புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்




நான் வேறொரு துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 இல் ‘மோகமுள்’ திரைப்படத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தபோது தமிழ்சினிமாவில் இருந்த பிரபுத்துவமும், புதிய முயற்சிகளை நிந்திக்கின்ற விதமும் மிகுந்த ஏமாற்றங்களையே எனக்குத் தந்தன.

அப்போதுதான் தமுஎகச என்கிற அமைப்புடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. சேலம் அருகில் தனம் என்கிற தலித் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய ‘ ஒரு கண் ஒரு பார்வை’ என்கிற குறும்படத்தை தமுஎகச தன் தோள்களில் எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நடந்த தமுஎகச விழாக்கள் அனைத்திலும் திரையிட்டு பிரபலப்படுத்தினார்கள். வர்த்தக ரீதியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் அந்தஸ்தை எனது குறும்படத்துக்கு தமுஎகச இயக்கம் பெற்றுத்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்போதுதான் இளைஞர்கள் மிகுந்த தமுஎகச இயக்கத்தின் சக்தியை நான் புரிந்து கொண்டேன்.

அடுத்து நான் உருவாக்கிய திரைப்படங்களில் தமுஎகச உறுப்பினர்களை தவறாமல் நான் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ‘முகம்’, ‘பாரதி’ படங்களில் சென்னை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான இடங்களில் படப்பிடிப்புகள் நடந்த போது அங்கே உள்ள தமுஎகச கிளை உறுப்பினர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள்.

‘பாரதி’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்றாலும் சில பிற்போக்காளர்கள் எதிர் பிரச்சாரம் செய்ய முயன்றார்கள். அதை முதலிலேயே யூகித்து திரு சிகரம் ச.செந்தில்நாதன், திரு இரா.தெ. முத்து, திரு. அ.குமரேசன் ஆகியோர் தமுஎகச சார்பாக திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் எதிர் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதத்தில் ‘பாரதி’ படத்திற்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியதை நான் என்றைக்குமே மறக்கமுடியாது. அதைப்போலவே திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான நகரங்களிலும் ‘பாரதி’ படத்தை மக்களிடம் தமுஎகச எடுத்துச்சென்றது. கோவை நகரில் அமரர் அய்யாசாமி அவர்கள் முன்னெடுத்து நடத்திய ‘பாரதி’ படத்துக்கான ஆதரவு இயக்கத்துக்கு தமுஎகச தோள்கொடுத்து உதவியது. கே.ஜி தியேட்டரில் பாரதி அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடியது.

தமிழ்சினிமாவில் நான் எப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்க தமுஎகச போன்ற இயக்கங்கள் எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். ‘பெரியார்’ ‘ராமானுஜன்’ முதலான தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆளுமைகளை திரையில் கொண்டுவர நான் முடிவெடுத்ததன் பின்னணி அதுதான். பெண்ணியச் சிந்தனைகளை உளவியல் பார்வையோடு எழுதிய
ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்துக்கு திரு ஆதவன் தீட்சண்யா, திரு இரா.தெ.முத்து மற்றும் தமிழகம் முழுவதுமான தமுஎகச தோழர்கள் நல்கிய அன்பும் ஆதரவும் மறக்க இயலாதது.

சுமார் 25 வருடங்களாக தமுஎகச இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் நன்றாக அறிந்தவன் என்கிற முறையில் அந்த இயக்கத்தைப் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

1. தமுஎகச இயக்கம் நல்ல முற்போக்கான சமூகச் சிந்தனையுடைய இளைஞர்களை ஈர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

2. இலக்கியம், சினிமா, நடிப்பு, இசை முதலான பல்துறைகளில் திறமையுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் அதில் அதிகம் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

3. தமுஎகச வில் இருந்தவர்களில் பலர் இன்று ஆளுமைகளாக திகழ்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை. பாரதி கிருஷ்ணகுமார், திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமுஎகசவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல Patronage தந்து தமுஎகச அவர்களை வளர்த்திருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும். மேலும் எண்ணிறந்த இளைஞர்களை organisational skill உள்ளவர்களாக தமுஎகச வளர்த்திருக்கிறது என்பதும் உண்மை.

4. ஆனால் தமுஎகச போன்ற துடிப்புள்ள கலை இலக்கிய ஈடுபாடு மிகுந்த இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு இயக்கம், இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். கலை இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வம் உள்ளவர்களை வைத்து கலை இரவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளித்து அவர்களின் திறமைகளை செப்பனிட்டு தமுஎகசவின் BRAND AMBASSADORS களாக பலரை உருவாக்கி இருக்கலாம். கேரளாவில் இது போன்று பல இயக்கங்கள் ஆச்சரியப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கின்றன.

