எலும்பையும் விட்டுவைக்காத புற்று நோய் கட்டுரை – ம.மோகரன்
மனித உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சகல பகுதிகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டது புற்றுநோய். இந்த பாதிப்பின் தீவிரம் வலிமையான எலும்பையும் விட்டு வைப்பதில்லை. அப்படி எலும்புகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம்…
எலும்புகளில் கட்டிகள் உருவாகும் போது எலும்பு புற்றுநோய் பாதிப்பு ஆரம்பமாகிறது. கை அல்லது காலிலுள்ள நீளமான எலும்பிலேயே இது பொதுவாக உருவாகிறது. வளர வளர இது சாதாரண எலும்பு செல்களை அழித்துவிடுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. எலும்பு புற்றுநோயானது குழந்தைகள் மற்றும் இளவயதினரிடையே அதிகம் காணப்படுகிறது.
(Chondro sarcoma)
40 வயதுக்கு மேலானவர்களை பாதிக்கும் புற்றுநோய் வகை இது. கைகள், கால்கள், இடுப்பெலும்பு பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும்.
லுக்கிமியா(Leukemia)
இது எலும்பு மஜ்ஜை மற்றும் சில எலும்புகளின் திசுக்களை தாக்கும் புற்றுநோய் வகை. ஆனாலும் இதை எலும்பு புற்றுநோயாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை.
அரிய வகைகள் ?
மேலே குறிப்பிட்ட வகைகளை தவிர, வேறு சில அரிய வகை புற்றுநோய்களும் உண்டு. அவை பெரும்பாலும் பெரியவர்களையே தாக்குபவை. உதாரணத்துக்கு ஜயன்ட் செல் டியூமர்(Giant cell tumor) வகை புற்றுநோய் பாதிப்பானது பெரியவர்களின் முழங்கால் பகுதியை தாக்க கூடியது.
* கோர்டாமா (chordoma) என்கிற இன்னொரு அரிய வகை புற்றுநோய் மண்டையோட்டு பகுதியின் அடிபாகத்தையோ, டெயில்போன் எனப்படுகிற தண்டுவட எலும்பு வால் பகுதியையோ பாதிக்கக் கூடியவை.
* ஃபைப்ரோ சார்கோமா (Fibrosarcoma) என்றும் ஒரு வகை இருக்கிறது. இது முதியவர்களை பாதிக்கும் புற்றுநோய். முழங்கால், இடுப்பு மற்றும் தாடை பகுதிகளை பாதிக்க கூடியது. ஏற்கனவே ஏதோ ஒரு புற்றுநோய் தாக்கி, அதற்காக ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.
யாருக்கெல்லாம் ரிஸ்க் இருக்கிறது ?
* எலும்புகளுக்குள் உலோகங்கள் பொருத்தி கொண்டவர்களுக்கு…. அதாவது எங்கேயாவது விழுந்து அடிபட்டு எலும்பை உடைத்து கொண்டதன் விளைவாக அந்த எலும்பில் மெட்டல் இம்பிளான்ட் செய்து கொண்டவர்களுக்கு.
* ஏற்கனவே புற்றுநோய் பாதித்து, அதற்கான ஆங்கில மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும்,
* அதிகளவிலான கீமோ ,ரேடியேஷன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்களுக்கும்.
* எலும்புகள் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும். ஆனால் கோன்ட்ரோ சார்கோமா வகை புற்றுநோய் மட்டும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு அதிகம் பாதிக்கும்.
வேறு என்னவெல்லாம் காரணங்கள் ?
மரபணு தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் எலும்பு புற்றுநோய் தாக்கலாம். ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது கண்களை பாதிக்கிற புற்றுநோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், Li-Fraumeni syndrome and Rothmund-Thomson syndrome உள்ளவர்களுக்கும்கூட எலும்பு புற்றுநோய் தாக்கலாம்.
அம்பிலிகல் ஹெர்னியா பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இது மிக மிக அரிதானது என்பதால் பயப்பட தேவையில்லை.
அறிகுறிகள் ?
எலும்பு புற்றுநோய் இருந்தால் தென்படும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று வலி.
வலி…. இதுதான் முதல் அறிகுறி. இதன் தீவிரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். அதாவது சிலருக்கு மெதுவாக ஆரம்பிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதி மென்மையானது போன்று இருக்கலாம். வேறு சிலருக்கு தீராத வலி இருக்கலாம்.
ஆரம்பத்தில் வலியானது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால் இரவு நேரத்தில் கடுமையான எலும்பு வலியை சந்திக்கக்கூடும் அல்லது எலும்புகளின் உதவியுடன் ஒரு வேலையை செய்யும் போது, அதாவது நடந்தால் கடுமையான கால் வலியை சந்திக்க நேரிடும். அதிலும் எலும்பு புற்றுநோய் தீவிரமாக இருந்தால், எந்நேரமும் வலியை மோசமாக சந்திக்க வேண்டியிருக்கும்.
வீக்கம்
கால் அல்லது கைகளில் வீக்கம் இருந்து, அவ்விடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் வலி இல்லாமல் இருந்தால், எலும்பு புற்றுநோய் இருப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளில் புற்றுநோய் இருந்தால், தொண்டையின் பின்புறத்தில் கட்டிகள் உருவாகி, எந்த ஒரு உணவுப் பொருளையும் விழுங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் அல்லது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும்.
எலும்பு பகுதிகளில் வலி இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை. மூட்டுவலி, பலவீனம் போன்ற வேறு பிரச்சனைகளின் விளைவாகவும் அப்படி வலிக்கலாம். எனவே தொடர்ச்சியாக வலித்தாலோ, வித்தியாசமாக வலித்தாலோ மருத்துவரை அணுகலாம்.
மற்ற அறிகுறிகள் ?
* எலும்புகள் உடைவது, எலும்பு புற்றுநோயின் காரணமாக எலும்புகள் பலவீனமாகும். அதனால் அவை மிகச் சுலபமாக உடையலாம்,
* எலும்புகள் இருக்கும் பகுதியில் கட்டிகள் தென்படுவது,
* இரவில் வியர்வை,
* எலும்பைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்துபோவது,
* அதிகமான களைப்பு,
* காரணமே இல்லாமல் உடல் எடை மெலிவது…
* உடல் இயக்கத்தில் சிரமம்.
* எலும்பு முறிவு ஏற்படுதல்.
பல முறிவுகள்.
* பலவீனமான எலும்புகள்.
* அடிக்கடி காய்ச்சல்.
* சோர்வு.
* குறைந்த அளவு செந்நிற இரத்த அணு (இரத்தச் சோகை).
புற்றுநோயின்_நிலைகள் ?
ஸ்டேஜ் – 1
இந்த நிலையில் புற்றுநோயானது எலும்பைத் தாண்டி வேறு எங்கும் பரவியிருக்காது. புற்றுநோய் செற்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்காது.
ஸ்டேஜ் – 2
புற்றுநோய் பரவியிருக்காது. ஆனாலும் செற்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
ஸ்டேஜ் – 3
ஒரே எலும்பில் குறைந்தது இரண்டு இடங்களிலாவது புற்றுநோய் பாதித்திருக்கும்.
ஸ்டேஜ் – 4
எலும்பைத் தாண்டி வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும்.
– ம.மோகரன். புதுச்சேரி