சுற்றுச்சூழலும் பறவைகளும் (Environment and bird in india ) - முனைவர் வெ.கிருபாநந்தினி | https://bookday.in/

இந்தியாவில் சுற்றுசசூழல் மற்றும் பறவைகள்

சுற்றுச்சூழலும் பறவைகளும் - முனைவர் வெ.கிருபாநந்தினி உலக சுற்றுச்சூழல் நாள் 2024. நாம் 52 ஆவது வருட சுற்றுச்சூழல் நாளில் உள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளை அறிவித்து அதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும். அதன் படி “நில மறுசீரமைப்பு,…
சமகால சுற்றுசூழல் சவால்கள் World Water Day (உலக தண்ணீர் தினம்)

தொடர் : 50 “சமகால சுற்றுசூழல் சவால்கள்” – முனைவர். பா. ராம் மனோகர்

உலக நீர் பிரச்சனை கலகம் ஓயுமா!!? ஒருங்கிணைய மனித இனம் முயலுமா!?   “உயிரின் ஆதாரம் நீர் “என்பதை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது! அல்லவா!? எனினும் கடந்த 30 ஆண்டுகளாக, குடிநீர் புட்டியில் எடுத்து செல்லும், நிலை, ஒரு…
பருவ கால மாற்றம் -பறவை- உயிரினங்கள் |Seasonal change -Birds-creatures

தொடர் : 49 “சமகால சுற்றுசூழல் சவால்கள்” – முனைவர். பா. ராம் மனோகர்

பருவ கால மாற்றம்!பறவை, உயிரினங்கள் தடம் (தடு )மாற்றம்! உலக வெப்பமயம், எதிர் பாராத மழை, புயல், வெள்ளம், போன்ற பருவ கால மாற்றங்கள், சமீப காலத்தில் நம்பூமியில், தொடர்ந்து பல பாதிப்புகளை, ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளை நாம் கண்டு வருகிறோம்!.…
thu.pa.parameshwaripoetries து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

வாழ்க்கையே ஆடுகளம் முகட்டில் நின்று கொண்டு குதித்திடலாம் போல... திணறுகிறது சிறகொடிந்த பறவை... வானத்தை அண்ணாந்தும் பள்ளத்தைப் பார்த்துப் பரிதவித்தும் பார்த்துக் கொண்டே தள்ளாடுகிறது... எழுவது சாத்தியமில்லை வீழ்வது சரித்திரமாகும்.. வெறிச்சோடிக்கிடக்கிறது அதன் விழிகள் எப்படியும் ஒரு புறம் சாயத்தான் வேண்டும்...…
தொடர் -15 : சம கால சுற்றுச்சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

தொடர் -15 : சம கால சுற்றுச்சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

மகிழ்ச்சிக்கான மலைப்பகுதிப் பயணங்கள் மாசு குறைய, மாறுமா, நம் மக்கள் மனங்கள்? வெயிலின் உச்சம், உயிர் குடிக்கும் அளவுக்கு, தட்ப வெப்ப நிலை, இருக்கும்போது பொதுமக்கள், தம்மை காப்பாற்றிக் கொள்ள, குளிர் மலைப் பகுதியினை நாடிச் சென்று, வருவதை நாம் அன்றாடம்…
கவிதை : பறக்கலாமா - சே கார்கவி கார்த்திக் kavithai : parakkalaama - se kaarkavi kaarthik

கவிதை : பறக்கலாமா – சே கார்கவி கார்த்திக்

பறக்கலாமா.. >>>>>>>>>>>>>> நல்லா கேட்டுக்கோ நான் அப்பவே சொல்லிபுட்டே பறக்க ரெக்க மட்டும் போதாது எண்ணம் வேணும்னு.. பறக்கும் போது வானத்தப்பாரு குனுஞ்சி பூமிய பாத்தா மண்ட கணம் வந்துபுடும்.. ரெக்க முளைக்கலனு கவலபடாத ஆச முளைச்சிட்டுல தானா பறப்ப இரு....…
மகேஷ் கவிதைகள்

மகேஷ் கவிதைகள்




குடை விரித்தல்!
*********************
புன்னகைக்க வழியின்றிக்…
கடக்கும்…
மௌனப்பொழுதுகளில்…
இமைக்குடைகளை…
விரிக்கிறாய்!

