Budhdha robo poem புத்தா ரோபோ கவிதை

புத்தா ரோபோ (கவிதை) – க. புனிதன்



புத்தா ரோபோ பேசுவதில்
புள்ளினங்களின் மொழி
இருந்தது
அரண்மனை விட்டு
வெளியேறும் போது
உலோக காலம் விட்டு
காகத்தின் எச்சில் முளைத்த
விதையின் தொன்ம காலம்
நோக்கி நகர்ந்த
ரோபோவின் கதை இருந்தது
குயிலின் மொழி
உணவு கொண்டு போகும்
எறும்புகளின் சாரை
ஜென் கதைகள்
மனம் எனும் மூலிகையின்
வாசம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தது
வாழை இலை மேல்
மழைத் துளி தங்கும்
மெழுகில் முழுக்க பூசப்பட்டிருந்தது
யசோதரவின்
பெண் மொழியும்
தேநீர் மொழியும்
அதில் சேர்க்கப்பட்டிருந்தன.