The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயது 21 – ஒன்றிய அரசின் போலி நாடகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு



The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும் என்றாலும்கூட, மிகவும் ஆழமான பரிசீலனைகள் தேவைப்படுகின்ற பல முக்கியமான சிக்கல்கள் அதில் உள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை தொடர்புடைய நிலைக்குழுவிற்குப் பரிந்துரைப்பதே அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த வழியாக இருக்கும்.

ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுகிறாள். குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. பதினெட்டு வயதிற்குப் பிறகு தான் செய்யும் செயல்களுக்கு அவளே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அளவிற்கான வயது ஒரு பெண்ணுக்கு 18-21 வயதிற்கு இடையில் வந்து விடுகின்ற போதிலும், முன்மொழியப்படவிருக்கின்ற மசோதாவின்படி, அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தப் பெண் இளமையானவளாகவே இருப்பாள்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரமாக இல்லாமல், அவர்களைக் குழந்தைகளாக்குவதாகவே உள்ளது. முதிர்வயது என்பது பிரித்துச் சொல்ல முடியாதது. திருமணம் தொடர்பான முடிவுகளில் வயதுக்கு வந்த பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெரும்பாலும் இந்த மசோதா சாதி மற்றும் சமூக தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். இந்த மசோதா வயதுக்கு வந்த பெண் ஒருவள் அனுபவித்து வருகின்ற தனிப்பட்ட விருப்பம் குறித்த விஷயங்களில் இன்றைக்கு இருந்து வருகின்ற சட்டத்தின் கீழ் அவளுக்கிருக்கும் சுதந்திரம் குறித்ததாக நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.

மேலும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் தங்கள் வாழ்வு குறித்த முடிவுகளில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்துடனான மாற்றத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களிடையே இளம் வயது திருமணம் குறித்து அதிக கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்களுக்கு எதிராக இளம் பருவத்தினர் கிளர்ந்தெழுந்துள்ள பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

திருமணத்திற்கான சராசரி வயது 22.2 ஆக (MOSPI 2019) இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு இளம் பெண்களிடம் இதுபோன்று உருவாகியுள்ள எண்ணமும் ஒரு காரணமாக உள்ளது. உண்மையில் தன்னார்வத்துடன் திருமணத்திற்கான வயது கணிசமாக அதிகரித்து வந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு தண்டனை தரும் வகையிலான நடவடிக்கைகளை ஏன் இப்போது மேற்கொள்ள வேண்டும்? 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், தாங்களாக தேர்வுகளைச் செய்து கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்கித் தருகின்ற உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான அணுகல் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். பெண்கள் கருவுறும் விகிதம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், திருமண வயதை உயர்த்தும் இதுபோன்ற நடவடிக்கை​​ மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்காக பாஜக தலைமையிலான சில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கொடூரமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவற்ற தன்மையைப் போன்றதாகவே இருக்கும்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

திருமண வயதை உயர்த்துவதில் என்ன தவறு உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், ​​அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆயினும் இந்தக் குறைப்பு நகர்ப்புறங்களிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும், கிராமப்புற இந்தியாவில் 20-24 வயதில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கும் அதிகமானவர்கள் பதினெட்டு வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவையாகவே இருக்கின்றன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

இப்போதைய தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிக்கும், குழந்தைகள் பாதிக்கப்படும் அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சமூக விளைவுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமுடக்க காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் உதவி எண்ணுக்கு குழந்தை திருமணம் குறித்து 5,200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பவர்களின் பெண் குழந்தைகளுக்கே பதினெட்டு வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வறுமை, அதிகரித்து வருகின்ற வரதட்சணைக் கோரிக்கைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த அச்சம் போன்றவற்றைச் சமாளிக்கும் தீர்வாகவே அந்த திருமணங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் செல்வத்தை தானமாக (பரய தான்) கொடுப்பது, பெண்களை அடுத்தவருக்கு கைப்பிடித்துத் தர வேண்டிய புனிதக் கடமை பெண்களின் பாதுகாவலர்களுக்கு இருக்கிறது என்பது போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கின்ற வகையிலே குழந்தை திருமணங்களுக்கான கலாச்சார அங்கீகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

அத்தகைய கலாச்சாரங்களுடன் தற்போதைய ஆட்சிக்காலம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கான அணுகலை அதிக அளவிலே உறுதி செய்திருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்கள் விடுக்கின்ற சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்தும், ஆண்களுக்கு பதினெட்டு வயதிலிருந்தும் முறையே பதினெட்டு மற்றும் இருபத்தியொன்று என்று 1978ஆம் ஆண்டில் இந்தியா மாற்றியது. எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் குழந்தை திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை மீற முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கி வந்துள்ளதால், இந்தச் சட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்து வருகின்றன. இந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணங்களை ஒழிக்கத் தவறியுள்ள நிலை நீடித்து வருகின்ற நிலைமையில், திருமணத்திற்கான பெண்களின் தகுதி வயதை இருபத்தியோரு ஆண்டுகளாக உயர்த்துவது என்பது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் – முக்கியமாக ஏழைகள் – சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்வதற்கே வழிவகுத்துக் கொடுக்கும்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

மிகக் குறைந்த வயதிலேயே தாயாகின்ற இளம் பெண்களின் உடல்நலம் மீதான அக்கறையே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும், திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துவதன் மூலம் குழந்தை பிறப்பைத் தடுத்து இலம் பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் போலித்தனமான வாதம். தாய் மற்றும் சிசு இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் பொதுக்கொள்கையுடன் தொடர்புடையவை. பொதுசுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு முறையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் உடல்நலம் மீதான தன்னுடைய அக்கறையை அது இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராத அரசாங்கம், இனப்பெருக்க உடல்நலம் என்ற பெயரில் வயதுக்கு வந்த பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது.

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்றாக உயர்த்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமன் செய்யப்படுவது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு படியாகும் என்ற அரசின் கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம் குறித்து உண்மையிலேயே இந்த அரசு ஆர்வமுடன் இருக்குமென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான தகுதியான வயதை பதினெட்டு என்று வைத்திருக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாது?The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

தனிப்பட்ட உறவுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உண்மையிலேயே இந்த அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால், ‘ஆணவக் குற்றங்களுக்கு’ எதிரான தனிச் சட்டம், திருமண உறவில் ஏற்படுகின்ற பலாத்காரத்தை குற்றமாக அங்கீகரிக்கும் சட்டம் என்பது போன்ற மிக முக்கியமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம்.The age of marriage for women is 21 Fake play of the Central Government Article by brinda karat in tamil translated by Tha Chandraguru. பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், வயதுக்கு வருகின்ற வயதிற்கும், திருமணத்திற்கான தகுதிக்கான வயதிற்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. வயதுக்கு வரும் வயதை பதினெட்டு என்று பரிந்துரைத்து 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. உலகளாவிய ஒருமித்த கருத்துக்கு எதிராகச் செல்வதற்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள் எதுவும் உண்மையில் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.

https://www.ndtv.com/opinion/centres-hypocrisy-in-raising-marrying-age-for-women-to-21-2660378

நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுரு

நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் – தமிழில்: தா.சந்திரகுரு




காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஹிந்து தேசியவாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி விளக்குவதற்காக இந்த வலையொலி நிகழ்வில் கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் இணைந்திருக்கிறார். இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியரான ஜாஃப்ரெலோட் இந்திய ஜனநாயகம் குறித்த முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவராக உள்ளார். ‘மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதம் மற்றும் இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சி’ என்ற புத்தகத்தை அவர் சமீபத்தில் எழுதியுள்ளார்.

ஹிந்துத்துவா / ஹிந்து தேசியவாதம் குறித்த விளக்கம், ஆர்எஸ்எஸ் பற்றிய சுருக்கமான விவரம், அயோத்தி கோவில் சர்ச்சை பற்றிய விவரங்கள், நரேந்திர மோடி எவ்வாறு ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்த விளக்கம், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் போன்றவை இந்த வலையொலி உரையாடலின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.

வலையொலி உரையாடலின் எழுத்தாக்கம்

போல்சனாரோ, ஆர்பன் அல்லது எர்டோகன் போன்ற மற்றுமொரு ஜனரஞ்சகத் தலைவராக நரேந்திர மோடியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் என்றாலும் அவரைப் பற்றி நம்மில் பலருக்கும் அதிகம் தெரிந்திருக்காது. மோடி என்பது பலருக்கும் ஜனரஞ்சகத்தின் சின்னம். அதுபோன்ற பொதுவான எண்ணங்களுக்கு உரிய சூழலையும், பொருளையும் இன்றைக்கு சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

உலகில் உள்ள மற்ற ஜனநாயக நாடுகளைப் போல இந்தியா இருக்கவில்லை. அது தனக்கென்று தனித்துவமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் சவால்களுடன் மிகப் பெரியதாக, வேறுபட்டு இருக்கிறது. பாஜக என்ற ஹிந்து தேசியவாத அரசியல் கட்சிக்கு நரேந்திர மோடி தலைமை தாங்கி வருகிறார். இனரீதியான ஜனநாயகம் என்று கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் விவரிக்கின்ற வகையிலே பாஜகவினர் இந்தியாவை மறுவடிவமைத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முன்னணி அறிஞர்களில் ஒருவரான கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் சைன்சஸ்போ நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராகவும், கிங்ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராகவும் உள்ளார். ‘மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்’ என்பது சமீபத்தில் அவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகமாகும்.

