ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும். - ஆயிஷா இரா நடராசன் ஹிரோஷிமா நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் குறித்து இனி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஜெர்மன் தேசத்திலிருந்து ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருந்த கிருத்துவ பாதிரியார் "REV HUBERT…
மார்பக புற்றுநோய் : மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? புதிய கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய் : மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? புதிய கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய் : மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? புதிய கண்டுபிடிப்பு   - பேரா.சோ.மோகனா மார்பக புற்றுநோய் (Breast cancer): மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? இது தொடர்பான ஒரு புதிய கண்டுபிடிப்பு ஜெனிவா பல்கலைக்கழக ஆய்வாளர்களால்…
கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) | மனித பாப்பிலோமா வைரஸ் (HPV - Human Papilloma Virus) | அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்

கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) – பேரா. மோகனா

கருப்பை வாய் புற்றுநோய் கருப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பையின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ள செல்களில் ஏற்படும் புற்று நோயாகும். கருப்பையின் வாய்,கருப்பையின் வெளிநோக்கி இருக்கும். இது மிகவும் அகலம் குறுகிய அடிப்பகுதியாகும். இந்த கருப்பை வாய்தான் கருப்பையை பிறப்பு உறுப்புடன் இணைக்கிறது.…
ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் | Scientists working to detect cancer using sound waves

ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்

ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் - ஜோயல் பி. ஜோசப் தமிழில்: மோசஸ் பிரபு புற்று நோய்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  இந்த முறையில் அல்ட்ராசவுண்ட் (மீயொளி) பயன்படுத்தி நமது உடலின் திசுக்களில்…
 உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி | World Famous Indian Biologist Buddhisagar Tiwari - Ayesha Era.Natarasan - https://bookday.in/

உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி

தொடர்- 6 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100  உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி (Buddhisagar Tiwari) இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் பில்லியன் கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை மரணம் என்பதா தற்கொலைகள்…
எலும்பையும் விட்டுவைக்காத புற்று நோய் கட்டுரை – ம.மோகரன்

எலும்பையும் விட்டுவைக்காத புற்று நோய் கட்டுரை – ம.மோகரன்




மனித உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சகல பகுதிகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டது புற்றுநோய். இந்த பாதிப்பின் தீவிரம் வலிமையான எலும்பையும் விட்டு வைப்பதில்லை. அப்படி எலும்புகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம்…

எலும்புகளில் கட்டிகள் உருவாகும் போது எலும்பு புற்றுநோய் பாதிப்பு ஆரம்பமாகிறது. கை அல்லது காலிலுள்ள நீளமான எலும்பிலேயே இது பொதுவாக உருவாகிறது. வளர வளர இது சாதாரண எலும்பு செல்களை அழித்துவிடுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. எலும்பு புற்றுநோயானது குழந்தைகள் மற்றும் இளவயதினரிடையே அதிகம் காணப்படுகிறது.

Cancer that spares no bones Essay - M.Mogaran எலும்பையும் விட்டுவைக்காத புற்று நோய் கட்டுரை - ம.மோகரன்

வகைகள் ?
ஆஸ்டியோ_சார்கோமா
(Osteosarcoma)
பெரும்பாலான மக்களை பாதிக்கும் எலும்பு புற்றுநோய் வகை இது.
10 முதல் 30 வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கிறது. கைகள், கால்கள் அல்லது இடுப்பெலும்பு பகுதிகளையே அதிகம் தாக்கக்கூடியது இது.
ஈவிங்_சார்கோமா
(Ewing sarcoma)
இதுவும் குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிற வகை. கைகள், நெஞ்சு, கால்கள், இடுப்பெலும்பு மற்றும் முதுகு பகுதியில் இதன் பாதிப்பு அதிகமிருக்கும்.
கோன்ட்ரோ சார்கோமா
(Chondro sarcoma)

40 வயதுக்கு மேலானவர்களை பாதிக்கும் புற்றுநோய் வகை இது. கைகள், கால்கள், இடுப்பெலும்பு பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும்.

லுக்கிமியா(Leukemia)

இது எலும்பு மஜ்ஜை மற்றும் சில எலும்புகளின் திசுக்களை தாக்கும் புற்றுநோய் வகை. ஆனாலும் இதை எலும்பு புற்றுநோயாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை.

