ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அரசியல் சிந்தனையாளர் புத்தர் – தேனிசீருடையான்
சீடர்கள் கட்டுரை – பேரா. எ.பாவலன்
சீடர்கள் (COMRADES)
ஒவ்வொரு சமயமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டே தோற்றம் பெற்றது. அவ்வந்த சமயத்தின் கொள்கைக் கோட்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நல்வழிப்படுத்துவது சமயத்தின் முக்கிய நோக்கம். அதனால்தான், தன் ஒருவரால் மட்டும் எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதனால் அத்தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சீடர்கள் தேவைப்பட்டனர். முதலில் அந்த சீடர்களே அந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். அவர்களால்தான் உலகம் முழுவதும் சமயங்கள் பரவத் தொடங்கின.
ஒவ்வொரு சீடர்களும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணப்பட்டனர். ஒவ்வொரு ஊராகச் செல்லத் தொடங்கினர். பிந்நாளில் நாடு விட்டு நாடு தாண்டியும், கண்டம் விட்டு கண்டங்கள் தாண்டியும் சென்றனர். கிறிஸ்துவ சமயமும், பௌத்த மார்க்கமும், இஸ்லாமும், சமணமும், கன்பூசியஸ் உள்ளிட்டு பல சமயங்கள் அனைத்தும் இப்படி மக்களிடம் சென்று சேர்ந்ததில் சீடர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
பல சமயங்கள், அவர்களை சீடர் என்கின்ற பொதுச் சொல்லால் அழைக்கப்படுவதுண்டு. கிருத்துவ சமயத்தில் அப்போஸ்தலர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தில் தோழர்கள் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் COMRADES என்ற சொல்லால் அழைக்கப்படுவதையும் காணமுடியும்.
தமிழில் சீடர்கள், தோழர்கள் என்பது ஆங்கிலத்தில் Comrades என்ற சொல்லில் பயன்படுத்தப்பட்டாலும், Seed என்ற ஆங்கில சொல்லுக்கு விதை என்பது பொருள். ஒருவேளை ஆங்கிலச் சொல்லுக்கு விதை என்ற சொல்லில் சீடர்களைப் பொருள் கொள்ளலாம். காரணம் எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்யப்படுவாய் என்பது பொது தத்துவம். அந்த வகையில் இவ்வுலக மக்களிடம் ஒரு நல்ல விதையைகீ கையில் கொடுப்பதைப் போல இவ்வுலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் நற்கருத்துக்களை விதைக்கவே தோன்றின.
இங்கு பௌத்த சமயத்தையும் கிருத்துவ சமயத்தையும் ஒப்பிட்டு சீடர்களின் தொண்டையும், அவர்களின் பணியையும் வெளிக்கொணரும் தன்மையில் இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.
முதலில் பௌத்த சமயத்தின் தத்துவங்களையும், கிறிஸ்துவ சமயத்தின் தத்துவங்களையும் காணலாம்.
சமயம்
சமையம் என்கின்ற வேர்ச்சொல்லிலிருந்து சமயம் உருவானது. நாம் அனைவரும் உணவுப் பொருட்களை சமைத்து உண்ணுவதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறோம். உடல் வலிமை அடைகிறது. நலன் உண்டாகிறது. ஆற்றல் பெருகுகிறது. அதேபோல மனதை சமைப்பதற்காக சமயங்கள் தோற்றம் கண்டன. சமயத்தின் மிக முக்கியமான நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவதாகும்.. இவ்வுலகில் எங்கெல்லாம் பாவங்களும், கொடுமைகளும், அக்கிரமங்களும் தோன்றியதோ அங்கெல்லாம் சமயத்தின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக ஐரோப்பிய தேசத்தில் யூத மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மன்னன் நடத்திய கொடுமைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் உண்டானது தான் கிறிஸ்தவம். அதேபோன்று அரபு தேசத்தில் நடக்கும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவே அங்கு இஸ்லாம் மார்க்கம் தோற்றம் பெற்றது. ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சமணமும், பௌத்தமும் தோற்றம் பெற்றன. பௌத்தம் மனித முரண்பாடுகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்கும் நோக்கத்தில் தோற்றம் கண்டது. குறிப்பாக மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் கொள்கையை எதிர்த்து உருவானது.
இயேசு கிறிஸ்துவம், நபிகள் நாயகமும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள். இதுவரை இவ்வுலகில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நபிகள் நாயகம் இறுதியாக வந்தவர். அவருக்கு முன்பாக இந்த பூமியில் தோன்றியவர் தான் இயேசுபிரான் என்று அந்த சமயத்தின் வேதங்கள் கூறுகின்றன.
பௌத்த சமயம்
பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு தத்துவம். பின்னாளில் அது சமயமாக மாற்றம் பெற்றது. பௌத்த மரபின்படி புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் இந்திய துணை கண்டத்தில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேரவாத பவுத்தம் (முதியோர் பள்ளி) மற்றும் மகா யான பௌதம் (பெரும் வாகனம்). தேரவாதம் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியா லவோஸ்,தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயானம் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் பின்பற்ற படுகிறது. இந்த இரண்டை திபெத்து மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வைச்சிரயான பௌதம் மூன்றாவது வகையாக குறிப்பிடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் நவையான பௌத்தத்தை தொடங்கி 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரிய புரட்சி ஏற்படுத்தியவர்.
பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கிலும் காணப்படுகின்றன உலகெங்கும் சுமார் 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் உலகில் மிக வேகமாக பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்று.
உலகின் தோற்றம்தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உடலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது. அதுவே பௌத்தத்தின் முடிவு. தேவையேற்படின் இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ?, எப்படி விதை மாத்தில் இருந்து வந்ததோ அப்படியே.
சார்பிற்தோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பௌத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்க. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் ஆங்கிலத்தில் Dependen Origination என்றும் கூறுவர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்;
எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ? இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து…. தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும், ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதவின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை,
முதற் காரணத்தை உடன்பட்ட கடவுள் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது.
கடவுள் கோட்பாடு
பௌத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை. அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது. அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பௌத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது – Anatta). துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை -Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும். அது பௌத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது
அனைத்தையும் உருவாக்கும் நிர்வாகிக்கும். அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமியசக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எளினும் பௌத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவுகள் இருக்கின்றார்கள், அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள்:
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பௌத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை. மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்
புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணம் அடைந்த பின்பு சீடர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த உபதேசங்களை எல்லாம் ஒருசேரத் தொகுத்து அந்தத் தொகுப்பை மூன்று பிரிவுகளாகச் செய்தார். அவை வருமாறு,
சுத்த பிடகம்
விநய பிடகம்
அபிதம்ம பிடகம்
இந்த மூன்று பிடகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஆயினும் ஒவ்வொரு பிடகமும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை
விவரிக்கிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம். இந்தோனேஷியா முதலிய நாடுகளில் நிலவும் பௌத்தம் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தது. இதைத் தேரவாதம் பௌத்தம் அதாவது பெரியோர் கடைப்பிடிக்கும் பௌத்தம் என்றுக் கூறுவர்.
பௌத்தர்களோ நிலையான ஆன்மா என்ற ஒன்று கிடையாது என்றும். பல்பொருள்கள் தன்னிச்சையாக ஒன்று சேரும்போது, உயிர் என்பது உண்டாகிறது என்றும், பிறகு மாற்றங்களின் காரணமாக அந்தப் பொருள்கள் பிரியும்போது பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு இருக்குமானால், அந்த உயிர் சூனிய நிலையை அடைகிறது என்றும். அதுவே நிர்வாணம் என்று கூறுகின்றனர்; பந்த பாசங்களலிருந்து விடுபடாத உயிர், தத்தம் கருமத்துக்கு ஏற்றவாறு புகழ் பரவிவரும் என்றும் கூறுகின்றனர்.
ஆகவே ஆன்மா பற்றியும், அது மோட்ச நிலை அடைவது குறித்தும் பௌத்தர்கள் கொண்டுள்ள கருத்து. மற்ற சமயந்தவர் கொண்டுள்ள கருத்துக்கு முற்றும் மாறுபட்டது. இந்த இரண்டு போக்குகளுமே தவறானவை என்று புத்தர் கருதினார். யானையைப் பார்த்திராத பார்வையற்றவர் நால்வர், தான் நொட்டுப் பார்த்த யானையின் உறுப்பையே யானை” என்று சாதித்ததைப் போல ஆன்மீகவாதிகளும் ஆன்மாவைப் பற்றிக் கூறுகின்றனர் என்று புத்தர் முடிவுக்கு வந்தார். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு, இடர்படுவது கூடாது என்று அவர் கருதினார்.ஆகவே, பயளற்ற ஆன்மாதத்தை விட்டு ஒழித்து மத்திய வழியை அவர் மேற்கொண்டார். அதனால் பௌத்த சமயத்தில் கேளிக்கை வாழ்வுக்கு இடம் இல்லை. சுய அனுபவத்தால் மட்டுமே. பேருண்மைகளை யாராலும் அறிய முடியுமேயன்றி, அனைத்தையும் அனைவராலும் அனுபவமில்லாமல் அறிய முடியாது. அவற்றை எவ்வளவு தான் விளக்கிச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது. அதைப் போலவே. நீர்வாணம் என்பது சுய அனுபியத்தால் தெளிந்து தெளிய வேண்டிய மனநிலை ஆகும் என்று பௌத்தம் போதனைச் செய்கிறது. கடவுள் ஒன்று உண்டு என்னும் கொள்கைமை. பௌத்தர்கள் ஏற்பது இல்லை. உலகில் காணப்படும் பயன்பாடுகள் யாவும் அவரவர் செய்யும் வினைகளின் பயனாய் ஏற்படுகின்றனவேயன்றி கடவுள் காரணம் அன்று என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை வாலிபன் ஒருவன் புத்தரை அணுகி, பெருமானே உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கு காரணம் என்ன? ஒருவன் அறிவாளியாகவும் மற்றொருவன் மூடனாகவும், ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் தீயவனாகவும், ஒரு நோயாளியாகவும் மற்றொருவன் திடக்காத்திரமாகவும், ஒரு ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரனாகவும் இருக்க காரணம் என்று கேட்டான்.
