red market tamil translated book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்: சிவப்புச் சந்தை - செ.தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: சிவப்புச் சந்தை – செ.தமிழ்ராஜ்

நூலின் பெயர்: சிவப்புச் சந்தை நூலாசிரியர்: ஸ்காட் கார்னி மொழிபெயர்ப்பாளர்: செ.பாபு ராஜேந்திரன் பக்கம் 282 விலை 300 வெளியீடு : அடையாளம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. உங்கள் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட மனித உடலின்…
 தங்கேஸ் கவிதை thangesh kavithai

தங்கேஸ் கவிதை

இதயங்கள்... இருளின் முலைக்காம்பை சப்பியபடி விழித்துக் கொண்டிருக்கும்  ஒற்றை நிலவை  பார்க்கச் சகிக்கவில்லை எட்டினால் அப்படியே கையோடு அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் மடியில் அமர்த்திக்கொள்ள  இங்கே இப்படி  இருளில்  கைவிடப்பட்ட  எத்தனை எத்தனை இதயங்கள் பரிதவித்துக் கொண்டு  இருக்கின்றனவோ யார் கண்டது?…
கவிதைகள் - வளவ. துரையன் kavithaigal - valav.thurayan

கவிதைகள் – வளவ. துரையன்

உள்மன ஆழம் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே.…
உயிர் துளியாகிறேன் கவிதை - சசிகலா திருமால் Uyir thuliyagiren kavithai - sasikala thirumal

உயிர் துளியாகிறேன் கவிதை – சசிகலா திருமால்


மனம் கொத்திப் பறவையாய்
மனதினைக் கொத்திக் கொத்தியே
உயிர் திருகும் வலியில்
என் உணர்வுகளைக்
கடத்திச் செல்கிறாய்…

உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது
உந்தன் நினைவுகள்..
எந்தன் உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
உந்தன் ப்ரியமொழியின் குளிர்ச்சியினை..

இதோ இப்பொழுதும்
உந்தன் விரலிலிருந்து கசியும்
வார்த்தைகளில்
உயிர் துளியாகிறேன் நான்..

அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்




1.
நாணற்புற்களுக்கிடையில்
தலைதூக்கிப் புணரும்
சாரைகளுக்கிடையில்
கருநீலச் சாக்கடையில்
முண்டியெழும்பி அலையும்
மின்மினி பொன் நிலவை
ஒத்த வீட்டின்
கதவு திறந்த
சாளரத்தின் அருகில்
இரு உள்ளங்கைகளில்
ஏந்தும் சிறுகுழந்தையென
இதயம் கனக்கும் போதெல்லாம்
தாலியறுத்த நாள்களில்
வானுக்கு தூதனுப்பி
இரவில் மட்டுமே
நிலவை ஏந்தும்
அக்காவுக்கு
பகற்பொழுதில்
கட்டற்ற வெளியில்
அலையும் வெயிலும்கூட
இளைப்பாற்றுகிறது
யாரும் பார்த்திடாத போதும்…

2.
அடிபுதையுண்ட
சகதி மேலெழும்பி
நீர் மிதக்கும்
சிறு குளத்தில்
சீப்பு சீப்புக்களாய்
அடிக்கொரு எட்டில்
மிதப்பு மீன்கள்
நீரறுந்தும் செவ்வானத்தில்
சிறுகச் சிறுகப் பூக்கும்
வான் பூவாய்
வலசை சருகாய்
வில் அம்பாய்
எழுகிறது வீறுகொண்டு…

3.
மேம்பாலத்தில்
யாருமற்று
இரத்தப் பிசுபிசுப்புகளோடு
ஓடவண்டுகள் மொய்க்க
சிதைந்து கிடக்கிறது
பொன் மேனி

இனம்பிரித்து
பதம்பார்க்கும்
கொடுவாக்களுக்கு
மானுடனென்று தெரியுமா
மரமென்று தெரியுமா

