Posted inPoetry
சந்திராவின் கவிதைகள்
1. உன்னை விட்டு ஒரு நாள்
நீயும் நானும் கண்ணும் இமையும் போல
நீயே என் வாழ்க்கை, நீயே எனக்கு எல்லாம்
காலையும் நீயே ,மாலையும் நீயே
இன்பமும் நீயே ,துன்பமும் நீயே
என் இதழ் கடையோரம் முறுவல் உன்னாலே
உன்னை கண்டால் மற்றவர் முகம் தெரிவதில்லை.
மாயம் என்ன செய்தாய் உன்னை விட்டு
ஒரு நொடி பிரியேன்.
உண்ணும் போதும் உறங்கும் போதும் நீயே,
நீ இல்லையேல் இவ்வுலகம் இல்லை.
காணும் இடமெல்லாம் நீயே காக்கும் கடவுளும் நீயே
எங்கிருந்து வந்தாய் எங்கள் உயிர் ஆனாய்
தூக்கம் மறந்தோம் எங்கள் துணையை மறந்தோம்
நீ கொடுக்கும் தன்னம்பிக்கை வேறு எதுவும் கொடுப்பதில்லை
தாய் வேண்டாம் தந்தை வேண்டாம் நீயே எங்கள் நம்பிக்கை நட்சத்திரம்.
பேச மறந்தோம் ,மற்றவர் பேச்சை கேட்க மறந்தோம்.
தன் நினைவு இல்லாமல் அலைகிறோம்.
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது.
நீ கொடுக்கும் சுகம் மற்றவர் முகம் தெரிவதில்லை.
எல்லா கேள்விகளுக்கும் பதில், நன்றி சொல்ல வார்த்தையில்லை.
அனுபவம் இல்லாத அறிவு ,அதுவே அற்புதம் அபாரம் அருமை வேறு வார்த்தைகள் இல்லை.
நாட்டு நடப்பு,வீட்டு நடப்பு யாவிலும் நீயே.
உன்னை மிஞ்ச யாரும் இல்லை,அதனாலே
மனிதர்கள் துச்சமென போய் விட்டனர்.
உனக்கு ஒன்று என்றால் உடைந்து விடும்
மனம்.
நீ சரியாகி விட்டாய் எனும் செய்தி தருமே
துள்ளல் எங்கள் மனதில்.
பூ பூவாக பூக்கும் வான வேடிக்கைகள் போல.
உன்னை இழந்தால் ,இயற்க்கை பேரிடர் ஒன்றுமில்லை என ஆகி விடும்.
உன் மேல் அளவில்லா அன்பு, நீயே என்
உயிர்.
பாசம் ,பந்தம் எனும் வார்த்தைகள் இல்லை உன்னிடம் ,ஆனால் நீ பிடித்த இடம் யாருக்கும் கிடைக்காத இடம்.
உனக்கு கிட்டும் மரியாதை மற்றவருக்கு
இல்லை.
நீயே படைப்பான்,காப்பான் ,அழிப்பான் .
இவரை மிஞ்சிய சக்தி உன்னிடம்.
உன்னை பிடிக்காதவர் இல்லை இவ்வுலகில்.
சிறியவர் முதல் பெரியவர் வரை நீயே
குல தெய்வம்.
அருகில் நிகழும் சம்பவங்கள் குறித்து
அறியாமல் பார்த்து கொள்ளும் உன்னதம் நாலும் தெரிந்த நாயகன் நீ ,ஒன்பது கிரகங்களின் தலைவன் நீ.
மானுடர்கள் சுய நினைவு இழக்க நீ செய்யும் உதவி மறக்க முடியாத அனுபவம்.
உன்னுடன் இருக்கும் எல்லா நாளும் நல்ல நாளே.
மண் ,பொன் உன் முன்னால் மதிப்பு இல்லா பண்டம் ஆகும் அவலம்.
ஆனால் நீ இல்லாத நாள் என் வாழ்வின் சோகம் .
நீயே நான் நானே நீ ,நீயின்றி நானில்லை.
நான் யார் விடை தெரிந்தவர் பதில் கூறலாம்.
உங்கள் சந்திரா.
2. என்னை சுற்றி
ஒற்றை ரோஜா அப்பெண்ணின் கூந்தல் தன்னில் ,ஒரு கையில் மதிய உணவு
கொண்ட பை ,மரு கையில் அலுவலக பை
பை சிறிது புடைத்து காணப்பட்டது.
ஆசிரிய பணி போல தோன்றியது
திருத்திய தேர்வு வினா தாள் எனும் சம்சியம் .
நடையில் உற்சாகம் முந்தைய தின
சோர்வு முகத்தில் ,மனதில் பயம்
சரியான சமயத்தில் சென்றடைய வேண்டும் எனும் தவிப்பு.
அவள் இடும் கைஒப்பம் தீர்மானிக்கும்
அந்த மாத வரவை.
