sa.linga raasu kavithai ச.லிங்கராசு கவிதை

ச.லிங்கராசு கவிதை

' கருப்பரசியல்' காலம் போன கடைசியில் இப்போது கருப்போடு வெறுப்பரசியல்.... கருப்பென்று ஒன்று இருப்பதாலேயே வெண்மைக்கு மரியாதை என்பதை மறந்து விடுகிறீர்கள் சீப்பை மறைத்து விட்டால் இங்கு திருமணங்கள் நின்றா போகின்றன? கருப்பை மறைத்து விட்டால் உங்கள் கயமைகள் போய்விடுமென்று கனவு…
தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் - அ.பாக்கியம் thodar:3 niraverikkodu ulaga kuthusandai pattayam -a.bakkiyam

தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் – அ.பாக்கியம்

  முகமது அலி குத்துச்சண்டை களத்திற்கு வருவதற்கு முன்பாக அமெரிக்காவில் கருப்பர்கள் விளையாடுவதற்கு தடை இருந்தது. குறிப்பாக ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow laws) அமலில் இருந்தது. ஜிம் க்ரோ சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்…
தொடர்-1 : ஏன் இந்தத் தொடர்? - அ.பாக்கியம் thodar- : en intha thodar?- abakkiyamt

தொடர்-1 : ஏன் இந்தத் தொடர்? – அ.பாக்கியம்

         வெறுப்பு அரசியல் பல்வேறு நாடுகளில் பல வடிவங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி முதலாளித்துவம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. தன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காகவும், மூலதனத்தின் சுரண்டலை தீவிரப்படுத்து வதற்காகவும், உழைக்கும்…
Orumurai Karuppagu Poem By Pangai Thamizhan ஒருமுறை கருப்பாகு கவிதை - பாங்கைத் தமிழன்

ஒருமுறை கருப்பாகு கவிதை – பாங்கைத் தமிழன்




ஒரு செய்தி படித்தேன்
வறுமையான மூளையில் இருந்து
வந்த செய்தியாகத்தான்
அது இருக்க வேண்டும்!
மூளையில் வறுமையா?

ஆம்.
செழிப்பான மூளை
செழிப்பான மண்ணுக்குச் சமம்;

செழுமையான மண்ணில்தானே
சிவந்த ரோஜா மலரும்!
செழிப்பற்ற மண்ணில்
புல் பூண்டும் முளைப்பதுண்டோ?

இப்போது சொல்வோம் செழுமையும், செழுமையின்மையும்
மண்ணிலும் உண்டு
மண்டையிலும் உண்டு!
செழிப்பற்ற நிலைதானே
வறுமை!

சாதியைப் பார்த்து
உதவாமல்
வறுமையைப் பார்த்து
உதவுதல் வேண்டுமாம்!

ஆம்.
உண்மையில் நூறு!
இந்திய மண்ணுக்கு
இந்தக் கருத்தில்தான்
சிக்கல்!

இங்கே….
உங்கள் சாதியைச் சொல்லுங்கள்
உங்கள் பொருளாதார
நிலமைத் தெரியும்
சமுதாய அந்தஸ்துத் தெரியும்!
மனித உறவுகள் தெரியும்!

வெள்ளையான சாதிக்கும்
மாநிறமான சாதிக்கும்
வறுமை என்றால்….

வெள்ளை மாநிறத்தைத் தாங்கும்;
மாநிறம் வெள்ளையைத் தாங்கும்!
கருப்பான சாதியென
ஒன்றுண்டு;

வெள்ளையும் வெறுக்கும்
மாநிறமும் மிதிக்கும்
கருப்பை!
கருப்புக்கு வறுமையே
பூர்விகம்;

கருப்பு தன் பசிக்கு
வெள்ளையின்
மாநிறத்தின் கழிவுகளை
சுமந்தால்தான் கஞ்சி!

வெள்ளையே….
மாநிறமே….
ஒரே ஒருமுறை
கருப்பாகப் பிற….
உணர்வாய்!

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 7: சிவப்பு, வெள்ளை, கறுப்பு (நார்மண்டி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 7: சிவப்பு, வெள்ளை, கறுப்பு (நார்மண்டி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஒரு நாள் ஒரு பேரரசரின் மூத்த மகன் ஒரு வயலில் தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பனிக்காலம். வயல் முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டிருந்த்து. அப்போது ஒரு அண்டங்காக்கை பறந்து செல்ல, இளவரசன் அதை அம்பால் வீழ்த்தினான். பனியில் அந்த…