மௌன மொழி…
தவழ்ந்து பரவுகிறது!
தூரிகைகளும்…
உளிகளும்…
வாய்பிளக்கின்றன!

சாகசம் நிறைக்கும்…..
நகரத்து
வாகன நெரிசலில்..
புழுதி கடந்த…
பூவாய்!

சொற்பமான…
சில..
வண்ணப் பறவைகள்…
வழியில்!

மழை சில…
பரிமாணங்களில்…
நெருங்குகிறது!

கடற்கரையின்…
ஒற்றை நிலவொளியை…
கனவுக்குள்….
நுழைக்கிறேன்!
சாத்தியக்கூறுகள்…
பல்வேறாய்த்…
திரிந்து….
மீண்டும்….
இமை…
மௌனக்குடைகளை…
விரித்தலில்…
அமிழ்கிறது!

கணங்களைச் சிதைத்தவன்!
*********************************
நம் அக்கணங்கள்
செதுக்கப்பட்ட போது
வினாடிகளில்
இனிப்பிருந்தது!

வளர்ந்த பயிரை
விபரீதப்பார்வைகள்
வழிநடத்தின!

தென்றலைக் களவாடவும்
தயங்காதவனின்
நிழலை
வனமிருகங்கள்
சேர்க்கவில்லை!

ஈரமான மௌனங்கள்
வெளியேறியபோது
இறந்தது
துளி!

சுவடுகளின்
பின்னணி முக்கோணம்
புதிராகிறது!

மலைமுகட்டுப் பறவைகள்
வழி தவறின!
நிகழ்வுகளின்குறிப்பேடுகளில்
மண்வாசனை!

கணங்களைச்சிதைத்தவன்
பொடிந்து போகலாம்!
அக்கணங்கள்
சிதைந்தும் சிதையாமலும்
இருவேறாய்
நினைவடுக்கில்!

– மகேஷ்

நூல் அறிமுகம்: ஒளி நிலாவின் ’சிறுவர் மலர்கள்’ – நா.மணி

நூல் அறிமுகம்: ஒளி நிலாவின் ’சிறுவர் மலர்கள்’ – நா.மணி




குழந்தைப் பிராயத்திலிருந்து தமிழ் மேல் பற்று ஊற்றெடுக்கிறது. அப்படியொரு பற்று தன்னில் பற்றி வளர தன் தாயே காரணம். தன் தாயுக்கு தமிழ் மேல் உயிர். தமிழ் கவிதைகள் மேல் காதல். ஒரு முறை தான் வாசித்த கவிதையை அப்படியே மெட்டமைத்து, ஒரு வரி விடாமல் பாடுவார். தன் தாயின் இந்த செயல்பாடுகள், தனக்குள், தனக்குத் தெரியாமலேயே பதியம் இட்டுக் கொள்கிறது. தமிழ், கணிதம் என இரண்டும் தனக்கு இரண்டு கண்கள் போல் இருந்தாலும் உயர் கல்வி, வேலை வாய்ப்பு என்று வரும் போது கணிதத்தையே தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குகின்றனர். கணிதம் கற்றுத் தேறி நல்ல கணித ஆசிரியராக வலம் வந்த போதும், தலைமை ஆசிரியர் அதனைத் தொடர்ந்து கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றபோதும் தமிழ் மீது இருந்த தாகம் தணியவில்லை. கொரோனா வந்து மொத்தமாக முடங்கிப் போய் கிடந்தபோது தனது தமிழ் மனத்தை மேலும் தரப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இணைய வழியில் முறைப்படி யாப்பு இலக்கணம் கற்றுக் கொள்கிறார். மரபுக் கவிதைகள் ஆக்கம் செய்ய தொடங்குகிறார்.