தமுஎகச பட்டறையிலிருந்து தரமான -ஆற்றல் மிக்க- கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கதையாளர்கள், இயக்குநர்கள் நடிகர்,நடிகையர் நாட்டுப்புறக் கலைஞர்கள்….இப்படி எல்லாத் துறைகளிலும் உன்னத ஆளுமைகள் உருவாகியிருக்கலாம்.

எனக்கு இத்தகைய ஆதங்கம் இருப்பதற்குக் காரணம், தமுஎகசவுக்கு எல்லா தகுதிகளும் இருப்பதால்தான். திறமையுள்ள இளைஞர்கள் தமுஎகசவை நோக்கி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாமல் தீவிரமான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் ( Skill Development Programmes) முதலானவைகளை தமுஎகச நடத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை மென்மேலும் வளர்த்து அவர்களை ஆளுமைகளாக ஆக்கினால் வறட்சி மிகுந்த தமிழின் இலக்கியம், சினிமா மற்றும் பிற கலைத்துறைகளில் மிகப்பெரிய புரட்சியை தமுஎகச என்கிற இயக்கம் நடத்திக்காட்ட முடியும். இதுவே என் நம்பிக்கையும், வேண்டுகோளும்.

இயக்குநர் ஞான ராஜசேகரன்

“தீக்குள் விரலை வைத்தால்” கவிதை – சாந்தி சரவணன்

“தீக்குள் விரலை வைத்தால்” கவிதை – சாந்தி சரவணன்




தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா!
என அன்றே உயிலெழுதி வைத்துச் சென்ற
மிடுக்கு மீசைக்காரன் என் பாட்டன் பாரதியே!
நான் உன்னிடம் சொல்ல
ஒரு செய்தி கொண்டு வந்துள்ளேன்!
அதை செவி கொடுத்துக் கேள்!
தீக்குள்ளும் ஒரு இன்பமுன்டு என நீ பறைசாற்றியதைக்
கேட்க இன்றைய அவசர சமூகத்திற்கு நேரமில்லை!
நீ எழுதிய கவி உயிலை தொலைத்து விட்டு
இன்று தென்றல் தீண்டுமின்பத்தையும்
அதனுள் புதைந்துள்ள நந்தலாலாவையும்
காணாமல், அறியாமல், தத்தளிக்கிறது!
அவசர அவசரமாகப் பறந்து கொண்டே இருக்கிறது இந்த மனிதகுலம்!
தீப் பிழம்பைத் தீண்டி, சுவாசித்து நேசித்து, யாசித்தவன், நீ!
தீப் பிழம்பை மென்று அதன் வெப்பத்தை விழுங்கி
இன்பத்தை அனுபவித்தவன் நீ!
நீ அறிந்திருந்ததைக் கவி ஓவியமாக
எங்கள் தலையில் ஏற்றிச் சென்றதை மறத்துவிட்டோமே நாங்கள்!
மறந்ததைக் கல்லில் சிற்பி சிற்பத்தைச் செதுக்கி உயிர்ப்பிப்பது போல்
உன் எழுதுகோல் கொண்டு எழுத மீண்டும் பிறந்து வா பாரதி!
தொன்மையான தமிழ்மொழி “தமிழி” என்கிறது
“கீழடி அகழ்வாராய்ச்சி !
தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் அருந்துகிறது
அன்னப் பறவை!
நல்லவற்றை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொள்ளும்
உளவியல் வித்தையை
எங்களுள் விதைகளாக விதைக்க
அக்கினிபிழம்பே அவசியம் வா.

திருமதி. சாந்தி சரவணன்
கைபேசி : 9884467730

தாலாட்டுப் பாடல் – கோவி.பால.முருகு

தாலாட்டுப் பாடல் – கோவி.பால.முருகு




மகிழே மணம்பரப்பும் மகிழம்பூ வாசனையே!
அகிலே நறுமணமே அசைந்தாடும் பூமணமே!
யாழே குழலிசையே யாம்பெற்ற நல்லிசையே!
அழகே சுவையமுதே ஆருயிரே கண்வளராய்!

சங்கத் தமிழ்வளர்த்த சரித்திரமே பெட்டகமே!
எங்கும் புகழ்பரப்பும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டே!
பதினெண் கீழ்க்கணக்கே பாசமுள்ள என்கணக்கே!
பதிவாகும் உன்பெருமை பலதேசம் போற்றிடுமே!

