“பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியை கேட்டு துள்ளி குதித்தாள்”, யாழினி.
கிறுத்து பிறப்பதற்கு முன், கிறுத்து பிறப்பதற்கு பின் என்பது போல கொரோனா காலம் என்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. உலகத்தை முடக்கி வைத்த காலத்தை திறந்து வைத்தது இந்த செய்தி. அது தான் இன்று யாழினியின் மகிழ்ச்சிக்கும் துள்ளளுக்கு காரணம்.
“அம்மா அம்மா இங்க வாம்மா ஸ்கூல் திறக்க போறாங்க ஜாலி ஜாலி” ……
“என் பிரண்ட்ஸ் எல்லாம் பார்பேனே……ஏய்…. என ஒரே கொண்டாட்டம் தான்”, யாழினிக்கு.
உடனே கைப்பேசி எடுத்து, “வைஷாலி நமக்கு நெக்ஸ்ட் வீக் ஸ்கூல் டீ. நியூஸ் பார்த்தியா….”
“ஆமாம் டீ பார்த்தேன். ரொம்ப ஜாலியா இருக்கு டீ. ”
“ஜூம் தொல்லை இனிமேல் இல்லை”
ஆஹா..ஆஹா என தோழிகளின் சிரிப்பு..
கிரவுன்டல விளையாடலாம்..
“ஆமாம் டீ முக்கியமா நம்ம பீட்டி ஸ்டெல்லா மீஸ்ஸை பார்க்கலாம் டீ.”
“ஆமாம் டீ, மிஸ்ஸை பார்த்து எவ்வளவு நாளாச்சு”.
“ஜூம் கிளாஸ்ல எல்லா மிஸ்ஸும், சாரும் வந்து நமக்கு ரம்பம் போட்டாங்க”. ஆனா, நமக்கு பிடித்த பீட்டி மிஸ்ஸைதான் பார்க்க முடியல.’
“நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்’.
“நானும் தான் டீ, என்றாள் வைஷாலி”
யாழினிக்கு ஸ்டெல்லா மிஸ் என்றால் எவ்வளவு பிரியம் என்று வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஸ்டெல்லா மிஸ்ஸுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் அழகு அப்பப்பா.
அவர்கள் கட்டி வரும் காட்டன் புடவை. அதற்கு மெட்சாக தலைக்கு கிளிப்பு. ஒரு சடை போட்டு ஒரு ஒற்றை ரோஜா வைத்து கொண்டு வரும் அவர்களை பார்க்கும் போதே கொள்ளை அழகு.
அதுவும் பீட்டி கிளாஸ் வாரத்தில் இருமுறைதான் வரும். என்ன ஸிஸ்டம் இது? தினமும் விளையாடனும் இல்லை.
பாரதியார் கூட என்ன சொல்லி இருக்கிறார்.
“ஓடி விளையாடு பாப்பா….” என்று தானே சொல்லி இருக்கிறார்.
சில சமயங்களில் மிஸ்ஸிடமே கேட்டதுண்டு.
“ஏன் மிஸ் டெய்லி நமக்கு ஸ்போர்ட்ஸ் பிரியட் இல்லை.”.
அதற்கும் ஒரு ஸ்மையலை உதிர்த்து விட்டு சென்று விடுவார்கள் ஸ்டெல்லா மிஸ்.
“யாழினிக்கு தான் பெரியவள் ஆன, பீட்டி மிஸ்ஸை போல் தானும் ஸ்போர்ட்ஸ் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்பது லட்சியம்”.
யாழினி இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் புதிதாக ஸ்டெல்லா மிஸ் அவளின் பள்ளிக்கு பீட்டி டீச்சராக சேர்ந்தார்கள். எப்போதும் அவர்கள் முகத்தில் சிரிப்பை கண்டிப்பாக அணிகலன்களாக கொண்டு இருப்பார்கள்.
எல்லா ஆசிரியர்களும் பள்ளி பாடங்களை படிக்க வலியுறுத்துவார்கள். ஆனால் ஸ்டெல்லா மிஸ் படிப்போடு சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கவும் சொல்லி கொடுப்பார்.
பிடித்தவை செய்தால் வெற்றி நிச்சயம் என்பார். அதனால் படிப்பை விருப்பத்தோடு படியுங்கள். அப்போது சுலபமாக இருக்கும் என்பார்.