அப்படியான தனது கன்னி முயற்சி தான் 96 பக்கங்கள் கொண்ட சிறுவர் மலர்கள் நூல் கவிஞர் ஒளி நிலா அவர்களின் படைப்பு. கோவை ரேணுகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பறவைகள் விலங்குகள் பற்றி 52 கவிதைகளும், 28 இந்திய நகரங்களின் மாண்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லாம் ஒரு பக்கக் கவிதை என்பது வாசிப்பவர்களை எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடிக்க ஊக்குவிக்கிறது. நாம் பார்த்த பாக்காத பல பறவைகள் விலங்குகள் பற்றி தனது கவிதைகளில் தாள, சந்த நயத்துடன் கவிதை புனைந்து இருப்பது நல்ல சுவை மிகுந்த வாசிப்பு விருந்து. அள்ள அள்ளக் குறையாத தமிழ் ஆர்வம், நூலாசிரியருக்கு சிறுவயது முதலே இருந்தாலும், நீண்ட காலம் கணித ஆசிரியராகவும் பின்னர் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் அவர், கவிஞராக வெளி உலகிற்கு முதல் படைப்பை தர இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டு உள்ளது. ஒரு வேளை முன்பே கவிதை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கி இருந்தால் குழந்தை கவிஞர்
அழ. வள்ளியப்பா போன்று குழந்தைகளின் கவிதை உலகில் வலம் வந்து கொண்டு இருப்பார்.

பொதுவான வாசிப்பின் போது, மனதுக்குள் வாசிக்கிறோமே, அப்படியே வாசிக்க துவங்கினாலும் நான்கு வரிகளில் வாய் விட்டு வாசிக்க பாட தூண்டுகிறது.

பறவைகள் காற்றில் பறக்கின்றன என்று தான் எல்லோரும் சொல்கிறோம். பார்க்கிறோம். ஆனால் கவிஞர் ஒளி நிலா, ” காற்றின் மடியில் பறக்கிறது” என தன் கவித்துவதை வெளிக்காட்டுகிறார்.

தையற்சிட்டை வா அழைக்கும் போது, உன்னை எல்லோர் கண்ணுக்கும் பிடிக்கும். அது போதாது. கருத்தில் அன்பு மிளிர்ந்திட, நண்பன் போல ஓடி வா என்கிறார்.

எளிதாக காணக் கிடைக்காத முள்ளம்பன்றி, வரகுக் கோழி, ஓநாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, மரநாய், காட்டுப்பன்றி, செந்நாய், நீர் கரடி, கழுதைப்புலி என பல பறவைகள் விலங்குகள் பற்றிய கவித்துவம் நிறைந்த பாடல்களை இந்தத் தொகுப்பில் கொடுத்துள்ளதோடு, அவற்றைப் பற்றிய அரிய தகவல்களை கவித்துவமாக சொல்கிறார். உதாரணமாக, பெரிய பல்லி இனத்தை பற்றிய கவிதையில், இந்தப் பல்லிகள் மானைக் கூட கொல்லும் சக்தி படைத்தவை என்று கூறுவது ஆச்சரியம் தரும் உண்மையாக இருக்கிறது.

அதேபோல் நகரங்களைப் பற்றிய கவிதைகளும். திருப்பூர் நகரில் திறமை இருப்போருக்கு வேலை என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் திருப்பூர் நகரம் திறனை வளர்ப்பதால் அது எழில் நகராக விளங்குகிறது என புருவம் உயர்த்த வைக்கிறார். இப்படி ஒவ்வொரு நகரம் பற்றிய கவிதையையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கவிதை நயம் கவிதைகளின் உள்ளடக்கம். அதனை தனது கற்பனை நயம் கொண்டு குழைத்து தரும் விதம். எடுத்துக் கூறும் உதாரணங்கள் எல்லாம் இந்த நூல் முழுவதையும் வாசிக்க தூண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுவது, இந்நூல் குழந்தைகளிடம் சென்று சேர வேண்டும். நாமே குழந்தைகளிடம் வாசித்தும் காட்டலாம். குழந்தைகளுக்கு சொற்சுவை பயிற்சி கிட்டும். இதில் கூறப்படும் விலங்குகள் பறவைகள் நகரங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவல் உருப்பெரும். ஒளிநிலா என்ற புனை பெயரில் கவிதையை தந்திருப்பவர் ஐ. ஜோதி சந்திரா. ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர்.