ஐம்பெருங் காப்பியமே ஐஞ்சிறு காப்பியமே!
உம்பெருமைப் போற்றுதற்கு உவப்பாகும் ஓவியமே!
சிலப்பதி காரத்தாலே சிலம்புனக்கு நான்தருவேன்!
நலந்தரும் மேகலையை நானுனக்குச் சூடிடுவேன்!

சிந்தாமணி உனக்கு சிந்தாமல் நான்புனைவேன்!
நந்தா விளக்கேயென் நன்முத்தே கண்ணுறங்கு!
வளையாபதி எடுத்து வளையல் அணிந்திடுவேன்!
சிலையே கலையழகே சித்திரமே கண்ணுறங்கு!

குண்டலகேசி தந்த குண்டலத்தை நீசூடு!
வண்டமரும் செம்மலரே வடிவழகே கண்ணுறங்கு!
கம்பனவன் காவியத்தில் காணும்சுவை நீபாடு!
நம்புகின்ற பாரதத்தின் நற்பொருளை நீதேடு!

தேவாரப் பண்ணே தேடிவந்த கண்ணே!
நாவார நான்பாட நாயகியே கண்ணுறங்கு!
திருவாசகச் சுவையே தித்திக்கும் தெள்ளமுதே
ஒருவா சகம்கேட்டு உருகிநீ கண்ணுறங்கு!

அறுபத்து மூவர்புகழ் அத்தனையும் நீபாடு
திருத்தொண்டர் சீரடியை தினந்தோறும் நீபேசு!
ஆழ்வார்கள் பாடிவைத்த அழகான பாசுரத்தை
ஆழ்ந்து நீகற்று அற்புதமே கண்ணுறங்கு!

அருட்பா அருளமுதே அருணகிரி சொல்லழகே!
திருமூலர் மந்திரமே திகட்டாத தீங்கனியே!
ஆண்டாள் திருப்பாவை அழகான சொற்கோவை!
விருப்போடு நீகற்று விழிமலரே கண்ணுறங்கு!

பாரதியின் கவிச்சரமே பாவேந்தன் கவிமலரே!
பாரதிரப் பாடிநீயும் பனிமலரே கண்ணுறங்கு!
பாட்டுக்குக் கோட்டைதந்த பட்டுக்கோட்டை புகழ்பாடு!
நாட்டிலே உழைப்போரின் நலம்பாடி கண்ணுறங்கு!

நன்னூல் தொல்காப்பியமே நாடுபோற்றும் காரிகையே!
தண்டி அலங்காரமே தங்கமேநீ கண்ணுறங்கு!
தமிழ்தந்த அமுதத்தை தாகத்தோடு நீயுண்டு
இமிழ்கடல்சூழ் உலகத்தில் இன்பமாய் கண்ணுறங்கு!

கல்வியிலே சிறந்தவளே கற்கண்டே நீயுறங்கு!
கேள்வியிலே சிறந்தவளே கேளமுதே நீயுறங்கு !
மூவேந்தர் புகழ்மணக்கும் மூவுலகம் போற்றிவரும்
நாவேந்தி உன்தந்தை நலம்பாடக் கண்ணுறங்கு!

கண்ணிலே தூசுபட்டால் கலங்கிடுவேன் என்மகளே
மண்ணிலே உனைத்தவிர மகிழ்ச்சியினி எனக்கில்லை!
பாசமுள்ள பாட்டியும் ,பரிவுடனே தாத்தாவும்
ஆசையாய் அணைத்திடுவார் அமைதியாய்க் கண்ணுறங்கு!

கோவி.பால.முருகு

Matravendum Poem By Shanthi Saravanan. மாற்றம் வேண்டும் கவிதை - சாந்தி சரவணன்

மாற்றம் வேண்டும் கவிதை – சாந்தி சரவணன்

மாற்றமில்லை மாற்றமில்லை
சமூகத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
மனிதனிடத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
அடிமைத்தனத்தில்
மாற்றமில்லை

மாற்றமில்லை மாற்றமில்லை
அடக்கி ஆளும் வர்கத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
ஜாதி பிரிவினையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பெண்னின் நிலையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பட்டினியில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பஞ்சத்தில்
மாற்றமில்லை!

முன்டாசு கவியே!
உன் புரட்சி சிந்தனைகளை ஏட்டில் மட்டுமே
நூற்றாண்டை கொண்டாடுகிறது இவ்வையகம்!
நம்பிவிடாதே!

