காஸ்ட் அவே (CAST AWAY) – பாரதிமித்ரன்
HOLLYWOOD-ல் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் தாம் ஹாங்க்ஸ் (TOM HANKS) எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட, அவர் நடித்த படங்களில் ”FORESST GUMP”, “TERMINAL”, ”SAVING PRIVATE RYAN”, CATCH ME IF U CAN”, “DA VINCI CODE” ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது பிற படங்களைத் தேடும்பொழுது “CAST AWAY” எனும் படத்தைக் கண்ணில்பட்டது.
TOM HANKS – ROBERT ZEMICKIS கூட்டணியில் உருவான மாபெரும் படைப்பு “FORESST GUMP”, அதன் பிறகு அதே கூட்டணியில் உருவான மாறுபட்ட படைப்பு “CAST AWAY”.
2000 ஆம் ஆண்டில் வெளியான ஆங்கில திரைப்படம் ”காஸ்ட் அவே” (CAST AWAY). இத்திரைப்படத்தின் கதாநாயகன் ”சக் நோலாண்ட்” (CHUCK NOLAND) ‘FEDEX’ நிறுவனத்தில் ‘SYSTEMS ANALYST’ பதவியில் இருக்கிறார் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவர். ஒவ்வொரு நொடியையும் பொன் போன்று கருதி வேலை செய்பவர். அவருக்கு ஒரு காதலி உண்டு. அவள் பெயர் ”கெல்லி பிரிர்ஸ்” (KELLY FREARS) ஒரு நாள் அவரும் அவளது காதலியும் குடும்பத்துடன் கிறுஸ்த்துமஸ் விருந்து உண்கிறார்கள். திடீரென்று அவருக்கு FEDEX நிறுவனத்திலிருந்து அழைப்பு வருகிறது, சில பொருட்களை வணிகம் செய்ய வெளியூருக்கு (விமானத்தில்) செல்லவேண்டும் என்ற அழைப்பு அது, தான் புத்தாண்டு அன்று திரும்பி வருவதாக தன் காதலியிடம் சொல்லிச் செல்கிறார் சக் நோலாண்ட்.. அப்பொழுது எதிர்பாராத விதமாக கடும் புயல் அடித்து விமானம் சேதம் அடைந்து கடலிற்குள் மூழ்கியது, உடன் பயணித்த விமான ஓட்டுநர்கள் கடலிற்குள் மூழ்கி இறந்து விடுகிறார்கள், சக் நோலாண்ட் மட்டும் உயிர்பிழைத்து ஆள் நடமாட்டம் இல்லாத தீவிற்குள் கரை சேர்ந்துவிடுகிறார்.
அத்தீவில் 4 வருடம் சக் நோலாண்ட் தனியாக வாழ்ந்து வருகிறார், அவருக்கு உறுதுணையாக ஒரு உயிரற்ற பந்துடன் வசிக்கிறார். அத்தீவில் அவருக்குப் பேச்சுத் துணையாக அந்த பந்து மட்டும் தான் இருக்கிறது, அந்த பந்திற்கு ”வில்சன்” (WILSON) என்று பெயர் வைக்கிறார் சக் நோலாண்ட். அவர் அந்த பந்தை தன் சொந்த மகனாக, கூட பிறந்த சகோதரனாகப் பார்த்துக் கொள்கிறார். பலவிதமான முயற்சிக்குப் பின், ஒரு வழியாக அவர் அந்த தீவை விட்டு வெளியே வந்து விட, ஒரு பெரிய அலையால் அந்த பந்து அவரை பிரிந்து விடுகிறது. சக் நோலாண்டுக்கோ அதைப் பிரிய மனது வரவில்லை. என்னதான் உயிரற்ற பொருளாக இருந்தாலும் 4 வருடம் தன்னுடன் வாழ்ந்து வந்த உயிர் நண்பனைப் பிரிவதாகத் தவிக்கிறார். இறுதியாக அவர் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பியவுடன், அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்கள், அவரது உறவினர்கள் மற்றும் அவரது காதலி கெல்லி பிரிர்ஸ் ஆகியோர் ஆசிரியத்துடன் பார்க்கின்றனர். ஏனென்றால் அந்த விமான விபத்துக்குள்ளானதால் அவர் இறந்து விட்டதாக நினைத்தவர்கள், பிறகு அவர் உயிர் பிழைத்ததைக் கண்டு எல்லோரும் சந்தோசமடைகின்றனர். சக் நோலாண்ட் தன் காதலி கெல்லியை சந்தித்தவுடன் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதை அறிந்து கொள்கிறார். அந்த 4 வருடம் அவரது வாழ்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சக் நோலாண்ட் இறந்ததாக நினைத்துத் தான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினாள். இருவரும் தாம் காதலித்த நாட்களை எண்ணிப் பேசிக்கொண்டனர், அது மிகவும் உருக்கமான காட்சி என்றே கூற வேண்டும். கெல்லி தாம் காதலித்த நாட்களில் பயன்படுத்திய காரை சக் நோலாண்டுக்கு அன்பளிப்பாகத் தருகிறாள், இறுதியில் துயரங்களைக் கடந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார் சக் நோலாண்ட்.
இத்திரைப்படத்தில் ”சக் நோலாண்டாக” (CHUCK NOLAND) நடித்த ”தாம் ஹாங்க்ஸ்” (TOM HANKS) இக்கதாபாத்திரத்திற்கு மிகவும் உயிரூட்டி நடித்திருக்கிறார் இவரது நடிப்பைப் பறைசாற்றும் விதமாக இவருக்கு ”GOLDEN GLOBE-FOR BEST ACTOR” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. ”கெல்லி பிரிர்ஸ்” (KELLY FREARS) கதாபாத்திரத்தில் நடித்த “ஹெலென் அண்ட்” (HELEN HUNT) மிகவும் நன்றாக நடித்துள்ளார், மற்ற துணை நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர், ஒளிப்பதிவாளர் “டான் பர்கஸ்” சின் (DON BURGESS) ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது, இத்திரைப்படத்தில் பின்னணி இசையின் பங்கு மிகவும் குறைவு, தீவில் வரும் காட்சிகளில் இயற்கை சார்ந்த ஒலிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மற்ற இடங்களில் இசையமைப்பாளர் ”ஆலென் சில்வெஸ்ட்ரி” (ALAN SILVESTRI) மெல்லிய பின்னணி நம்மை புல்லரிக்க வைக்கும், இத்திரைப்படத்தின் இயக்குநர் “ராபெர்ட் செமெகிஸ்” (ROBERT ZEMECKIS) மாபெரும் படைப்பை மக்களுக்குத் தந்திருக்கிறார். இவரது மற்ற படைப்புகள் “FORESST GUMP”, “BACK TO THE FUTURE TRIOLOGY” ஆகும்.
சி.வெ. பாரதி மித்ரன்.