ஹிந்து தேசியவாதம், நரேந்திர மோடியின் எழுச்சி பற்றி, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய காரணங்களை கிறிஸ்டாஃப் இங்கே விவரிப்பார். ஏராளமான விஷயங்களைத் தொடுகின்ற போதிலும் நாங்கள் தவறிழைக்கப் போவதில்லை. இன்றைய உரையாடலின் நாயகனாக மோடி இருக்கிறார். மோடி இந்தியாவைப் பற்றி விவாதிக்கவே நாங்கள் வந்துள்ளோம். கிறிஸ்டாஃப் ‘ஒரு “கறுப்பு ஹீரோ” இன்னும் ஹீரோதான்’ என்று எழுதியிருப்பது என்னவென்று பாலிவுட் திரைப்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்திய அரசியல் மற்றும் ஹிந்து தேசியம் என்ற தலைப்பு மிகப் பரந்த அளவிலானது. எனவே இந்த உரையாடலில் உங்களுடைய கருத்துகளை இணைப்பதற்குத் தயங்க வேண்டாம். உரையாடலின் முழு எழுத்தாக்கம் டெமாக்ரசி பாரடாக்ஸ் இணையதளத்தில் (democracyparadox.com) இருக்கிறது. அங்கே சென்று உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். Twitter @DemParadoxஇல் என்னைக் குறிப்பிட்டு பதிவு செய்யலாம். அல்லது democracyparadoxblog@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இப்போது… கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டுடனான உரையாடல் ஆரம்பிக்கிறது…Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருகிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்! டெமாக்ரசி பாரடாக்சிற்கு (Democracy Paradox) உங்களை வரவேற்கிறோம்.

என்னை அழைத்தமைக்கு நன்றி.

கிறிஸ்டாஃப், உங்களுடைய சமீபத்திய புத்தகம் ‘மோடி இந்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல், அது ஹிந்து தேசியவாதம் குறித்ததாகவும் இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், ஹிந்து தேசியவாதம் அனைவரும் நன்கு அறிந்திருக்கும் ஒரு கருத்து. சற்றே குழப்பமானது என்று பலரும் உண்மையில் நம்பக்கூடிய ஹிந்து தேசியவாதம்m என்பது ஹிந்து மதம், தேசியவாதம் என்ற இரண்டு கருத்துகளை ஒருங்கிணைக்கிறது. எனவே அந்தக் கருத்தை ஆராய விரும்புகிறேன். ‘மற்றவர்களின் இழப்பில் ஹிந்து மதத்தின் சில அம்சங்களே ஹிந்துத்துவாவின் விழுமியங்கள்’ என்று நீங்கள் எழுதிய அழகான மேற்கோள் ஒன்று உள்ளது. ஹிந்து மதமும், தேசியவாதமும் ஒன்றாக இணையும் விதத்தை ஆரம்பத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள். எனவே இன்றைக்கு இதிலிருந்து தொடங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஹிந்துத்துவத்தின் எந்த அம்சங்களை ஹிந்து மதம் உயர்த்திப் பிடிக்கிறது, எந்த அம்சங்களை அது அடக்கி வைக்கிறது?Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஇது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில் ஹிந்து மதத்தை ஒரு நாகரிகம் என்ற வகையிலேயே நாம் காண வேண்டும். அது ஒரு மதத்தைக் காட்டிலும் மேலானதாக, முழு அளவிலான நாகரிகமாக அது இருக்கிறது. அந்த நாகரிகம் எந்த மரபுவழியையும் நம்பவில்லை என்றாலும் வலுவான, சரியான வழிபாட்டை நம்பியுள்ளது என்பது பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. சரியான வழிபாடு என்பது மிகவும் கடினமான, படிநிலை சமூக அமைப்பான சாதி அமைப்பிற்குள் பொதிந்துள்ளது. அது ஒரு பரிமாணம். ஹிந்து மதத்திற்கென்று புத்தகம், கோட்பாடு, மதகுருக்கள் இல்லை, அது மத சுதந்திரம் என்ற சிறந்த உணர்வுடன் உள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக இந்த மரபுவழியின்மை இருப்பது மற்றொரு பரிமாணமாகும். ஹிந்து மதத்தில் பலவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாக, கடவுளை அடைவதற்கான புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்தவர்களாக அதன் குருக்கள் இருந்தனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆன்மீகத்தைப் பொறுத்தவரை ஹிந்து மதம் அப்படித்தான் இருந்தது. அதைத்தான் ஹிந்துத்துவா அழிக்க முயன்றிருக்கிறது. இந்த ஆன்மீக பன்முகத்தன்மை உணர்வே ஹிந்துத்துவத்தின் எழுச்சியால் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை விளக்குகின்ற வகையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். சூஃபிகள் மற்றும் இஸ்லாமியப் பிரமுகர்களை வழிபடுவதை ஹிந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கல்லறைகளுக்கு அதிக எண்ணிக்கையில் சென்று ஹிந்துக்கள் வழிபட்டு வந்தனர். இதைத்தான் நான் ‘தர்கா கலாச்சாரம்’ என்கிறேன். தர்கா என்பது சூஃபி துறவிகளின் சமாதிகளுக்கான பெயர். ஹிந்து சமூகத்தின் மீது பல்வேறு வழிகளில் தங்களுடைய செல்வாக்கைச் செலுத்தியுள்ள ஹிந்து தேசியவாதிகளோ இத்தகைய வழிபாட்டு முறைகள் இருக்கக் கூடாது என்று கருதுகின்றனர். ஹிந்து அடையாளம் என்பதை பெரும்பாலும் பிராமண வழிகளில் குறியீடாக்கியதுடன், ஹிந்து மதத்தின் பன்முகத்தன்மையைக் குறைத்திடவும் ஹிந்து தேசியவாதிகள் முனைந்துள்ளனர். ஹிந்து மதத்திற்கும் ஹிந்துத்துவாவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள விரும்பினால், அவை இவ்வாறான போக்குகளுக்குள்ளே பொதிந்திருப்பதை உங்களால் காண முடியும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆனால் இன்னும் தெளிவான வேறுபாடுகளும் உள்ளன. ஹிந்துத்துவா என்பது ஒரு சித்தாந்தம். அது கடந்த காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத ஹிந்து மதத்தின் பரிமாணத்தை வலியுறுத்துகின்ற இனரீதியான மத சித்தாந்தம். மக்களாக, சமூகமாக, அவர்கள் கூறுவதைப் போல வேத பிதாக்களின் வழித்தோன்றல்களாக ஹிந்துக்கள் இருக்கின்றனர். ஹிந்துக்கள் குறித்த இந்த வரையறை சியோனிசத்துடன் பலவிதத்திலும் தொடர்புகள் கொண்டுள்ளது. பல வழிகளில் நம்பிக்கையைக் காட்டிலும் இனரீதியான பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், யூத மதத்திற்கு சியோனிசம் என்றால் ஹிந்து மதத்திற்கு ஹிந்துத்துவம் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். இவ்வாறான இனரீதியான குணாதிசயம் மற்றும் மொழி மூலம் வரையறுக்கப்படுகின்ற குடியுரிமை, தேசியம் போன்ற சிந்தனை இந்தியாவில் அடையாளம் குறித்த புதிய வரையறையாகி இருக்கிறது. அதுவும்கூட இந்த சித்தாந்தத்தின் தாக்கத்தாலேயே அவ்வாறு இருக்கிறது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருசிலர் ஹிந்து தேசியவாதத்தின் அமைப்பு ரீதியான உருவகமாக பாஜக இருக்கிறது என்று இப்போது நினைக்கலாம். ஆனால் குறிப்பாக உங்கள் ஆய்வுகளின் மூலமாகவும், நான் செய்திருக்கின்ற மற்ற ஆய்வுகளின் மூலமாகவும் பார்க்கும் பொழுது, ​​ஹிந்து தேசியம் என்ற கருத்தை உள்ளடக்கி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொள்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்பே இருப்பதாகத் தோன்றுகிறது. ஆர்எஸ்எஸ் குறித்த சுருக்கமான வரலாறு அல்லது விவரங்களைத் தர முடியுமா? அது யார், அதன் நோக்கம் என்ன என்பதை விளக்குங்களேன். ஏனென்றால் மோடி இந்தியா, இந்தியா மீதான அவரது தாக்கம், இந்தியாவை பாஜக மாற்றியமைக்கத் தொடங்கிய விதம் பற்றி பேசுகின்ற உரையாடல்களுக்குள் அந்த அமைப்பே மீண்டும் மீண்டும் வருகிறது.

நிச்சயமாக… அது முக்கியமானது. ஆர்எஸ்எஸ்தான் தாய் அமைப்பு. அது ஹிந்து தேசியவாத இயக்கத்தின் சோதனைக்களம். இன்றைய இந்திய ஒன்றியத்தின் நடுவே அமைந்துள்ள நாக்பூரில் 1925ஆம் ஆண்டு முதன்முதலாக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஹிந்துக்கள் பலரிடமும் முஸ்லீம்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றிருந்து வந்த உணர்வின் எதிர்வினையாகவே அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கான்ஸ்டான்டிநோபிளில் கலிபாவை ஒழித்ததற்கு எதிர்வினையாக இந்திய முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கலிபா இயக்கத்தின் பின்னணியில் முஸ்லீம்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்களாக, மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவர்களாகத் தோன்றினர்.