அதற்கு புத்தர் தாம்தாம் செய்யும் கருமங்களின் விளைவாகவே மாந்தர்களிடையே வேற்றுமைகள் நிலவுகின்றன. பிராமணர்கள் சத்திரியர்களும் தான் தத்துவ விகாரம் செய்ய தகுதி உடையவர்கள் என்னும் குறுகிய கருத்தை முதன்முதலாக தகர்த்தவர் புத்தபெருமான். இதில் சிறிதும் ஐயமில்லை. அறிவியல் தேடலும், ஆர்வமும் உள்ளவர்களுக்கும் பௌத்த சங்கத்தின் வாயில் திறந்து இறந்தபடியால் பல்வேறு சாதிப் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் ஆர்வத்துடன் பௌத்த சங்கத்தில் விரும்பி சேர்ந்தார்கள்.
தான் மட்டும் ஈடேற்றம் பெற்று விட்டால் போதும் என்னும் கருத்து புத்தருக்கு இருந்ததில்லை. தான் பெற்ற அனுபவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் ஈடேற்றம் பெற வழிகாட்டும் வழி தமது முக்கிய கடமையாக அவர் கருதினார். பிக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் 60 என உயர்ந்தும், அவர்களை தம் அருகே வைத்துக் கொண்டு பெருமை அடைவதை அவர் விரும்பவில்லை. அவர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி பௌத்த சமயத்தைப் பரப்ப அவர் ஏற்பாடு செய்தார். பிக்குகளே தர்மத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லுங்கள். ஒரே வழியில் இருவர் சேர்ந்து செல்லாதீர்கள் என்ற யோசனை சொன்னார். சுவபாலன் என்னும் புலையனும், சுந்தன் என்னும் சிப்பந்தி வேலை செய்பவனும் பௌத்த சங்கத்தில் சேர்ந்து பெருமை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பௌத்த சங்கத்தை ஆதரிக்கவும் ஆர்வத்துடன் அதில் மக்கள் சேர்வதற்கு முக்கிய காரணம் சாதி வேற்றுமையை அகற்றியது மட்டுமல்ல புத்தரிடம் காணப்பட்ட வாதத்திறமையும் முக்கிய காரணங்களில் ஒன்று.
புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
- துன்பம் (துக்கம்) மனிதர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாது.
- பிறப்பு நோய் முதுமை இறப்பு ஆகியவை மனிதருக்கு துன்பத்தை தருபவை. பசி பகை கொலை வெகுளி இழப்பு மயக்கம் போன்றவையும் துன்பத்தை தருபவை.
- ஆசை/ பற்று துன்பத்திற்கான காரணம்.
- துன்பம் நீக்கல் – ஆசையை விட்டு விடுவதே துன்பத்தை நீக்கும் முறைமை.
எட்டு நெறிகள் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள்.
நற்காட்சி – RIGHT VIEW
நல்லெண்ணம் – RIGHT THOUGHT
நன்மொழி – RIGHT SPEECH
நற்செயகை – RIGHT CONTACT
நல்வாழ்த்துக்கள் – RIGHT LIVELIHOOD
நன் முயற்சி – RIGHT EFFORT
நற்கடை பிடி – RIGHT MINDFULNESS
நற் தியானம் – WRITE MEDITATION
இந்த எட்டு செயல்கள் செய்தாலே போதும் மக்கள் எப்பொழுதும் எந்த சிக்கலும் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான காரணம் என்று புத்தர் வலியுறுத்தினார்.
கிருத்துவம்
கிருத்துவ சமயம் மக்கள் வாழ்க்கையில் அக்கறைக் கொண்டது. இவ்வுலகம் எப்பொழுதும் உய்வுப் பெற வேண்டும் என்ற சிந்தனைக் கோட்பாடு கொண்ட சமயம். அதனால்தான் கிருத்துவம் சமாதானத்தை விரும்பும் சமயமாக விளங்குகிறது. எல்லோரிடமும் அன்பை போதிக்க கற்றுத் தருகிறது. அதன் தாக்கம் தான் இயேசுபிரான் ஒரு படி மேலே சென்று ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கனத்தை காட்டு என்ற உயர்ந்த தத்துவத்தை உலகறியச் செய்தவர். இயேசுபிரானை பற்றிய புரிதல் இவ்வுலகில் மிகப் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய சமயம் கிருத்துவமாக திகழ்வதற்கு இதுவே காரணம். இன்றைக்கு உலகில் அதிக சிலைகளை கொண்டவர் இயேசுவும் புத்தரும் அவர்.
அதனால்தான் நடைமுறை வாழ்க்கை தொடங்கி தமிழ் சினிமாக்களில் தாக்கம் நிறைந்தவர்களாக இவ்விருவரும் இருந்துள்ளன. ஒரு திரைப்படப் பாடலில் புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக என்ற அற்புதமான ஒரு தத்துவத்தை காணமுடியும்.
கிறிஸ்துவ மார்க்கத்தின் ஆராதனை முறைகள், ஆன்மீக போதனைகள், சட்ட திட்டங்கள், இம்மைக்குரிய வாழ்க்கை நெறிமுறைகள், மறுமைக்குரிய வாழ்வு பற்றிய வெளிபாடுகள் இவைகளைக் குறித்த ஆதார நூல்தான் வேதாகமம். இதை விவிலியம், பைபிள், திருமறை, என்றெல்லாம் அழைப்பர்.
கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கை உடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின் படி சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவரு சொற்களின் பொருளும் திருப்பொழிவு பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியில் இருந்தும், கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை.
சுமார் 24 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு ( 31.3%) உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியது. கிறிஸ்தவம் கிபி முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவுக்காக இருந்ததாலும் யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு எனும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இஸ்லாம் போலவே கிறிஸ்துவமும் தன்னை ஆப்ரகாம் வழிவந்த சமய நம்பிக்கையாக கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கை.
பத்து கட்டளைகள்
கிறிஸ்துவத்திலும் பத்து முக்கியமான கட்டளைகள் இருப்பதை அறிய முடிகிறது. பத்து கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரை தொகுப்புகளுல் முதன்மையானது. இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் இடம்பெறுகின்றது.
பத்து கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவுகளாக உள்ளன. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள். இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக் கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தில் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.
- உண்மையான கடவுளை நம்பி ஏறிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
- ஆண்டவரின் பெயரை வீணாக பயன்படுத்துதல் ஆகாது.
- ஓய்வு நாளை தூயதாகக் கடைபிடி
- உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
- கொலை செய்யாதே.
- விபச்சாரம் செய்யாதே
- களவு செய்யாதே
- பொய் சாட்சி சொல்லாதே.
- பிறர் மனைவியை விரும்பாதே
- பிறர் உடமையை விரும்பாதே.
இந்த 10 கட்டைகளை கிருத்துவ சபைகளுக்குள் வரிசை முறை மாறி இருப்பதை காண முடியும்.
சீடராகுதல் என்னும் சொற்கள் அதிக அளவில் கிருத்துவ மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. தங்களது சிந்தைக்கேற்ப அவர்கள் சொற்களுக்கு பல அர்த்தங்களை கொண்டு வருகின்றனர். ஆயினும் சீடர் ஆகுதல் என்பதை குறித்து இயேசுநாதர் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை உற்று காண வேண்டும்.
சீடர் என்பவர் ஒரு மாணவராக அதாவது கற்றுக் கொள்கின்ற ஒருவராக இருக்கிறார் என்று அறிய முடியும். குரு அல்லது ஆசிரியர் தம்முடைய மனதிற்கு தமது நடைமுறை பயிற்சி அளிக்கும் முறையையே சீடர் ஆகுதல் எனும் சொல் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசு தமது 12 சீடர்களை நியமித்த விதத்தை பார்க்கும் பொழுது அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் பிரசங்கம் பண்ணும் படியாக தான் அவர்களை அனுப்பவும் என்று எழுதி இருக்கிறது. அந்த மனிதர்கள் இரட்சகரோடு வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை கேட்டார்கள். அவருடைய வாழ்க்கை முறையை கண்டார்கள். அதன் பிறகு அவரது செய்தியை பரப்புகிறவர்களாக அவரிடம் இருந்து சென்றனர். அது செயல்முறைப் பயிற்சியாக விளங்கியது.
ஓர் ஆசிரியர் தான் அடைந்த நிலையைக் காட்டிலும் மேலான நிலையை தனது மாணவர் அடையும்படி வழிநடத்த முடியாது. சீடர் தன் குருவுக்கு மேர்ப்பட்டவன் அல்ல. தேறினவன் எவரும் தன் குருவைப் போல் இருப்பர் (லூக்6.40) நீ அறியாததை உன்னால் சொல்லித் தர முடியாது உனக்கு தெரியாத இடத்திற்கு உன்னால் வழி காட்ட முடியாது.
இயேசு கிறிஸ்துவின்சீடர்கள்
- சீமோன்
- அந்திரேயா
- யாக்கோபு
- பரிசுந்த யோவான்
- பிலிப்பு
- பர்த்தலேமியு
- தோமாக
- மத்தேயு
- யாக்கோபு
- பரிசுத்த ததேயு
- சீமோன்
- யூதாஸ் காரியோத்
புனித பேதுரு
புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும் இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு ” என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்.இப்பெயரின் தமிழ் வடிவம் பேதுரு இராயப்பர் என்பதாகும்.
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராசுத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார்.
கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திரு தூதராகிய பேதுரு முதல் திருத்தந்தை (Pope) என்று அறிக்கை கூறுகிறது. இயேசு தம் நெருங்கிய சீடராக தெரிந்து கொண்ட திருத்தூதர்கள் பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருக்கு அளிக்கப்பட்டது.
அந்திரேயா
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர். மீன்பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்தவர். பின்னர் இயேசுவோடு சேர்ந்தவர். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமூழுக்கு யோவான் அவரை சுட்டிக்காட்டி இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்றார். உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கு இணங்கி ஓர் இரவும், பகலும் அவரோடு தங்கினார். மறுநாள் தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தனர். இயேசு அப்பங்களை பலுக்கச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் உள்ளது என்று சொன்னவர் இவரே. கோயிலில் அழிவை முன்னறிவித்த போது அழிவு எப்போது வரும் எனக் கேட்டவர். இவரே தூய ஆவியின் வருகைக்கு பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டையன், மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தவர். பத்ராஸில் ‘X’ வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர். சிலுவையை கண்டதும் உன்னில் தொங்கி என்னை மீட்பவர் உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக என்றவர்.
