புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறும்படப் போட்டிகள், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
போட்டிகளை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். கவிஞர் முத்துநிலவன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கே.சரவணன், அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்தமிழ், எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிமைய விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் குமரேசன், சதாசிவம், பேராசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெ.ஜெ.கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கோவிந்தன், அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த எல் .பிரபாகரன், நேருயுவ கேந்திரா பொருளாளர் நமச்சிவாயம் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பேச்சுப் போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், ரா.பபிதா முதல் இடத்தையும், வீ. ஜெயலெட்சுமி இரண்டாம் இடத்தையும் மெளன்ட் சியோன் கல்லூரியின் ர.அரவிந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிற போட்டிகளுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் அறிவித்தனர்.
போட்டிகளை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் முத்தமிழ், யோகாம்பாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் வீரமுத்து வரவேற்றார். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நன்றி: தமிழ்மணி நியூஸ்
நூல் : வால் முளைத்த பட்டம
ஆசிரியர் : கி. அமுதா செல்வி
விலை : ரூ. ₹40
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
அன்புத் தோழர் விழியன் தனது முக நூல் பக்கத்தில் மூன்று புத்தகங்களை நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தியிருந்தார். தஞ்சாவூர் – புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி அரங்கில் எனக்கு பணி. நேற்று காலையில் உள் நுழையும் போதே
“வால் முளைத்த பட்டம்” வாங்கினேன். மாலை 5 மணிக்குள் அந்தப் புத்தகம் இறக்கை முளைத்து எங்கோ பறந்து விட்டது.
மீண்டும் இரவு 8 மணிக்கு திரும்பும் போது மூன்று புத்தகங்களும் வரிசையாக காட்சி அளித்தன. பாரதிபுத்தகாலயத்திற்கு வாக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன் என்பதால் (எனக்கு நியூ செஞ்சுரி , அலைகள் போன்ற நிறுவனங்கள் மீதும் காதலுண்டு என்பது தனி டிராக் ) தோழர் சிராஜ் நல்ல சலுகை விலையில் தந்தார். வால் முளைத்த பட்டம் “ஒரு 45 நிமிடத்தில் வாசித்து முடிக்க கூடிய, 48 பக்கத்தில் எட்டுக் கதைகள் உள்ள புத்தகம் .
கவினின் கனவுலகிற்குள் வந்து விட்ட கரப்பான் பூச்சி தான் முதல் கதை.
நிழலில்லா பொழுதுகள் கூட உண்டு கனவில்லா மனிதர்கள் இருக்க மாட்டார்கள் .
குழந்தைகள் காணும் கனவுகளை பற்றி நாம் அவர்களிடம் பேசவேண்டும். அந்த கனவுகளின் காட்சிகளுக்குள் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கனவை சிதைக்காமல் செல்ல வேண்டும் என்ற உணர்வை “கரப்பான் பூச்சி ” உருவாக்கியது.
பயம், அருவெறுப்பு இவற்றை பற்றியெல்லாம் ஒரு சரியான அறிவுக்கட்டமைப்பு குழந்தைகளிடம் உருவாகும் போது அவர்களின் கனவுகள் கூட கற்றுக்கொள்ளும் வெளியாகிறது. அது மகிழ்ச்சிக்குரியதாகிறது என்பது கரப்பான் பூச்சி கதை தந்த புரிதல்.
“அழகி ” கதை. மகாகவி பாரதியின் வெள்ளை நிறத்த தொரு பூனை என்ற மகத்தான பாடலின் அதிர்வுகளை வாசிக்கும் போது உருவாக்கி செல்கிறது. அழகி கதையில் வரும் மெர்லின் டீச்சர்களும் இருக்கிறார்கள். கணக்கு போன்ற அறிவியல் பாடங்களை படித்து விட்டு அந்த படிப்பில் பிழைப்பும் நடத்தி – “எல்லா ஏற்றத்தாழ்வு உணர்வுகளை கலாச்சார பெருமையாக கருதும் “முட்டு சந்துகள் இன்றும் இருக்கிறார்கள்
என்று கதையாசிரியர் அமுதா செல்வி பதிவு செய்கிறாரோ? என்றே நான் கருதுகிறேன்.
எனக்கு குட்டி நாய்களின் மீது பேரன்பை பொழியும் கிருஷ்ணா வை புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணாவும் குட்டிநாய்களும் அழகியல் உணர்வை தருகிறது. ஆனாலும் நாய்களை வீட்டு விலங்காக (domestication ) செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. தெருக்களையே “நாய்கள் நலமுடன் வாழும் “வீடுகளாக மாற்றுவதற்கு கிருஷ்ணாக்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டுமல்லவா?
உலகத்தரம் வாய்ந்த பிரியாணிக் கடைகள் உள்ளூரில் இருந்தாலும் “உள்ளன்புடன் தரப்படும்
பிரியாணி ” நாம் போற்ற வேண்டிய, வளர்க்க வேண்டிய கலாச்சாரமல்லவா? என்பதை பிரியாணி மாமா சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.
புது வீடு, மணிச்சம்பாவும்
பொன்னியும் கதைகள்
“மனசாட்சியை கிளறி “பல கேள்விகளை கேட்கிறது. எனது
மகளிடம் புகழ் மதியின்
அப்பாவாக இருக்கும் நான்
மற்ற பெண்களிடம் கபிலனாக இருக்கிறேனோ ?
என்ற கேள்வியை புதுவீடு எனக்குள் எழுப்புகிறது.
என்னைப் பொறுத்தவரை புதுவீடு
மணிச்சம்பாவும் பொன்னியும் கதைகள் பெண்ணியக்
கதைகளாகப் பரிணமிக்கிறது.
ஒவ்வொரு ஆணும் அண்டங்காக்கா தான்.
எழுத்தாளர் அமுதா செல்வி
“போனால் போகிறது என்று
அழகான, அண்டங்காக்கா ” என்று கருணையோடு எழுதிச் செல்கிறார்.
ஒவ்வொருவரும் “சிவா சார் ” போலவே இருந்து விட்டால் நாம் ஏன்
கள்ளக்குறிச்சி ஶ்ரீமதிகளைப் போன்ற அன்பு மகள்களை இழக்கப்போகிறோம் ?
பேராசிரியர் மாடசாமி அவர்கள் “கனவுக்கும் யதார்த்தத்திற்கும் “இடையே பாலமாக கி. அமுதா செல்வியின் எழுத்து
இருக்கிறது என்கிறார்.
ஆமாம், கனவுலகில் இருந்து யதார்த்த உலகிற்கு அழைத்து வருவது அல்லவா எழுத்து செய்ய வேண்டிய பணி? அதை இந்தப் புத்தகம் ” வால் முளைத்த பட்டம் ” சிறப்பாகவே செய்கிறது. சிறுவர்கள் படித்தால் இது சிறார் கதை. பெரியவர்கள் படித்தால் இது பெரும் கதை.
தஞ்சை.தி. இதயராஜா
ஓசூரில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 11வது புத்தக திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 110 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
மொத்த விற்பனை.
புத்தக திருவிழாவில் 25 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 10 ஆயிரம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து 12 நாட்கள் நடந்த இந்த புத்தகத்தில் திருவிழாவில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி: மாலை முரசு
புத்தக வாசகர்களுக்கும், புத்தக ஆர்வலர்களுக்கும், அனைத்துப் பதிப்பகங்களின் நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பாக புத்தகப்பூங்கா அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்வுடன் முதல்வரின் அறிவிப்பை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அனைத்துப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும், புத்தகக்காதலர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கின்ற இடமாக அந்தப் புத்தகப்பூங்கா திகழவேண்டும். அதற்கு புத்தகப்பூங்கா அமைப்புக்குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்று தசிஎகச கருதுகிறது.
புத்தக கண்காட்சிக்கு வருவதே குழந்தைகளுக்கு பேரனுபவம், புத்தக பூங்காவிற்கு வருவதும் இந்த அனுபவத்தை கட்டாயம் கொடுக்கும். பல ஊர்களில் இருந்து பள்ளிகள் வழியாக புத்தக பூங்காவிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யலாம். புத்தக பூங்கா அமைக்கும்போது கட்டாயம் சிறுவர்களுக்கான தனி அரங்கங்கள் அமைக்கப்படவேண்டும். சிறார் அரங்கங்களில் அறிவியல், கதை சொல்லல், நாடகம், திரையிடல் போன்ற கலைகள் சார்ந்த நிகழ்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எப்படி சிறார் பகுதி தனித்துவம் வாய்த்ததாக இருக்கின்றதோ அதே போன்று தனித்துவமாக அமைக்கபப்ட வேண்டும்.
