மதம் மாறுவது ஒரு குற்றச் செயலா? கட்டுரை – தங்கராசு

மதம் மாறுவது ஒரு குற்றச் செயலா? கட்டுரை – தங்கராசு



மாதா

இந்தியாவில் மதம் மாறுவோர் பிரச்சனைகளின் வேர்கள் சாதிய கட்டுமானத்திலும், அதன் பாகுபாடான நடைமுறையிலும் உள்ளது. சாதிக் கொடுமைகளை ஒழிப்பது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் தரமான இலவசக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி அனைவருக்கும் இலவச மருத்துவம், அனைவருக்கும் ஊட்டச் சத்துடன் கூடிய உணவு, வேலை வாய்;ப்பு போன்றவற்றை அளித்தால் மதம் மாறுவது குறையும். இவைகளெல்லாம் மதமாற்றத்தைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், நாட்டில் பெருகிவரும்
வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஒழிக்கப் பயன்படும். சில மத அடிப்படைவாதிகள் மாற்று மதத்தினரை வன்முறை மூலம் கையாளுகிறார்கள். வன்முறைக்கு வன்முறையும் பதிலாக இருக்க முடியாது. கோபம், வெறுப்பு, பேராசை, சுயநலம், குரோதம், நிறைந்துள்ள உலகில் அன்பு, கருணை, இரக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் இவற்றையே உயர்ந்த அறங்களாக மதங்கள் போதிக்கின்றன. அன்பினாலும், தன்னலமற்ற சேவையினாலும் மக்களை வெல்ல முடியும். ஆனால் நாம் ஒவ்வொருவரும் இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பதே நமக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டிய வினா.

தேசிய அளவில் கிறிஸ்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 48 சதம் பேரும், பழங்குடியினரில் 14 சதம் மக்களும், பிற்பட்ட சாதியில் உள்ள 26 சதம் பேரும் முன்னாள் இந்துக்களே. தாழ்த்தப்பட்ட மக்களில் சரி பாதிப் பேர் தங்களது சொந்த மதத்திலுள்ள ஆதிக்க சக்திகளின் சாதிய, தீண்;டாமைக் கொடுமைகளால் கிறிஸ்துவத்திற்கு மாறியுள்ளார்கள். இந்தியாவிலுள்ள இருபது சதமான மக்கள் இன்றும் சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

குறிப்பாக வட இந்தியாவில் ;கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித் பெண்கள் மீது வல்லுறவும், வன்முறையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வோரு இந்துவும் தனக்கு கீழிருக்கிற சாதிகளை ஒடுக்குகிறார்.

தேவாலயங்கள் எந்த மத மாற்றத்தையும் ஊக்குவிக்கவில்லை. மதம் மாறி நடந்த திருமணத்தைக் கூட சிறப்புத் திருமண சட்டத்தின் படி பதிவு செய்யப்படுகிறது. கிறித்துவர் அல்லாத மணமக்களை அவர்கள் சொந்த மதத்தின்படியே கடைப்பிடிக்கச் சொல்கிறோம் என்று கிறிஸ்துவ அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மதத்திலுள்ளவர்கள் மற்ற மதத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்ற உணர்வோடுதான் வாழ்கிறார்கள். புறவய மணமான மதம் மாறிய திருமணங்களை எந்த சமயத்தாரும் தங்கள் மதத்தில் நிகழ்ந்த அவமானமாகவே
நினைக்கிறார்கள். மதப் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் மற்ற மதித்தவரைச் சகோதரராக ஏற்றுக்கொள்வதில்லை. மதங்களுக்குள் ஆழமாக வேரூன்றி, அவற்றை இயக்குவது சாதியப் படி நிலைகளே. ஆகையால் மத மாற்றத் தடைச் சட்டம் மூலம் மதம் மாறுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 25வது பிரிவு, ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுத்துவ ழிபடவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை வழங்குகிறது என்றாலும், எவரும் ஒருவரையும் மதம் மாற கட்டாயப் படுத்துவது தவறான செயலாகும்.
மதம் மாற வேண்டும் என்ற உணர்வு அவர் அடி மனதிலிருந்து தன்னிச்சையாக எழ வேண்டும். மாற்று மதத்திற்கு வருவோரின் தரம்தான் முக்கியமே தவிர, அவர்களின் எண்ணிக்கை அல்ல. ஆனால் ஒருவர் மதம் மாறிவிட்டால் மட்டும் அவருடைய வாழ்வில் சுபிட்சம் வந்துவிடாது. அதே வேளையில் மத மாற்றத்தைத் தடுப்பதற்கு குற்றவியல் சட்டம்தான்
தீர்வா?

