Posted inPoetry
புத்தக முன்னோட்டம்: ராசி அழகப்பனின் ★காலப் புதிர்வனம்★
பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின்
பதிப்புரையிலிருந்து சில வரிகள்
****************************** **************
இனிய நண்பர் ராசி. அழகப்பன் அவர்களின் காமிரா கண்கள் உருப்பெருக்கமடைந்து நம்முன் பிரமாண்டத்தை நிகழ்த்துகின்றன. கவிதையெங்கும் சொற் கூடுகள். கூடுகள் உடைந்து பல்வேறு தரிசனங்களைத் தருகின்றன. கலைடாஸ்கோப் மாதிரி ஒரு பன்முக எதிரொளிப்பு கவிதைகளில் காணப்படுகின்றன. வார்த்தைகளை மின்மினிப் பூச்சிகளால் கோர்த்து கவிதையெங்கும் ஒளிரச் செய்யும் வித்தை தெரிகிறது.
திரைப்பட இயக்குநர், தமிழ்நாடு அரசு விருதுபெற்ற இயக்குநர் எனும் பெருமைக்குரியவர் இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களின் இந்தக் “காலப்புதிர்வனம்” கவிதை நூல் பல்வேறு புதிர்களை நம்முள் களையெடுக்கிறது.
அகம் புறம் சார்ந்த காலப்புதிர்வனம் வாசிப்பவருக்குள் நிகழ்த்தும் பெரும் தத்துவ விசாரணை மகத்தானது.
கவிதைகளின் அற்புத கணமொன்றில் காலப்புதிர்வனம் வாசிக்கக் கிடைக்கும். வாசியுங்கள்.. காலப்புதிர்வனத்தில் ஒளிரும் மின்மினிப் பூச்சியொன்றைக் கையில் எடுக்கிறவன் ஒளிர்வான் எனும் பேருண்மை புரிபடும். புலப்படும்.
★
“காலப்புதிர்வனம்”
(கவிதை நூல்)
திரைப்பட இயக்குநர்
ராசி. அழகப்பன்
★