மாற்றமே எழுச்சி
மாற்றமே மலர்ச்சி
மாற்றமே உயிர்ப்பு
நீ கண்ட நிஜ மாற்றத்தை
சமூகத்தில் சுடர்விட
சிந்தனை செழிக்க
ஓவ்வொரு பெண்ணின் கருவிலும்
கருவாய், உருவாய், உயிராய், சூடராய்
அக்கினி பிழம்பாய், தகதகவென ஜனித்து
வா பாரதி வா!

Kasadara Katridu Magale Poem By Jeyasree. ஜெயஸ்ரீயின் கசடற கற்றிடு மகளே.. !! கவிதை

கசடற கற்றிடு மகளே.. !! கவிதை – ஜெயஸ்ரீ




உயிர் மெய் கற்ற பள்ளியில்
ஆய்த எழுத்தோடு சேர்த்து
ஆயுதமும் கற்றுக் கொள் மகளே..
கல்விக் கூடமாக இருந்தது
கலவிக் கூடமாக மாறுவது
கண்டு பயந்திடாதே மகளே..

பாரதி கண்ட புதுமைப்பெண் நீ
பாரதியை தான் காணவில்லை
துணிந்து எழு மகளே..
தாய் தந்தையின் உழைப்பும்
அவர்களின் கனவும் நீ தானே
தளர்வுறாதே மகளே..

இறக்கையை விரித்திடு
பட்டாம்பூச்சியாய் அல்ல
கழுகினைப் போல மகளே..
நீ இன்று ஒடுங்கினால்
உன் சந்ததியும் நாளை ஒடுங்குமே
முன்னேற வா மகளே..

தவறுகளைத் தவிடு பொடியாக்க
கயவர்களைத் தட்டிக்கேட்க
கசடற கற்றிடு மகளே..

Samathuvam Nilaikkattum Poem by Jeyasri. ஜெயஸ்ரீயின் சமத்துவம் நிலைக்கட்டும் கவிதை

சமத்துவம் நிலைக்கட்டும் கவிதை – ஜெயஸ்ரீ




சாதிகள் இல்லையடி பாப்பா
என்ற பாரதி மறைந்து விட்டான்
சாதிகள் வாழ்கின்றன..
கோனார் மெஸ்ஸிலும்
ஐயர் கேன்டினிலும்…

முச்சந்தியில் இருக்கும்
கடவுளும் கூட
சமத்துவமாய் வழிகாட்டுகிறார்
சாதி தான் கண்களை
மறைத்து விடுகிறது..

பகுத்தறிவுப் பகலவனின்
தடியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்
சாதிச் சங்கங்களைத்
தகர்த்து எறிவதற்கு..

முகம் மூடிய முகத்தவளுக்கும்
நூல் அணிந்த புதல்வனுக்கும்
உடலில் ஓடுவது ஒரே குருதி
அதில் சாதி இருந்தால்
குருதியும் சாக்கடையே…

சாதிப்பேய் குரல் வளையை
கடித்து விட்டதால்
எங்கள் மாணவர்களின்
கனவு பிணமாகி விட்டது…

கண்டவுடன் சுடும் உத்தரவை
சாதிக்குப் பிறப்பியுங்கள்
சாதி சோம்பிகள் அழியட்டும்
சமத்துவம் நிலைக்கட்டும்…

நூல் அறிமுகம்: சார்லஸ் டார்வின் எப்படி இருப்பான்..?  – ரா. பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: சார்லஸ் டார்வின் எப்படி இருப்பான்..?  – ரா. பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

புத்தகம்: சார்லஸ் டார்வின் ஆசிரியர்:சாமிநாத சர்மா பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் விலை:15 பக்கம்:24 புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://bit.ly/394o8LB ஆறடி உயரம் ஆனால் பார்வைக்கு அப்படி தோன்ற மாட்டான். நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் வயது ஏற ஏற முதுகு வளைந்து கொடுத்தது.…
எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

நூல் - வேதங்களின் நாடு ஆசிரியர் - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பக்கம் 64 விலை. 40 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vethankalin-nada-7861/ ஆரியர்களே இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் அதுவே சிறந்த கலாச்சாரமென, வரலாற்றை திருத்தி…
நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் பாரதியும் – ரெங்கையா முருகன்

நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் பாரதியும் – ரெங்கையா முருகன்

  பெரியவர் வ.உ.சி என்ற ஆளுமை என் மனதில் முழுமையாக வியாபித்துக் கொண்டது என் வாழ்நாளில் சுமார் 42 வயதுக்கு மேல். அவரது தியாக வாழ்வின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு தூண்டுதலாக அமைந்த நூல் பெருமதிப்புக்குரிய ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ”வ.உ.சி.…