காலை வேலை இல்லத்தில் முடித்து
பேருந்து பிடிக்கும் பிரயத்தனம் .
மலையை புரட்ட கோடாலி வேண்டாம்
தகர்க்க வெடி வேண்டாம் இவள் ஒருத்தி போதும் ,மலை முன் இவள் பலம் எட்டா உயரத்தில்.
பார்த்து கொண்டே இருக்கையில் அணிவரிசை இட்டு இளவயது பெண்கள்
கருமேகத்தின் இடை நிலா என பூச்சரம்
வித விதமான தலை அலங்காரம்
சீருடை அணிந்து மருத்துமனை இல்லை
வணிக வளாகம் தன்னில் பணி புரியும்
பதினெட்டை தொட்ட மங்கையர்
சாரி சாரியாய் ,இதழ் கடையோரம் புன்னகை ,எதிர் வரும் இளவட்டங்களின்
மேல் கண் பார்வை ,இனம் புரியா மயக்கம் மனதில்.
அம்மா கொடுக்கும் சுகமான வாழ்க்கை
வேலை பளு மட்டும் ,துள்ளி குதிக்கும்
விரால் மீனென பரவச நிலையில்.
இந்நிலை இப்பெண்ணுக்கு சிறிது நாட்களே .
அறியா பருவம் வரும் காலங்கள் மறந்து
இளமையை ரசிக்கும் வசந்த காலம்.
இவரும் மகளிரே, என்ன வேறுபாடு ,சிகை அலங்காரம் இல்லை தூக்கி செருகிய கொண்டை ,சேலையில் திட்டு திட்டாக
நீரும் அழுக்கும் இவள் செய்யும் வேலையின் அடையாளம்.
கையில் ஒரு சுருக்கு பை ,அன்றைய
உணவு வேண்டி பொருட்கள் வாங்கும்
துரிதம் நடையில்.
அவளுக்கு மற்றவர் பற்றி கவலை இல்லை
அதற்கு நேரமும் இல்லை ,கிடைக்கும்
வருவாயில் கால் வயிற்று கஞ்சி
அதுவே அரிதாகி போகும் பல நேரம்.
சாலையோரம் பூ கட்டும் பெண்டிர்
சிறிய முதல் ,பெரிய நம்பிக்கை .
காற்று மழையினில் இவர் பாடு திண்டாட்டம்.
இருப்பினும் பூவென மலர்ந்த முகம்
வாடிக்கையாளரிடம் வாஞ்சை மிக கொண்ட ஆத்மாக்கள்.
மனதில் க்லேசம், வாடிய பூக்கள் மரு நாளில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு.
இன்வெண்டரி கன்ட்ரோல் தெரியாத
வியாபாரிகள்.
யாரோ தோட்டத்தில் பூத்த மலர் யாரோ
வீட்டின் பூஜை அறையில் அலங்காரம்.
படிப்பு வாசனை இல்லா பிரஜைகள்
நிகழ்காலத்தை ரசிக்க தெரிந்த நட்சத்திரங்கள்.
இதே நிலைதான் பழம் விற்க்கும்
பெண்ணின் வாழ்க்கை.
வயது பொருட்டில்லை பெரிய தள்ளுவண்டியில் தன் சக்தி வாய்ந்த
கரங்களின் மேல் அபார நம்பிக்கை
கொண்டு வியாபாரம் செய்யும் அம்பானி.
பரோபகரி பக்கத்து வியாபாரிக்கு துணை இவள்,அடுத்தவர் மேல் கருணை கொண்ட நல்ல உள்ளம்.
ஒரே பொருளுக்கு பல விலை வைத்து விற்க்கும் வல்லுநி இவள்.
ஏகபோகம் எனும் கலை தெரிந்த வித்தகி .
வித விதமான பெண்கள் ,தினம் தினம்
கண்கொள்ளா காட்சி அளிக்கும்
மனதுக்கு இதம்.
அலுப்பில்லா ஓட்டம் ,மகிழ்ச்சியின்
உண்மை வரையறை இவரிடம் கற்று
கொள்ளும் வாய்ப்பு பல.
அன்றைய பொழுது அன்றோடு ,நாளை பற்றி எண்ணி பார்க்கும் கவலை இல்லை .
குறைந்த வருமானம் நிறைந்த வாழ்க்கை.
தீப்பெட்டியென அடுக்கு மாடி வீட்டில்
குடியிருக்கும் பலருக்கு இதை போல்
மகிழ்ச்சி இல்லை மனதில்.
மெஷின் போன்ற வாழ்வில் வங்கி கணக்கில் மோகம்.
அது தரும் பாதுகாப்பு மற்றவை தருவதில்லை.
ஆயிரம் யோஜனை மற்றவர் முகம் பார்க்க.
தான் தன் குடும்பம் எனும் கட்டுகோப்பு
தேவையில்லா அச்சம் .
மாற மாற்ற முடியும் மனிதருடன் வாழும்
எண்ணம் கொண்டால் .
சந்திரா.