பிலிப்பு
திருத்தூதரான புனித பிலிப்பு யேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறித்தவப் பாரம்பரியப்படி இவரே கிரேக்கம். சிரியா முதலிய நாடுகளுக்கு கிறித்தவத்தைக் கொண்டுச்சென்றவர். பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அம்மாடி
நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே ஆகும். இவரின் விழா நாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு மே மூன்றில் கொண்டாடப்படுகிறது.
பர்த்தலமேயு
புனித பத்துல மேயு அல்லது புனித நந்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர். யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நந்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு இவர் உண்மையான இஸ்ரேலியர், கபடற்றவர் என்று இவரை குறித்து கூறினார். மேலும் மத்தேயு மார்க் லுக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம்பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பு கண்டவர்களுள் இவரும் ஒருவர். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மேனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி
மத்தேயு
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். மேலும் இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் படி இயேசுவின் உழைப்புக்கும் விண்ணேற்றத்திற்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். இத்தகைய சூழலில் தான் இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். இயேசுப்பாவிகளோடும் வரி தண்டுபவர்களோடும் உண்பதை பரிசேயரை சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு அவருடைய சீடரிடம் இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன் என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி நோயற்றவர்களுக்கு அல்ல நோய் உற்றவர்க்கே மருத்துவத் தேவை நேர்மையானவர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.
தோமா
புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர் இயேசு கிறித்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் சந்தேக தோமா’ (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் (யோவான் 20:30) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
உரோமைப் பேரரசுக்கு வெளியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா. இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் தற்போதைய கேரளம், தமிழ்நாடு பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் பாரம்பரியத்தின்படி திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு இல் திருமுழுக்கு 53 அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.
ததயு
சீமோன் அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி 1.13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவர் பெயரைத் தவிர விவிலியத்தில் இவரைப் பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைச்சாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேவின் கல்லரையினோடு வைக்கப்பட்டு இருக்கிறது.
பர்தலமேயு
புனித பர்த்தலமேயு, புனித பார்த்தொலொமேயு அல்லது புனித நத்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் (Prolemy) மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு. இவர் உண்மையான இஸ்ரயேலர். சுபடற்றவர் என்று இவரைக் குறித்துக் கூறினார். மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் நிருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி
மத்தேயு
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் உயிப்புக்கும். விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.
யூதாஸ் காரியோத்து:
சீடர்கள் பட்டியலில், கடைசியாய் இடம் பெரும் நபர். வேறு வழி இல்லாமல் நற் செய்தியாளர் இவரின் பெயரை கடைசியில் சேர்த்து, “துரோகி”, “காட்டிக் கொடுத்தவன் என்றும் குறிப்பிட்டனர். நான் செய்ய இருக்கும் காரியம் இன்னது என்று நன்கு தெரிந்தும், பலமுறை நம் ஆண்டவரால் எச்சரிக்கப் பட்டும், மனக்கடினம் கொண்டு தனது குருவை முத்தம் கொடுத்து காட்டி கொடுத்த செயல். அவர் தன்னை சாத்தானுக்கு முழுதும் விட்டு கொடுத்ததை காட்டுகிறது. பின்பு தான் செய்தது தவறு என்று அறிந்தபின் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்த கிடைத்த வாய்ப்பை தவற விட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது நமக்கு சோசு நிகழ்வாய் – துக்கம் தருகிறது குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டிகொடுத்து விட்டேனே என அறிந்த யின் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பி இருக்கலாம் தவற்றை உணர்ந்தபின் பிரதான ஆசாரியனிடம் செல்லாமல், இயேசுவிடமே சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, இயேசுவை ஏற்காத, அவரை குற்றமற்றவர் என்று அறிய மறுத்த கூட்டத்திடம் சென்று தனது செயலுக்கு மனஸ்தாபப் பட்டது தவிர்க்க வேண்டிய செயல் உயிர் மூச்சு உள்ளவரை, சுய உணர்வு உள்ளவரை எவ்வளவு கொடிய பாவம் செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்டு மனம் திரும்ப மானிடர் நமக்கு வாய்ப்பு உள்ளது – மன்னிப்பதற்கு அவர் கிருபையும் தயவும் நிறைந்த ஆண்டவர். யூதாஸ் தான் செய்தது தவறு என உணர்ந்தார்; தான் பெற்ற அநீதியின் கூலியை விட்டெறிந்தார்.
தொடரும்…
பேரா. எ.பாவலன்
போதி மரமும் புனித தலங்களும் கட்டுரை – பேரா. எ. பாவலன்
ஆசியா கண்டத்தில் சமணம், பௌத்தச் சமயங்களே தொன்மையானது. அதில் குறிப்பாக பௌத்தம் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கியது. சித்தார்த்த கௌதமர் ஞானம் பெற்ற பின் புத்தரானப் பின்பு தனக்கு கிடைத்த அறிவை (ஞானத்தை) இவ்வுலகிற்கு போதிக்கத் தொடங்கினார். அவருடைய கருத்துக்களும், போதனைகளும் மக்களை வெகுவாக கவர்ந்தன. அதனால் புத்தரை பார்ப்பதற்காகவும் அவர் சொற்பொழிவை கேட்பதற்காகவும் மக்கள் கூடினர். அவர் போதித்ததின் அடி நாதம் அன்பு… அன்பு மட்டும் தான். அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுங்கள் என்றார். பின்பு தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றுரைத்தார். வெகுஜன மக்களை தாண்டி அந்த கருத்தாக்கம் அரசனுக்கும் சென்றது. அதனால் தான் அசோக சக்கரவர்த்தி தன்னுடைய அரசாட்சியை துறந்து பௌத்தத்தை தழுவினார். மட்டுமல்லாமல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பௌத்தத்தை வளர்ப்பதற்காக கடல் தாண்டி அனுப்பி வைத்தார்.
சென்ற இடமெல்லாம் சிறப்பை செலவிட்ட புத்தபிரானுக்கு, நினைவு மண்டபங்களை உருவாக்கினார். புத்தர் உறைந்த இடங்களை எல்லாம் புனித தலங்களாக மாற்றினார். ஓர் அரச மரத்தின் புத்தர் மூன்று இரவுகள், மூன்று பகல்கள் கடுமையான தவத்தால் கீழ் ஞானம் அடைந்தார். அவர் ஞானம் அடைந்த மரத்தை போதி மரம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது.
ஏன் புத்தர் ஞானம் அடைந்த மரத்தை போதி மரம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
போதி என்பதற்கு ஞானம் என்பது பொருள். மேலும் போதி என்ற சொல்லுக்கு teaching எனும் இடத்தில் வினை சொல்லாக பயன்படுத்தப்படுகிறது (போதிக்கிறேன், போதிப்பேன், போதித்தேன்). சான்றாக போதிப்பதால் போதனையானது. ஞான போதனை நீதி போதனை என்ற பெரு வழக்கு இருப்பதையும் காண முடியும். அதேபோல் போதி என்பது போதிகைக் கட்டை என்ற பொருளில் பெயர் சொல்லாக ஆளப்பட்டு வருகிறது.
போதி என்ற சொல் புத்தர் காலத்தில் தொடங்கி சமகாலம் வரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத முடிகிறது. போதிதர்மர், போதி மாதவன் என்று பெயர் சொல்லில் தொடங்கியதை போலவே BOTHI TECHNOLOGY என்று நவீன காலம் வரை விரிந்துள்ளது.
அந்த வகையில் போதிமர வரலாற்றைப் பற்றியும் பௌத்தர்களின் புனித தலங்களைப் பற்றியும் இவ்வாய்வு கட்டுரையில் காணலாம்.
போதிமரம்
போதிமரம் (Bothi Tree) என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் உள்ள அரச மரத்தைப் பௌத்தர்கள் மகாபோதி என அழைக்கிறார்கள். புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதிக் கோயிலாகப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலக பௌத்தர்களின் புனித மரமாகும்.
போதி நாள்
போதி மரத்தடியில் புத்தர் ஞானம் அடைந்த நாளைப் போற்றி நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் எட்டாம் நாளைப் பன்னாட்டுப் பௌத்தர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
போதி மர வரலாறு
புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் அரசமரத்தை மகாபோதி என்பர்.புத்தர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இப்போதி மரம் பௌத்தர்களால் புனித மரமாகப் போற்றப்பட்டது. பேரரசர் அசோகர் இப்போதி மரத்தை வணங்கியும், அதனைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் விழா எடுத்தார்.இப்போதி மரத்தை ஒட்டிப் போதிமந்தா எனும் விகாரம் எழுப்பப்பட்டது. பௌத்த குரு சித்தகுத்தா தலைமையில் முப்பதாயிரம் பிக்குகள் இவ்விடத்தில் பௌத்தக் கல்வி பயின்றனர்.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் இப்போதி மரம் புஷ்யமித்திர சுங்கன் என்ற மன்னராலும், கிபி ஆறாம் நூற்றாண்டில் சசாங்கன் என்ற மன்னராலும் வெட்டப்பட்டதாகக் கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பௌத்தப் பயணி யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார். இப்போதி மரம் வெட்டப்படும் பொழுதெல்லாம் மீண்டும் அதே இடத்தில் புதிய அரச மரம் பௌத்தர்களால் நடப்பட்டு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் முயற்சியால் இப்போதி மரம் அமைந்த மகா போதி கோயில் இந்தியாவின் முதல் தொல்லியல் களமாக 1862 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் ஆய்வேட்டில் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
1876-இல் இப்போதி மரம் சூறாவளிக் காற்றில் அடியோடு முறிந்து விழுந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் அதே இடத்திலேயே புதிய அரச மரத்தை நட்டார்.
மகாபோதி மரத்தின் கிளைகள்
புத்தகயா மகாபோதிக் கோயிலின் போதி மரத்தின் விதைகளைக் கொண்டும், போதி மரத்தின் இளங்கன்றுகளைக் கொண்டும் உலகில் பல இடங்களில் புத்தர் காலத்திலிருந்தே அரச மரங்கள் நடப்பட்டன . அவைகளில் சில;
கௌதமப் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவரான மௌத்கல்யாயனரால் சிராவஸ்தி நகரத்தில் உள்ள தேஜ வனத்தில் (உத்தரப் பிரதேசம்) மகாபோதி மரத்தின் முதற் கிளை நடப்பட்டது.
கி. மு 288-ஆம் ஆண்டில் அசோகரின் மகள் சங்கமித்தையால் அனுராதபுரம், (இலங்கை)யில் உள்ள சிறீ மகாபோதியில் போதி மரக் கன்று நடப்பட்டது.