குளம் வற்றி
குலம் பெருகிவிட்டது
குடி ஆதிக்க
பிரபஞ்சத்தில்…

4.
சொடுக்கிப் பொழியும்
அடர்பனி இரவில்
வெளிச்சம் பாய்ச்சி
நிலைக்குத்தி
தொங்கி நிற்கும்
மஞ்சள் பலூன்
கிளப்பி விட்டு
தூதனுப்புகிறது
சாமத்து கோழியின்
விடலைப் பருவ
முகவாசலில்…

கொடி அடுப்பில்
நீள் சடைவிரித்துக் காயும்
சுண்ணாம்புக் கோலங்களை
சுவைக்கும் மென்குமிழ்கள்
சூட்டுப் பழமென சுவைக்கிறது
கதவு திறந்த அடுப்பின்
முகவாசலில்…

5.
புழுதி வாடைக்குள்
புடைத்தெழுந்து
பூக்கும் விதைச்சொற்களாய்
அடிநாதம் வற்றிய
மெல்லிய குரல்களின்
கீற்று சஞ்சாரம்
சீவாலி மூங்கியில்
தெறித்தோடுகிறது
குலவை போன்றும்,
ஊர் திரும்பும்
கோடைமழையில்
சடசடவென
பிஞ்சு உதிர்க்கும்
மாங்கிளை போன்றும்.

6.
சாம்பல் வெளிச்சத்தில்
பிறந்து விடியும் புதனில்
குழைமுத்திய நெடுமரத்தில்
குத்தி வெடிக்கும்
கீழ்நெற்றுகளை
வரும்போதெல்லாம்
அலப்பிவிட்டுச்செல்லும்
குழந்தைக்காற்று
அம்மாவின் நினைவு
கிளம்பி முத்துகையில்
வரமறுக்கிறது

இருப்பினும்
வாய் பிளந்து
சுடர் நிமிரும்
செங்கதிர்
தாழப் பாய்ந்து
ஆசுவாசப் படுத்துகிறது
அடங்கமறுக்கும் சுழல் நினைவினை…

7.
சாம்பிராணிபுகை
முட்டி மோதிச்சூழ
வெண்கலமணி கீச்சொலிக்க
தனித்திருக்கும் கருவறையில்
அறியா மொழிகளின்
மௌனச் சொற்கள்
பூ விரல்களில்
நகக்கனுவிலே
சீறிப்பாய்ச்சும்
முட்களாய் ஏறுகிறது
நகரத்து கோவில் வாசலில்…

8.
நீர் வற்றிப்போன
கிணற்றடியில்
தலைதூக்கிப் புணர்ந்து
சுழியெழுப்பும்
இரட்டைப் பாம்பெனவும்

தனித்திருக்கும் பூங்காவில்
ஈர முத்தத்தின்
உதட்டலையின்
பூச் சுழியினை
சுழற்றி விட்டு
சூடு தணிக்கும்
ரெட்டை சோடிகள்
நொடிகளில் சூடேறி
நெடிய இரவில் தணியும்
கனல் முற்றி
குமிழ் பூக்கும்
கொடி அடுப்பினைப் போன்று…

– அய்யனார் ஈடாடி

இரா.கலையரசியின் கவிதைகள்

இரா.கலையரசியின் கவிதைகள்




எட்டிப் பார்க்கிறது
***********************
வெந்து போன
உடலின் சதைகளில்
ரத்தம் வழிகிறது.
அழகிய கருவிழிகள்
குழைந்த சேறாய்
நட்டுக் கொண்டிருக்கிறது.
கருங்கூந்தல் கருகி
மொட்டைத் தலைக்கு
வழி விடுகிறது.
உருகிய ரப்பர்
வளையல்கள்
கைகளைக் கிழித்து
எலும்புகளை உரசுகிறது.
குவிந்த வயிறு
தணலாய்த் தகிக்கிறது.
குவளைக் கண்கள்
ஒளியைச் சிந்தியபடி
பட்டாம்பூச்சி வருடலுடன்
உலகை எட்டிப் பார்க்கிறது
அவள் “குழந்தை.”