புத்தகப் பூங்காவினை அமைக்கும் அதே தீவிரத்தன்மையுடன் ஊர்புற நூலகங்களையும், பள்ளி நூலகங்களை உயிர்ப்பித்தல் அவசியம். அதற்கென நிதி ஒதுக்கி, தரமான புத்தகங்களை பெற்று, அதனை ஒரு இயக்கமாக மாற்றவேண்டும். நூலகங்களின் செயல்பாடே ஒரு நாட்டின் உயரிய குணாம்சம்.
புத்தக வாசிப்பைக் குழந்தைப் பருவத்திலிருந்தே அறிமுகப்படுத்துவதற்கும் கவிமணி தொடங்கி இன்று வரையிலான சிறார் எழுத்தாளர்களின் படைப்புகளை, ஆய்வுகளை, முழுமையாக ஆவணப்படுத்தவும், விளையாட்டு, பாரம்பரிய கலைகள், நாடகம், திரைப்படங்கள், ஓலை கீற்று -ஓரிகாமி போன்ற நுண்கலைகள், அறிவியல் என சிறார் உலகத்துடன் தொடர்புடைய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய சிறார் இலக்கிய நூல்களுக்காக மட்டும் ஒரு தனி நூலகம் ஒன்று தலைநகரில் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆண்டு தோறும் கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக்கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும். அதன் பின்னர் அதை மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடலாம். குழந்தைகளை புத்தகவாசிப்பின் திசையில் கொண்டு வருவதற்கு புத்தகக்கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக நடத்தத் திட்டமிட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
புத்தகத்துக்கு அப்பால்
– மருதன்
இளங்குளிர் விலகி, சூடு தொடங்கும்போது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. புத்தக எடிட்டிங் பணி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்கட்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு அநேகமாக நடக்காது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் தேதி குறித்துவிட்டார்கள்.
புத்தகக் கண்காட்சி என்பது எப்போதுமே எனக்கு அரங்குக்கு வெளியிலிருந்துதான் ஆரம்பமாகிறது. சென்ற ஆண்டு இதே நடைபாதையில், ‘எதையெடுத்தாலும் ஐம்பது அரங்கில்’ அர்னால்ட் டாய்ன்பீயின் A Study of History சுருக்கப்பட்ட பதிப்பு (இரு பாகங்களில்) கிடைத்தது. அழகிய கையளவு கறுப்பு அட்டைப்பெட்டியில் இரண்டும் உறங்கிக்கொண்டிருந்தன. ‘ஒன்று அம்பது ரூபா. ஆனா, பெட்டிக்குள் இரண்டு புக் இருக்கு பார்த்துக்கிடுங்க’ என்றார் கடைக்காரர். ராய் போர்ட்டர் எழுதிய கேம்பிரிட்ஜ் மருத்துவ வரலாறு நூலையும் அவரிடம்தான் வாங்கினேன். ‘இதுல பாருங்க. அளவு இரண்டு மடங்கா இருக்கு. இது இரண்டு புக்குக்குச் சமம், பார்த்துக்கிடுங்க.’
இந்தமுறை பெரியசாமித் தூரனின் பாரதியும் உலகம் (வானதி பதிப்பகம், 1979), அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் (கவிதா) ஆகியவற்றோடு ஹெச்.ஜி. வெல்ஸின் The Invisible Man, தி மாடர்ன் லைப்ரரி பதிப்பு கிடைத்தது. ஆர்தர் சி. கிளார்க் நூலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒரு நூலின் உள்ளடக்கம் போலவே அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பதும் முக்கியமானது என்பதை உணர்ந்துகொண்ட காலம்முதல் எனக்குப் பிடித்த பதிப்பகங்களில் ஒன்றாக தி மாடர்ன் லைப்ரரி இருந்து வருகிறது. செம்பு வண்ணத்தை அவர்களைப் போல் வேறு யாரும் இவ்வளவு அழகாகப் பயன்படுத்திப் பார்த்ததில்லை. பெங்குவினுக்கு காவி எப்படியோ அவர்களுக்கு செம்பு.
உள்ளே நழைந்ததும் முதலில் பிரிட்டிஷ் கவுன்சில் அரங்குக்குள் நுழைந்தேன். அண்ணா சாலையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒரு காலத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பின்னால் சத்தம் போடாமல் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நூலகம். முதல் முறை போனபோது நிறைய முறை சுற்றிச் சுற்றி வந்த பிறகே கண்டுபிடிக்கமுடிந்தது. குளிரூட்டப்பட்ட அறை, அயல் இதழ்கள், டிவிடி, கணிப்பொறி, இணைய வசதி, புத்தகங்கள் என்று ஒரே மிதப்பாக இருக்கும்.
வளாகத்துக்குள் சிறிய உணவகமொன்று இருக்கிறது. இயந்திரத் தேநீர், காபியோடு பிஸ்கெட், கட்லட், சமோசா மூன்றும் கிடைக்கும். ஒரு காபியை எடுத்துக்கொண்டு வெளியிலுள்ள படிக்கட்டில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது பிரிட்டனுக்கே போய்விட்டது போல் தோன்றும். தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் குளிர் மறைந்து வெயில் சீண்டும்போது உள்ளே நுழைந்தால் மாலைவரை இருக்கலாம்.
அப்போது சேகர் என்றொரு ரயில் நண்பர் எனக்கிருந்தார். பட்டாபிராம் சைடிங்கிலிருந்து கிளம்பும் அவர் ரயிலில் ஆவடியில் நான் ஏறிக்கொள்வேன். மாலை சென்ட்ரலில் சந்தித்து ஒன்றாக வீடு திரும்புவோம். நார்மன் லூயிஸின் பர்மா பயண நூலை ஒருமுறை எனக்குப் படிக்கக் கொடுத்தார். பிகோ ஐயரின் Tropical Classical நூலைப் படிக்காவிட்டால் உயிர் வாழ்வதில் பொருளே இல்லை என்பதுபோல் ஒருமுறை அவர் சொல்லப்போக (அவர் படித்துவிட்டு மற்றவர்கள் படிக்காத எந்தப் புத்தகத்தையும் அவர் இப்படித்தான் சொல்வார்), மறுவாரமே பிரிட்டிஷ் நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தேன். கிரஹாம் கிரீன், பீட்டர் மாத்தைஸன், கிம் ஃபில்பி, எமர்சென், தொரோ என்று பலரை முதல்முறையாக அல்லது நெருக்கமாக அறிந்துகொண்டது அந்நூலில்தான். காற்புள்ளியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அவருடைய எல்லா நூல்களையும் அதன்பின் தேடிப் படித்துவிட்டேன் என்றாலும் இன்றுவரை டிராபிகல் கிளாசிக்கல் மட்டும் என் கண்ணில் இதுவரை படவில்லை.
நார்மன் லூயிஸ் ஆம்னிபஸ் பதிப்பையும் அதே நூலகத்தில் ஒரு நாள் கண்டுபிடித்தபோது பிரிட்டிஷ் கவுன்சில் எனக்கு நெருக்கமான இடமாக மாறிவிட்டது. அந்தப் பெரிய கெட்டி அட்டைப் புத்தகத்தை எடுத்து வந்து நான் படிக்கும் முன்பே சேகரிடம் கொடுத்து, ‘பத்து நாளில் தந்துவிடுங்கள், இல்லாவிட்டால் ஃபைன் போட்டுவிடுவார்கள் அண்ணா’ என்று சொன்னது நினைவிலிருக்கிறது. அதன் பிறகுதான் அவர் வேர்கடலை பொட்டலத்தை என்னோடு இயல்பாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். ஜன்னல் இருக்கையையும் அவ்வப்போது எனக்கு விட்டுக்கொடுத்துவிடுவார். ‘Les Miserables’ படிக்காத அனைவரும் நடைபிணங்கள்’ என்றொருநாள் அவர் சொன்னபோது, ‘அடுத்தது அதுதான்’ என்று சத்தியம் செய்தேன். உயிரே போனாலும் சுருக்கப்பட்ட எந்தப் பதிப்பையும் படிக்காதே என்று இன்னொரு நாள் அறிவுறுத்தினார். மீறி படிப்பவர்களின் ரத்தத்தை டிராகுலா வந்து உறிஞ்சும் என்று மட்டும்தான் சொல்லவில்லை.
அலமாரியிலிருந்து அகற்றப்பட்ட பழுதடைந்த புத்தகங்களை மிகவும் விலை குறைத்து விற்பனைக்கு வைக்கும் வழக்கம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இருந்தது. ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோ இவ்வாறு நடக்கும். வெயில் வந்து விழும் தாழ்வாரம் போலிருக்கும் இடத்தில் இந்தப் புத்தகங்களை வைத்திருப்பார்கள்.