அரிய வகைகள் ?

மேலே குறிப்பிட்ட வகைகளை தவிர, வேறு சில அரிய வகை புற்றுநோய்களும் உண்டு. அவை பெரும்பாலும் பெரியவர்களையே தாக்குபவை. உதாரணத்துக்கு ஜயன்ட் செல் டியூமர்(Giant cell tumor) வகை புற்றுநோய் பாதிப்பானது பெரியவர்களின் முழங்கால் பகுதியை தாக்க கூடியது.

* கோர்டாமா (chordoma) என்கிற இன்னொரு அரிய வகை புற்றுநோய் மண்டையோட்டு பகுதியின் அடிபாகத்தையோ, டெயில்போன் எனப்படுகிற தண்டுவட எலும்பு வால் பகுதியையோ பாதிக்கக் கூடியவை.

* ஃபைப்ரோ சார்கோமா (Fibrosarcoma) என்றும் ஒரு வகை இருக்கிறது. இது முதியவர்களை பாதிக்கும் புற்றுநோய். முழங்கால், இடுப்பு மற்றும் தாடை பகுதிகளை பாதிக்க கூடியது. ஏற்கனவே ஏதோ ஒரு புற்றுநோய் தாக்கி, அதற்காக ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.

யாருக்கெல்லாம் ரிஸ்க் இருக்கிறது ?

* எலும்புகளுக்குள் உலோகங்கள் பொருத்தி கொண்டவர்களுக்கு…. அதாவது எங்கேயாவது விழுந்து அடிபட்டு எலும்பை உடைத்து கொண்டதன் விளைவாக அந்த எலும்பில் மெட்டல் இம்பிளான்ட் செய்து கொண்டவர்களுக்கு.

* ஏற்கனவே புற்றுநோய் பாதித்து, அதற்கான ஆங்கில மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும்,

* அதிகளவிலான கீமோ ,ரேடியேஷன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்களுக்கும்.

* எலும்புகள் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும். ஆனால் கோன்ட்ரோ சார்கோமா வகை புற்றுநோய் மட்டும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு அதிகம் பாதிக்கும்.

வேறு என்னவெல்லாம் காரணங்கள் ?

மரபணு தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் எலும்பு புற்றுநோய் தாக்கலாம். ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது கண்களை பாதிக்கிற புற்றுநோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், Li-Fraumeni syndrome and Rothmund-Thomson syndrome உள்ளவர்களுக்கும்கூட எலும்பு புற்றுநோய் தாக்கலாம்.

அம்பிலிகல் ஹெர்னியா பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இது மிக மிக அரிதானது என்பதால் பயப்பட தேவையில்லை.

அறிகுறிகள் ?

எலும்பு புற்றுநோய் இருந்தால் தென்படும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று வலி.

வலி…. இதுதான் முதல் அறிகுறி. இதன் தீவிரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். அதாவது சிலருக்கு மெதுவாக ஆரம்பிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதி மென்மையானது போன்று இருக்கலாம். வேறு சிலருக்கு தீராத வலி இருக்கலாம்.

ஆரம்பத்தில் வலியானது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால் இரவு நேரத்தில் கடுமையான எலும்பு வலியை சந்திக்கக்கூடும் அல்லது எலும்புகளின் உதவியுடன் ஒரு வேலையை செய்யும் போது, அதாவது நடந்தால் கடுமையான கால் வலியை சந்திக்க நேரிடும். அதிலும் எலும்பு புற்றுநோய் தீவிரமாக இருந்தால், எந்நேரமும் வலியை மோசமாக சந்திக்க வேண்டியிருக்கும்.

வீக்கம்

கால் அல்லது கைகளில் வீக்கம் இருந்து, அவ்விடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் வலி இல்லாமல் இருந்தால், எலும்பு புற்றுநோய் இருப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளில் புற்றுநோய் இருந்தால், தொண்டையின் பின்புறத்தில் கட்டிகள் உருவாகி, எந்த ஒரு உணவுப் பொருளையும் விழுங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் அல்லது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும்.