அந்தச் சூழலில்தான் ஹெட்கேவார் 1925ஆம் ஆண்டில் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் துவக்கினார். ஹிந்துத்துவாவை வடிவமைத்த தலைமைக் கொள்கையாளரின் சீடராக ஹெட்கேவார் இருந்தார். இங்கே சாவர்க்கரை அவசியம் குறிப்பிட வேண்டும் – ஏனென்றால் அவர்தான் உண்மையில் ‘ஹிந்துத்துவா: யார் ஹிந்து?’ என்ற சாசனத்தை – ஹிந்துத்துவாவின் கருத்தியல் சாசனத்தை – எழுதியவர். நாம் சாவர்க்கரை சிந்தனையாளர் என்றும், ஹெட்கேவாரை அமைப்பாளராகவும் கொள்ளலாம். அதிக வலிமை கொண்டவர்களாக, அதிக உடல் தகுதி கொண்டவர்களாக, ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக, அறிவுப்பூர்வமாக விழிப்புடன் ஹிந்துக்கள் இருப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த அந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் உதவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.

ஆர்எஸ்எஸ்சில் ஷாகா என்ற கிளையே பகுப்பாய்வு அலகு ஆகும். ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், ஒவ்வொரு மாலை அது மறைந்த பிறகும் என்று நடைபெறுகின்ற இரண்டு கருத்தியல் அமர்வுகளில் பெரும்பாலும் ஹிந்து இளைஞர்கள் சீருடையில் தங்கள் வரலாறு, கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த இரண்டு விஷயங்களும் ஒன்றிணைந்து நடக்கின்றன. அந்த அமைப்பால் உந்துதல் பெறும் இளம் உறுப்பினர்கள் சிலர் பின்னர் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்கின்றனர். பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் அளிக்கின்ற பயிற்சிகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்சால் அவர்கள் பிரச்சாரக் என்றழைக்கப்படுகின்றனர். பிரச்சாரக் என்றால் முழு நேரமும் ஆர்எஸ்எஸ்சைக் கவனித்துக் கொள்பவர்கள் என்று பொருள். நாக்பூரிலிருந்து அந்தப் பிரச்சாரக்குகள் ஷாகா வலையமைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்களுக்கு பயணிக்கிறார்கள். நாடு முழுவதும் பயணம் செய்து ஷாகாக்களின் பெரிய வலையமைப்பை அவர்கள் நிறுவுகின்றார்கள். 1947வாக்கில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஷாகாக்களில் ஆறு லட்சம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இருந்தனர்.

உண்மையில் நாடு முழுவதையும் ஆக்கிரமிப்பதுதான் ஆரம்பத்தில் அவர்களுடைய சிந்தனையாக இருந்தது. அப்போது அரசியல் அதிகாரத்தின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. அவர்கள் யாருடனும் தேர்தலில் போட்டியிடவில்லை. அடிமட்ட அளவில் ஹிந்து சமூகம் மிகவும் வலுவாக இருக்க உதவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் அதை மட்டுமே செய்து வந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு நிலைமை மாறும் என்று கருதினார்கள்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருபின்னர் ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவர் அமைப்பை விட்டு வெளியேறியவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கொலை செய்தவர் சாவர்க்கருடன் இன்னும் மிக நெருக்கமாகவே இருந்தார். நாதுராம் கோட்சே என்ற அந்த மனிதர் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததன் மூலம், ஆர்எஸ்எஸ்சைத் தடை செய்யவும், இருபதாயிரம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கைது செய்து பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கவும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவிற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பிறகே ஆர்எஸ்எஸ் அரசியல் களத்தில் தங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்பதையும், அதனால் அரசியலுக்கு மாற வேண்டும் என்பதையும் உணர்ந்தது.

அப்போது ஜனசங்கம் என்ற பெயரில் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள். ஜனசங்கம் என்ற கட்சி 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பாக உருவானது. அந்தக் கட்சிதான் பாஜகவின் முன்னோடியாகும். அவர்களுடைய கட்சி அனைவரும் பார்க்கின்ற பனிப்பாறையின் முனையாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் அந்தப் பனிப்பாறை மிகப் பெரியது. இந்திய சமூகத்துடன் ஓரளவு அது நன்கு பிணைந்துள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிறுவனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆர்எஸ்எஸ்சின் கிளையாக பழங்குடியினருக்காகச் செயல்படுகின்ற வனவாசி கல்யாண் ஆசிரமம் அவர்களிடம் உள்ளது. கல்வி, பள்ளிகளின் வலையமைப்பிற்கு பொறுப்பேற்றிருக்கும் வித்யா பாரதி என்ற கிளை ஆர்எஸ்எஸ்சிடம் உள்ளது. அவர்களுடைய மற்றொரு கிளை சேரிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆக நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆர்எஸ்எஸ்தான் உண்மையாக கவனத்தில் கொள்ள வேண்டிய அமைப்பு. நரேந்திரமோடியே ஆர்எஸ்எஸ்ஸின் தயாரிப்புதான்.

ஆர்எஸ்எஸ்சைப் பற்றி பேசுகின்ற போது, ஹிந்து தேசியம் என்ற வெளிப்படையாக அரசியலாக்கப்பட்டிருக்கும் கருத்தையும் சேர்த்தே பேசுகிறோம். அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான சிறந்த வழியாக, சிறந்த எடுத்துக்காட்டாக அயோத்தி கோவில் இயக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சாரம் குறித்ததாக தொடங்கிய அந்த இயக்கம், விரைவிலேயே அரசியல் ரீதியானதாக மாறியது. உங்கள் புத்தகத்தின் மையத்தில் இருக்கும் பல கருத்துகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹிந்து தேசியம் பற்றிய கருத்துகளை, முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தலை எடுத்துக் காட்டுவதாக அது இருந்தது. அந்த இயக்கம் உண்மையில் எவ்வாறு இருந்தது, அதிலிருந்த சர்ச்சைகள் எவை என்பவற்றை நாம் பேசிக்கொண்டிருக்கும் சூழலுடன் தொடர்புபடுத்தி விளக்க முடியுமா?

அயோத்தி மிகவும் நுண்ணுணர்வுடன் கூடிய ஆற்றல்மிக்க சின்னமாகவே இருந்திருக்கிறது. ராமாயணத்தில் விஷ்ணுவின் மிகவும் பிரபலமான அவதாரமான, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமரின் தலைநகராக அது இருந்தது. ஆனால் ஹிந்து தேசியவாதிகளுக்கோ அவர் ஒரு வரலாற்றுப் பிரமுகராக, ஒரு மன்னராக இருந்தார். 1528ஆம் ஆண்டில் முகலாயப் படையெடுப்பாளர்களால் கட்டப்பட்ட மசூதி இருந்த இடமே மிகச் சரியாக அந்த மன்னர் பிறந்த இடம் என்று கருதிய அவர்கள், ஹிந்துக்களை அணிதிரட்டுவதற்கான இயக்கத்தைத் தொடங்கினார்கள். அந்தப் பிரச்சனையில் 1984ஆம் ஆண்டு வாக்காளர்களைத் துருவமுனைப்படுத்த விரும்பி தேர்தலுக்கு முன்பாக ஹிந்துக்களை அணிதிரட்டும் வேலையைச் செய்தார்கள். ஆனால் 1984ஆம் ஆண்டு சீக்கிய பாதுகாவலர்களால் திருமதி.காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டாக இருந்ததால் தேர்தல் நேரத்தில் ஹிந்துக்கள் – முஸ்லீம்கள் என்ற பிரச்சனையை எழுப்பவியலாத சூழல் இருந்தது. திருமதி.காந்தி படுகொலையால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர்களுடைய திட்டம் முழுமையாகத் தகர்ந்து போனது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎனவே அவர்கள் 1989ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. அதே இயக்கத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து, அடுத்த தேர்தலின் போது மீண்டும் தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்த மிகப்பெரிய வலையமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஐம்பதாயிரம் ஷாகாக்கள் இருந்தன. லட்சக்கணக்கான கிராமங்களுக்கு நன்கொடை கேட்டு ராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களுடன் சென்ற அவர்கள் ‘எங்களுக்கு வாக்களித்தால், கோவிலைக் கட்டுவோம்’ என்று சொல்லி வாக்கு கேட்டனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅதுவே பாஜகவின் எழுச்சிக்கான தொடக்கமாக இருந்தது. 1984ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமிருந்த 544 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் 1989ஆம் ஆண்டு தேர்தலில் எண்பத்தி ஐந்து இடங்கள் கிடைத்தன. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் கிடைத்தன. முக்கியமாக, அயோத்தி அமைந்துள்ள இந்திய ஒன்றியத்தின் உத்தரப்பிரதேச மாநிலத்தை அவர்களால் கைப்பற்ற முடிந்தது. மாநிலத்தை 1991ஆம் ஆண்டில் ஆளும் நிலைக்கு அவர்கள் வந்தனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅவர்கள் 1992ஆம் ஆண்டில் மசூதியைக் கைப்பற்றினர். அவர்களுடைய தொண்டர்கள் ஒரே நாளில் – 1992 டிசம்பர் ஆறாம் நாள் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். அவர்களைப் பொறுத்தவரை அது முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தங்களை, தங்களுடைய கருத்துகளைத் திணிப்பதற்கான வழியாக இருந்தது. வகுப்புவாத வன்முறைகள் அதற்கான மற்றொரு வழியாக இருந்தன. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகள் காலகட்டம் அதிக அளவில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்களைக் கண்டது. கலவரங்களைத் தூண்டி வாக்காளர்களைத் துருவமுனைப்படுத்துவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அதுபோன்ற கலவரங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது உச்சத்தை அடைந்தன.