தாக்கரே, பைரன், விட்மேன், டிக்கன்ஸ் என்று பல நூல்கள் வாங்கினேன். ஆர்.கே. நாராயணின் Writerly life புத்தகம் இங்கே வாங்கியதுதான். இன்றுவரை இதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. எரிக் ஹாப்ஸ்பாமின் சுயசரிதையை 100 அல்லது 150 ரூபாய்க்குப் பார்த்தபோது கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. அதற்கு முந்தைய வாரம்தான் அந்நூலை முழுக்க நகலெடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து வைத்திருந்தேன். வாங்குவதா, வேண்டாமா என்று மாபெரும் விவாதமொன்றை அங்கேயே நிகழ்த்திவிட்டு, வேண்டாம் என்று வந்துவிட்டேன். அதன்பின் ஏதோ ஒரு நாள் அந்தப் புத்தகம் கனவில் வந்தது என்று நினைக்கிறேன். வாழ்நாளில் இனி ஸ்பைரல் பைண்டிங் புத்தகம் படிக்கக்கூடாது என்றொரு முடிவை அன்று எடுத்து, குறைந்தது ஒரு மாதம் கடைபிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
ஒருமுறை கிரஹாம் கிரீனின் ஆறேழு கெட்டி அட்டைப் புத்தகங்களை (பாட்லி ஹெட்) மொத்தமாக வீட்டுக்குத் தூக்கமுடியாமல் தூக்கி வந்தேன். என்னென்ன தலைப்புகள் என்று நினைவில் வைத்திருந்து மறுநாள் சேகரிடம் சொன்னபோது, அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார். ‘கிரஹாம் கிரீன் என்றால் ‘The Quite American’. அதை விட்டுவிட்டு என்னென்னவோ வாங்கியிருக்கிறாயே!’
பிரிட்டிஷ் கவுன்சில் நூலக அரங்கில் பழுதடைந்த நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தங்கை ஆஸ்கர் வைல்ட் தொகுப்பொன்று வாங்கிக்கொண்டார். In Their Own Words : British Women Writers and India 1740-1857, ஜேன் மோரிஸின் Hong Kong, தீர்த்தங்கர் ராயின் The Economic History of India உள்ளிட்ட நூல்கள் வாங்கினேன். பயண நூல்களில் இன்றுவரை நான் திளைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணமான சேகரை நினைத்துக்கொண்டே அரங்கிலிருந்து வெளியில் வந்தேன். ஒரு நல்ல நூலை அதைப் பரிந்துரைத்தவரோடு சேர்த்தே நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம்.
கி. ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியை மிகச் சமீபத்தில்தான் படித்தேன் என்று சொல்வதற்குக் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. கி.ரா. தலைமைத் தொகுப்பாளராக இருந்து சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ நூலின் ஒரேயொரு அட்டைச் சிறிதளவு தளர்ந்திருக்கும் பிரதியை அவர்கள் ஒட்டி வைத்திருக்கும் குறைவான விலையைவிடவும் விலை குறைத்துக் கொடுத்தார்கள். ஒரே பிரதிதான் பாக்கி இருந்தது. அதைத் தூக்கி முதுகுப்பையில் போட்டுக்கொண்டபோது, கி.ராவைப் படிக்காத உலகின் கடைசி மனிதனின் பிரதி என்று அது சொல்வதுபோல் இருந்தது.
புதிய, பழைய ஆங்கில நூல்களை மலை, மலையாகக் குவித்து வைத்திருக்கும் (பெயரை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத) அரங்கங்கள் சிலவற்றுக்குச் சென்று வந்தேன். The Inner Life of Empires (ஒரு குடும்பத்தின் கதையாகத் தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரலாறாக வளரும் விருதுபெற்ற நூல்), Classics of Western Philosophy (Edited by Steven M. Cahn, ஆயிரம் பக்கங்களைக் கடந்த பெரிய தொகுப்பு), Modernity of Slavery (காலனிய காலத்து கேரளாவும் தலித் மக்களும்) உள்ளிட்ட புத்தகங்களைப் புதினா, கொத்துமல்லி போல் ‘மூன்றெடுத்தால் 200’, ‘நான்கெடுத்தால் 400’ என்று கூறு போட்டு வைத்திருந்தார்கள்.
நான் சமீபத்தில் கன்னிமாராவிலிருந்து எடுத்துப் படித்த Beyond the Englightenment (சில முக்கிய சமூகக் கோட்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நூல்), லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளின் வரலாற்றைக் கலையின் மூலம் விவரிக்கும் பெரிய, அழகிய படங்கள் கொண்ட ஒரு நூல் (Art and Revolution in Latin America 1910-1990, David Craven) இரண்டையும் இதே போன்ற வேறொரு அரங்கில் சேகரித்தேன்.
ஒவ்வொரு பிடிஎஃப் கோப்பும் ஓர் அச்சுப் புத்தகமாக மாறும் கனவைத் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அசோகர் நூலுக்காக வாசித்துக்கொண்டிருந்தபோது ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தின் தமிழாக்கத்தை இணையத்தில் தேடியெடுத்தேன். சில ஆங்கில, சமஸ்கிருதப் பதங்களைத் தமிழில் எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்று சரி பார்க்க விரும்பினேன். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அரங்கில் ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகண்ட சாஸ்திரி, வின்சென்ட் ஸ்மித், மார்டிமர் வீலர் என்று பலருடைய நூல்களை மலிவு விலையில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். தயாரிப்பும் நன்றாக இருக்கிறது. வரலாறு போக, வ.உ.சி., தொ.மு.சி. ரகுநாதன், திருக்குறள், கால்டுவெல் என்று புதிய பதிப்புகள் நிறைந்திருக்கின்றன.
ஒரு பார்வையில் சென்னை நகரம் நூலில் ‘மிக்க அன்புடன், அசோகமித்திரன். சென்னை, 27.05.2003’ என்று ஆசிரியர் கையெழுத்திட்டிருந்ததை வீட்டுக்கு வந்து பிரித்த பிறகே கவனித்தேன். எதிர்பாராத வியப்புகளைப் பழைய புத்தகங்கள் மட்டுமே ஏற்படுத்துகின்றன.
எப்போது வேண்டுமானாலும் எளிதில் வாங்கிவிடக்கூடிய புதிய நூல்களை நான் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் வாங்குவதில்லை. சுமை கூடிவிடும். தவிரவும், புதிய நூல்களை வேண்டியபொழுது வரவழைத்துக்கொள்வது சுலபமாகிவிட்டது.
ரா.அ. பத்மநாபன் தொகுத்த பாரதி புதையல் பெருந் திரட்டு நூலின் பழைய பிரதி வானதியில் கிடைத்தது. 45 ரூபாய் விலையுள்ள 584 பக்க நூலை ஐந்து ரூபாய் கழித்துக்கொண்டு ரசீது போடுகிறார்கள்.
இரு ஆண்டுகளாக உலகைக் நிலைகுலையச் செய்துவிட்ட கிருமி குறித்து நான் பார்த்தவரையில் எங்கும் எந்தப் பதிவும் இல்லை. உடல், உள்ளம் இரண்டையும் பாதித்த பெருந்தொற்றின் கதைகள் இன்னும் எழுதப்படவில்லையா? தனித்தலைப்பில் இல்லாவிட்டாலும் கவிதைத் தொகுப்புகளிலோ சிறுகதைத் தொகுப்புகளிலோ நிச்சயம் இந்தக் கொடுமையான காலகட்டத்தின் நிழல் படிந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலக்கியம் சமகாலத்து நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறதோ? இமையத்தின் செல்லாத பணம் போன்ற படைப்புகள் குறைவாகவே வெளிவருகின்றன.
பதிப்பகம் ஆரம்பிப்பது இப்போது சுலபமாகிவிட்டது. கைவிரல்கள் எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவது சாத்தியம் என்பதால் பலர் நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருப்பதைப் பார்க்கிறேன். அச்சில் இல்லாத பல நூல்களை இவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். பரிசல் ஓர் உதாரணம். சென்றமுறையைவிட மொழிபெயர்ப்பு நூல்கள் கணிசமாகப் பெருகியிருக்கின்றன. கவிதைத் தொகுப்புகளும். சுகுமாரன், ஸ்ரீவள்ளி, பெருந்தேவி, மனுஷ்ய புத்திரன், இசை, வெய்யில் என்று பலருடைய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. நாவல்களை இனிதான் பார்வையிடவேண்டும். இரு முறைதான் சென்றிருக்கிறேன். சில மணி நேரங்களுக்கு மேல் சுற்றிவரமுடியவில்லை.