சென்னைப் பிரம்மஞான சபைக் கட்டிட வளாகத்தில் 1950-ஆம் ஆண்டில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரப்பகுதியான ஆயிரம் சிந்தூர மரங்கள் (Thousand Oaks, California) பகுதியில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டுள்ளது
மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும். புத்த காயா, இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாலி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும் அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது.
மகாபோதி கோயில் குறித்த பௌத்த கதைகள்
பௌத்த நூல்களின் படி புத்த காயாவிலுள்ள போதி மரமே எல்லாப் புத்தர்களும் ஞானம் பெற்ற இடமாகும். புத்த ஜாதகக் கதைகளின்படி, புவியின் தொப்புள் இது, அத்துடன் இவ்விடத்தைத் தவிர வேறு எந்த இடமும் புத்தரின் ஞானம் பெறும் பழுவைத் தாங்க முடியாது. போதி மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் புல், பூண்டுகள் கூட முளைப்பதில்லை.
கல்ப முடிவில் பூமி அழியும்போது போதிமண்டாவே இறுதியாக அழியும் அதேபோல் மீண்டும் உலகம் உருவாகும்போதும் இவ்விடமே முதலில் தோன்றும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.
புத்த சமய எழுச்சி
மரபுவழிக் கதைகளின்படி, கி.மு 530 ஆம் ஆண்டளவில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த கௌதம புத்தர், இந்தியாவிலுள்ள காயா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள பல்கு ஆற்றங்கரைக்கு வந்தார். அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் தியானம் செய்வதற்காக அமர்ந்தார். புத்த சமய நூல்களின்படி மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர் சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்று பல பிரச்சினைகள் தொடர்பில் அவர் தேடிய விடைகளை உணர்ந்து கொண்டார். இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காகவே மகாபோதி கோயில் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து வந்த ஏழு வாரங்களில், கௌதம புத்தர் ஏழு வெவ்வேறு இடங்களில் தியானம் செய்தும், தனது அநுபவங்களைப் பற்றி எண்ணியும் கழித்தார். இந்த ஏழு வாரங்கள் தொடர்பாகக் குறிக்கப்பட்டுள்ள ஏழு இடங்கள் தற்போதைய மகாபோதி கோயிலில் உள்ளன:
முதல் வாரம் போதி மரத்தின் கீழ்.
இரண்டாம் வாரம் கௌதமர் ஓரிடத்தில் நின்று கண் இமைக்காமல் போதி மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். இந்த இடம் அனிமேஷ்லோச்ச தூபியினால் (கண் இமையா தூபி) குறிக்கப்படுகிறது. இது கோயில் தொகுதியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் போதி மரத்தையே பார்த்தபடி நிற்கும் புத்தர் சிலை ஒன்றும் உள்ளது.
புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டளவில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவிமடத்தையும், கோயில் ஒன்றையும் நிறுவ எண்ணினார். கோயில் கட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்க வைரஇருக்கை (Vajrasana) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அசோகரே மகாபோதி கோயிலைக் கட்டியவராகக் கருதப்படுகிறார். தற்போதைய கோயில் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டது. குப்தர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த இக் கோயில், முழுமையாகச்செங்கல்லால் கட்டப்பட்டு, இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
புத்த சமயத்தின் வீழ்ச்சி
ஹூணர்கள், முகம்மது பின் துக்ளக் நடத்தியது போன்ற முந்திய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து புத்த சமயத்தை ஆதரித்து வந்த அரச மரபுகளின் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சமயமும் இறங்குமுக நிலையை எய்தியது. எனினும் பாலப் பேரரசின் கீழ் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் புத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப் பேரரசின் கீழ், கி.பி 8 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மஹாயான பௌத்தம் சிறப்புற்று விளங்கியது.
எனினும், பௌத்த சமய பாலப் பேரரசு இந்துக்களின் சேன மரபினரால் தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து, புத்த சமயத்தின் நிலை மீண்டும் இறங்கு முகமாகி, இந்தியாவில் ஏறத்தாழ அழிந்து விட்டது. 12 ஆம் நூற்றாண்டில், புத்த கயா முஸ்லிம் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இக் காலத்தில் மகாபோதி கோயில் பழுதடைந்து, கைவிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இப் பகுதிகளின் முதன்மையான நில உரிமையாளராக ஆன இம் மடத்தின் தலைவர் மகாபோதி கோயில் நிலத்துக்கும் உரிமை கோரினார்.
பின் மகாபோதி கோயில்
1880 களில், அன்றைய இந்தியாவின் பிரித்தானிய அரசு, சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரின் வழிகாட்டலின் கீழ், மகாபோதி கோயிலில் திருத்த வேலைகளைத் தொடங்கியது. 1891 ஆம் ஆண்டில் இலங்கையின் புத்த மதத் தலைவர்களுள் ஒருவரான அனகாரிக தர்மபால இக் கோயிலின் கட்டுப்பாட்டை புத்த சமயத்தவரிடமே கையளிக்க வேண்டும் என பிரசார இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இதை சங்கர மடத் தலைவர் எதிர்த்தார்.
இதனால் இப் பிரசாரத்துக்கு உடனடியான பலன் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், 1949 ஆம் ஆண்டில் இக் கோயிலின் கட்டுப்பாடு மடத் தலைவரிடமிருந்து பீகார் மாநில அரசின் கைக்கு மாறியதுடன், இக் கோயிலுக்கான ஒரு மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டது. இது புத்த சமயத்தவரின் கோரிக்கைக்குக் கிடைத்த அரைகுறை வெற்றி எனலாம். இக் குழுவில் 9 உறுப்பினர்கள் இருந்தனர். தலைவர் உட்பட இவர்களுட் பெரும்பான்மையோர் சட்டப்படி இந்துக்களாகவே இருந்தனர். மகாபோதி கோயிலின் முதல் தலைமைப் பிக்கு, வங்காளத்தைச் சேர்ந்தவரும், மகாபோதி சங்கத்தின் முனைப்பான உறுப்பினருமான அனகாரிக முனீந்திரா என்பவராவார்.
கட்டிடக்கலைப் பாணி
இக் கோயில் இந்தியச் செங்கல் கட்டிடங்களுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுவதுடன், பிற்காலக் கட்டிடக்கலை மரபுகளில் செல்வாக்குச் செலுத்திய ஒரு கட்டிடமாகவும் கருதப்படுகிறது. யுனெஸ்கோ வெளியீட்டின் படி, குப்தர் காலத்தைச் சேர்ந்த இக் கோயில் முழுதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டதும், கம்பீரமானதுமான மிகவும் பழைய கட்டிடங்களில் ஒன்றாகும். மகாபோதி கோயிலின் உயர்ந்த கோபுர அமைப்பு 55 மீட்டர்கள் உயரம் கொண்டது. இது, இதே பாணியில் அமைந்த நான்கு சிறிய கோபுர அமைப்புக்களால் சூழப்பட்டுள்ளது.
மகாபோதி கோயில் அதன் நாற்புறமும் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புக்கள் உள்ளன. இத் தடுப்புக்கள் இரண்டு கட்டிடப் பொருள் பயன்பாடு, பாணி என்பவை தொடர்பில் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.
மணற்கல்லாலான பழைய அமைப்பு கி.மு 150 ஆம் ஆண்டளவைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. மினுக்கப்படாத கருங்கற்களால் கட்டப்பட்ட அடுத்த வகை, கி.பி 300 – 600 வரையான குப்தர் காலத்தைச் சேர்ந்தது. இத் தடுப்பு அமைப்புக்களில், இந்துக் கடவுளரான இரு புறமும் யானைகள் பூசை செய்யும் கஜலக்குமி, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிந்திய அமைப்பு வகையில், தூபிகளின் உருவங்கள், கருடன், தாமரை மலர்கள் என்பவை செதுக்கப்பட்டுள்ளன.
லும்பினி,
லும்பினி, (பொருள்:”விரும்பத்தகுந்த”) நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள – இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.
லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
கபிலவஸ்து என்பது இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, புத்த சமயத்தினரின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஓர் இடமாகும். கபிலவஸ்துவின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்த இடமாக கருதப்படுகிறது.
இது, பௌத்தர்களின் இன்னொரு புனிதத் தலமான லும்பினிக்கு அண்மையில் அமைந்துள்ளது. கபிலவஸ்து என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி நேபாளத்திலும், சிறு பகுதி இந்தியாவிலும் உள்ளன. யுவான் சுவாங், பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் பிப்ரவா என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் திலௌராகோட் என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, திலௌராகோட் பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.
யுனெஸ்கோ, நேபாள கபிலவஸ்துவை, லும்பினியுடன் சேர்த்து உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
வைசாலி, பண்டைய நகரம்
வைசாலி (Vaishali), இந்தியாவின், பீகார் மாநிலத்தின், வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் நகரமாகும். இந்நகரம் கி.மு ஆறாம் நூற்றாண்டில் வஜ்ஜி குடியரசின் தலைநகராக விளங்கியது.
சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வைசாலி நகரத்தில் கி மு 583 இல் பிறந்தவர். கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார். கி மு 383இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.
இந்நகரில் அசோகரின் தூண்கள் அமைந்துள்ளன. இங்குள்ள 36 அடி உயர தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. மேலும் செங்கற்களால் கட்டப்பட்ட குன்று போன்ற தூபியும் உள்ளது.
கி பி 4ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி பாஹியான் மற்றும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகிய இருவரும் தங்களது பயணக் குறிப்பில் வைசாலி நகரத்தை குறித்துள்ளனர். அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், 1861ஆம் ஆண்டில் தற்போதைய வைசாலி மாவட்டத்தில் உள்ள பஸ்ரா எனும் கிராமத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு, காலத்தால் காணாமல் போன வைசாலி நகரத்தை கண்டுபிடித்தார்.
வைசாலி நகரம் பாட்னாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபர்பூர் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது
சாரநாத் அல்லது இசிபதனம் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தம்மத்தை போதித்தார்
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயன்சுவநாதர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
புத்தர் குறிப்பிடப்பட்டுள்ள இசிபதனம் என்ற தலம் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒனறு. குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.
குசிநகர் அல்லது குஷி நகர்
குசிநகர் அல்லது குஷி நகர் (Kusinagar or Kusinara) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம். கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குசிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்குகிறது.
புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி
கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் பரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வானக் காட்சியை குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
சாஞ்சி
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.
சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைய பேரரசன் அசோகரால் கட்டப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. அதன்பின்னர் அதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்துபோனது.
கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்
சிராவஸ்தி
(Shravasti) கௌதம புத்தர் காலத்தில் மகத நாட்டில், பண்டைய இந்தியாவின் பெரிய ஆறு நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இந்நகரம் மகத நாட்டில் இருந்தது.
தற்போது இந்நகரம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சிராவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கங்கைச் சமவெளியில், லக்னோவிலிருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில், இந்திய – நேபாள நாடுகளின் எல்லைக்கு அருகில், மேற்கு ரப்தி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இந்நகரம் கௌதம் புத்தருடன் நெருங்கிய தொடர்புடையது.
கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்.
இந்நகரத்திற்கு அருகில் சகேத்-மகேத் கிராமத்தில் (Sahet-Mahet) கௌதம புத்தர் தொடர்புடைய தொன்மை வாழ்ந்த பல பௌத்த விகார்கள் காணப்படுகின்றது. வேத காலத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி.ஆறாம் நூற்றாண்டு முடிய, சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது.
சமண சமயத்தின் மூன்றாம் தீர்த்தங்கரரான சம்பவநாதரின் பிறப்பிடமாக சிராவஸ்தி நகரம் கருதப்படுகிறது. நாகார்ஜுனரின் கூற்று படி, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் மகத நாட்டின் தலைநகராக இருந்த ராஜகிரகத்தின் மக்கள் தொகையை விட சிராவஸ்தி நகரம் ஒன்பது இலட்சம் மக்கள் தொகையுடன் விளங்கியது.
புத்தர் தியானம் செய்வதற்கும், மக்களுக்கு நல் அறங்களை உபதேசிப்பதற்கும் அனாதபிண்டிகர் என்ற பெரும் வணிகர் தேஜ வனத்தில் அமைந்த பூங்கா ஒன்றை தற்போது தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்க பட்டது.
கௌதம புத்தர் வைசாலி நகரத்தை விட்டு சிராவஸ்தி நகரத்தில் வந்து தங்கியிருந்த காலத்தில், அனாதபிண்டிகன், விசாகா முதலியவர்கள் புத்தருக்கு உதவினார்கள். சிராவஸ்தி நகரில் தங்கியிருந்த காலத்தில் புத்தர் நான்கு பௌத்த தரும நிக்காயங்களை அருளிச் செய்தார்.
சீன பௌத்த யாத்திரிகன் யுவான் சுவாங் சிராவஸ்தி நகரத்தின் கட்டிட இடிபாடுகளை பதிவு செய்துள்ளார்.
தாய்லாந்து, தென் கொரியா, இலங்கை, மியான்மர், திபெத் மற்றும் சீனா நாட்டு பௌத்தர்கள் சிராவஸ்தி நகரத்தில் புத்தகயா போன்று இங்கும் பௌத்த மடாலயங்களை நிறுவியுள்ளனர்.
அசோகரின் தூண்கள்
என்பன இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் மௌரிய அரசரான அசோகரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூண்களை குறிக்கும். முதலில் பல்வேறு தூண்கள் இருந்திருக்க வேன்டும், ஆனால் தற்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன. அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தூண்கள் சராசரியாக 40-50 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்டுள்ளன. அவை அனைத்தும் வாரணாசிக்கு தெற்கே அமைந்துள்ள சுன்னார் எனும் இடத்தில் செய்யப்பட்டு, பின்பு நூற்றுக்கணக்கான மைல் தொலைவு எடுத்துச்செல்லப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
அசோகரின் ஆணைகள் பொறுத்தப்பட்டுள்ள தூண்கள், தில்லியில் இரண்டும் (உண்மையில் மீரட் மற்றும் ஹரியானாவின் டொப்ராவில் அமைந்திருந்து 1356 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் ஆட்சிகாலத்தில், தில்லிக்கு கொண்டுவரப்பட்டன), மற்றும் அலகாபாத் தூண் ஆரம்பத்தில் கௌசாம்பியில் இருந்ததாக நம்பப்படுகிறது. பிற தூண்கள் லௌரியா நந்தன்காட், ராம்பூர்வா காளை & சிங்கத்தூண், சங்காசியா, சாஞ்சி மற்றும் சாரநாத் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இறை அர்ப்பணிப்பு பற்றியான கல்வெட்டுகள் லும்பினி மற்றும் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் உள்ளன. வைசாலியில் உள்ள சிங்க முகத் தூணிலும் மற்றும் ராம்பூர்வா காளை தூண்களில் எந்தவித செய்தியும் பொறிக்கப்படவில்லை.
இந்த தூண்கள் இரண்டு வகையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. சில மதுரா பகுதியிலில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்களாலும், மற்றவை பொதுவாக வாரணாசியிலுள்ள சுன்னார் கற்சுரங்கதில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய கருப்பு புள்ளிகள் கொண்ட பொலிவான நிறத்தில் உள்ள நன்றாக தூளாக்கப்பட்ட கடினமான மணற்கற்களால் ஆனது. அனைத்து தூண்களும் ஒரே பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரே பகுதியை சேர்ந்த சிற்பக் கலைஞர்களால் செதுக்கப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது. தூண்களின் தண்டுப் பகுதி எப்போதும் மென்மையாகவும், குறுக்கு-பிரிவில் வட்டமாகவும், சிறிது நுனிநோக்கிச் சிறுத்தும் மற்றும் எப்போதும் ஒரே துண்டுக் கல்லைக்கொண்டு உளியால் செதுக்கப்பட்டுள்ளனவாக உள்ளன. சிங்க முகங்கள் தாமரை இதழ்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரமாகவும் வெற்றாகவும், வட்டமாகவும் அலங்கரிக்கப்பட்டதாகவும் ஆகிய விகிதங்களில் அபசி இரண்டு வகைப்படுகின்றன. விலங்குகள், அமர்ந்தும் அல்லது நிற்கும்படியாக அபசியில் ஒரே கல்லால் செயப்பட்டுள்ளன.
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் உள்ள பெரிய தூபி, தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. கௌதம புத்தர் பரிநிர்வாணம் எய்திய பிறகு அவரது உடலை எரியூட்டப்பட்ட சாம்பலின் ஒரு பகுதியை, சாஞ்சியில் கொண்டு வந்து அதன் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.
சாரநாத் தூண்
பெரும்பாலாக கொண்டாடப்படும் தூண்கள் பேரரசர் அசோகரால் சுமார் 250 கி.மு.வில் வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் சிங்க முகம் கொண்டதாகும். இங்கே நான்கு சிங்கங்கள் திரும்பி அமர்ந்து இருக்கும். தற்போது தூண் சிங்கத் தலை உள்ள தூண், சாரநாத் அருங்காட்சியகம் இருக்கும் அதே இடத்தில் இருக்கிறது. அசோகரின் சாரநாத் சிங்க முகத் தூண், இந்திய தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் “அசோகா சக்ரா” இந்திய தேசிய கொடி மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாஞ்சி தூண் இதே போன்ற சிம்ம மூலதனம் கொண்டிருக்கிறது. ராம்பூர்வாவின் இரண்டு தூண்கள், ஒன்று காளை மற்றொன்று சிங்கம் ஆகியவையை கொண்டுள்ளன. சங்காசியா தூண் ஒரு யானையை கொண்டிருக்கிறது. அசோகரின் ஐந்து தூண்களில் ராமபூர்வாவில் இரண்டு, வைசாலி, லவ்ரியா-ஆரெராஜ் மற்றும் லௌரியா நந்தன்காட் தலா ஒன்று வீதம் பாடலிபுத்திரம் முதல் நேபாளம் வரை இணைக்கும் பண்டைய ராஜ நெடுஞ்சாலையில் உள்ள நகரங்களில் அமைந்துள்ளது.
வைசாலி தூண்
பண்டைய வைசாலி நகரத்தில் ஒற்றை சிங்கத்த்தின் தலைப்பகுதி ஒரு தூபியில் உள்ளது. இந்தத் தூண், ஒரு புத்த மடாலயம் மற்றும் புனித முடிசூட்டு தொட்டி நின்ற தளத்திற்கு அருகில் உள்ளது. அகழ்வாராய்ச்சி இன்னும் நடந்துக்கொண்டுள்ளன. இத்தூபிகள், மௌரியப் பேரரசின் சான்றாக உள்ளதை கண்டறியப்பட்டன.
அது முந்தைய அசோகரின் தூண்களை விட வேறுபட்டது, ஏனேனில் ஒரே ஒரு சிம்மம் வடக்கு அஃதாவது புத்தர் அவரது கடைசி பிரயாணம் எடுத்த திசையில் முகத்தை கொண்டுள்ளது. 1969 ல் இந்த இடத்தில் தொடங்கியமைக்கு காரணம் , இந்த தூண் மண்ணுக்கு வெளியே தெரிந்ததுதான் .மேலும் இது போன்ற தூண்கள் இந்கு பெரும் அளவில் உள்ளன, ஆனால் அவைகள் தலைப்பகுதிகள் இல்லாமல் காணப்படுகிறது.
அலகாபாத் தூண்
அலகாபாத்தில் உள்ள தூண் அசோகரால் செதுக்கி நிறுவப்பட்ட இத்தூணில் பின்னர் சமுத்திரகுப்தர் மற்றும் ஜஹான்கீர் ஆகியவர்களாலும் செதுக்கப்பட்டுள்ளது. அத்தூண், கங்கை மற்றும் யமுனா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்,அக்பரால் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்ட அலகாபாத் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ளது
இத்தூண் முதலில் அலகாபாதிலிருந்து 30 கிலோமீட்டர் மேற்கே அமைந்த கோசல நாட்டின் தலைநகராக இருந்த கௌசாம்பி நகரத்தில் இருந்தது. ஜஹாங்கீர் காலத்தில் இத்தூணை அலகாபாத் கோட்டையில் நிறுவி தனது முன்னோர்களின் பெயர்களை இத்தூணில் செதுக்கினார்.
அசோகன் கல்வெட்டு பிராமி எழுத்தில் உள்ளது, மற்றும் 232 கி.மு தேதியிடப்படுள்ளது. பின்னர் ஒரு கல்வெட்டு, குப்தப் பேரரசர் இரண்டாம் சமுத்திரகுப்தனின் கிபி 375 தேதியிடப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட பிராம்மி எழுத்தில் உள்ளது.
