Posted inPoetry
மு.ராம்குமாரின் கவிதை
ஒரு
ரகசியத்தை
உனக்குச் சொல்லவிருக்கிறேன்
ஒரு பறவை தன்
கூடுகளை
அடைகாப்பது போல்
காதலின் கடந்தகால
சுவடுகளை அடைகாத்து வைத்திருக்கிறேன்
அதில் உன் வீதிகளில்
நடக்க முயன்ற போது எனக்குநிகழ்த்தப்பட்ட
அவலங்கள் படிமங்களாக
இருக்கும்
ஒன்றாக அமர்ந்து பேசிக்
பேசிக்கொண்டிருந்ததற்காய்
உடல்கள் சிதறிய கொடுமை
இருக்கும்
இருவரும் நேசித்ததற்காக
இரக்கப்பட்ட துயரம் இருக்கும்
கூட்டு வன்கொடுமையால்
கொல்லப்பட்டவளின்
ரத்த வாடை
பளிச்சென்று அடிக்கும்
எரிக்கப்பட்ட சேரியின்
சாம்பல் வானின்
உயரத்தில் பறக்கும்
இப்படி எல்லாவற்றையும்
கடந்து விட்டு தான்
உன்னை வந்தடைந்தேன்
சாதியைக் கொன்று புதைத்து
காதலை உயிர்ப்பிக்க…..
மு.ராம்குமார்
கல்லூர்
9566317364