சேகரை அதன்பின் சந்திக்கவேயில்லை. வருமான வரித்துறையில் பெரிய பொறுப்பொன்றை வகிக்கிறார் என்று பிற நண்பர்கள்மூலம் தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் நூலகம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மூலையில் எந்தப் புத்தகம் இருக்கும் என்பதுவரை கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகிவிட்ட பிறகு அந்நூலகம் சட்டென்று சிறுத்துப்போய்விட்டதுபோல் ஓர் உணர்வு. அதன்பின் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அதே வேளையில் தேவநேயப் பாவாணரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டுவிட்டேன். இரட்டைக் காப்பியங்கள் இல்லையென்றாகிவிட்ட பிறகு கன்னிமாராவே ஒரே புகலிடமாக மாறியது. இன்றுவரை நூலகம் என்றால் அது மட்டும்தான் எனக்கு.
ஆவடி காமராஜ் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் தலைமை ஆசிரியர் எட்வர்ட் செல்லதுறையின் அறைக்குள் நுழைந்து கன்னிமாரா நூலக விண்ணப்பத்தைத் தயக்கத்தோடு நீட்டினேன். என்னது என்று வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையோடு கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவர் அரிதாகவே புன்னகைக்கக்கூடியவர். நூலகத்தில் சிறிய நீல வண்ண அட்டையில் முத்தான கையெழுத்தில் என் பெயரும் உறுப்பினர் எண்ணும் எழுதிக்கொடுத்தார்கள். பரணில் எங்காவது போட்டு வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த காலத்திலிருந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இருந்த இடத்திலேயே புத்தகங்களை வரவழைத்துக்கொள்ள முடிகிறது என்பதால் முன்பு போல் நிறைய புத்தகங்களும்கூட இப்போதெல்லாம் இங்கிருந்து வாங்குவதில்லை. ஒரு நாள் விடாமல் சென்ற காலமெல்லாம் இருந்தது. இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று முறை சென்றாலே அதிகம். அப்போதும்கூடப் பெரும்பாலும் நண்பர்களைச் சந்திக்கவே செல்கிறேன். சில சமயம், அப்படியொரு காரணத்தை எனக்கே சொல்லிக்கொண்டும் சொல்கிறேன்.
கண்ணுக்குப் புலப்படாத மரபொன்றை என்னையுமறியாமல் பின்பற்றிக்கொண்டிருக்கிறேனா? ஒரு தொடர்ச்சி அறுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கவனத்தோடு ஒவ்வோராண்டும் வந்துகொண்டிருக்கிறேனா? இருக்கலாம். ஒருவேளை புத்தகங்களைக் குவித்து வைக்கும் இடமாக மட்டும் இருந்திருந்தால் எப்போதோ கண்காட்சி அலுத்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.
மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பின ருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 16ஆம் தேதி 800 அரங்குகளுடன் துவங்கியது. கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் பல்வேறு பதிப்புகளின் வெளியீட்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அரங்கம் (எப் – 14) அமைக்கப் பட்டுள்ளது.
இந்த அரங்கத்தை முதலமைச்சர் பார்வை யிட்ட முதலமைச்சர் ‘திசைதோறும் திராவிடம்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் புகழ்பெற்ற 6 இலக்கிய நூல்களையும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் கால்டுவெல் ஒப்பிலக்கணம் நூலையும் வெளியிட்டார்.
கி.ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல் கதைகள்’ நூலும், ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’, ‘திருக்குறள்’ உள்ளிட்ட 12 நூல்கள் புகழ்பெற்ற ஆங்கில பதிப்பகங்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களும் இங்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இந்த நூல்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அதேபோல், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அவரது நூல்கள் அனைத்தையும் அரசு வெளியிடும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதையொட்டி அவரது நினைவு நாளன்று 1,020 பக்கங்கள் கொண்ட ‘பன்னூல் திரட்டு’, 725 பக்கங்கள் கொண்ட ‘திருக்குறள் உரை’ ஆகிய 2 தொகுதி நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்த 1,745 பக்கங்கள் கொண்ட இரண்டு நூல்களும் மிகவும் குறைந்த விலையில் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 3 திட்டங்களில் ஒன்றான முத்தமிழ் அறிஞர் மொழி பெயர்ப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய நூல்கள் மொழியாக்கம் செய்து வெளியிடப் பட உள்ளன.
அதன் ஒருபகுதியாக, திராவிட கருத்தியல் உருவாவதற்கு முக்கிய காரணமான, திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய குடும்ப மொழி இலக்கியங்கங் களை ஒப்பிட்டு ‘திராவிட அல்லது தென் இந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியத்தால் மொழி யாக்கம் செய்யப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 1500 பக்கங்கள் கொண்ட அந்த நூல் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நூலில் அவர் திராவிடம் ஆரிய குடும்பத்தை சேர்ந்தது இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. பாடநூல் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி, தமிழ் வரலாறு, இந்திய வரலாறு உள்ளிட்ட 874 தலைப்புகளில் அரிய நூல்களை 32 பாட பிரிவுகளில் வெளியிட்டுள்ள.
இந்த நூல்கள் யுபிஎஸ்சி தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு பயனளிப்பவையாக ஆகும். இந்த அரிய நூல்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு 635 நூல்கள் மிகவும் குறைந்த விலையில் பாடநூல் கழக அரங்கில் கிடைக்கின்றன.
அதேபோல் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் 23 நூல்கள் மறு பதிப்பு செய்யப்பட்டு புகழ்பெற்ற பேராசிரியர்களின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் ஜி.எஸ்.அனந்த நாராயணன் எழுதிய கலைச்சொற்கள் உளவியல், தமிழ்ச் சுருக்கெழுத்து புவியியல், கலைச்சொற்கள் – பொறியியல் தொழில்நுட்ப வியல், கலைச்சொற்கள் – புள்ளி இயல் போன்ற அகராதி நூல்களும், அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியி யல், சமூகவியல், தத்துவம், நிலவியல், மனையியல், வகை நுண்கணிதம், உலக வரலாறு மற்றும் தமிழ்நாட்டு வரலாறு, வேதியியல், வேளாண்மை, இலக்கியம், உயிரியல், பொது விலங்கியல், மருத்துவம், வணிகவி யல், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறு, பன்னாட்டு பொருளாதாரம், உடலியங்கியல், உயர்கல்வி நுழைவுத்தேர்வு வினாக்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், கீழடி குறித்த நூல்களும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்கள் ஒருசேர இந்த அரங்கில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களை www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் rare book என்ற உட்தலைப்பின் வழி நுழைந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா – இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் சாதனைகள் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆவது அமுதப் பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மிகச்சிறப்பான ஒரு அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கு தயாராகி வருகிறோம். பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. சர். சி. வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாளில் சிறப்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அறிவியல் மகத்தானது என்ற கருத்தாக்கத்தின் கீழ் அறிவியல் தகவல் தொடர்பு பரப்புரை மற்றும் விரிவாக்கம் என்ற அடிப்படையில் இந்த திருவிழாவை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் விதத்தில் கண்காட்சிகள் நடத்தப்படும். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 25 ஆண்டுகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும். நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், புதுமைகள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.
அறிவியல் இலக்கியம் சார்ந்த நிகழ்வுக்கும், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் மற்றும் உள்ளூர் அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஒரு வார கால நிகழ்வு என்பது இந்தியாவில் உள்ள 75 இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாடங்கள் ஒரு வாரம் மட்டுமல்லாது தொடர்ந்தும் நடைபெறும்.
அறிவியல் தொழில்நுட்பத்தை இந்திய மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டில் அறிவியல் பலகை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அறிவியல் பரப்புரைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
இந்திய மொழிகளில் பரவலான பிரிச்சாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். 75 என்ற இந்த முக்கியமான ஆண்டை நினைவு கூறும் விதத்தில் 75 இடங்கள், 75 அறிவியல் திரைப்படங்கள், 75 போஸ்டர்கள், 75 புத்தகங்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடைபெற உள்ளன
தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிகளை, தமிழக அரசின், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு,பல்வேறு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அறிவியல் பலகை அமைப்பும் இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றி வருகிறது.
தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி,மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில்
இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
இது குறித்த மேலும் தகவல்களை https://vigyanpujyate.in/ என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்த வேறு எதேனும் தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் தொடர்புகொள்ளவும் திரு. பா.ஸ்ரீகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர், அறிவியல் பலகை.(9677297733).