எலும்பு பகுதிகளில் வலி இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை. மூட்டுவலி, பலவீனம் போன்ற வேறு பிரச்சனைகளின் விளைவாகவும் அப்படி வலிக்கலாம். எனவே தொடர்ச்சியாக வலித்தாலோ, வித்தியாசமாக வலித்தாலோ மருத்துவரை அணுகலாம்.

மற்ற அறிகுறிகள் ?

 * எலும்புகள் உடைவது, எலும்பு புற்றுநோயின் காரணமாக எலும்புகள் பலவீனமாகும். அதனால் அவை மிகச் சுலபமாக உடையலாம்,

* எலும்புகள் இருக்கும் பகுதியில் கட்டிகள் தென்படுவது,

* இரவில் வியர்வை,

* எலும்பைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்துபோவது,

* அதிகமான களைப்பு,

* காரணமே இல்லாமல் உடல் எடை மெலிவது…

* உடல் இயக்கத்தில் சிரமம்.

* எலும்பு முறிவு ஏற்படுதல்.
பல முறிவுகள்.

* பலவீனமான எலும்புகள்.

* அடிக்கடி காய்ச்சல்.

* சோர்வு.

* குறைந்த அளவு செந்நிற இரத்த அணு (இரத்தச் சோகை).

புற்றுநோயின்_நிலைகள் ?

ஸ்டேஜ் – 1

இந்த நிலையில் புற்றுநோயானது எலும்பைத் தாண்டி வேறு எங்கும் பரவியிருக்காது. புற்றுநோய் செற்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்காது.

ஸ்டேஜ் – 2

புற்றுநோய் பரவியிருக்காது. ஆனாலும் செற்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

ஸ்டேஜ் – 3

ஒரே எலும்பில் குறைந்தது இரண்டு இடங்களிலாவது புற்றுநோய் பாதித்திருக்கும்.

ஸ்டேஜ் – 4

எலும்பைத் தாண்டி வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும்.

– ம.மோகரன். புதுச்சேரி

Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனா

உழைப்பாளி கல்லீரல் – பேரா.சோ.மோகனா




Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாஎன்னைத் தெரியுமா?
கல்லீரல் என்றால் ஏதோ சாப்பிட என்று எப்போதும் சாப்பாடு நினைவாகவே இருக்க வேண்டாம். சாப்பாட்டுடன் தொடர்புடைய நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். ஓர் ஆச்சரியமான உறுப்பு என்றும் கூட கூறலாம். ஏன் தெரியுமா? “எம்பேரு கல்லிரல்பா.! நா.. ஒனக்காக முக்கியமா 500 வேலை செய்யறேன்பா. நா அதே செய்யாட்டி நீ போயிடுவே..! அத்தோட கொசுறா சும்மா 35 , 000பணிகள் ஒன் தேவைக்கு ஏத்தாப்பல செய்யறேன்பா..!” இப்படிதான் கல்லீரலைக்கேட்டால் சொல்லும்.

நான் யார் ..நான் யார் ? மாயாவி
நம்ம கல்லீரல் பயங்கரமான உழைப்பாளி, சுமார் 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறது. இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் கல்லீரலின் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காதவகையில் அனாயசமானது. ஆமாப்பா, இதன் 80 % சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல். அதுபோலவே, 80 % வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனா

உடலின் பெரிய உறுப்பு
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போதான். இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது. வலது பகுதி, இடது பக்கத்தைவிடப் பெரியது. கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள். அதாவது 1400 கிராம்..! அதற்காக கல்லீரல் இடத்தில் மூளையையும், மூளை உள்ள இடத்தில் கல்லீரலையும் வைக்க முடியாது.

உடலின் ஆற்றல் களன் நானே !
நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிற்சாலையும் இதுதான். ஆமாப்பா..! நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும், தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார்தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப்பதும் கல்லீரலில்தான். உடலின் அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம் செய்வதும் இவர்தான்.

நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது நீங்கள் ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல் தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.