வரிக்கி
**********
வறண்ட நிலத்துப் பிரதேசமாக
இறுகிப் போய்த்தான்
இருக்கிறாய்.
காலத்தின் கொடுமைகளை
மெல்ல மனதில் தேக்கி
சிறு துளைகளாக
வடுக்களை சேமித்து
வைத்து இருக்கிறாய்.
கடுகடுத்த உன் மேல்
காதல் பெருகியது.
சூடான குளம்பியை
துணைக்கு அழைக்கிறேன்.!
மெல்ல இதமான, நீ
தாங்கும் சூட்டில் உன்னை மூழ்கடிக்கிறேன்.!
கரைந்த உப்பாய்
மெதுவடைக்குப் போட்டியாய் இளகுகிறாய்.
உன்னை என்னுள்
கரைத்துக் கொள்கிறேன்.
நாவில் பதிந்து இதயத்தில்
சிம்மாசனம் போட்டுக்
கொள்கிறாய்.

இரா.கலையரசி.

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பெயரற்ற காலம்
********************
என் பெயர் சொல்லி…சொல்லி
யார் யாரோ அழைக்கிறார்கள்
அழைத்தவர்களை இன்னும்
யாரென்று அறிய முடியவில்லை
என் பெயர்
எனக்கு மறந்து
போய்க் கொண்டிருக்கிறது
ஆளற்ற காடுகளில்
காருண்யத்தின் பெரு மழை
பெருக்கெடுத்துப்
பாய்கிறது நதியாய்…
பள்ளத் தாக்குகளில்
நேசத்தின் எதிரொலிகள்
மனிதரோடு கலந்து வாழ்வதில் தான்
அன்பின் அர்த்தம் பிரதியாகிறது
பூ பூவா பறந்து திரியும்
பட்டுப் பூச்சிகளின் கோலாகலத்தில்
மலையைத் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நிறங்கள் இணைந்த வானவில்
அலைகளின் மீது நுரைகள் போல
சிறு சிறு நண்டுகள்
படகுத் துறையில் கூடிக்கிடக்கும்
படகுகளின் மீது கடற் பறவைகள்
கனவுகளைத் தொட்டுப் போகின்றன
தீராத துக்கங்களின்

குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன்
யுத்தமெனும் மாயரக்கனின்
அழியாத காலடிச்சுவடுகள் ஒளிர்கின்றன
குருதி வண்ணத்தில்….
சிதைந்து கிடக்கும்
மனித உறுப்புகளின் சிதிலங்கள்
வாழ்வின் கரைகளில்..
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
பறந்து எங்கோ போகின்றன.

பூஜ்யக் கனவுகள்
*********************
பனிக்குடம் உடலின் கவசக்கூடு
மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது
பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை
முகிழ்த்துகிறது
நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது
ஆட்கள் ஓடி வந்தார்கள்
உடல்கள் தவிர எல்லாம் களவு போனது
சொல் விஷம் பருகினாள்
நாக்கில் பாம்புகள் துள்ளின
வானத்தைப் பிடிக்க வலை வீசினேன்
சில மேகங்கள் மட்டும் சிக்கின
கையில் எடுக்கையில் பறந்து போய்விட்டன
போனது வாழ்க்கை
காட்டுக்கிழங்கைத் தேடி அலைந்ததில்
புளிச்சிப்பழங்கள் கிட்டின வேட்டையாடுகின்றன மணிப்புறாக்கள்
பசி பிடுங்கித் தின்ன
வேடிக்கை பார்க்கிறான்
புன்முறுவல் காட்டினால் புன்னகைப்பேன்
வணக்கம் சொன்னால் வணங்குவேன்
எளிய மனிதனுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை
போராளி போராளி என்று பீற்றுகிறான்
போராட்டமென்றால் பதுங்கு குழி தேடுகிறான்
பதுங்கித்தான் புலி பாயுமாம்
தனிமையைக் குறித்து வருத்தப்படுகிறேன்
என்னை நினைத்து தனிமை ஆதங்கப்படுகிறது
எங்களைப் பற்றி எவரும் வேதனைப்படவேண்டாம்
முகத்தில் பல முகமூடிகள்
தலையில் கனத்த கிரீடம்
பத்துகாசுக்கு பிரயோஜனமில்லை என புலம்பும் எழுத்தாள சக்கரவர்த்தி(னி)கள்
தேவதைகள் அரக்கர்களிடம் சிக்குகிறார்கள்
தேயும் நிலவாய் சிதைக்கப்படுகிறார்கள்
திடீரென்று காணாமலாக்கப்படுகிறார்கள்.