1 | Aadhi Pathippagam | ஆதி பதிப்பகம் | 344 |
---|---|---|---|
2 | Aazhi Publishers | ஆழி பதிப்பகம் | 433 |
3 | Adaiyalam | அடையாளம் | 244-245 |
4 | Agaram Foundation | அகரம் பவுண்டேஷன் | 146 |
5 | Agasthiar Publications | அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ் | 445 |
6 | Ahmadiyya Muslim Mission | அகமதியா முஸ்லிம் மெஷின் | 05F |
7 | Ainthinai Pathippagam | ஐந்தினை பதிப்பகம் | 86-87 |
8 | Akani Veliyeedu | அகநி வெளியீடு | 310-311 |
9 | Akash Books | ஆகாஷ் புக்ஸ் | 417-418 |
10 | Alaigal Veliyeetagam | அலைகள் வெளியீடு | 510-511 |
11 | Alpha Land Books P Ltd | ஆல்பா லேண்டு புக்ஸ் | 133-134 |
12 | AM Book House | ஏ எம் புக் ஹவுஸ் | 292-293 |
13 | Amaravathi | அமராவதி | 460-461 |
14 | Amrudha Pathippagam | அம்ருதா பதிப்பகம் | 164 |
15 | Amudha Nilayam | அமுத நிலையம் | 97 |
16 | Ana Books | அனா புக்ஸ் | 17F |
17 | Ananda Vikatan Digital Pvt Ltd | ஆனந்த விகடன் டிஜிடல் | 430-431 |
18 | Anandha Nilayam | ஆனந்த நிலையம் | 379-380 |
19 | Anbu Palam | அன்பு பாலம் | 351 |
20 | Andal Thrishakthi Booksellers & Publishers | ஆண்டாள் திரிசக்தி புக்செல்லர் | 286-287 |
21 | Annai Rajeswari Pathippagam | அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் | 553 |
22 | Annam | அன்னம் | 447-448 |
23 | ANTHI MAZHAI | அந்தி மழை | 563-564 |
24 | Anuradha Publications | அனுராதா யபப்ளிகேஷன் | 07F |
25 | Anuragam | அனுராகம் | 2 |
26 | Apple Publishing International (P) Ltd | ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர் நேஷனல் | 397-398 |
27 | Aravannan Tamilkottam | அரவண்ணன் தமிழ் கூட்டம் | 312 |
28 | Aries Books International | ஏரியஸ் புக் இண்டர்நேஷனல் | 319-320 |
29 | Arivu Nattrangal | அறிவு நாற்றங்கள் | 231 |
30 | Arivu Pathippagam | அறிவு பதிப்பகம் | 37F |
31 | Arockiyaa Books | ஆரோக்கியா புக்ஸ் | 305-306 |
32 | Arulmigu Amman Pathippagam | அருள்மிகு அம்மன் பதிப்பகம் | 203-204 |
33 | Arumbu Publications | அரும்பு பப்ளிகேஷன் | 395-396 |
34 | Arun Nilayam | அருண் நிலையம் | 194 |
35 | Arun Pathippagam | அருண் பதிப்பகம் | 515 |
36 | Aruna Publications | அருணா பப்ளிகேஷன் | 120-121 |
37 | Arunai Book Centre | அருணை புக் சென்டர் | 163 |
38 | Arunothayam | அருணோதயம் | 259-260 |
39 | Aruvi Puthaga Ulagam | அருவி புத்தக உலகம் | 43 |
40 | Aruvi Veliyeedu | அருவி வெளியீடு | 15F |
41 | Asian Book Centre | ஏஷியன் புக் | 08F |
42 | Ayyanar Book Centre | அய்யணார் புக் சென்டர் | 279-280 |
43 | Azvargal Aaivu Maiyam | ஆழ்வார்கள் ஆய்வு மையம் | 284-285 |
44 | B.Rathna nayakar&sons | பி. ரத்னா நாயக்கர் & சன்ஸ் | 238 |
45 | Baba Publications | பாபா பப்ளிகேஷன் | 84-85 |
46 | Balaji Pathippagam | பாலாஜி பதிப்பகம் | 366 |
47 | Balaji Publication | பாலாஜி பப்ளிகேஷன் | 483 |
48 | Basharath Publishers | பஷரத் பப்ளிஷர்ஸ் | 446 |
49 | Baskar Book House | பாஸ்கர் புக் ஹவுஸ் | 135-136 |
50 | Bell Book House | பெல் கோ ஹவுஸ் | 500-501 |
51 | Bellco | பெல்கோ | 358-359 |
52 | Bharathe Nilayam | பாரதி நிலையம் | 168 |
53 | Bharathi Pathippagam-6-7 | பாரதி பதிப்பகம் | 006-007 |
54 | Bharathi Puthakalayam | பாரதி புத்தகாலயம் | 04F |
55 | Bhodhivanam | பொதிவனம் | 124 |
56 | Blooms Academy | ப்ளூம்ஸ் அகாடமி | 167 |
57 | Book Affair | புக் அபைர் | 537-538 |
58 | Book corner | புக் கார்னர் | 557 |
59 | Book World | புக் வோல்டு | 409-410 |
60 | Book World Library | புக் வோல்டு லைப்ரரி | 498-499 |
61 | Books For Children | புக் ஃபார் சில்ரன் | 18F |
62 | Bookworms' Library | புக்வாம் லைப்ரரி | 421-422 |
63 | British Council Division | பிரிடிஷ் கவுண்சில் | 32F |
64 | Children's World | சில்ரன்ஸ் வேர்ல்ட் | 226 |
65 | Chinmaya Mission | சின்மயா மெஷின் | F9 |
66 | Chinthan Books | சிந்தன் புக்ஸ் | 156-157 |
67 | Coral Publishers And Distributors | கோரல் பப்ளிஷர் | 265-266 |
68 | Cre -A Publishers | க்ரியா பப்ளிஷர் | 232-233 |
69 | Crownest | காக்கைகூடு | 561-562 |
70 | D K Publishers | டி கே. பப்ளிஷர் | 458-459 |
71 | Desanthiri Pathippagam | தேசாந்திரி | 317-318 |
72 | Dhanalakshmi Pathippagam | தனலட்சுமி பதிப்பகம் | 169 |
73 | Discovery Book Palace | டிஸ்கவரி புக் பேலஸ் | 44F |
74 | Discovery Publications | டிஸ்கவரி பப்ளிகேஷன் | 267-268 |
75 | Divine Poet Tamil Philosophical Research Centre | 214 | |
76 | Dove Multi Media | டவ் மல்டி மீடியா | 399-400 |
77 | Dr.Ambedkar Foundation | டாக்டர். அம்பேத்கர் அறக்கட்டளை | 258 |
78 | Dr.U.V.Saminatha Iyer | டாக்டர். யு.வி. சுவாமிநாத ஐயர் | 283 |
79 | Dravida Thamizhar Arakkattalai (Karunchattai Pathippagam) | கருஞ்சட்டை பதிப்பகம் | 41-42 |
80 | Dream ways | டீரீம் வேய்ஸ் | 466-467 |
81 | Emerald Publishers | எமரால்டு பப்ளிஷர் | 06F |
82 | Eswar Book Centre | ஈஸ்வர் புக் சென்டர் | 12F |
83 | Ethir Veliyedu Publishers & Booksellers | எதிர் வெளியீடு | 29F |
84 | Eureka Books | யுரேகா புக்ஸ் | 352-353 |
85 | Forward Marketing Agency | பார்வட் மார்கெட்டிங் | 236-237 |
86 | Gangaaraani Pathippagam | கங்காராணி பதிப்பகம் | 100-101 |
87 | Geetham Publications | கீதம் பப்ளிகேஷன் | 491-492 |
88 | Giri Trading Agency | கிரி டிரேடிங் | 33F |
89 | Giri Trading Agency Digital Media | கிரி டிரேடிங் ஏஜென்ஸி டிஜிட்டல் மீடியா | 375 |
90 | Gnanabanu Pathippagam | ஞானபானு பதிப்பகம் | 338 |
91 | Goodword Books | குட் வேட் புக்ஸ் | 217-218 |
92 | Gowtham Pathippgam | கௌதம் பதிப்பகம் | 13-14 |
93 | Grahish Book World | கிரகிஷ் புக் வேல்டு | 438-439 |
94 | Guhashri Vaariyaar Pathippagam | குஹஸ்ரீ வாரியார் பதிப்பகம் | 170-171 |
95 | HARPERCOLLINS | ஹர்ப்பர் காலின்ஸ் | 42F |
96 | Hayagreeva Publications | ஹய்கிரிவர் பப்ளிகேஷன் | 291 |
97 | Higginbothams p ltd | ஹக்கிம் | 48F |
98 | IBH Books & Magazines Distributors Pvt Ltd | ஐ பி எச் | 46F |
99 | Ilakkiya Cholai. | இலக்கிய சோலை | 456-457 |