அவர்களுடைய செயல்பாடு எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது. நகரம் ஒன்றில் தொழுகை நேரத்தில் முஸ்லீம்களின் சுற்றுப்புறத்தை ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஹிந்து தேசியவாதிகளின் ஊர்வலம் கடந்து செல்லும். ஊர்வலத்தில் வருபவர்கள் ஆசிட் குண்டுகள், பிற ஆயுதங்களை ஏந்தியிருப்பார்கள். முஸ்லீம்கள் கற்களை வீசித் தாக்கி எதிர்வினையாற்றுவர்கள். கலவரத்தை நிறுத்துவதற்காக காவல்துறை அல்லது சில சமயங்களில் ராணுவம் நிறுத்தப்படும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். ஆக அவர்களுடைய இயக்கத்தால் அப்போது மசூதி மட்டுமே அழிக்கப்படவில்லை. நாட்டின் பல இடங்களிலும் வகுப்புவாத வன்முறைகளை அவர்கள் தூண்டி விட்டிருந்தார்கள். .Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஇந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற பாத்திரத்தை வகித்து வருகின்ற நரேந்திர மோடியை இந்த உரையாடலுக்குள் கொண்டு வர விரும்புகிறேன். பாரம்பரியமாக ஆர்எஸ்எஸ், பாஜக இரண்டுமே உயர் சாதி அமைப்புகளாகவே பார்க்கப்படுகின்றன. பாஜக குறிப்பாக உயர்சாதியினருக்கான அரசியல் கட்சி என்றே பார்க்கப்படுகிறது. சாதியைப் பற்றி பேசவே இல்லை என்றாலும் இந்திய அரசியலில் சாதி மகத்தான பங்கை வகித்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் என்பதால் நரேந்திர மோடி மிகவும் கவர்ச்சிகரமான நபராக இருந்தார். அவர் பாஜகவின் தலைவராக இயல்பாகப் பொருந்திப் போகவில்லை. ஆனாலும் அதே நேரத்தில் மோடி இல்லாத பாஜகவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படியானால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பக்கம் நரேந்திர மோடியை ஈர்த்தது எது என்பதையும், மோடியை தன்னுடைய தலைவராகப் பாஜகவை ஏற்றுக் கொள்ள வைத்தது எது என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்…

உறுதியாக பிராமணர்களைக் கொண்டு – வணிகர்கள், வியாபாரிகளான வைசியர்கள், போர்வீரர் சாதியான சத்திரியர்களையும் உள்ளடக்கி – ஆர்எஸ்எஸ் பல்லாண்டுகளாக ஓர் உயர்சாதி அமைப்பாகவே இருந்து வந்தது. அந்த அமைப்பிற்குள் இந்த மூன்று உயர்சாதியினரும் பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வெகுகாலம் பாஜகவால் சாதாரண மக்களின் கட்சியாக மாற முடியாமல் போனதற்கு மேல்தட்டினருடன் – சிறிய அளவிலான மேல்தட்டினருடன் – அந்த அமைப்பு தன்னைச் சுருக்கிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாகவே இருந்தது. அந்த மூன்று சாதிக் குழுக்களையும் ஒன்று சேர்த்தால், இந்திய சமூகத்தில் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நேர்மறைப் பாகுபாட்டின் பின்னணியில் தொண்ணூறுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேகம் பெறத் தொடங்கியபோது அவர்களிடமிருந்த இவ்வாறான துருவமுனைப்படுத்தல் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்சாதியினருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்த போதிலும், அவர்கள் அதை முடிவிற்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இதர பிற்படுத்தப்பட்டவர்களை அவர்கள் தங்களுடைய திட்டத்திற்குள் அணிதிரளச் செய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டியதாயிற்று. இங்கேதான் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவராக இருந்தார்.

நரேந்திர மோடி பக்கம் ஆர்எஸ்எஸ் ஏன் திரும்பியது? அதற்கான சரியான காரணமாக அவர் சரியான பரம்பரையைக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். சரியான பரம்பரை மட்டுமல்ல, சரியான சாதி, அணுகுமுறையும்கூட அவரிடம் இருந்தது. தனது ஏழாவது வயதில் – மிக இளம் வயதிலேயே குஜராத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தின் சிறிய நகரமான வாட்நகரில் மோடி ஆர்எஸ்எஸ்சில் சேர்ந்தார். உரிய வயதுக்கு வரும் முன்பே அவர் திருமணம் செய்து கொண்டார். அதுபோன்ற திருமணங்கள் குஜராத் மற்றும் பிற இடங்களில் வழக்கமாக அடிக்கடி நடக்கின்றவையாகும். பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறிய அவர் பேலூர் மடத்திற்கு வந்து அங்கே குடியேறினார். பின்னர் குஜராத்துக்கு திரும்பி தனது குடும்பத்தை ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நல்லபடியாக விட்டுவிட்டார். அதன்பிறகு அவரது வாழ்க்கை முழுக்க ஆர்எஸ்எஸ் அமைப்புடனேயே இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பே அவரது குடும்பமாக மாறிப் போனது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமிக இளம் வயதிலேயே மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஆனார். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு. பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த ஏபிவிபி என்ற மாணவர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவரானார். வெளிமாணவராக இருந்து தனது பி.ஏ. பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். அந்த நிலையிலேயே 1975ஆம் ஆண்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் அவர் அப்போது மிக முக்கிய பங்கு வகித்தார். உடனடியாக 1978ஆம் ஆண்டில் அவர் விபாக் பிரச்சாரக் என்று அழைக்கப்படுகிற பதவிக்கு உயர்த்தப்பட்டார். குஜராத் மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்கு மேல் இருந்த பிரிவின் பொறுப்பாளரானார். 1981இல் பிராந்திய பிரச்சாரக் ஆனார். குஜராத்தில் ஆர்எஸ்எஸ் தலைவராகவும் அவர் இருந்தார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅமைப்பாளராக இருந்த அவர் மிகச் சிறந்து விளங்கினார். அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அத்வானி 1990இல் ரதயாத்திரை என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கினார். ரத யாத்திரை என்பது குஜராத்தில் இருந்து புறப்பட்டு அயோத்திக்குச் செல்லும் மிக நீண்ட பேரணி. கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கான கூட்டத்தை அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக அந்த யாத்திரை இருந்தது. அந்தப் பேரணிக்கு குஜராத் பகுதியில் மோடிதான் அமைப்பாளராக இருந்தார். அவர் பொறுப்பில் இருந்தார். 1997ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றபோது சூப்பர் முதல்வர் என்று அறியப்படும் அளவிற்குப் பலம் பொருந்தியவராக மோடி இருந்தார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருநடைமுறையில் மாநிலத்தை ஆட்சி செய்பவராக இருந்த போதிலும், சட்டமன்றத்திற்கு ஒருபோதும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2001இல் அத்வானியும், பிரதமர் வாஜ்பாயியும் அவரை முதலமைச்சராக குஜராத்தில் கொண்டு போய் இறக்கிய போது – 2003ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசியல்வாதியாக அவர் மாறினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன. ஆனால் அதற்கு இடையில், முதலமைச்சராக அவர் இருந்தபோது, ​​2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகப் பெரிய படுகொலை குஜராத்தில் நடந்தது உங்களுக்குத் தெரியும். இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இறந்துவிட்ட அந்தப் பொழுதுதான் அவரது வருங்கால அரசியல் வாழ்விற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது. அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அந்தக் கணம்தான் குஜராத்தின் பெரும்பான்மையான ஹிந்துக்களால் ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ – ஹிந்து இதயங்களின் சக்கரவர்த்தி – என்று அவர் அங்கீகரிக்கப்பட்ட தருணமானது.

அனைவரையும் விஞ்சி விதிவிலக்கான நபராக அவர் மாறிய தருணம் அது. அவர்தான் அதை முன்னின்று நடத்தினார். அயோத்தியிலிருந்து ரயிலில் திரும்பி வந்த ஐம்பத்தியேழு ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான முஸ்லீம்களை ஹிந்துக்கள் பழிவாங்குவதற்காக அந்த வன்முறைகள் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் எரிக்கப்பட்டிருந்த அந்தச் சூழலில் அவரிடம் மக்கள் இறந்து போன குற்றத்திற்கு படுகொலையே பதிலளிப்பதற்கான வழியாக இருந்தது. அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது.

தன்னுடைய பின்னணி, ஆளுமை காரணமாக மோடி பாஜகவை முற்றிலுமாக மாற்றி விட்டாரா?

கண்டிப்பாக. வாஜ்பாய், அத்வானியின் தலைமையில் 2000களில் இருந்த பாஜக மிகவும் வித்தியாசமானது. அந்த இரண்டு ஆளுமைகளின் காரணமாகவே அவ்வாறாக அந்தக் கட்சி இருந்தது. அவர்கள் இருவரும் அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து மாறி மாறி தலைமைப் பொறுப்பில் இருந்தனர். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அந்த இரு தலைவர்களும் இணைந்தே இருந்தனர். உண்மையில் அது விதிவிலக்கானது. உலகில் அதே இரண்டு தலைவர்களை நீண்ட காலத்திற்குத் தலைமையில் கொண்ட கட்சிகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். அது அவர்களிடமிருந்த கூட்டுணர்வை, சகோதரத்துவ உணர்வையே பிரதிபலிப்பதாக இருந்தது. சகோதரத்துவம் என்ற சொல்லை ஆர்எஸ்எஸ் மிகவும் விரும்புகிறது. அனைவரும் சமமானவர்கள் என்று சகோதரத்துவத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். விதிமுறைகளை விதித்து அவர்களுக்கு ஆணையிடுவதற்கு என்று யாரும் அங்கே இருக்கவில்லை.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆனால் அந்த நிலைமை 2014ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற பிறகு முற்றிலுமாக மாறிப் போனது. தன்னுடைய வலதுகரமாக இருந்த அமித்ஷாவை கட்சித் தலைவராக்குவது என்று உடனடியாக மோடி முடிவு செய்தார். ஆக அதுவும் இன்னுமொரு இணைந்திருத்தல் எனலாம். ஆனால் இது மிகவும் வித்தியாசமான இணைப்பு. மோடி, அமித்ஷா அவர்கள் இருவரும் சமமானவர்கள் இல்லை. அமித்ஷாவைக் காட்டிலும் மோடி உயர்ந்தவராகவே இருந்தார். அப்போது மாநில முதல்வராக அவர் உச்சத்தில் இருந்தார்.