இறகு நடனம்
****************
மேகத்தில் என் உயிர்
பூமியில் என் உடல்
மழையாய் உயிர்த்து நடனமாகிறேன்
உன் சமாதானங்கள் ஆறுதலாயில்லை
உன் தேற்றல்கள் வலியை தீர்க்கவில்லை
முறிந்த கிளையாய் துவள்கிறேன்
சட்டென்று விலகிப் போனாய்
பட்டென்று உதிர்ந்து வீழ்ந்தேன்
மண்ணாவதைத் தவிர வேறு வழியில்லை
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில் இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்.

தீராத கவலை
*****************
பல்லிளித்து எச்சில் வடிய சிரிக்கும்
கடைவாய் நக்கி சப்புக்கொட்டும்
பெண் கண்ட ஆண் நாய்
ஆண்மை என்பது பெண்மையைப் போற்றுவதாகும்
பெண்மை என்பது ஆண்மையை நேசிப்பதாகும்
போற்றுதலும் நேசித்தலும் வாழ்வை பூஜிப்பதாகும்
எங்கிருந்தோ வருவார்கள்
எதிர்பாராமல் உதவிடுவார்கள்
வந்த சுவடு தெரியாமல்
வந்த வழி போவார்கள்
என் படகை மிதக்க விட்டிருக்கிறேன்
இதயம் லேசாகிப் பறக்கிறது
பயணத்தை தொடங்க வேண்டும்
தடுமாறித் தடுமாறி விழுகிறேன்
கைதூக்கிவிட தனிமை பதறி ஓடிவருகிறது
மனசெல்லாம் தவிப்பு
ஜன்னலருகே அமர்ந்திடணும்
ஓடிச்செல்லும் காட்சிகளோடு பறக்கணும்
வாகனப்பயணத்தில் நான் பறவையாகணும்
என்னை அறிந்தவர்களுக்கு புரியவைக்கமுடியவில்லை
என் நட்பு சுற்றத்தினருக்கு விளங்க வைக்க முடியவில்லை
கவிதை எழுதுவது நானல்ல என்று.

வசந்ததீபன்

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்




சிந்தக் கண்ணீர் இன்றி
வறண்ட நொய்யல்
என் கவிதையில் – அதைச்
சிந்திக் கொண்டிருக்கிறது
சத்தமின்றி

கவிதையில்
எழுத முடியாச் சொற்கள்
என் கண்களும் முகமும் சிவக்கின்றன
தொண்டையை அடைக்கும்
விம்மலின் ஊடே

எழுதி முடித்த பின்
கூர்ந்து கவனித்தேன்
கசிகிறது ரத்தம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றிலிருந்தும்
சொட்டுச் சொட்டாய்