100 | Indian University Press | இயல் | 152 |
101 | Infini Thoughts | இன்ஃபினி தாட்ஸ் | 46 |
102 | Info Maps | இன்போ மேப்ஸ் | 30F |
103 | International Book Agencies | இண்டர்நேஷனல் புக் ஏஜென்சிஸ் | 137 |
104 | International Institute of Tamil Studies | உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் | 227-228 |
105 | Iraiyagam | இறையகம் | 147 |
106 | Isha Foundation | ஈஷா பவுண்டேசன் | 56F |
107 | ISKCON | இஸ்கான் | F51 |
108 | Islamic Foundation Trust | இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் | 47F |
109 | Iyalvagai Publication | இயல்வாகை | 468 |
110 | Jaico Book Agency & Publishing House | ஜெய்கோ புக் | 364-365 |
111 | Jayam Book Centre | ஜெயம் புக் சென்டர் | 274-275 |
112 | Jayam Publication | ஜெயம் பப்ளிகேஷன் | 425 |
113 | Kaanthalakam | காந்தாளகம் | 181 |
114 | Kaavya | காவ்யா | 376-377 |
115 | Kalachuvadu Pathippagam | காலச்சுவடு பதிப்பகம் | 16F |
116 | Kalaignaan Pathippagam | கலைஞன் பதிப்பகம் | 369-370 |
117 | Kalaignar Karuvoolam | கலைஞர் கருவூலம் | 316 |
118 | Kalaimagal Stores | கலைமகள் ஸ்டோர் | 24-25 |
119 | Kalaimagal Traders | கலைமகள் பதிப்பகம் | 329-330 |
120 | Kalakkal dreams | கலக்கல் ட்ரீம்ஸ் | 37 |
121 | Kalam Veliyeedu | களம் வெளியீடு | 269 |
122 | Kaniyan Pathippagam | கனியன் பதிப்பகம் | 339-340 |
123 | Kanmani Creative Waves | கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ் | 116 |
124 | Kannadhasan Pathippagam | கண்ணதாசன் பதிப்பகம் | 22F |
125 | Kannappan Pathippagam | கண்ணப்பன் பதிப்பகம் | 299-300 |
126 | Karisal Media | கரிசல் மீடியா | 201-202 |
127 | Karpagam Puthagalayam | கற்பகம் பதிப்பகம் | 314-315 |
128 | Karthick Pathippagam | கார்த்திக் பதிப்பகம் | 105-106 |
129 | Karuppuprathigal | கருப்புப் பிரதிகள் | 28-29 |
130 | Kavitha Publications | கவிதா பதிப்பகம் | 25F |
131 | Kaviyarasan Pathippagam | கவியரசன் பதிப்பகம் | 378 |
132 | Keelaikkatru Veliyeettagam | கீழைக்காற்று வெளியீட்டகம் | 109-110 |
133 | Kizhakku Pathippagam | கிழக்கு பதிப்பகம் | 55F |
134 | Kothai | கோதை | 471 |
135 | Krishnamacharya Yoga Mandiram | கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம் | 322 |
136 | Krishnamurthi Foundation India | கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் | 477-478 |
137 | Kumaran Book House | குமரன் புக் ஹவுஸ் | 80 |
138 | Kumaran Pathippagam, | குமரன் பதிப்பகம் | 240-241 |
139 | Kumudham Publications | குமுதம் பப்ளிகேஷன் | 02F |
140 | L K M Publications | எல்கேஎம் பப்ளிகேஷன் | 249-250 |
141 | Left Word | லெப்ட் வேட் | 347-348 |
142 | Leo Book Distributors | லியோ புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் | 256-257 |
143 | Leo Book Publishers | லியோ புக் பப்ளிஷர் | 251-252 |
144 | Lifco Publishers pvt.ltd | லிஃப்கோ பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட் | 142 |
145 | lore books (hindutamil) | லோர் புக்ஸ் (ஹிந்து தமிழ்) | 487 |
146 | LORE BOOKS(Hindu tamil) | இந்து தமிழ் | 125-126 |
147 | Lotus Multi Media | லோட்டஸ் மல்டி மீடியா | 102-103 |
148 | M B Publishers | எம். பி. பப்ளிஷர்ஸ் | 141 |
149 | Madras Book House | மெட்ராஸ் புக் ஹவுஸ் | 1 |
150 | Mageswari Puthaga Nilayam | மகேஷ்வரி புத்தக நிலையம் | 354-355 |
151 | Magicbox Publication | மேஜிக் பாக்ஸ் | 390-391 |
152 | Malayala Manorama | மலையாள மனோரமா | 114-115 |
153 | Mananalam Padaippugal | மனநலம் படைப்புகள் | 223 |
154 | Manimekalai Prasuram | மணிமேகலை பிரசுரம் | 43F |
155 | Manivasagar Pathippagam | மணிவாசகர் பதிப்பகம் | 454-455 |
156 | Margham Publication | மார்கம் பப்ளிகேஷன் | 536 |
157 | Marina Enterprises | மெரினா எண்டர்பிரைசஸ் | 261-262 |
158 | Mathi Nilayam | மதி நிலையம் | 518-519 |
159 | Mathumitha Books | மதுமிதா புக்ஸ் | 179-180 |
160 | Max Academy for Excellence | மேக்ஸ் அகாடமி ஃபார் எக்ஸலென்ஸ் | 440 |
161 | Mayilavan Pathippagam | மயிலவன் பதிப்பகம் | 122-123 |
162 | Mayura Books | மயூரா புக்ஸ் | 547-548 |
163 | Meenaal Publishing House | மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் | 325-326 |
164 | Meenakshi Book Shop | மீனாட்சி புக்க்ஷாப் | 367-368 |
165 | Meenakshi Puthaka Nilayam | மீனாட்சி புத்தக நிலையம் | 185-186 |
166 | Mercury Sun Publications | மெர்குரி சன் பப்ளிகேஷன்ஸ் | 525 |
167 | MERVIN EDUCATIONAL SERVICES | மெர்வின் எஜிகேஷனல் சர்வீஸ் | 534-535 |
168 | Meyyappan Pathippagam | மெய்யப்பன் பதிப்பகம் | 513-514 |
169 | Minerva Publications | மினர்வா பப்ளிகேஷன் | 263-264 |
170 | MINNANGADI | மின்னங்கடி | 560 |
171 | Mooligai Mani | மூலிகை மணி | 129 |
172 | Motilal Banarsidass | மோதிலால் பனார்சிதாஸ் | 434 |
173 | Mullai Pathippagam | முல்லை பதிப்பகம் | 197-198 |
174 | Munnetra Pathippagam | முன்னேற்ற பதிப்பகம் | 407-408 |
175 | Muntil | மண்டில் | 8 |
176 | Muran Publication | முரண் பப்ளிகேஷன் | 321 |
177 | Muthunadu Publications | முத்துநாகு பப்ளிகேஷன் | 415-416 |
178 | N. Hansraj & Sons | என். ஹான்ஸ்ராஜ் & சன்ஸ் | 01F |
179 | Nakkeeran Pathippagam | நக்கீரன் பதிப்பகம் | 54F |
180 | Nalli Brain Bank | நல்லி பிரெய்ன் பேங்க் | 296 |
181 | Nanmozhi Pathippagam | நன்மொழி பதிப்பகம் | 341-342 |
182 | Narayani Pathippagam | நாராயணி பதிப்பகம் | 36F |
183 | Narmadha Pathippagam | நர்மதா பதிப்பகம் | 31F |
184 | Natham Geetham Booksellers | நாதம் கீதம் புக் செல்லர்ஸ் | 03F |
185 | Nathan Pathippagam | நாதன் பதிப்பகம் | 117 |
186 | National Book Trust | நேஷனல் புக் ட்ரஸ்ட் | 174-175 |
187 | National Publishers | நேஷனல் பப்ளிஷர் | 382-383 |
188 | Natraj Publications | நட்ராஜ் பப்ளிகேஷன் | 504-505 |
189 | Natrinai Pathippagam | நற்றினை பதிப்பகம் | 150-151 |
190 | Naveena Velaanmai | நவீனா வேளாண்மை | 40 |
191 | Neelam Pathippagm | நீலம் பதிப்பகம் | 18-19 |
192 | Nestling books publishing and Dist | நெஸ்லிங் புக்ஸ் | 473-474 |