இரண்டாவதாக, இந்த இரண்டு தலைவர்களும் பிராந்தியத் தலைவர்களை நம்பி தங்களுடைய கட்சி தொடர்ந்து இருக்க விடாமல், உயர்மட்டத்திலிருந்து தாங்களே பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களாக மாநில அளவில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமித்தார்கள். பாஜகவில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றத்தை மிகவும் ஒத்திருந்தது. ஜவகர்லால் நேரு மாநிலத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டு வழியைக் கடைப்பிடித்தார். ஆனால் மிகவும் பாதுகாப்பற்றவராகத் தன்னை உணர்ந்த இந்திரா காந்தி உயர்மட்டத்தில் இருந்து தனது ஆட்களைப் பதவிகளில் நியமித்துக் கொள்ளவே விரும்பினார்.

இப்போது அதே பாதையில் பாஜகவும் செல்கிறது. தன்னுடைய ஆன்மாவை அது இழந்து கொண்டிருக்கிறது. மாநில அளவில் உள்ளூர் சமூகங்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழந்து வருகிறது. ஆனாலும் அந்த இழப்பு காங்கிரஸால் மீண்டும் பெற முடியாத சமூகமட்டத்திலான தொடர்புகளைக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் மூலம் ஓரளவிற்கு ஈடுசெய்யப்படுகிறது.

உங்கள் புத்தகத்தில் உள்ள மேற்கோள் நரேந்திர மோடி உருவாக்கிய மாற்றம் பாஜகவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது என்ற முத்திரையைக் குத்தியிருக்கிறது. ‘ஆளும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசியல்வாதிகள் உட்பட மற்றவர்களுக்கும் எதிராக மோடி தன்னை ஒன்றிணைப்பவராக முன்னிறுத்திக் கொண்டார்’ என்று எழுதியுள்ளீர்கள். இன்னும் ஆழமாகச் சென்று பார்க்கும்போது, ​​இனரீதியான ஜனநாயகம் மட்டுமல்லாது, குறுகிய நோக்குடைய ஜனநாயகம் என்று பலராலும் விவரிக்கப்படுகின்ற வகையில் இந்தியா மாறி வருவதைக் காண்கிறோம். மற்ற இனச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுவே அவர்களிடமுள்ள அந்த குறுகிய நோக்கத்தை காணக்கூடிய நேரடியான வழியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த குறுகிய நோக்கம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை விளக்கிட முடியுமா? நாட்டில் உள்ள முஸ்லீம்களை இந்தியா எவ்வாறு முறையாக ஓரம் கட்டியது?

ஹிந்து பெரும்பான்மையினரையே பாஜக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதனால்தான் இனரீதியான ஜனநாயகமாக இந்தியா மாறிவிட்டது என்று நான் கருதுகிறேன். நடைமுறையில் இரண்டாம் தர குடிமக்களைக் கொண்ட ஜனநாயகமாக இருந்தாலும் சட்டப்படி அது அவ்வாறாக இருக்கவில்லை. சட்டப்படியாக சில சீர்திருத்தங்கள், சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தவையாக இரண்டு அல்லது மூன்று சட்டங்களே உள்ளன.

முதலாவது சட்டமான மாட்டிறைச்சியைத் தடை செய்யும் சட்டம் மாநில அளவிலானதாக இருக்கிறது. இரண்டாவது லவ் ஜிஹாத் எதிர்ப்புச் சட்டம். அதுவும் மாநில அளவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் – பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள சட்டமே. அது கலப்புத் திருமணங்களை மிகவும் கடினமாக்குகிறது. ஹிந்துப் பெண்களை ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு முஸ்லீம் ஆண்கள் முயல்கிறார்கள் என்பதே அந்தச் சட்டத்தின் பின்னணியாகும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமூன்றாவது சட்டம் – சட்டம் என்பதற்கான வரையறையையே மீறுவதாக உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கின்ற முஸ்லீம் அல்லாத அகதிகள் வரவேற்கப்படுவார்கள், அவர்கள் இந்திய குடிமக்கள் ஆகலாம், ஆறு ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்ற விரைவான நடைமுறையுடன் குடியுரிமை பெறுவதற்கான தகுதியுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தமே அந்த மூன்றாவது சட்டம். முஸ்லீம் நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் அந்த முஸ்லீம் நாடுகளில் துன்புறுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் சட்டத் திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான அந்த வாய்ப்பு முஸ்லீம்களுக்குக் கிடைக்காது. நாட்டில் முதன்முறையாக குடியுரிமை பெறுவதற்கான இரண்டு வெவ்வேறு வழிமுறைகள் அந்தச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இவையே மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாற்றங்கள்.

நடைமுறைகளில் இருந்து வருகின்ற மற்ற பிரச்சனைகளைக் காட்டிலும் சட்டங்கள் குறைவான பிரச்சனைகளுடனே இருக்கின்றன. சங்பரிவாரத்துடன் தொடர்புடைய கண்காணிப்புக் குழுக்கள் 2014க்குப் பிறகு சிறுபான்மையினருக்கு, முஸ்லீம்களுக்கு எதிராக – சில சமயங்களில் மிகவும் தளர்வாக கிறிஸ்தவர்களுக்கும் எதிராக – பிரச்சாரங்களைத் தொடர்ந்து வருவதைக் காண முடிகிறது. முஸ்லீம்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக முஸ்லீம்களின் லாரிகள் பசுக்களை இறைச்சிக் கூடங்களுக்கு கொண்டு செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்க கோ ரட்சகர்கள் எனும் பசு பாதுகாவலர்கள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்கின்றனர். லாரிகளில் மாடுகளைக் கொண்டு சென்ற முஸ்லீம் லாரி ஓட்டுநர்களை அடித்துக் கொன்ற சம்பவங்கள் போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅவர்கள் மேற்கொள்கின்ற மற்றொரு பிரச்சாரம் மதமாற்றத்திற்கு எதிரானது. திரும்பவும் ஹிந்து மதத்திற்கு மாற்றுவது என்பது அந்த கண்காணிப்புக் குழுக்கள் மேற்கொண்ட மற்றொரு இயக்கமாகும். அவர்களிடம் லவ் ஜிஹாத் எதிர்ப்பு இயக்கமும் உள்ளது. அதன் விளைவாக முஸ்லீம் ஆண்களைச் சந்திக்கின்ற ஹிந்துப் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். சில சமயங்களில் திருமணம் நடக்கின்ற இடத்திற்கே சென்று முற்றுகையிட்டு திருமணங்களை அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். இதுதான் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை மிரட்டி அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அப்பட்டமான இனரீதியான ஜனநாயகம்.

அது மிக முக்கியமான மற்றொரு பரிமாணத்தையும் விளைவித்திருக்கிறது. இனரீதியான ஜனநாயகம் சிலரை மட்டும் நகர்ப்புறப் பகுதிகளில் தனிப்பகுதிக்குள்ளே ஒதுக்கி வைத்துள்ளது. அனைவரும் கலந்து வசிக்கின்ற சுற்றுப்புறங்கள் மிகவும் அரிதாகி, விதிவிலக்கானவையாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கான சட்டங்களும் சில சமயங்களில் இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக குஜராத்தில் இப்போது வீட்டை விற்கவோ அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கவோ இயலாது. அங்கே அஸான் எனும் தொழுகைக்கான அழைப்பு கூட சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிவு என்பதே இன்றைய நாளில் நிச்சயம் என்பதாக இருக்கிறது. சாதிகளுக்கிடையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அனைவரும் சேர்ந்து வசிக்கின்ற கலப்பு பகுதிகள் இருக்கக்கூடாது என்று வற்புறுத்தி இரண்டாம் தர குடிமக்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். இனரீதியான ஜனநாயகம் இதுபோன்றும் வெளிப்பட்டுள்ளது – அதுதான் குறுகிய நோக்குடைய ஜனநாயகமாகப் பார்க்கப்படுகிறது.

முறையான விதிகள் மோசமான நிலைமையில் இருப்பது நமது கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் பல வழிகளில் முறைசாரா அடக்குமுறைகளும் நாட்டில் இருந்து வருகின்றன. ‘இந்த கண்காணிப்புக் குழுக்கள் அரசின் குறிப்பாக, அதன் ஆயுதப் பிரிவான காவல்துறையின் மறைமுகமான ஒப்புதல் இல்லாமல் உருவாகி வளர்ந்திருக்க முடியாது’ என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். முறைசாரா அடக்குமுறையாக இருந்தாலும் கூட, அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன். அந்த அடக்குமுறைகள் மோசமானவர்கள் சிலரால் மட்டுமே நடைபெறுவதாக இருக்கவில்லை. காவல்துறையால், அரசால் அரவணைக்கப்பட்டு, அரசின் பல்வேறு அம்சங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடைய பொதுக் கொள்கையின் நடைமுறைப் பகுதியாக மாறியுள்ள ஒன்றைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டில் இந்தியாவை சுதந்திரமான நாடு என்பதில் இருந்து ஓரளவிற்கு சுதந்திரமான நாடு என்று தன்னுடைய வகைப்பாட்டை ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம் குறைத்திருப்பதற்கு அதுவே மிகப்பெரிய காரணமாகும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஃப்ரீடம் ஹவுஸ் தன்னுடைய அறிக்கையில் இன்னொரு மேற்கோளையும் வைத்திருக்கிறது. இந்த அளவிற்கு இந்தியா எப்படி மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்வதற்கு அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். ‘உலகளாவிய ஜனநாயகத் தலைவராக பணியாற்றக்கூடிய திறனை மோடியின் தலைமையில் இந்தியா இழந்திருப்பதாகவே தோன்றுகிறது. அனைவரையும் உள்ளடக்குவது, அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குவது என்று தன்னுடைய அடிப்படை விழுமியங்களை இழந்து குறுகிய ஹிந்து தேசியவாத நலன்களை இந்தியா உயர்த்திப் பிடித்து வருகிறது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தியா அடைந்திருக்கும் மாற்றம் குறித்து மற்றொரு புள்ளிக்கு அது திரும்புகிறது. அதைப்போன்ற உணர்வுகள், உள்ளுணர்வுகள் எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்றாலும் இப்போது அதுபோன்ற நடத்தைகளை அனுமதிக்கின்ற வகையிலே அரசிடமே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வன்முறைகலை நிகழ்த்துபவர்கள் அரசு சாராதவர்களாக இருந்தாலும் அவர்களைத் தழுவிக்கொள்வது, தவறாக நடந்துகொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்று அரசிடமிருந்தே இப்போது அனுமதி கிடைத்து வருகிறது.