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகளைக் கிறிஸ்துவ சமுதாயம் நடத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவர்கள் பட்டம் பெற்று அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர்ந்து பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் நடத்தும் மருத்துவ மனைகளில் சாதி, மத, இன, மொழி பேதமின்றி நாள்தோறும் லட்சக்;கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கிறார்கள். இவர்களில் எவர் ஒருவரையாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள யாரும் வற்புறுத்தவில்;லை. மநுவின் பெயரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வகுப்பறைகள் உருவாக்கி கல்வி புகட்டியது மிஷனரி பள்ளிகளே. எந்த குருகுலமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வழங்கவில்;லை.. சு+த்திரர்களுக்கு பெருந்தெய்வ வழிபாடு மறுக்கப்பட்ட போது, தேவாலயங்களைத் திறந்துவிட்டு தேவகுமாரனைத் தரிசிக்கச் செய்தவர்களும் கிறிஸ்தவர்களே.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் திருமதி.வசுந்தரா ராஜே சிந்தியா, தற்போதைய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பியு+ஸ்கோயல், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதாப் சின்கா போன்ற பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்றவர்களாவார்கள். மேற்கண்ட மிஷனரி பள்ளிகளில் கல்விகற்போர் பெரும்பான்மையினர் இந்து மாணவர்களே. இந்த விபரங்கள்
அடிப்படையில் தான் தஞ்சை மாவட்டம் மிக்கேல் பாளையம் கிறிஸ்தவப் பள்ளியில் நிகழ்ந்த பிரச்சனைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

சாக்ரடீசுக்கு; மரண தண்டனையும், மகத்தான அறிவியலாளர் கலிலியோவை சிறையில் அடைத்ததும், புருனோவை உயிரோடு கொளுத்தியதும் மதத்தின் பெயரால் நடந்த கொடுஞ்செயல்கள். கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்ற மதக் கோட்பாட்டிற்கு மரண அடி கொடுத்த சார்லஸ் டாhவினின் பரிணாமக் கோட்பாட்டைக் கிறிஸ்தவ சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அண்மையில் தான் போப்பாண்டவர் அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.. ;இது வரை மனிதர்கள் நடத்திய யுத்தங்களில் மடிந்த வீரர்களை விட, இயற்கை பேரிடர்களான பூகம்பம், புயல், பெருவெள்ளம் இவற்றில் இறந்தவர்களை விட மதக் கலவரங்களால் கொல்லப்பட்ட மக்களே அதிகம் என வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
மத மோதல்கள் இன்று வரை தொடர்கின்றன. இடைக்காலத்தி;ல் 200 ஆண்டுகள் விட்டு விட்டு கொடூரமான சிலுவை யுத்தங்கள் நடந்தன. கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் என்றும், இஸ்லாம் மதத்தில் ஷியா, சன்னி என்றும் கடும் சச்சரவுகள் நடந்தன. சமண-புத்த-பிராமணிய மதங்களுக்கிடையே கடும் மோதல்கள் நடந்தன. சமண, பௌத்தத்தின்
வீழ்ச்சிக்குப் பிறகு பிராமணிய மதத்திற்குள் சைவ- வைணவ மோதல்கள் நிகழ்ந்தது. அதிகாரக் கட்டமைப்பும், வழிபாட்டு முறைமைகளும் மதக் கட்டமைப்பைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதனால் தான் மத பீடங்களிலிருந்து இன்று வரை அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வெளிவரவில்லை .

மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும். சொர்க்கம், நரகம், லோகம், பரலோகம் இருப்பதாக சொல்லப்பட வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள் அவதரித்த கதை வேண்டும். அதிகாரம் மிக்க மத குருமார்களும், சுவாமிஜிகளும், சாதுக்களும் இருந்தாக வேண்டும். ஆதி மனிதன் யுகத்தில் உருவான கடவுள்- மத நம்பிக்கை, ஆண்டான்- நிலப்பிரபு யுகங்களில் நிறுவனமயமாக நிலை பெற்றது. முதலாளித்துவ யுகத்திலும் தொடர்கிறது. பொருள் சார்ந்த முக்தி கிடைக்காது ஏமாந்து போயிருந்தவர்கள் அனைத்து வர்க்கங்களிலும் இருந்தார்கள். மனம் சார்ந்த முக்தியாவது கிடைக்காதா என்று ஏங்கினார்கள்.

