வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும் - Biochemical problems that lead to weight loss by Vinesh Phogat - https://bookday.in/

`வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும்…!

`வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும்  உயிர் வேதியியல் சிக்கல்களும்…! 28-8-24 ஆங்கில இந்து பத்திரிக்கையில் சயந்தன் தத்தா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை ஆகஸ்ட்-7 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவரும் ஒலிம்பிக்…
விழித்தெழு பெண்ணே! விழித்தெழு! கட்டுரை – வ.சு. வசந்தா

விழித்தெழு பெண்ணே! விழித்தெழு! கட்டுரை – வ.சு. வசந்தா




அனைவருக்கும் வணக்கம்.
இந்த கட்டுரையை என்னுடைய அனுபவ பகிர்வாகவே அளிக்க விரும்புகிறேன்‌.

உடல், மனம் _ நலமே….. ஒவ்வொருவரின் மிகப்பெரிய சொத்து. இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

என்னுடைய முப்பதாவது வயதில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். அதன் பிறகு வெள்ளைப்படுதல் என்னும் தீவிர தொந்தரவால் அவதிப்பட்டேன். ஆங்கில, சித்தா மருந்துகள் எடுத்துக் கொண்டேன். தற்காலிக தீர்வு தான் கிடைத்தது. 35 வது வயதில் கர்ப்பப்பையை அகற்ற சொல்லி விட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உடம்பிலுள்ள‌ ஒவ்வொரு உறுப்பும் தேவையான ஒன்றுதான். ஒல்லியாக இருந்த நான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை கூடி பலவித நோய் தொந்தரவுகளுக்கும் உட்பட்டேன்.

என்னுடைய ஒரு மார்பகம்
கனத்தும், வலியுடனும் இருந்தது. அதனால் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். மார்பக (மமோகிராம்) பரிசோதனையும் செய்தார்கள்.
அந்த நிகழ்வில் கேன்சர் நோயாளிகளுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் டாக்டர் அப்துல் கலாம் ஐயா கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

‘ இப்போது பயப்படும்படி ஒன்றும் இல்லை நன்றாகத்தான் இருக்கின்றீர்கள் ‘என்ற பரிசோதனை முடிவு தரப்பட்டது.

ஆனாலும் எனக்கு வலி இருந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அப்பல்லோ மருத்துவமனையிலும், மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மமோகிராம் செய்து கொண்டேன்.

அறுபது வயதிற்கு மேல்..
அக்குபங்சர் மருத்துவம் பயின்று… இன்று நான் ஒரு ‘அக்கு ஹீலர்’ …என்னும் தகுதியில் இருக்கிறேன். நம் உடல் சேர்த்து வைத்திருக்கும் கழிவுகள் தான் நோயாக அறியப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கர்ப்பப்பை செய்ய வேண்டிய வேலையை என் உடலால் செய்ய முடியவில்லை. மாதா மாதம் நடைபெற வேண்டிய கழிவு வெளியேற்றம் நடைபெறாத காரணத்தால் என் மார்பகம் பாதிக்கப்பட்டது. மற்றும் கால் மூட்டுகளிலும் வலி; வேறு தொந்தரவுகளும் எனக்கு வந்து விட்டது. இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடலில் தொந்தரவுகள் ஏற்படும் போது உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அறிந்து அவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மாறாக அறுவை சிகிச்சை செய்து உறுப்புகளை அகற்ற வேண்டாம். இதனை நான் தாழ்மையாக ஆங்கில மருத்துவத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடலில் கழிவுகள் சேராமலும் அப்படியே கழிவுகள் தேங்கினாலும் அவற்றை அகற்றும் வழி அறிந்து வாழ்வோம். பசித்து உண்போம். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் நேரத்திற்குத் தூங்குவோம். உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வு கொள்வோம். வேண்டிய நீரை தேவையறிந்து
அருந்துவோம்.

நோயற்ற சமுதாயம் படைப்போம்.

வ.சு. வசந்தா
VS.Vasantha
ACU Healar
9840816840
Reply
Forward