அபாயம் அகற்றும் ஆபத்பாதவன்! உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன் இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல், உடனடியாக வெளியேற்றுவது கல்லீரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும், விஷம் குடித்தாலும் அவற்றை வெளியே அனுப்பும் வேலையைச் செய்வது இவர்தான். நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற உதவுகிறது. கல்லீரல் மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்காவிட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாகொழுப்பு சீரணம் நம்மாலே
அண்ணாச்சி, நமக்கெல்லாம் வறுத்தது, பொரித்தது, சிப்ஸ், உருளை வறுவல் என்றுதான் பிடிக்கும். அனைத்து உணவுப் பொருளையும் நல்லா, நெறைய எண்ணெய் ஊற்றி, சும்மா மொறு மொறுன்னு வறுத்து சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்ற ரகம் நாம.! ஆனா நீங்க என்ன எண்ணெய் பொருள் சாப்பிட்டாலும் சரி, இந்த பெரீய்ய தலீவன் கல்லீரல் இல்லாட்டி ஒண்ணும் ஆவாதுங்கோ..! ஆமாம், எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது இவர்தான். இதிலுள்ள பித்தப்பையின் சுரப்பி நீரான, பித்தநீர்தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்பவர்.

மஞ்சள் காமாலை;
அதனால்தான், மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக, பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை, என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது. ஆனா நாம என்ன செய்வோம் தெரியுமா? நாட்டு வைத்தியரிடம் சென்று, மருந்தை வாங்கி, அதனை நல்ல கெட்டியான ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடுவோம். நல்ல நாட்டுக்கோழி கறி வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவோம். அத்தோடு, கல்லீரலுக்கு நல்ல வெடிகுண்டு வேட்டு வைப்போம்.

வைட்டமீன்களின் சேமிப்புகளன்:
கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித்தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E & k யின் சேமிப்பு கிடங்கும் இதுதான். அது மட்டுமில்ல நண்பா, உங்களுக்கு ரொம்ப கொழுப்பு இருக்கிறதா? கோபித்துக் கொள்ளாதீர்கள்..! கொலஸ்டிராலைத்தான் சொல்கிறேன். அதன் உற்பத்திக்களனும் இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!
Worker Liver Article by So Mohana உழைப்பாளி கல்லீரல் பேரா.சோ.மோகனாகல்லீரல் பாதுகாப்பு
கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப்பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். இதனைக் கண்டறிவது எளிதே.! சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று, மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல் உருவாக வழி வகுக்கும்.

பாதிக்கப் பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் கூட புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய இந்தியாவில் ரூ 10-12 லட்சம் ஆகிறது. ஆனால்அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சரியாக கவனித்தால் 89% பபேர் ஓராண்டு வரையிலும், 75% பேர் 5ஆண்டுகள் வரையிலும் காப்பாற்றப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் புதிய கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 10,00,000. உலகில் ஆண்டுதோறும் 35 மில்லியன் மக்கள் கல்லீரல். நோயினால் இறந்து போகின்றனர். இந்தியாவில் இறப்பை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள் பட்டியலில் கல்லீரல் நோய் உள்ளது.

இப்போது கல்லீரல் புற்றுநோயும் உயிர்குடிப்பான் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் இப்போது இது அதிகம் வருகிறது என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

▪ 1997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது.
▪ அப்பல்லோ மருத்துவ மனையில் மட்டுமே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 க்கு மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
▪ அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25,000.
▪ இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு: 2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009: 2048. இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர்..?

பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

திரிபரா பீஜேபீ முதல் அமைச்சர் முதல் பீஜேபீ எம்பி துறவி சாத்வீ பிரயாக் வரை பல பீஜேபீத் தலைவர்களும் பசுப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களும் ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சியாளர்களும் பதஞ்சலி உள்ளிட்ட பிரபல தயாரிப்பாளர்களும் பசுவின் சிறு நீர் அடர்விலோ... நீர்த்த வடிவிலோ…
மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான் – புற்றுநோய் படுக்கையில் சிரிப்பு – இன்னசெண்ட் | ராம் கோபால்

மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான் – புற்றுநோய் படுக்கையில் சிரிப்பு – இன்னசெண்ட் | ராம் கோபால்

இன்னசென்ட், மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான். மணிசித்திரதாழ் படத்தில் பேய்க்கு பயப்படும் அந்த ஒரு சீன் போதும் (இங்கே சந்திரமுகியிலும் நம்ம தல வடிவேலு கலக்கி இருப்பார்). அந்த மனிதருக்கு திடீரென்று புற்று நோய் வருகிறது. பின்பும் அவரது மனைவிக்கும்…