பொருளாதாரம், அரசியல், ஒழுக்கம் சார் துறைகளில் சரிவு ஏற்பட்டிருந்த சு+ழலில்தான் மதம் உருவாகியது. மதங்களின் தோற்றத்திற்குப் புற-அகச் சு+ழல்காரணமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு மதத்தின் தோற்றத்திற்கும் பொதுவாக வெகுமக்களின் ஆவலாதியே காரணமாக இருந்தது.

இந்தியாவில் 800 ஆண்டுகள் மொகலாயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்து மதம் அழிக்கப்படவில்லை. 250 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில் எந்த மதத்தையும் அழிக்கவில்லை. மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர்களுக்குச் சேவை செய்வதற்காகக் குமாஸ்தாக்களை உருவாக்கக் கொண்டுவரப்பட்டாலும், கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும், பிற்பட்ட வகுப்பினருக்கும் கல்வி வழங்கினார்கள். வகுப்பறை என்ற அமைப்பே 150 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.. ஐரோப்பாவிலிருந்து மதப் பிரச்சாரர்கள் இங்கு வந்தாலும், வாழ்நாளின் பெரும்பகுதியைக் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலுமே செலவிட்டார்கள்.

பக்தி இலக்கிய காலத்தில் திருநாவுக்கரசர் பல பிரதேசங்களுக்குச் சென்று மத மாற்றம் செய்தார். சமணப் பள்ளிகளை இடிக்கச் செய்து, அரசரின் உதவியுடன் சைவக் கோவில்களை எழுப்பினார். அந்தக் காலத்தில் நாட்டை ஆளும் மன்னர்கள் மதம் மாறினால் குடிமக்களும் மதம் மாறியவர்களாகவே கருதப்படுவார்கள். வேறு மதத்தைப் பின்பற்ற முடியாது. தென்னிந்தியாவில் முதன் முதலில் மத மாற்றத்தை நிகழ்த்தியவர் நாவுக்கரசரே. அதனால்தான் இன்றளவும் சமயவாதிகளால் போற்றப்படுகிறார்.

உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி, செயலாக இருந்தாலும் சரி வகுப்புவாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்து விதமான வகுப்பு வாதங்களும் மத அடையாள உணர்வுடன், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. மதத்தை, அரசியல் வாழ்வின் அனைத்துவிதமான வடிவங்களிலும் தனிமைப் படுத்தினால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் குறைந்த அளவிலியே இருக்கும். இங்கு மதம் என்பது அரசியல் வழியாக, அதிகாரம் வழியாக நிலைநிறுத்தப்படுகிறது. மதம் சார் அரசியல் எல்லோரி;டமும் பரப்பப்படுகிறது. மத நம்பிக்கை முக்கியமல்ல. மதத்தின் மெய்யறிதல் முக்கியமல்ல. மத அடையாளம் மட்டுமே முக்கியம். இந்த அடையாளத்தைச் சு+டிக்கொண்டு பெருந்திரளாவது மட்டுமே தேவை. அதனூடாக அதிகாரத்தை அடைவது ஒன்றே இலக்கு.

உலக மக்கள் தொகை 790 கோடியில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இவர்கள்தான் அங்கு தொல்லியல் பொருட்களையும், பாரம்பரியத்தையும், மரபுக் கலைகளையும் பாதுகாக்கிறார்கள். சமூக அறங்களை உயர்த்திப் பிடிப்பது, சுற்றுச் சு+ழலை பாதுகாப்பது இவர்களால் தான் நடக்கிறது. சமய நம்பிக்கை இல்லாத பகுதிகளில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாக இருப்பதோடு, மதத்தைப் பின்பற்றுபவர்களை விட, மதமற்ற மக்களே மகிழ்ச்சியாகவும், நிறைவான வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.

முகவரி
மாதா
மே-பா மா.தங்கராசு
75- கிழக்கு தெரு
சக்கம்பட்டி
ஆண்டிபட்டி- அஞ்சல்
தேனி- மாவட்டம் 625512
செல்- 9442452505