இந்த கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் நீண்ட ஆட்சியின் குப்தப் பேரரசை பட்டியலிடுகிறது. அவர் ஏற்கனவே அந்த நேரத்தில் நாற்பது ஆண்டுகள் பேரரசராக இருந்து மற்றொரு ஐந்து ஆண்டுகள் இருந்தார். பாரசீகக் கல்வெட்டு ஒன்று பின்னர் வந்த முகலாய பேரரசர் ஜஹாங்கிரால் செய்யப்பட்டது. அக்பர் கோட்டையில் மேலும் அக்ஷய் வெட், அஃதாவது மிக பழங்கால இந்திய அத்தி மரத்தை கொண்டுள்ளது.
ராம்பூர்வா காளை தூண்
பண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா ஆகும்.அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார்.
பர்குட் தூண்கள்
(Bharhut) (இந்தி: இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ளது. கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட தூபிகளும், தோரணங்களும், நுழைவு வாயில்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளது. இந்தியாவில் காணப்படும் துமிளிகளில் மிகப்பெரிய நூக்கிணைப்பு வேலைபாடுகள் கொண்டுள்ளது. நூக்கிணைப்புகளிலும், தூண்களிலும், தோரண வாயில்களிலும், காணப்படும் சிற்பங்கள் பௌத்த சமய கதைகளையும், தத்துவங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. தோரணவாயில்களில் அமைந்துள்ள தூண் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான சிற்ப அணி செதுக்கப்பட்டுள்ளது. பர்குத் துமிளியில் புத்தரின் பிறப்பியல் கதைகளை விளக்கும் சிற்பங்களில் ‘அஜாத சத்துரு’, பிரசேன சித்து’ போன்ற மன்னர்கள் புத்தரை வணங்கும் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர யட்சர்கள், யட்சினிகள், தேவதைகள் மற்றும் நாகர்களின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. தோரணவாயில்களில் குபேரன், தேவர்கள் ஆகியோரின் உருவச்சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக பர்குத் சிற்பங்களில் அவற்றை உருவாக்கிய கலைஞர்கள் உருவங்களைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர் என்பது தெளிவாகிறது.
லௌரியா நந்தன்காட்
இந்தியா-நேபாள எல்லை அருகில் பிகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லௌரியா நந்தன்காட்டில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்றது.
லௌரியா-ஆராராஜ்
முதன்மைக் கட்டுரை: லௌரியா-ஆராராஜ்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பண்டைய லௌரியா-ஆராராஜ் நகரம், இந்திய-நேபாள எல்லையின் அருகில் உள்ளது.
லௌரியா-ஆராராஜ் நகரத்தில், கிமு 299 – 200ல் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்றது. இங்குள்ள தூபி மெருகூட்டப்பட்ட மணற்கல்லில் செதுக்கப்பட்டடது. இத்தூபியின் உயரம் 36.6 அடியும், சுற்றளவு 3.6 அடியும் கொண்டது.இத்தூபியில் அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.
மொழிகள் மற்றும் உரை
அலெக்சாண்டர் கன்னிங்காம், தூண்களின் கல்வெட்டு எழுத்துக்களை முதலில் ஆய்வு செய்தவர். அவர் அவை கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பாரசீக மொழி, அஃதாவது “பஞ்சாபி அல்லது வடமேற்கு பேச்சுவழக்கு, உஜ்ஜைனி அல்லது நடுத்தர, மற்றும் அர்த்த மாகதி அல்லது கிழக்கு பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது என்றார். அவைகள் பிராம்மி உரையில் எழுதப்பட்டுள்ளன.
கண்டுபிடிப்பின் வரலாறு
அசோகாவின் முதல் தூண், பண்டைய தில்லி இடிபாடுகளில் தாமஸ் கொர்யட்டி என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அது பித்தளையில் செய்யப்பட்டது என்றார். பரிசோதனையின் பின் அவை மிகவும் பளபளப்பான மணற்கல்லால் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்தார். அதன் குறிப்புகள் கிரேக்கத்தின் ஒரு படிவத்தை ஒத்திருந்ததை உண்ர்ந்தார். 1830யில் ஜேம்ஸ் ப்ரின்ஸெப், கேப்டன் எட்வர்ட் ஸ்மித் மற்றும் ஜார்ஜ் டர்னொவர் உதவியுடன் முறையே ஆராய்ச்சியை தொடங்கினார்.
அவர்கள், அவ்வுரை புத்தர் தான் ஞானம் பெற்று 218 ஆண்டுகள் பிறகு அரியணை வந்த அசோகரை குறிப்பிடப்படுகிறது என்று தீர்மானித்தனர். அறிஞர்களுக்கு, மேலும் பாறைகள் முகத்தில் அல்லது கற்தூண்களில், வட இந்தியா, வடமேற்கு இந்தியா மற்றும் தக்காண பீடபூமி வரை , அசோகரின் கல்வெட்டுகள் 150 கிடைத்தது. இந்த தூண்கள் எல்லை நகரங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் மைய இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
கட்டமைப்பு பின்னணி
அசோகர், அவரது தாத்தா சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்ட பேரரசுக்கு 269 கி.மு.வில் அரியணை ஏறினார். அசோகர், மதிப்பீட்டின்படி அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் ஒரு கொடுங்கோலனாக இருந்தார். கலிங்கப் போருக்குப் பின் எட்டு ஆண்டுகளுக்கு கழித்து, அசோகர் பேரிழப்பை எண்ணி புத்த மதத்திற்கு மாறினார்.கலிங்க நாட்டில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்தார். அவர் தனது வாயால் கூறிய செய்தி: கலிங்கப் போரின் போது, “ஒரு நூற்று ஐம்பது ஆயிரம் மக்கள் நாடு கடத்தப்பட்டு இருந்தனர், ஒரு நூறு ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர், மற்றும் பல மறைந்து வழ்ந்தனர் …” . புத்த மதம் ஒரு மாநில மதம் ஆகவில்லை ஆனால் அசோகர் அது வேகமாக பரவ ஆதரவு தெரிவித்தார். தூண்களில் கல்வெட்டுகளில் புத்த சமய அடிப்படையில் ஒழுக்கத்தை பற்றி அரசாணைகள் விவரித்தன. அசோகா புத்தர் வாழ்வின் நிகழ்வுகளை 84,000 நினைவுச்சின்னங்களில் பொறித்தார். அவை சிலவற்றின் வலை போன்ற சுவர்களில், மையமாக ஆரங்கள் மற்றும் ஒரு சக்கரத்தின் விளிம்பின் உருவத்தையும் கொண்டிருந்தன.மற்றவை சுவஸ்திகை உருவம் கொண்டிருந்தன. அச்சக்கரம் சூரியன், நேரம், மற்றும் புத்த சட்டம்(தர்மச்சக்ரா) ஆகியவற்றையும், சுவஸ்திகை தீமை எதிராக ஒரு நிலையான இறை நடனத்தை குறிக்கிறது
இன்றைக்கு இந்தியாவின் தேசிய சின்னமாக இருந்தாலும், தேசியக்கொடியில் உள்ள தர்மசக்கரமாக இருந்தாலும் எல்லாம் பௌத்தத்தின் தாக்கம் தான்.
எங்கெல்லாம் அதர்மங்கள் தலை தூக்குகின்றனவோ அங்கெல்லாம் பௌத்தம் தர்ம சக்கரமாகச் சுழலும் என்ற நோக்கத்தில் அசோகர் உருவாக்கியது தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்களைக் கொண்ட இந்த தர்மசக்கரம்.
– பேரா. எ. பாவலன்
நூல் அறிமுகம்: உபாசகர் E. அன்பன்னின் ’புத்தம் சரணம் கச்சாமி’ – பேரா. எ. பாவலன்
மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நிலவும் உறவை சரியாக பேணுகிறது
எல்லா நதிகளும் கடலை நோக்கி பாய்வதைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சி 21 ஆம் நூற்றாண்டில் பல்கிப் பெருகியது. பெரும்பாலான மக்களும் பௌத்தத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் பௌத்த தத்துவங்களைப் பின்தொடர்கின்றனர்.
புத்தம் சரணம் கச்சாமி உபாசகர் E. அன்பன் அவர்கள் எழுதிய இந்நூலில் அன்பை மட்டுமே போதிக்கச் சொன்ன புத்த பெருமானின் தத்துவங்களை மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நூலுக்கு ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பெயர் சூட்டினார் என்ற கேள்வி எழுகிறது. புத்தம் சரணம் கச்சாமி என்பது முன்மணிகளை குறிக்கும். மும்மணிக்கு மற்றொரு பெயர் திரி சரணம். இந்த திரிசரங்களில் சரணடைதலை பற்றி புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு நான் புத்தரை சரணடைகிறேன் என்று பொருள்.
புத்தர் ஒருபோதும் யாரையும் தன்னிடமோ, பிறரிடமோ, ஏன் கடவுளிடமும் கூட சரணடையச் சொல்லவில்லை. காரணம் அவர் கடவுள் கோட்பாட்டை எங்கும் வலியுறுத்தியதும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அதன் காரணமாகத்தான் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவை போதிக்கும் தன்மையில் பௌத்தம் இருப்பதால் தெளிவு ஏற்பட்டவர்கள் பௌத்தத்தின்பால் ஈடுபாடு கொண்டு திரும்புகின்றனர்.
அயோத்திதாசர் பண்டிதர், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, பேராசிரியர் லட்சுமி நரசு, டாக்டர் அம்பேத்கர் என்று பலரும் பௌத்தத்தை அதன் இயல்பு தன்மையுடன் அணுகினார்கள். இதன் காரணமாகப் பண்பாட்டு அளவில் பௌத்த புரட்சியும் ஏற்பட்டு வருவதைக் காண முடியும்.
இங்கு புத்தம் சரணம் கச்சாமி என்னும் நூல் ஒரு மாற்றத்தைத் தொடங்கி வந்துள்ளது. குறிப்பாகப் புத்தர் அன்பு ஒன்றே அனைவருக்கும் நன் மருந்து. அன்பும், கருணையும் மட்டும்தான் இவ்வுலகிற்குத் தேவை. அதனால் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
இந்த நூலிலும் புத்தரின் வாழ்க்கை முதல் மகாமங்கள சுத்தம் ஈராக மொத்தம் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்பில் அமைந்த கட்டுரையும் அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவை. பௌத்தத்தை விரும்பி கற்போருக்கும், பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி. அந்த வகையில் பௌத்தம் என்பது என்ன? எனும் பத்தாவது தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை மிக செய் நேர்த்தியாக இப்படைப்பை ஆசிரியர் ஆக்கியுள்ளார். அதில் பௌத்தம் என்பதற்குச் சரியான பொருளை எடுத்துக் கூறி பௌத்தத்தின் புனித நூலான திர்ப்பிடத்தை பற்றி எளிமையான மொழியில் எல்லோரும் அறியும் வகையில் விவரிக்கிறார்.
