Posted inPoetry
புத்தரின் நகைச்சுவைத் துணுக்கு கவிதை – க. புனிதன்
போதி மரத்திற்குக்
கொஞ்சம் எரு
சேர்த்துப் போட்டு
ஆசை காட்டினேன்
பூக்கள் பூத்தன….
ரொம்ப நாள் கழித்து
முதல் முறையாக
எடுத்து கொள்ளும்
மூலிகை
ரொம்ப நாள் கழித்து
முதல் முறை தீண்டும்
தாழி வைக்கும்
பசுவின் மேனி
ரொம்ப நாள் கழித்து
முதல் முறை பருகும்
தேநீர்க் குவளையின்
வித்தியாசமான வடிவம்
ரொம்ப நாள் கழித்து
சாப்பிடும் வடையில்
கொத்த மல்லி வாசம்
அனைத்திலும் உணரும்
மனம்
கடைக்கார பாட்டியிடம்
வடை வாங்கி சாப்பிடாத
குறையைப் போக்கும் நிலா
கொசு
நிலா
சமரசம்
வாழ்க்கை
பூக்கள்
கற்பனை
தானியம்
விவசாயி
புன்னகை
பறவைகள்
வானம்
அழகிய யுவதி
ஸ்வீட்டர் அணிந்த முதியவள்
ஒலி ஒளி படம்
விளம்பரங்கள் அனைத்தும்
புத்தரின் நகைச்சுவைத் துணுக்குகள்
போல் தோன்றியது