“செல்லமே” கவிதை – சாந்தி சரவணன்

“செல்லமே” கவிதை – சாந்தி சரவணன்




நீ வளர்கிறாய்
நான் குழந்தையாகிறேன்
தனிமை உனக்குத் தேவை
எனக்கோ உன் துணை தேவை
சுயம் உனக்குத் தேவை
அந்த சுயத்திலும் நான் மறைந்திருக்க சுயநலம் எனக்கு
சுயநலம் என்னில் இல்லை!
ஆனால் என் சுயமே நீ தான்!
நீ வளர்ந்து விட்டாய் என அறிவுக்குப் புரிகிறது!
ஆனால் மனதிற்குப் புரியவில்லை!
உனக்குத் தொல்லை கொடுப்பது எனது நோக்கமல்ல!
உன்னில் நான் தொலைந்து போவது தான் என் விருப்பம்!
என் செய்வேன்?
உன்னைக் கருவில் சுமக்கும் முன் மனதில் சுமந்தேன் !
மனதில் சுமக்கும் முன் உயிரில் சுமந்தேன்!
என் உலகம் நீ!
உன்னை என் கண் முன்னே நிறுத்தி விட்டேன்!
கண் இழந்தாலும்
உன் பிம்பம் என்னில்
நீக்கமற நிறைந்திருக்கும் !
நீர்த்துளி கடலில் கலப்பது போல்

உன்னில் கரைந்துவிட்டேன்
கலந்துவிட்டேன் அன்பு செல்லமே!

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40
Mob:9884467730
email:[email protected]