அதேபோன்று அத்தியாயம் ஆறில் அமைந்த கட்டுரை உயர்வெய்திய புத்தர் தம்மத்தை எடுத்துரைக்கிறார். அதில் புத்தர் வருகை கபிலவஸ்து நகர் முழுவதும் செய்தியாக பரவியது. இல்லறத்தை துறந்து துறவறமேற்று பூரண மெய்ஞானமுற்று தனது இலக்கை அடைந்து விட்ட கபில வஸ்து நாட்டின் முன்னாள் இளவரசர் சித்தார்த்த புத்தராக அரண்மனைக்கு வருகிறார். ஒவ்வொரு இல்லத்திலும் இச்செய்தி பேசப்பட்டது. சுத்தோதனாரும், மகா பிரஜாபதியும், அவர்களின் உற்றார் உறவினர்களுடன், அமைச்சர்களுடன் செல்லும் வழியெல்லாம் புத்தராய் தர்மத்தைப் போதித்த படி கபில வஸ்துவில் உள்ள அரண்மனை அருகே வருவதை அரசர் கண்டபோது புத்தரின் பெருமைமிக்க தோற்றத்தாலும் அழகான ஈர்க்கப்பட்டு மனம் மகிழ்ந்து பேசவியலாமல் நிலையுற்றார்கள் (பக்.54) இந்த பதிவுவை படிக்கும்பொழுது நம் மனம் பரசும் அடைவதைக் காண முடியும்.
இப்படி ஒவ்வொரு பக்கங்களிலும் ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் அனுபவிப்பதைப் போன்றே அதை கட்டுப்படுத்தும் விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்நாளும் இன்புற்று இருக்க இது போன்ற நூல்கள் பல்கி பெருக வேண்டும்.
இந்நூலை ஆக்கி தந்த பௌத்த பேரறிஞர் ஐயா அன்பன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : உபாசகர் E.அன்பன்
விலை : ரூ. ₹100
வெளியீடு : திரபீடக தமிழ் நிறுவனம்
89,மூன்றாவது தெரு,
மல்லீசுவரி நகர்,
மாடம்பாக்கம்,
சென்னை – 126
பேசி: 9445369542.
நூல் அறிமுகம்: அ. மார்க்ஸின் ’இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்’ – சு. அழகேஸ்வரன்
பிளவுவாத அரசியலுக்கு எதிரான நூல்
சமீபத்தில் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் என்ற நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் 1970 களில் ஏற்பட்ட தாராளவாத பொருளாதாரவாதத்தின் வீழ்ச்சி, அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு குறித்த அச்சம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு முதலியவை மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறுகிறது. மேலும் தேசியம் என்பதின் மீதான ஈர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இடத்தை மதவாத தேசியம் கைப்பற்றியுள்ளது. இந்த மதவாத தேசியம் மதங்கள் தாம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அதிகாரம் பெறுவதாகவும், அதுவே சிறுபான்மையாக உள்ள இடங்களில் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி துன்புறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. எனவே மதங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்கிறது இந்த நூல் முன்னுரை.
அத்துடன் தமிழகத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடுகளைத் தாண்டி கல்வியைப் பொது சொத்தாகியதால் சிறுபான்மை மதத்திற்கும் பிறருக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியது. தவிரவும் திராவிட இயக்கம் சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை பேணியதால் தமிழகத்தில் சமயம் பொறை நிலவியது. இதுவே மதவாத சக்திகள் தமிழகத்தில் இன்று வரை காலூன்ற முடியாமல் தடுத்து வருகிறது என்று தொடங்கும் இந்நூல் மதங்களின் தோற்றம், பரவல் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த புதிய பார்வையை வழங்குகிறது.
இதற்கு பௌத்த மற்றும் இந்துமத ஆய்வாளர் டேவிட் கெல்னரின் மனித வாழ்வில் மதங்களின் பங்கு குறித்த கருத்துக்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மானுட வாழ்வில் மதத்தின் பங்கு இறை நம்பிக்கை, இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதுடன் முடிவடைவதில்லை. அதற்கும் அப்பால் பிறந்த குழந்தையை ஆசிர்வதித்து, பெயரிட்டு அதைச் சமூக உறுப்பினர்களில் ஒருவராக ஏற்று பின்னாளில் அவரது திருமணத்தை ஆசீர்வதித்து அந்த தம்பதியினரை குடும்பமாக அங்கீகரிக்கிறது. மதத்தின் அந்த ஏற்புகளுக்கு அரசும், சட்டங்களும் சட்டபூர்வ நிலைமை வழங்குகிறது. இவற்றையே நாம் கெல்னர் கருத்துக்களின் சுருக்கமாகக் கொள்ளலாம். மேலும் இவையெல்லாம்தான் மதத்தை எளிதில் முடிவுக்கு கொண்டுவர முடியாமைக்கான காரணங்களாக உள்ளதாகவும் இந்நூல் சுட்டுகிறது.
இந்து மதம்:
இந்து மதத்தின் ஆகப்பெரிய பலவீனம் அதன் தோற்றத்திலேயே அடங்கியுள்ளது. அது வருண வேறுபாட்டில் தொடங்கி சாதி, தீண்டாமை ஆகிய அனைத்திற்கும் நடைமுறையில் மட்டுமின்றி கோட்பாடு ரீதியாகவும் இடம் கொடுத்தது. மேலும் இந்து மதத்திற்கு மறைநூல் ஒன்று இல்லாததின் காரணமாக இந்து மதத்தை ஏற்றவர்கள் முன்வைத்த கருத்துக்களில் பெரிய வேறுபாடுகளைக் காண முடிகிறது என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.
மேலும் அயோத்தியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை முன்வைத்து, இராமர் கோவில் இடிக்கப்பட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று இந்துத்துவவாதிகளின் உற்சாகமாக வாதிட்டதை இந்நூல் மறுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைத்த தூண்கள் முதலானவை பௌத்த கட்டுமானங்களில் உள்ள தூண்களில் பானியிலேயே உள்ளன. எனவே அவற்றை பாதுகாத்து வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலுமிருந்து ஒலித்ததை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
அவற்றுடன் இந்துமத காப்பிய வர்ணனைகள் மற்றும் துர்கா பூஜை குறித்த சர்ச்சைகளுக்கும் இந்நூல் எதிர்வினை ஆற்றுகிறது. இந்துமதக் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் மிகவும் தொன்மையானவை. அவை மத நூல்கள் அல்ல. அந்த காப்பியங்களில் பெண்களின் அங்க அழகுகள் வர்ணிக்கப்பட்டுள்ளது ஒரு காப்பிய மரபின் அடிப்படையில்தான். இந்த மரபு தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும் தொடரத்தான் செய்கிறது. எனவே இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் குறித்த வர்ணனைகளை ஆபாசங்களாகப் பார்க்கக்கூடாது.
அதேவேளையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் அரசியல் சார்ந்தே இவற்றின்மீது விமர்சனங்களை வைத்தார்கள். அந்த அரசியலும் நமது சூழலுக்கு தேவையான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.
அதேபோல் அசுரகுலத் தலைவன் மகிஷாசுரனை கொன்றொழித்த மகிஷாசுர மர்தினியை (துர்கை) கொண்டாடும் வகையில் துர்கா பூஜை நடத்தப்படுகிறது. உண்மையில் ஓரங்கட்டப்பட்ட உள்நாட்டு மக்களை கொன்று ஒடுக்கியதை விவரிப்பதுதான் இந்த மகிஷாசுரன் மர்த்தினி வரலாறு. இதற்கு மாறான கதையைச் சொல்லி துர்கா பூஜை கொண்டாடுவது எம் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவே உள்ளது என்று பழங்குடியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களில் உரிமைகளுக்காக நிற்பவர்கள் சொல்லி வருகிறார்கள். அத்துடன் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் எல்லைப்பகுதிகளில் மகிஷாசுரனை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஆனால் இதே கருத்தை பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நியாயப்படுத்தி அன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி நாடாளுமன்றத்திலும் பேசினார். இவை அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது என இந்நூல் வாதிடுகிறது.
சமணம்:
உயிர்ப்பலிகளை ஏற்றுக்கொண்ட கங்கைச் சமவெளி வைதீகம், பௌத்தம்-சமண எழுச்சிக்கும் பிந்தைய காலத்தில் அவற்றை கைவிட்டன. உயிர்ப்பலி மறுப்பு எனும் கொல்லாமை உட்பட எளிய மக்களின் பசிப்பிணி அகற்றள், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைதள் ஆகிய கொள்கைகளை சமணம் மட்டுமே முழு உறுதிப்பாட்டுடன் கடைப்பிடித்தது. எனவே பிற மதங்களுடன் ஒப்பிடும்போது, சமணம் வீழ்ச்சி அடைவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. ஆனாலும் சமணம் இந்தியா முழுவதும் எண்னையும், எழுத்தையும் பரப்பியது. பிராமி எனும் தொல் வடிவ எழுத்தை இந்தியாவிற்கு கொடையாக அளித்தது போல் தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்களை வழங்கியது. பாட்டுக்களை சீர்களாகப் பிரிப்பது, எழுத்து, சொல்லாராய்ச்சி மற்றும் அகராதி உருவாக்கப் பணிகளை சமணமே செய்தது என்பதை இந்நூல் மீள் பதிவு செய்கிறது. மேலும் பாஜக எம்பி தருண் விஜயும், துக்ளக் ஆசிரியர் சோ வும் திருக்குறளை இந்துத்துவ வலைக்குள் கொண்டு வர முயற்சித்ததை சுட்டிக்காட்டி அது சமண நூல்தான் என்று நிறுவுகிறது.
பௌத்தம்:
பௌத்தம் நீண்டநாள் நீடித்ததற்கு காரணம், அதை மீளுருவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள், பண்டைய பொருளாதாரத்திலும், இலக்கண உருவாக்கத்திலும் பௌத்தத்தின் பங்களிப்புகளை இந்நூல் விளக்குகிறது.
