக்கு ஏங்குது ஒருபுறம்
ஏகாதிபத்தியம் ஓங்குது மறுபுறம்
பாரதமா இது பாசிசமா !!
கல்வி கூடங்கள் முன்னோக்கிப் போகுது
கற்றோர் எண்ணிக்கை பின்நோக்கி போகுது
பாரதமா இது பாசிசமா !!
எல்லைகள் மட்டும் அங்கே அங்கே
யமக்கு பாதுகாப்பு எங்கே எங்கே
பாரதமா இது பாசிசமா !!
புது புது வரிகள் வந்திடுமே
அது வலிகள் பல தந்திடுமே
பாரதமா இது பாசிசமா !!
காடு மலை ரோடு எல்லாம் கந்துவட்டிக்கு விக்குற
காக்கிகள ஏவிவிட்டு கட்டுபடுத்த பாக்குற
பாரதமா இது பாசிசமா !!
நாட்டுக்குள்ளே வேலை இல்லை நாங்கள் எல்லாம் திண்டாட்டம்
ஆனா நாட்டாமையோ ஊரில் இல்லை நாடு நாடா கொண்டாட்டம்
பாரதமா இது பாசிசமா !!
– ஹரிஷ்