193 | New Book Lands | நியூபுக்லேண்ட் | 277-278 |
194 | New Century Book House | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | 52F |
195 | New Generation Media corporation P Ltd | நியூ ஜெனரேஷன் மீடியா கார்பரேஷன் | 551-552 |
196 | New Student's Book Agency | நியூ ஸ்டுடண்ட் புக் ஏஜென்ஸி | 520-521 |
197 | New Student's Book House | நியூ ஸ்டுடண்ட் புக் ஹவுஸ் | 82-83 |
198 | Nimir Publications | நிமிர் பதிப்பகம் | 51-52 |
199 | Nivethitha Pathippagam | நிவேதிதா பதிப்பகம் | 95-96 |
200 | Nivethitha Puthaga Poonaga | நிவேதிதா புத்தக பூங்கா | 210-211 |
201 | Noble Publications | நோபிள் பப்ளிகேஷன் | 215-216 |
202 | Noolvanam | நூல்வனம் | 176 |
203 | Oasis Books | ஒயாசிஸ் புக்ஸ் | 145 |
204 | Om Logaheswari Book House | ஓம் லோகேஷ்வரி புக் ஹவுஸ் | 502-503 |
205 | Om Sakthi Book House | ஓம் சக்தி புக் ஹவுஸ் | 40F |
206 | Om Sakthi Books International | ஓம் சக்தி புக்ஸ் இண்டர்நேஷனல் | 15-16 |
207 | Omni Books | ஓம்னி புக்ஸ் | 362-363 |
208 | Ongaram Publications | ஓங்காரம் பப்ளிகேஷன் | 507-508 |
209 | Osho Aekam Foundation | ஓஷா ஏகம் பவுண்டேஷன் | 419-420 |
210 | Paari Nilayam | பாரி நிலையம் | 549-550 |
211 | Padma Pathippagam | பத்மா பதிப்பகம் | 539-540 |
212 | Palaniappa Brothers | பழனியப்பா பிரதர்ஸ் | 528-529 |
213 | Pallavi Pathippagam | பல்லவி பதிப்பகம் | 22-23 |
214 | Panmaiveli | பன்மைவெளி | 452-453 |
215 | Panuval | பனுவல் | 332-333 |
216 | Parisal Puthaga Nilayam | பரிசல் புத்தக நிலையம் | 496-497 |
217 | Parithi Pathippagam | பரிதி பதிப்பகம் | 47-48 |
218 | Park Book House | பார்க் புக் ஹவுஸ் | 111-112 |
219 | Pavai Publications | பாவை பப்ளிகேஷன் | 323-324 |
220 | Perikam | பெரிகம் | 288 |
221 | Periyar Self Respect Propaganda Institution | பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | 38F |
222 | Pessaamoli Publications | பேசாமொழி பப்ளிகேஷன் | 541-542 |
223 | Poompuhar Pathippagam | பூம்புகார் பதிப்பகம் | 153-154 |
224 | Poongodi Pathippagam | பூங்கொடி பதிப்பகம் | 30-31 |
225 | Poovulagin Nanbargal | பூவுலகின் நண்பர்கள் | 289-290 |
226 | POTHUMAI PATHIPPAGAM | பொதுமை பதிப்பகம் | 506 |
227 | Prakash Books India Pvt Ltd | பிரகாஷ் புக் இந்தியா பி.லிட் | 107-108 |
228 | Prema Pirasuram | பிரேமா பிரசுரம் | 88-89 |
229 | Prism Books Pvt Ltd | பிரிசம் புக்ஸ் | 23F |
230 | Prism Corporation P Ltd | ப்ரிசம் கார்பரேஷன் பி லிட் | 411-412 |
231 | Priya Nilayam | ப்ரியா நிலையம் | 558-559 |
232 | Prompt Publication | ப்ராம்ட் பப்ளிகேஷன் | 55-56 |
233 | Pudhu Punal | புதுபுணல் | 49-50 |
234 | Pudhu Ulagam | புது உலகம் | 32 |
235 | Pulam | புலம் | 479-480 |
236 | Punnagai | புன்னகை | 565 |
237 | Quality Book Shop | குவாலிட்டி புக் ஷாப் | 406 |
238 | Raaja Kumaari Publications | ராஜகுமாரி பப்ளிகேஷன் | 148-149 |
239 | Rain Tree Publishing P Ltd | ரெயின் ட்ரீ பப்ளிஷிங் பி லிட் | 53-54 |
240 | Rajalakshimi Publications | ராஜலட்சுமி பப்ளிகேஷன் | 234-235 |
241 | Rajmohan Pathippagam | ராஜ்மோகன் பதிப்பகம் | 509 |
242 | Ramka Books | ராம்கா புக்ஸ் | 219-220 |
243 | Ramprasanth Publications | ராம்பிரசாந்த் பப்ளிகேஷன் | 212-213 |
244 | Rani Book Sellers | ராணி புக் செல்லர்ஸ் | 331 |
245 | Rhytham Book Distributors | ரிதம் புக்ஸ் | 13F |
246 | Saaruprabha Publishers | சாருபிரபா பப்ளிஷர் | 450-451 |
247 | Sahitya Akademi | சாகித்ய அகாதமி | 426-427 |
248 | Sajitha Book Centre | சாஜிதா புக் சென்டர் | 526-527 |
249 | Sakthi Publishing House | சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் | 28F |
250 | Sakunthalai Nilaiyam, | சகுந்தலை நிலையம் | 462-463 |
251 | Salivaganan Pathippagam | சாலிவாகனன் பதிப்பகம் | 484 |
252 | Samooga Neethi Arakattalai | சமூகநீதி அறக்கட்டளை | 554 |
253 | Sams Publishers | சாம்ஸ் பப்ளிஷர் | 208-209 |
254 | Sandhya Publications | சந்தியா பதிப்பகம் | 009-010 |
255 | Sanjeeviyar Pathippagam | சஞ்ஜீவியார் பதிப்பகம் | 481-482 |
256 | Sapna Book House P Ltd | சப்னா புக் ஹவுஸ் பி லிட் | 20-21 |
257 | Saran Books | சரண் புக்ஸ் | 35-36 |
258 | Sarvodaya Ilakkiya Pannai | சர்வோதயா இலக்கிய பண்ணை | 423-424 |
259 | SATHYAA ENTERPRISES | சத்யா எண்டர்பிரைசஸ் | 385-386 |
260 | Satvat Infosol | சத்வத் இன்போஷல் | 24F |
261 | Scholastic India P Ltd | ஸ்காலாஸ்டிக் இண்டியா | 21F |
262 | School Rom Multimedia | ஸ்கூல்ரோம் மல்டிமீடியா | 532-533 |
263 | Seasons Publishing | சீசன் பப்ளிஷிங் | 401-402 |
264 | Seethai Pathippagam | சீதை பதிப்பகம் | 27F |
265 | Sekar Pathippagam | சேகர் பதிப்பகம் | 443-444 |
266 | Semmozhi Tamil Aaivu | செம்மொழி தமிழாய்வு நிறுவனம் | 172-173 |
267 | Senthil Pathippagam | செந்தில் பதிப்பகம் | 242-243 |
268 | Shakespeare Publication | ஷேக்ஸ்பியர் பப்ளிகேஷன் | 94 |
269 | Shankar Pathippagam | சங்கர் பதிப்பகம் | 33-34 |
270 | Shantha Publishers | சாந்தா பப்ளிஷர்ஸ் | 138 |
271 | Shanti Books | சாந்தி புக்ஸ் | 294-295 |
272 | Shree Harini Pathippagam | ஸ்ரீ ஹரிணி பதிப்பகம் | 44-45 |
273 | Shree Balaji Booksellers & Distributors | ஸ்ரீபாலாஜி புக் செல்லர் | 516-517 |
274 | Shree Krishna Publcations | ஸ்ரீ கிருஷ்ணா ப.ப்ளிகேஷன் | 403-404 |
275 | Siddharkalai Pathippagam | சித்தர் கலை பதிப்பகம் | 253-254 |
276 | Simon & Schuster | சைன் | 413-414 |
277 | Siva Guru Pathippagam | சிவகுரு பதிப்பகம் | 161-162 |
278 | Sivagami Puthaga Nilayam & Zhagaram Veliyeedu | சிவகாமி புத்தக நிலையம் & ழகரம் வெளியீடு | 432 |
279 | Sivalayam | சிவாலயம் | 189 |
280 | Sixth Sense Publications | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் | 50F |
281 | Sooriyan Pathippagam | சூரியன் பதிப்பகம் | 53F |
282 | Sooryaa Toys | சூர்யா டாய்ஸ் | 182-183 |
283 | South India Publications | சௌத் இந்தியா பப்ளிகேஷன்ஸ் | 104 |
284 | Spider Books | ஸ்பைடர் புக்ஸ் | 34F |