ஆமாம். காவல்துறை உட்பட அரசின் ஆசீர்வாதத்துடனே இந்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது. காவல்துறை அல்லது துணை ராணுவப் படைகள் போன்ற பிற அரசு நிறுவனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன.

கிறிஸ்டாஃப்! ஏராளமான மோசமான விஷயங்களைச் செய்து வருவதால் பாஜகவை மோசமானது என்று இப்போது சொல்வது மிகவும் எளிது என்றாலும் நான் இப்போது கேட்க விரும்புவது – வாக்காளர்கள், தாராளவாத விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான். பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், நான் ஆதரிக்க வேண்டிய வேறொரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்பதே இயல்பான அனுமானமாக இருக்கும். அந்த மாற்று கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் என்பதுவும் இயல்பான அனுமானமாக இருக்கலாம். ஆனாலும் அதுகுறித்து ஏராளமான சந்தேகம் இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது குறித்து இந்தியர்கள் மத்தியிலும், உண்மையில் இந்தியாவிற்கு அப்பாலும் கூட ஏராளமான தயக்கம் நிலவி வருகிறது.

பாஜக ஆட்சியைப் பிடித்த நேரத்தில் சுமித் கங்குலி எழுதிய ‘இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்’ என்ற கட்டுரை 2014 ஏப்ரலில் ஜேர்னல் ஆஃப் டெமாக்ரசி என்ற இதழில் வெளியானது. அவர் அந்தக் கட்டுரையில் அனைவரையும் ஈர்க்கின்ற மேற்கோள் ஒன்றைக் கையாண்டிருந்தார். ‘உண்மையான கருத்தியல் அர்ப்பணிப்புடன் எந்தவொரு கட்சியும் இப்போது இருக்கவில்லை. பதவி, அதன் மூலம் கிடைக்கின்ற பரந்த பலன்களை வென்றெடுப்பதைத் தவிர வேறு எது குறித்தும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அக்கறை கொள்வதில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் (INC), பாரதிய ஜனதா கட்சி (BJP) என்ற இரண்டு மேலாதிக்கக் கட்சிகளும் வெளித்தோற்றத்தில் வெவ்வேறு அரசியல் திட்டங்களைக் கொண்டிருப்பதாக நம் கண்ணில் முதலில் படுவதைத் தாண்டி அவை இரண்டுக்குமிடையே பல பொதுவான தன்மைகள் இருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது​​ பின்னோக்கிப் பார்க்கும் போது, பாஜகவிற்கென்று தெளிவான சித்தாந்தம் உள்ளது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனாலும் இந்திய தேசிய காங்கிரஸிடம் இருக்கின்ற தெளிவான திட்டம் என்னவென்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸின் இன்றைய நிலைப்பாடு என்ன?

இது அருமையான கேள்வி. நீங்கள் யாரை கவனத்தில் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் மாறுபடும். காங்கிரஸின் உயர்மட்டத் தலைமையில் இருக்கின்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மதச்சார்பின்மை, கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றின் மீதுள்ள மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஜவகர்லால் நேருவின் சித்தாந்தத்திற்கு விசுவாசமானவர்களாகவே இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைமை தாங்கிய முந்தைய கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக ஜனநாயகம் போன்றவை கடைப்பிடிக்கப்பட்டதை நாம் பார்த்தோம். மிகவும் சுவாரசியமான, மிக முக்கியமான திட்டத்தின் மூலம் அவர்களால் அமல்படுத்தப்பட்ட இலவச விநியோகம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருந்த கிராமப்புறக் குடும்பங்களுக்கு நூறு நாள் சம்பளத்தை, குறைந்தபட்ச ஊதியத்தை அவர்கள் கொண்டு வந்த தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வழங்கியது. அவர்களுடைய மற்ற தாராளவாத முடிவுகளின் கட்டமைப்பிற்குள் இதுபோன்ற மக்கள்நலன் சார்ந்த நடவடிக்கைகளும் இடம் பெற்றிருந்தன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளான முக்கிய சட்டமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்து வருகிறது. இன்றைக்கு அது முற்றிலும் நீர்த்துப் போயிருக்கிறது. கல்வி உரிமை, உணவு உரிமை போன்றவை காங்கிரஸின் உயர்மட்டத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்தன. அதைத்தான் அவர்கள் 2004 மற்றும் 2014க்கு இடையில் பதவியில் இருந்தபோது செய்து வந்தார்கள். அவற்றை இன்னும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் காங்கிரஸில் அந்த உயர்மட்டத் தலைவர்களுக்கு கீழே – அவ்வாறாக இருக்கின்ற மிகச் சிலருக்கு கீழே – சந்தர்ப்பவாதிகளும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டம் ஹிந்துத்துவாவிற்கானது என்றும் ஹிந்து தேசியவாதமே ஆதிக்கம் செலுத்தும் கொள்கை என்பதாகவும் உணர்ந்திருக்கும் அவர்கள் அதற்குள் வீழத் தயாராகி, கட்சியை விட்டு வெளியேறத் தயாராக இருந்த அவர்கள் அதைச் செய்தும் காட்டியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கட்சி மாறுவது என்பது உண்மையில் ஒரு நோயாகவே மாறிவிட்டது. ஆனால் அதுபோன்ற விலகல்கள் திட்டமிட்டும் நடத்தப்படுகின்றன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருகாங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான அழுத்தத்தை பாஜகவால் கொடுக்க முடிகிறது. பெருமளவில் பணத்தை வைத்துக் கொண்டு தவறிழைப்பவர்களை நோக்கி வருமான வரித்துறைச் சோதனைகள் படையெடுக்கின்றன. நெருக்கடிநிலை காலகட்டத்தில் இதைத்தான் இந்திரா காந்தியும் செய்தார். எழுபதுகளில் திருமதி காந்தி தொடங்கி வைத்த மிரட்டல் உத்திகளை பாஜகவினர் இப்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். தரப்படும் அழுத்தங்களுக்கு கொள்கை அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் அடிபணிந்து போவதும் அதற்கான காரணியாக இருக்கலாம்.

காங்கிரஸுக்கு அப்பால் பிராந்தியக் கட்சிகளைப் பார்க்கும் போது, அங்கேயும் அதேபோன்ற நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் முக்கியமான சில சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு பாஜகவிற்குத் தேவைப்பட்ட போது, சில எதிர்க்கட்சிகளின் ஆதரவாலேயே அது சாத்தியமாகியிருக்கிறது.

ஜம்மு, காஷ்மீருக்கு தன்னாட்சியை வழங்கிய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கியதை அதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மாநிலக் கட்சிகளின் ஆதரவின் முலமே அந்தச் சட்டம் சாத்தியமானது. அது ஒரு சட்டமாக மாற முடிந்தது. இதற்கு முன்பு குறிப்பிட்ட குடியுரிமை திருத்தச் சட்டமும் அப்படித்தான்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் உள்ளன. மத்தியில் நடத்தப்படுகின்ற ஒரு வகையான கொடுக்கல்-வாங்கல் பேச்சுவார்த்தையில் தங்களுடைய மதச்சார்பற்ற கடமைகளை விட்டுக் கொடுப்பதில் இதுபோன்ற மாநிலக் கட்சிகளிடம், முக்கியமாக கிராமப்புறக் கட்சிகளிடம் எந்தவொரு தடையும் இருப்பதில்லை. மேலும் இந்த கட்சிகளிடையேயும் மேலிருந்து தரப்படுகின்ற அழுத்தங்கள் நன்றாகவே வேலை செய்கின்றன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎதிர்கட்சியைச் சார்ந்த X அல்லது Y அரசியல்வாதி தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் ஏதேனும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென விரும்பினால், அவர் சரியான வழியில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்து விட்டால் அவர் அழுத்தத்திற்கு உள்ளாக மாட்டார். வருமான வரித்துறையின் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால், அவர் அதைச் செய்துதான் ஆக வேண்டும். மதச்சார்பின்மை குறித்த அர்ப்பணிப்பு இல்லாமை, வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றின் பாதிப்புடனே இன்றைக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இருந்து வருகின்றனர்.