அனைத்து பள்ளி விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக இவர்கள் பள்ளி கலந்து கொள்ள ஏற்பாடு செய்வார்.
யாழினிக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் வர காரணமே ஸ்டெல்லா மிஸ்தான். யாழினிக்கு மட்டுமே அல்ல பள்ளியில் ஸ்டெல்லா மிஸ் சேர்ந்த பிறகு பல தங்க பதக்கம் இவர்கள் பள்ளிக்கு உரித்தானது.
சென்ற வருடம் ஸ்போர்ட்ஸ் பிரியட் போது, யாழினி வயிட் ஸ்கர்டில் ரத்தக் கறை. விளையாடி கொண்டு இருந்த மற்ற பிள்ளைகள் பார்த்து ஏய் யாழினி இரத்தம் டீ என கத்த யாழினி பயந்துவிட்டாள்.
உடனே அங்கு வந்த ஸ்டெல்லா மிஸ். “Girls. Don’t shout…”
எல்லாம் போங்க போங்க என அனைவரையும் விலகி..
“Yazini, Come to my room. Don’t worry. Nothing happened… Come come… என ஒரு சக தோழியாக, தமக்கையாக, தாயாக அரவணைத்து அணைத்து அவர்களின் அறைக்கு அழைத்து சென்றார்.”
யாழினிக்கு வேண்டிய முதல் உதவிகள் புரிந்து… அவளை சமாதானப்படுத்தினாள்
மிஸ் பயமாயிருக்கு., என் அழுத யாழினியிடம் “யாழினி மா.. nothing to worry dear” என ஆசுவாசப் படுத்தினார்
This is natural. ஓவ்வொரு பெண்ணுக்குரிய வளர்ச்சி இது. இது ஒரு உடலியியல் மாற்றம். மாதம் ஒரு முறை உனக்கு இப்படி ஆகும். இதில் பயப்பட ஒன்றும் இல்லை டா.
“Actually speaking it is a gift to ladies yazhini. All our morbids Will be discharged monthly once.”
மிஸ்…
“என்னம்மா பயப்படாதே”
“யாழினி, இந்த நேரத்தில் ஓய்வுதான் அவசியம். பசியெடுத்தால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும், சரியா” என்றார்.
“மிஸ்ஸின் ஆறுதலான வார்த்தைகள் யாழினிக்கு தைரியத்தை நல்கியது.” இது ஒரு இயல்பான நிகழ்வு என்ற புரிதல் யாழினிக்கு உண்டாயிற்று.
அதற்குள் யாழினி அம்மாவிற்கு தகவல் அனுப்ப, யாழினி அம்மா ரம்யா, யாழினி பயந்து போய் இருப்பாளே என பதட்டத்தோடு ஸ்டெல்லா மிஸ் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆச்சரியம், யாழினி தெளிவாக அமர்ந்து இருந்தாள்.
“ஸ்டெல்லா மிஸ் ரொம்ப நன்றி”, என கூறி அவளை வீட்டுக்கு அழைத்து வந்த நிகழ்வு யாழினி கண்முன்னே வந்தது.
அன்றிலிருந்து யாழினி ஸ்டெல்லா மிஸ் நண்பர்கள் ஆனார்கள்.
பள்ளிக்கு வந்தவுடன் பிரேயர்போது யாழினி, ஸ்டெல்லா மிஸ்க்கு குட்மார்னிங் மிஸ் என்று சொன்னால்தான் திருப்தி.
யாழினிக்கு ஸ்டெல்லா மிஸ் ஒரு தோழி.
இருவரின் உரையாடல் போது யாழினி நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.
பள்ளிகள் திறந்தன. யாழினி எதிர்பார்த்த தருணம். ஸ்டெல்லா மிஸ் பிரையர் வரிசைப்படுத்த குட்மார்னிங் என சொல்லி கொண்டே வரும் தருணத்திற்காக காத்து இருந்தாள்.
ஆனால் ஸ்டெல்லா மிஸ் வரவேயில்லை.
அன்று முழு நேர பள்ளி. லஞ் பிரேக் அப்போதான் ஸ்போர்ட்ஸ் ரூம் சென்று பார்க்க வேண்டும்.