285 | Sri Aishwarya Publications | ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன் | 530-531 |
286 | Sri Alamu Puthaga Nilayam | ஸ்ரீ அவமு புத்தக நிலையம் | 187-188 |
287 | Sri Balagangai Publications | ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ் | 270 |
288 | Sri Eswar Enterprises, | ஸ்ரீ ஈஸ்வர் எண்டர்பிரைசஸ் | 224-225 |
289 | Sri Kamalam Pathippagam | ஸ்ரீ கமலம் பதிப்பகம் | 273 |
290 | Sri Mariyamman Stores | ஸ்ரீ மாரியம்மன் ஸ்டோர் | 327-328 |
291 | Sri Maruthi Pathippagam | ஸ்ரீ மாருதி பதிப்பகம் | 193 |
292 | Sri Ramakrishna Math | ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் | 543-544 |
293 | Sri Sangeetha Vani | ஸ்ரீ சங்கீதவாணி | 339-340 |
294 | Sri Shenbhaga Pathippagam, | ஸ்ரீ செண்பகா பதிப்பகம் | 177-178 |
295 | Sri Shiv Enterprises | ஸ்ரீ சிவா எண்டர்பிரைசஸ் | 271-272 |
296 | Sri Siva Books | ஸ்ரீ சிவா புக்ஸ் | 360-361 |
297 | Sri Universal Book House | ஸ்ரீ யூனிவர்கல் புக் ஹவுஸ் | 349-350 |
298 | Sri Vidhya Book Centre | ஸ்ரீ வித்யா புக் சென்டர் | 195-196 |
299 | Suki Books | சுகி புக்ஸ் | 381 |
300 | Super Books | சூப்பர் புக்ஸ் | 98-99 |
301 | Sura College of Compettion | சுரா காலேஜ் ஆப் காம்படிஷன் | 49F |
302 | SWASAM BOOK ART | ஸ்வாசம் புக்ஸ் | 26F |
303 | Tamarai Noolagam | தாமரை நூலகம் | 495 |
304 | Tamil Book Man | தமிழ் புக் மேன் | 276 |
305 | Tamilmann Pathippagam | தமிழ்மண் பதிப்பகம் | 475-476 |
306 | Tamizh Maruthuva Kazhagam | தமிழ் மருத்துவ கழகம் | 472 |
307 | Tamizhveli | தமிழ்வெளி | 160 |
308 | Tazhal Trust | தழல் டிரஸ்ட் | 343 |
309 | Techno Book House | டெக்னோ புக் ஹவுஸ் | 485-486 |
310 | Thaiyal Publications | தயாள் பப்ளிகேஷன் | 523-524 |
311 | Thamarai Publications P Ltd | தாமரை பப்ளிகேஷன் | 229-230 |
312 | Thamizh Cholai Pathippagam | தமிழ்ச் சோலை பதிப்பகம் | 221-222 |
313 | Thamizhannai Pathippagam | தமிழன்னை பதிப்பகம் | 143-144 |
314 | Thamizhini | தமிழினி | 401-402 |
315 | Thanga Meen pathippagam | தங்க மீன் பதிப்பகம் | 130 |
316 | Thanga Thamarai Pathippagam | தங்க தாமரை பதிப்பகம் | 81 |
317 | Thanjai Tamil university | தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் | 373-374 |
318 | Thanu Foundation | தாணு பவுண்டேசன் | 3 |
319 | Thazhaiyan Pathippagam | தாழையான் பதிப்பகம் | 441-442 |
320 | The Alliance Company | அலயன்ஸ் கம்பெனி | F41 |
321 | The Asian Publications | தி ஏசியன் பப்ளிகேஷன்ஸ் | 313 |
322 | The Christian Literature Society | தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி | 405 |
323 | The Diet Food Publications | தி டயட் புட் பப்ளிகேஷன் | 303-304 |
324 | The Ocean | ஓஷான் | 39F |
325 | The Raman Books | தி ராமன் புக்ஸ் | 387-388 |
326 | The South India Saiva Sidhantha Works | தி சௌத் இந்திய சைவ சித்தாந்த வர்க்ஸ் | 389 |
327 | The World Community Service | தி வேர்ல்ட் கம்யூனிட்டி சர்வீஸ் | 155 |
328 | Theeran Publishing House | தீரண் பப்ளிஷிங் ஹவுஸ் | 239 |
329 | Thirumagal Nilayam | திருமகள் நிலையம் | 356-357 |
330 | Thumbi | தும்பி | 392 |
331 | Tick Soft | டிக் சாஃவ்ட் | 384 |
332 | Tiger Books P Ltd, | டைகர் புக்ஸ் பி லிட் | 92-93 |
333 | Trichy Book House | திருச்சி புக் ஹவுஸ் | 246 |
334 | Udayas | உதயாஸ் | 522 |
335 | Uma Pathippagam | உமா பதிப்பகம் | 428-429 |
336 | Unavu Ulagam Publications | உணவு உலகம் | 191-192 |
337 | United Writers | யுனைடட் ரைட்டர்ஸ் | 165-166 |
338 | Universal Publishers | யூனிவர்சல் பப்ளிஷர் | 205-206 |
339 | Upkar Prakashan, | ஹப்கார் பிரகாஷன் | 545-546 |
340 | Uyir Ezhuthu Pathippagam | உயிர் எழுத்து பதிப்பகம் | 255 |
341 | Uyir Pathippagam | உயிர் பதிப்பகம் | 449 |
342 | Uyirmmai Pathipagam, | உயிர்மை பதிப்பகம் | 19F |
343 | V.O.C Noolagam, | வஉசி நூலகம் | 35F |
344 | Vaali Pathippagam | வாலி பதிப்பகம் | 307 |
345 | Vaasaga Salai | வாசக சாலை | 512 |
346 | Vadhini | வாதினி | 435 |
347 | Vaigarai Pathippagam | வைகறை பதிப்பகம் | 38-39 |
348 | Vaithikarai Sri | வைதீக ஸ்ரீ | 199-200 |
349 | Vallalar Book Shop | வள்ளலார் புக் ஷாப் | 131-132 |
350 | Valli Pathippagam | வள்ளி பதிப்பகம் | 308-309 |
351 | Valli Puthaga Ulagam | வள்ளி புத்தக உலகம் | 247-248 |
352 | Vamsi Books | வம்சி புக்ஸ் | 488-489 |
353 | Vanathi Pathippagam | வானதி பதிப்பகம் | 281-282 |
354 | Vanavil Puathakalayam | வானவில் புத்தகாலயம் | 26-27 |
355 | Vanitha Pathippagam | வனிதா பதிப்பகம் | 555-556 |
356 | Vasantha Pathippagam, | வசந்தா பதிப்பகம் | 184 |
357 | Vasantha Prasuram | வசந்தா பிரசுரம் | 301-302 |
358 | Vetrimozhi Veliyeetagam | வெற்றிமொழி வெளியீட்டகம் | 207 |
359 | VGP Ulaga Tamil Sangam | விஜிபி உலக தமிழ் சங்கம் | 470 |
360 | Vidhai Art Space ( Silai) | விதை ஆர்ட் ஸ்பேஸ் (சிலை) | 190 |
361 | Vidiyal Pathippagam | விடியல் பதிப்பகம் | 345-346 |
362 | Vigyan Prasar | விஞ்ஞான் பிரசார் | 371-372 |
363 | Vijaya Pathippagam | விஜயா பதிப்பகம் | 127-128 |
364 | Vijaya Stores | விஜயா ஸ்டோர் | 158-159 |
365 | VijayaBharatham Prasuram | விஜயபாரதம் பிரசுரம் | 493-494 |
366 | Vijayashree International (04-05) | விஜயஸ்ரீ இண்டர்நேஷனல் | 04-May |
367 | Vikatan Media Serives P Ltd | விகடன் மீடியா | 11F |
368 | Virutcham Veliyeedu, | விருட்சம் வெளியீடு | 17 |
369 | Visa Publications | விசா பப்ளிகேஷன் | 90-91 |
370 | Vivekananda Book House | விவேகானந்தா புக் ஹவுஸ் | 464-465 |
371 | Vizhigal Pathippagam | விழிகள் பதிப்பகம் | 490 |
372 | Wecan Books | வீ கேன் புக்ஸ் | 113 |
373 | Wisdom Global services (Om Jayasakthi) | விஸ்டம் குலோபல் சர்விஸ் | 10F |
374 | Yaali Kalai Panpattu Maiyam | யாழி கலை பண்பாட்டு மையம் | 469 |
375 | Yavaraum Publishers (11-12) | யாவரும் பப்ளிஷர் | 011-012 |
376 | Yegam Pathippagam | ஏகம் பதிப்பகம் | 393-394 |
377 | Yogoda Satsanga Society of India | யோக சத்சங்க சொசைட்டி | 436-437 |
378 | ZERO DEGREE | ஜீரோ டிகிரி | 45F |