தொடக்க கால பௌத்தம் இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்களை பொருத்தமட்டில் சமூக சடங்குகளுக்கும், பக்திக்கும் இடமற்ற மறுவாழ்வு ஒன்றை மட்டுமே முன்வைத்தது. ஆனால் அது வெகுஜனத் தன்மையை அடைந்தபோது சமூக ஏற்பை அளிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இருந்தது. எனவே இந்த காலியிடத்தை பூர்த்தி செய்ய பிற மதக் கருத்துக்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டது. இதன் காரணமாகவே பௌத்தம் ஒப்பீட்டு ரீதியில் அதிக காலம் நீடித்தது.
மேலும் தமிழகத்தில் பௌத்த மீளுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே கெல்னர் கூறிய கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
பௌத்தம் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களைப் பொருத்தமட்டில், அந்த காலத்தில் வணிகர்கள் தொலைதூரத்திலிருந்து வணிகம் செய்து வந்தனர். அவர்கள் பௌத்த துறவிகள் வசித்த குகைளுக்கு பொருளாதார உதவிகளை செய்தனர். பௌத்த மடங்கள் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாகவும், வணிகர்களின் பொருட் கிடங்குகளாகவும் இருந்தன. பின்னர் இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கியதில் பௌத்தம் முக்கியப் பங்காற்றியது. இந்த குடியிருப்புகள் வழியாக பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. இது அடிப்படை பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் தொலைதூரம் வணிகம் முடிவுக்கு வந்தது. எனவே தமது மதக் கடமைகளையும், பொருளாதாரச் செயல்பாடுகளையும் நிறைவேற்றி முடித்திருந்த பௌத்த மடங்கள் மறையத் தொடங்கின.
தமிழ் இலக்கண உருவாக்கத்தைப் பொருத்தமட்டில் பௌத்த மரபில் வந்த இலக்கண நூலான வீரசோழியம் எட்டு சுவைகளுடன் ‘சாந்தம்’ என்ற சுவையையும் கூடுதலாக இணைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் பௌத்த நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் ஏற்பட்ட மொழி மாற்றங்களை ஏற்று, தமிழ் இலக்கணத்தை இந்நூல் விளக்குகிறது.
சைவம்:
தமிழகத்தில் சைவ எழுச்சி பெற்ற பின்புலம், முஸ்லிம் மன்னர்களால் கட்டப்பட்ட காசி மடம் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளது.
சைவக் குரவர்களில் ஒருவரான குமரகுருபர சுவாமிகள் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு சைவ தத்துவங்களை விளக்கியதில் கவர்ந்த ஒளரங்கசீப்பின் தமையன் தராஷிகா காசியில் ஒரு மடத்தை கட்டிக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுவாமிகள் நேபாளத்தில் சாரங்கி என்ற ஊரில் துணை மடத்தை அமைத்தார். ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியால் உருவாக்கப்பட்ட குமரகுருபர மடம் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. ஆனால் சாரங்கி மடம், சைவ மடங்களின் உள்விவகாரங்களின் காரணமாக அவர்களது கையை விட்டு போய்விட்ட உண்மைகள் தமிழறிஞர் கு.அருணாச்சலத்தின் நூலை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என சித்தரித்ததுடன் சமண பௌத்த நூல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்கிற மும்மூர்த்திகள் மற்றும் மாணிக்கவாசகர், மெய்கண்டார் முதலான சைவர்களின் பணிகளில் காரணமாக தமிழ் சைவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் வசமானது. இந்தப் பின்னணியில்தான் சைவம் மடங்கள் பெரும் செல்வத்துடன் உருவாக்கப்பட்டது.
இஸ்லாம்:
இஸ்லாம் வணிகச் சூழலில் உருவான மதம். சம்பாதித்த பொருளில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அளவுக்கு மீறிய சொத்து சேகரிப்பு குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் சமூக சமத்துவத்தை பொறுத்தமட்டில் இஸ்லாமிற்கு நிகராக எந்த மதத்தையும் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் மேலை கிறிஸ்துவ வரலாற்றறிஞர்கள் ‘இஸ்லாம் வாளோடு மதம்’ என்று கதை பரப்பியதை தற்போது இந்துத்துவவாதிகள் செய்து வருகிறார்கள். உண்மையில் மதமாற்றம் என்பது இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒரு மதத்தில் ஈர்ப்பு கொண்டு அதை ஏற்பது முதல் கட்டம். இரண்டாவது நிலையில்தான் அவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகள் அனைத்தையும் மதித்து இறுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். இதன்படி பார்க்கும்போது இந்தியாவில் இஸ்லாம் படிப்படியாகத்தான் பரவியது. முஸ்லிம் அரசுகள் இஸ்லாம் பரவலில் பங்கேற்ற போதிலும் அதை வன்முறையில் செய்யவில்லை.
இன்று இஸ்லாம் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் அது இஸ்லாமுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய புனித நூல்கள் மறு வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் திருக்குர்ஆனில் தந்தைவழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என்று அஸ்மா பர்னால் முன்வைக்கும் வாதங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. மதத்தில் நின்று உரையாடுவதற்குரிய ஒரு உரைசார் உத்தியை இவரது வாசிப்பு வழங்குவதில் இதுவே முக்கியமான போக்காக இனம் குறிக்கப்படுகிறது.
அடுத்ததாக, இன்று உலகம் முழுவதும் பரவி வரும் தப்லிக் ஜமாத் இயக்கம் அரசியல் பற்றி பேசாமல் ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இவ்வாறாக அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று இஸ்லாம் அறிஞர்களில் சிலர் விமர்சித்து வருவதை இந்நூல் கவனப்படுத்துகிறது. ஆனால் இவ்வியக்கம் பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக உள்ளது என்று குற்றஞ்சாட்டி சவுதி அரேபிய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. எனவே இந்த இயக்கம் குறித்து கூடுதல் வாசிப்பு தேவை.
கிறிஸ்தவம்:
அடிமைப் பட்டவர்களின் மதமாக உருப்பெற்ற கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக, காலனியாதிக்க மதமாகத் தோற்றம் கொண்டு மிகப்பெரிய மானுட அழிவிற்கு காரணமானது என்று கூறும் இந்நூல், டால்ஸ்டாய் எழுதிய நூலை திருச்சபை ஏற்காததற்கான காரணங்களை விளக்குகிறது. இயேசுவிற்கு பிறகு உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தை தொடங்கியது. ஆனால் பின்னர் மத அதிகாரமும், அரசதிகாரமும் தனது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள மனிதர்களை அற வாழ்விலிருந்து விலக்கி பொருளாதாய வாழ்விற்கு உரியவர்களாக மாற்ற விரும்பியது. இயற்கை அதீதங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மீண்டும் புகுத்தி இயேசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவன் கட்டளைகளை கரைப்படுத்தியிருந்தன என்பதை டால்ஸ்டாய் கண்டுகொண்டார். எனவே இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை நீக்கி தூய்மை செய்து அதை ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்ற நூலாக எழுதினார். அதனால்தான் திருச்சபை அதை ஏற்கவில்லை.
அடுத்ததாக, தமிழகத்தில் சகோதரி லூசியானா திருச்சபையின் ஆதரவுடன் ஆற்றிய பணிகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேவையாற்றிய ஐம்பது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு யாரும் மாறவில்லை என்பதை கவனப்படுத்துகிறது. மேலும் பிரஷ்யாவிலில் பிறந்து, தரங்கம்பாடிக்கு வந்த ஸ்டுவர்ட்ஸ் பாதிரியார் பணிகளையும், அவரோடு தொடர்புடைய வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள ஆ.மாதவையாவின் ‘கிளாரிந்தா’ நாவல் குறித்த திறனாய்வும் இடம்பெற்றுள்ளது.
இறுதிப்பகுதி வா.வே.சு. ஐயரால் எழுதப்பட்டுள்ள நூல் குறித்தது. ஔரங்கசீப்பிற்கு எதிராக போராடிய குருகோவிந்த் சிங் குறித்து எழுதப்பட்டுள்ள அந்த நூல் இஸ்லாத்திற்கு எதிராக மத வெறுப்பையோ, அவதூரையோ வெளிப்படுத்தாமல், அந்த மதத்தின் நெறிகளுக்கு உட்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை விளக்குகிறது.
இவற்றையெல்லாம் தொகுத்து பார்க்கும்போது, இந்நூல் மதம் குறித்த மார்க்ஸ் கூறிய கருத்துக்களை இந்தியச் சூழலில் நின்று விளக்குவதாகவே இருக்கிறது. அறிவொளி காலத்தில் எழுந்த தத்துவப் போக்கு மதத்தையும், தத்துவத்தையும் பிரித்து நிறுத்த வேண்டும் என்றது. தத்துவியலார் எனில் துர்க்கைம் மதத்தின் இடத்தை தேசியம் கைப்பற்றி விட்டது என்றார். சமூகவியலாளர்களோ மதம் என்பதின் இடத்தை அரசியல் கைப்பற்றும் என்று நம்பினார்கள். ஆனால் மார்க்ஸ் மட்டுமே மதத்தை அவ்வாறு குறைத்து மதிப்பிட முடியாது என்றார். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் தொடரும் வரை மதமே நிவாரணியாக அமையும். எனவே மனிதத் துயரங்களை எதிர்ப்பதற்காக வர்க்க ஒற்றுமையைக் கூர்மைப்படுத்துவதுதான் நமது பணி என விளக்கினார் என்றும், அந்த கருத்து நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறது இந்நூல்.
மேலும் இந்நூல் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் மதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை நவீன கருத்தாக்கங்கள் ஊடாக விரிவுபடுத்தி புதிய எல்லைகளை கண்டடைகிறது. அத்துடன் இந்துத்துவவாதிகளாலும், பொதுப் புத்தியில் நின்று பேசுபவர்களாலும் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் போது, இடையீடு செய்யப்பட்டவைகளின் தொகுப்பாகவும் இந்நூல் திகழ்கிறது. எனவே பிளவுவாத அரசியலை முன்னெடுக்கத் துடிக்கும் சக்திகளை எதிர்கொள்வதற்கு இந்நூல் பயன்படும் மதிப்பு கொண்டது.
சு. அழகேஸ்வரன்
அலைபேசி – 9443701812
நூல்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
விலை: 190
பக்கங்கள்: 214