ஆற்றில் வேதிக் கழிவு கலப்போர்- தாயின்
சோற்றில் நஞ்சு கலப்போர்
நீரை உறிஞ்சி விற்போர்
தாய்ப் பாலைத் திருடி விற்போர்
ஆக்ரமித்து அதை நெருங்குவோர்
பெற்ற தாயின் கழுத்தை நெறுக்குவோர்
அடி மணலை அள்ளிச் செல்வோர்
அவளது உயிரையே உருவிச் செல்வோர்
இவரெல்லாம் முறை வைத்து
நொய்யலின் முதுகில் குத்தியதில்
நீரோடு கலந்து ஓடிய ரத்தம் – கவிதையின்
ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது

மணலில் ஓடிய நொய்யல் – எங்கள்
மனதிலும் ஓடி – அன்று
சிந்து பாடிய அது – இன்று
நொந்து வாடியது
அன்னையை விற்றுப்
பணம் எண்ணும்
பிணங்களை எண்ணி எண்ணி

பயிருக்கு நீர் தந்த நொய்யல்
நம் உயிருக்கும் தந்த அதை
வரம்பு ஏதுமின்றிச்
சுரண்டிச் சூறையாடிய பின்
நரம்பு அறுந்த அந்த வீணையில்
ஈரம் இழந்த உயிரின் இதயம்
துயரைத் தானே மீட்டும் இனி

காலத்திடம் கேட்க
ஒன்று தான் உண்டு எனக்கு
மரமாக மாற்றி விடு என்னை
நொய்யலின் கரையில் நின்று
காக்கிறேன் கடைசி வரை அதை

அது முடியாது எனில்
நோய் இல் நதி – இன்று
பாயில் சுருண்ட அது
நோயில் விழ – அதைச்
சாவின் விளிம்பில் நிறுத்தியோரை

நீங்காச் சின்னமாய்
நீராய் ஓடிய கற்கண்டை
நினைவுச் சின்னமாக்கிய
நீசரை

காலத்துக்கும்
காணக் கிடைக்கா அமிர்த ஓட்டத்தை
காணக் காண
காணாமல் செய்தோரை
ஓடிக்கொண்டிருந்த
ஓவியத்தைத்
தீவைத்து எரித்தோரை

வணிகம் சார்ந்தோரை
மனிதம் சார்ந்தோராய்

நீரைக் கெடுக்கும் நாசகாரரை
மனிதராய்
மாற்றி விடு

சட்டம் செய்யப்படும் நாளிலேயே
அதன் விலையும் ஓட்டைகளும்
நிர்ணயம் செய்யப்படும் நாட்டிலே
வான் நோக்கிக் கதறும்
என் குரலில் நிறைந்திருக்கிறது
“எத்தனை கொலைகாரர்கள் இங்கே ….
என்னை அவர்களில் ஒருவன் ஆக்கிடாதே” எனும்
என் இயலாமையின் இறைஞ்சல்

ஆதித் சக்திவேல்
கோவை
8903671246

துரோகம் கவிதை – வளவ. துரையன்

துரோகம் கவிதை – வளவ. துரையன்




இந்தத் துரோகம்
எனக்கானதே
என்னைக் கொண்டுபோய்
வாழ்வின் எல்லையில்
வைத்து வேடிக்கை பார்க்கிறது.

ஆதரவெனக் கை போட்ட
தோள்களில் இருந்த
அழகான முள்ளெல்லாம்
அழுத்திக் குத்தின.

வந்த குருதியைத்
துடைத்துக் கொண்டு
சற்று முன்னேறினால்
கண்ணிவெடி வைத்துக்
காலைக் காயப்படுத்துகிறது.

அளவுக்கு மீறி நான்
நம்பி விட்டேனென்று
அவமானப் படுத்துகிறீர்

என் நம்பிக்கையால்
வரும் அவதூறுகளை
எதிர்கொள்கிறேன்
எள்ளலோடு.

துரோகத்தை வரவேற்கக்
காத்திருக்கிறேன்
தூள்தூளாக்குவேன்
எனும் தன்னம்பிக்கையுடன்.

– வளவ. துரையன்