இந்நூலை வாசிக்க விரும்புவோர் ரேணுகா பதிப்பகத்திற்கு 7708293241 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து இத்தகைய நூல்கள் தமிழ் சமூகத்திற்கு படைத்தளிக்க வேண்டும்.

நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

நூல்: “சிறுவர் மலர்கள்” (சிறார் பாடல்கள்)
ஆசிரியர்: ஒளி நிலா
விலை: ரூ.90/-
பக்கங்கள்: 96

வெளியீடு: ரேணுகா பதிப்பகம் கோவை.
எண்: 7708293241

Sakthiyin Kavithaigal 5 சக்தியின் கவிதைகள் 5

சக்தியின் கவிதைகள்

காகங்கள்…….!!!!!
*********************
அதிகாலை வேளையிலே
குடிசையின் மீது மேல்
அமர்ந்த காகங்கள்
கரைந்து
கொண்டிருக்கின்றன,

காலையிலிருந்து காதுகள் வலி
ஏற்பட ‘கா கா ‘என கரைந்து கொண்டிருந்த காகங்களை
குழந்தைகள் இட்லியால்
அடித்து துரத்துகின்றனர்

தூங்கி எழுந்த அம்மா
காகங்கள் கரைவதை கண்டதும்
நம் வீட்டிற்கு உறவினர்கள்
வருவார்கள் என்று கூறுகிறாள்,

அறிவழிகியும் அறிவழகனும்
வீட்டின் வாசலில் ஓடிப்போய் பார்க்கிறோம், வாசலில்
கணக்கு நோட்டுகளோடு
நிற்கிறார் வெள்ளிக்கிழமை தண்டல்காரர்,

தண்டல்காரனும் உறவினர்
ஆகிறார் வாரம் ஒருமுறை
வீட்டு வாசலில் வந்து நின்று நலம் விசாரித்து விட்டு செல்வதால்……!!!!

மனிதர்களுக்காக பறவைகள்
***********************************
மனிதர்களின் தேவைகளுக்காக
மர விதைகளை விதைக்கின்றன எவ்வித எதிர்பார்ப்பு
இல்லாத பறவைகள்,

மனிதனின்
சுவாசக்காற்றுக்காக
சூழலியல் வள்ளுஞராகின்றன
மரம் நடும் பறவைகள்,

வண்ண  வண்ண பறவைகள்
வெவ்வேறு விதமான
மர விதைகளை விதைக்கின்றன
குளக்கரையின் மேடுகளை சுற்றி,

பறவைகள் விதைத்த
மரத்து நிழலில் கட்டில் போட்டு
கால் நீட்டி உறங்குகின்றனர்
மரம் நடாத மனிதர்கள்,

வளர்ந்த மரங்களின்
கிளைகளை  வெட்டி குடிசைகளை
அமைத்துக்கொள்கிறான் பறவைகளுக்கு தண்ணீர் வைக்காத மனிதன்,

மனிதன் அடியோடு
வெட்டிய மரங்களுக்காக
வேகமாக பறந்த பறவைகள்
வானத்தை கிழித்து
நீரை கொட்டுகிறது கண்ணீர் துளிகளாக ,

ஊரெங்கும் பறவைகள்
ஊரெல்லாம் மரங்கள்
மரங்களில்லாமல்  மனிதனா
பறவைகளில்லாமல்
மரங்களா ….!!!!!!!