அன்று நடந்த பாடங்கள் எதிலும் நாட்டமில்லை யாழினிக்கு.
லஞ் பிரியட் பெல் அடித்தது தான் தாமதம் வகுப்பில் இருந்து ஸ்போர்ட்ஸ் ரூம்க்கு ஓடினாள். அவள் பின்னே தோழி வைஷாலி ஓடி வந்தாள், “யாழினி இருடீ நானும் வரேன் ”
ஆனால் யாழினி காத்திருக்காமல் புள்ளிமான் போல் ஓடினாள்.
ரூம் பூட்டி இருந்தது.
அங்கு இருந்து ஆசிரியர் குழு அமர்ந்து இருக்கும் ரூமுக்கு சென்று கதவின் வெளியே எதிர்பார்ப்போடு கண்களை சூழற்றி சூழற்றி தேடினாள்..
அவளுடைய தேவதை ஸ்டெல்லா மிஸ்ஸை காணவில்லை.
பள்ளியில் வேலை செய்யும் ஆயாம்மா வெளியே வந்தார்கள்
“என்னம்மா இங்க ….. யாரை பார்க்கணும் என்றார்..”
“ஸ்டெல்லா மிஸ்..”
உம்.” யாரை….”
“ஸ்டெல்லா மிஸ்….”
“அந்த மிஸ்ஸை நிறுத்திட்டாங்க தெரியாதா…”வகுப்புக்கு போமா.. போமா என்றார்.
ஆம், “ஆன்லைன் வகுப்புகள் பல ஆசிரியர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது”
கல்லூரியிலும் பேராசிரியர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் புதிதாக சேர்ந்த பேராசிரியர்களை சட்டென்று எந்த முன்னறிவிப்பு இன்று பணி நிறுத்தம் செய்தனர்.
அது பள்ளிகளிலும் தொடர்ந்து. பெரும்பாலும் விளையாட்டு துறை, யோகா, NCC, NSS programme, பரதம், பாட்டு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் & co.ordinators போன்ற பல ஆசிரியர்களை தற்காலிகமாக பணியில் இருந்து விடுவித்தனர்.
முக்கிய செய்தி மாணவர்கள் கட்டணத்தில் எந்தவித சலுகையும் இல்லை. அந்த திட்டத்தால்தான் நமது யாழினியின் ஆஸ்தான குரு ஸ்டெல்லா மிஸ்ஸையும் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப் பட்டுள்ளார்.
அதை நம்பாமல் வகுப்பறையில் வந்து அமர்ந்தாள். அவள் பின்னே மூச்சிறைக்க தோழி வைஷாலியும் வந்து அமர்ந்தாள்.
“ஏம்பா டல்லா இருக்கே… நம்ப விக்என்டு ஸ்டெல்லா மிஸ் வீட்டுக்கு போகலாம் பா….. டோன்ட் வரி பா… என அறுதல் சொல்லி கொண்டே இருக்கிறாள்”
ஆனால் ஸ்டெல்லா மிஸ் மட்டுமே பிம்பமாக யாழினியின் மண கண் முன்னே காட்சி அளிக்க,… வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
அதே நேரத்தில் அரசு ஆணை 9.10,11 மாணவர்கள் எல்லோரும் தேர்வுயின்றி தேர்ச்சி என அறிக்கை ஒளிபரப்பு…
ஒருபுறம் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.
பள்ளிகளில் பரபரப்பு…..
ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு நெருடல் இருந்தாலும், நெருடலுக்கு கோச்சிங் கிளாஸ் வருமானம் பறிபோயிற்றே… இருப்பினும் ஒரு மகிழ்ச்சி….
இந்த கால சூழலுக்கு நன்றி சொல்லி மாணவ மணிகள் கரகோஷம் …..
மாணவர்களின் கரகோஷம் கடல் அலையை விட அதிகமாக பள்ளியை பிளந்து கொண்டு இருக்க….
“யாழினி மட்டும் தன்னுடைய ஸ்டெல்லா மிஸ்ஸை வேலையில் இருந்து எடுத்து தன்னிடமிருந்து பிரித்து விட்ட இந்த பள்ளியையும், கால சூழலையும் பிடிக்காமல் அழுதுக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்…..”