இந்த உரையாடல் முழுவதும், மோடி ஆட்சியைப் பிடித்த பிறகு அதிகாரத்தை மையப்படுத்த முயன்றதால் இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைப் பற்றியே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை நீதித்துறைக்குள்ளும் காண முடிகிறது. கட்சிக்குள் மோடிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்திலும் நம்மால் காண முடிகிறது. முடிவெடுக்கும் போது மோடி தனது கட்சி உறுப்பினர்களை மிகவும் அரிதாகவே கலந்து கொள்கிறார். கண்காணிப்பு மூலம் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அவை நிகழ்ந்த விதம் என்று இதைப் பற்றி பேசுவதற்கு பல வழிகள் உள்ளன. சட்டத்தின் ஆட்சிக்கு அத்தியாவசியமாக இருக்கின்ற அரசு நிறுவனங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நடத்தைகள் எதிர்ப்புகளின்றி வெறுமனே அனுமதிக்கப்படுகின்றன. இறுதியாக இந்திய ஜனநாயகத்திற்கு மீள முடியாத சேதத்தை மோடி இப்போது இழைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏதாவதொரு கட்டத்தில் மோடியை நிராகரித்து இந்திய ஜனநாயகத்தால் தானாக மீண்டு வர முடியுமா?

மோடி அதிகாரம் மிக்கவராக இருப்பது அவர் ஆட்சி செய்யும் விதத்தாலா அல்லது அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாலா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வது மிகவும் முக்கியமாகிறது. ஹிந்து வாக்காளர்கள் அதை விரும்பியதாலேயே அவர் இவ்வாறு இருக்கிறாரா என்ற கேள்விக்கான விடை மூலமாகவே உங்களுடைய கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். கருத்துக் கணிப்புகள், கள ஆய்வுகளைப் பார்க்கும்போது, ​​ அநேகமாக ஹிந்து சமுதாயம் உண்மையில் மோடி இல்லை என்றால் அவ்வாறு ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் அளவிற்கு அடியோடு மாறியிருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவராகவே மோடி இருக்கிறார். பாதுகாப்பு தேவை என்ற உணர்வு பெரும்பாலும் இருந்து வருகிறது. பாதுகாப்பின்மை மற்றும் தொடர் அச்சுறுத்தலின் கீழ் இருப்பது போன்ற உணர்வு இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. அதுபோன்ற உணர்வு முந்தைய காலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், இஸ்லாமியர்களின் தாக்குதல்களின் விளைவாகவே உருவாகியிருக்கிறது. 2008 மும்பை குண்டுவெடிப்பு மிகப் பெரிய அளவிலான அதிர்ச்சியை உருவாக்கியது. அதுபோன்ற இன்னும் பல தாக்குதல்கள் அதைப் போன்ற அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளன.

பின்னர் அங்கீகாரத்திற்கான – சர்வதேச அங்கீகாரம் – தேவையும் இருக்கிறது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் உள்ள பெருமிதம் என்பது மிகவும் பரவலான உணர்வாக கருத்துக்கணிப்புகளில் காணக் கிடைக்கிறது. அவை ‘நாம் பாதுகாப்பற்றவர்கள், ஆனால் மரியாதைக்குரியவர்கள்’ என்று சொல்கின்றன. அவை தேசியவாதத்தின் இரண்டு முகங்கள். நடுத்தர வர்க்கத்திலும், நடுத்தர வர்க்கத்திற்கு அப்பாலும் தேசியவாதம் மிகமிக முக்கியமானதாகி இருக்கிறது.

மூன்றாவதாக, அவர் ஏழைகளுக்கு ஆறுதல் அளிப்பதில் மிகுந்த திறமை உள்ளவராக இருக்கிறார். மோடிக்கு வாக்களித்து தாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் ஏழை மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்ற கேள்வியை நான் சமீபத்தில் எதிர்கொண்டேன். மோடி விஷயத்தில் அது உண்மையாகவே இருக்கிறது. ஜனரஞ்சகவாதிகள் பலர் விஷயத்திலும் அது உண்மையாகவே இருந்திருக்கிறது. ட்ரம்ப், போல்சனாரோ போன்ற ஜனரஞ்சகவாதிகள் பதவியில் இருக்கின்ற போது, ​​ஏழைகளுக்காகப் பொருள் ரீதியாக எதையும் செய்யாமல், பொருளற்ற வகையில் எதையாவது செய்திருக்கும் போது மீண்டும் அவர்களுக்கே வாக்களித்து, இந்த ஏழைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது?Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமீண்டும் மீண்டும் வாய்ச்சவடால், அங்கீகார உணர்வு, பெருமிதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் எதையாவது செய்கிறார்கள். இதுவரையிலும் ஏழைகளுக்காக யாரும் செய்யாததை மோடி இப்போது செய்திருக்கிறார் – அவர் ஒவ்வொரு மாதமும் வானொலியில் அந்த ஏழைகளுடன் பேசுகிறார். அவர்கள் சொல்வதை தான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர்களிடம் கூறுகிறார். ‘மன் கி பாத்’ – இதயத்திலிருந்து வருகின்ற வார்த்தைகள் என்பது அந்த வானொலி நிகழ்ச்சியின் பெயர். அதுவொரு வானொலி நிகழ்ச்சியாகும். ஏழைகளிடம் ரேடியோக்கள் உள்ள போதிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி நன்றாகச் சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது. அந்த வானொலி நிகழ்ச்சியை வழங்கியது மட்டுமன்றி, கழிவறைகளை உருவாக்குவதன் மூலம் மோடி ஏழைகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கழிவறைகளைக் கட்டியுள்ளார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆக மன்மோகன் சிங் செய்த எதையும் மோடி செய்திருக்கவில்லை. ஏழைகளுக்கு பணம் எதையும் கொடுக்கவில்லை. ஏழைகளுக்குப் பணம் கொடுத்தால் பணம் வீணாகிவிடும் என்று நினைத்த மோடி அவர்களுக்கு மரியாதையை மட்டும் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு உதவ உண்மையில் அவர் விரும்பவில்லை. அந்த உணர்வில் அவர் மிகச்சரியாக இருக்கிறார் என்றாலும் உறுதியான ஒன்றை, அவர்கள் மிகவும் மதிக்கின்ற ஒன்றை – மரியாதை மற்றும் சில உறுதியான பொருள் விநியோகத்திற்கான முயற்சியை – அவர்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார்.

தங்களுடைய சுதந்திரத்தின் இழப்பில் பாதுகாப்பு தேவை என்று மக்களிடம் உள்ள உணர்வு மோடியைத் தாண்டியும் ஏதோவொரு வகையில் தொடரக்கூடும் என்பதால் சமூகம் அவரை எதிர்கொள்ளும் விதம் நம்மிடமிருக்கும் கேள்வியை மிகவும் கடினமாக்குகிறது. தேசப் பெருமை, அங்கீகாரம் போன்றவையும் அவரைத் தாண்டியும் தொடரலாம். அதே நேரத்தில் தலைவர்களிடம் பெரிய வேறுபாடுகள் இருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

வேறு வகையான தலைமையும் இல்லை என்பதையே காட்டலாம். அதுவொன்றும் மீள முடியாதது அல்ல என்பதால் நாம் வேறு வகையான ஆட்சிக்குத் திரும்பலாம். இந்தியா போன்ற நாட்டில் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக மட்டுமே இல்லாமல், மனசாட்சியின் தலைவர்களாகவே இருப்பதாகக் கூறலாம். இன்றைக்கு மோடியைப் போல குரு வகை ஆளுமையாகவே தலைவர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்கள் அரசை ஆளுபவர்களாக மட்டும் இருக்காமல் மக்களை வழிநடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்கதரிசிகளாகக் காணப்படுகிறார்கள். மார்க்கதரிசி என்றால் வழியைக் காட்டுபவர் என்று பொருள். எனவே வேறொரு வகையான தலைமை வேறொரு சுழற்சியை – பிந்தைய தேசியவாத ஜனரஞ்சக சுழற்சி என்ற வேறு பாதையை மக்களுக்குக் காட்டலாம். அதைத்தான் நாம் அமெரிக்காவில் பார்த்தோம். வேறொரு தலைவர் வேறொரு திசையைக் காட்டக்கூடும் என்பதையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சாத்தியமற்றதாகத் தோன்றியவை இப்போது மிகவும் சாதாரணமானவையாகி, வேறு பாதைக்கு நாம் திரும்பியுள்ளோம் என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

எனவே அந்த வகையில் நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அது மீள முடியாதது என்றும் நான் நினைக்கவில்லை. அது அவரால் மட்டுமே நடந்ததல்ல என்பதாக என்னுடைய பகுப்பாய்வை தனிமனிதரிடமிருந்து மாற்ற விரும்புகிறேன். சமூகத்தில் உள்ள எதிர்பார்ப்புகளின் காரணமாக புதிய ஆட்சி வருவதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎன்னுடன் பேச நேரம் ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி. ஏராளமான உரையாடல்களில் நரேந்திர மோடியே வருவதைப் போல நான் உணர்கிறேன். சில சமயங்களில் இந்திய அரசியலில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற முழுச் சூழலையும் புரிந்து கொள்ளாமல் நாம் அவரை வளர்த்து விடும்போது தன்னைக் குறித்த கேலிச்சித்திரமாகவே அவர் மாறி விடக்கூடும். இந்தியாவில் நிலவுகின்ற மிகப்பெரிய சூழலைப் புரிந்துகொள்வதற்கான நேரத்தை அளித்ததற்கு நன்றி. மிக்க நன்றி.

நன்றி, ஜஸ்டின். உங்கள் அழைப்பிற்கு நன்றி.
https://democracyparadox.com/2021/07/13/christophe-jaffrelot-on-narendra-modi-and-hindu-nationalism/

நன்றி: டெமாக்ரசி பாரடாக்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்

மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும் – ஜானவி சென் | தமிழில்: தா.சந்திரகுரு




Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்எழுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நாளில் (நவம்பர் 26) அரசியலமைப்பு நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1950 ஜனவரி 26 அன்றிலிருந்து நமது நாட்டின் அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழலில் நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளும், பாதுகாப்புகளும் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விகள் நம்மிடையே எழுந்துள்ளன.

இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான பல வழக்குகள் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகின்றன. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நமது அரசியலமைப்பு தந்திருக்கும் உத்தரவாதத்தை மீறுவதாகக் கருதப்படுகின்ற அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மீது தொடரப்பட்டுள்ள சில வழக்குகளின் பட்டியல் இங்கே தரப்படுகிறது:

1. 370ஆவது சட்டப்பிரிவு

Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்
2020 ஆகஸ்ட் 5 அன்று ஸ்ரீநகரில், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் போது ​​அங்கிருந்த தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள்

நரேந்திர மோடி அரசாங்கம் முன்பிருந்த ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியை வழங்கி வந்த அரசியலமைப்பின் 370 மற்றும் 35A பிரிவுகளை நீக்குவது என்று 2019 ஆகஸ்ட் 5 அன்று ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தது. அதே நேரத்தில் அப்போதிருந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கின்ற ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொண்டது.மோடி அரசின் அந்த முடிவு ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சமீபத்தில் அந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளும் மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான M.Y.தாரிகாமி தாக்கல் செய்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுக்களில் பெரும்பாலானவை ஒன்றிய அரசு தனது நடவடிக்கையை அறிவித்த உடனேயே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்கு பட்டியலிடப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.

ஜம்மு, காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்தை மாற்றுவதற்கான ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று 2019 ஆகஸ்ட் 28 அன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2020 மார்ச் 2 அன்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பாக அந்த விவகாரம் பட்டியலிடப்பட்டது.

2. குடியுரிமைச் சட்டத் திருத்தம்
நாடு முழுவதும் எழுந்த மிகப்பெரிய அளவிலான எதிர்ப்புகளை மீறி சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2019 டிசம்பர் 11 அன்று பாராளுமன்றம் நிறைவேற்றியது. சுதந்திர இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கு முதன்முறையாக மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்த அந்த சட்டம் மிகக் கடுமையாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டது.

Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜமியா மிலியா இஸ்லாமியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்

அந்த சட்டத்திருத்தத்தில் 2014 டிசம்பர் 31க்கு முன்பு ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து உரிய ஆவணமில்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றிருந்தது. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் ஹிந்து, சீக்கியர், பார்சி, பௌத்தர் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்றிருந்ததுதான் பிரச்சனையானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதற்கும் அமல்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்துடன் இணைத்து, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை குறிவைப்பதற்காக அந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்றே பலரும் நம்பினர்.குடிமக்களின் போராட்டங்களுக்கு அப்பால் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட உடனேயே சட்டரீதியாகவும் அது எதிர்கொள்ளப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) முதலாவதாக சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் மேலும் தொடரப்பட்ட 143 மனுக்கள் அந்தச் சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை கேள்விக்குள்ளாக்கின. சட்டத்தை விமர்சனம் செய்தவர்களும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாக, பதினான்காவது சட்டப் பிரிவிற்கு (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) எதிரானதாக இருக்கிறது என்ற வாதங்களை முன்வைத்தனர். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையர் மைக்கேல் பாச்லெட் கூட, உச்சநீதிமன்றத்தில் அந்தச் சட்டத்திற்கு எதிராக இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதுவரையிலும் அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்தைப் பெறவில்லை. சட்டத் திருத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் 2020 ஜனவரிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது. இருப்பினும் இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான் ஒன்றிய அரசின் முதல் பதில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு முழுவதும் மூன்று நாட்களில் மட்டுமே விசாரிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் ஒருமுறை கூட விசாரணை நடைபெறவில்லை.

இதுதவிர அந்தச் சட்டத்திற்கான விதிகள் இன்னும் ஒன்றிய அரசால் இறுதி செய்யப்படவில்லை.

3. தேர்தல் பத்திரங்கள்
2017ஆம் ஆண்டு நிதிச்சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே கொண்டு வரப்பட்ட ஒன்றிய அரசின் 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுவான காரணம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘எந்தவொரு அதிகார மையத்தாலும் சரிபார்க்க இயலாத தெளிவற்ற நிதியமைப்பு’ என்று குறிப்பிட்டு அந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களவையை முழுமையாகத் தவிர்த்து விட்டு நிதிமசோதாவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்தேர்தல் பத்திரங்கள் திட்டமானது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னராக முற்றிலும் அநாமதேயமாக நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது. 2017ஆம் ஆண்டிலேயே வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டில்தான் நீதிமன்றம் அந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அதற்குள்ளாக தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்திற்கோ, பல சந்தர்ப்பங்களில் – மிக சமீபத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் – தேர்தல் பத்திரங்களின் விற்பனைக்கோ தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் ஆகியவை தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து கடுமையான சந்தேகங்களும், கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்த போதிலும், நரேந்திர மோடி அரசாங்கம் அந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பதாக பல அறிக்கைகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களிலிருந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த விதிகளையோ அல்லது விதிமுறைகளையோ பின்பற்றவில்லை என்பதுவும் தெரிய வந்துள்ளது.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்2019 ஏப்ரல் 12 அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முத்திரையிடப்பட்ட உறையில் தேர்தல் பத்திரங்களின் கீழ் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டது. இருப்பினும் அந்த அமர்வு அதற்குப் பிறகு அந்த வழக்கை மீண்டும் பட்டியலிடவில்லை. மிக சமீபத்தில் அவரது ஓய்விற்குப் பிறகு அந்த வழக்கு பற்றி கோகோயிடம் கேட்கப்பட்ட போது, ​​தனக்கு ‘நினைவில் இல்லை’ என்று அவர் பதிலளித்திருந்தார்.

4. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்
தெளிவற்ற விதிமுறைகள், அதன் தவறான பயன்பாட்டிற்காக மிகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ள உபா என்ற சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் என்ற ‘பயங்கரவாத எதிர்ப்பு’ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் அரசு ஊழியர்கள் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பியது. மோடி அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் செய்து அதை இன்னும் கடுமையாக்கிய உடனேயே 2019ஆம் ஆண்டில் இந்த விஷயம் குறித்து இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டத்திருத்தம் ஓர் அமைப்பை மட்டுமல்லாது தனிநபர் ஒருவரைக்கூட பயங்கரவாதி என்று அறிவிக்க அரசை அனுமதிக்கின்றது.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை கிடைப்பதை உபா சட்டத்தில் உள்ள விதிகள் மிகவும் கடினமாக்குவதாலும், விசாரணைகள் பல ஆண்டுகளுக்குத் தொடரலாம் என்பதாலும் வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஒருவருக்கு நீண்ட கால சிறைவாசம் உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்று சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசியலமைப்பின் பதினான்காவது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் சம உரிமை, சட்டப்பிரிவு 19(1)(a)இன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் 21ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவற்றை இந்தச் சட்டம் மீறுகிறது என்று மனுதாரர்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர். உபா சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த தண்டனை விகிதமே – அதாவது 2.19% மட்டுமே – இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். சமீபத்திய அரசு ஊழியர்களின் மனுவில் ‘இந்த மிகக் குறைந்த தண்டனை விகிதம் உபாவின் கீழ் தொடரப்படுகின்ற வழக்குகள் ‘மோசமான நம்பிக்கையின்’ அடிப்படையில் மட்டுமே தொடங்குவதையும், வழக்கிற்கான ஆதாரங்களின் தரம் போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. வேளாண் சட்டங்கள்Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு முன்பாகவே, வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் – 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தச் சட்டம் – 2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் – 2020 ஆகிய மூன்று சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாக 2021 ஜனவரியில் இந்த மூன்று சட்டங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த மூன்று சட்டங்கள் மற்றும் பிற அரசாங்கக் கொள்கைகள் மிகப்பெரிய பெருநிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றனவே தவிர, விவசாயிகளுக்கு அல்ல என்றும் கூறி இந்த சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அரசாங்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும், மத்தியஸ்தம் செய்வதற்கும் ஒரு குழுவை நீதிமன்றம் அமைத்தது. ஆனால் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களாகக் காணப்பட்டதால் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அந்தக் குழுவை பலரும் விமர்சிக்கவே செய்தனர்.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்தன்னிச்சையானவையாக, சட்டப்பிரிவு 14ஐ மீறுவதாக வேளாண் சட்டங்கள் இருப்பதாக அந்தச் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

6. தகவல் தொழில்நுட்ப விதிகள்
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் – 2021க்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த விதிகள் ஊடக தளங்கள், ஓடிடி (OTT) ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் சமூக ஊடக இடையீட்டாளர்களை ஒழுங்குபடுத்த முயல்கின்றன. உள்ளடக்கத்தை நீக்குகின்ற உரிமை உட்பட, ஒன்றிய அரசிற்கு விரிவான அதிகாரங்களை அந்த விதிகள் வழங்குகின்றன. செய்தி இணையதளங்கள், பத்திரிக்கையாளர் அமைப்புகள், இணைய சுதந்திரத்திற்கான ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரின் விமர்சனத்திற்கு இந்த விதிகள் ஆளாகியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக முதன்முதலாக சட்டரீதியாக சவால் விடுத்து தி வயர் இணைய இதழின் நிறுவன ஆசிரியர் எம்.கே.வேணு மற்றும் தி நியூஸ் மினிட் இதழின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தகவல் தொழில்நுட்ப தோற்றுவாய்ச் சட்டத்தை மீறுவதாக அந்த விதிகள் இருக்கின்றன என்று அவர்களுடைய மனுக்களின் மூலம் வாதிடப்பட்டது. அதற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் லைவ் லா, மலையாள மனோரமா, தி குயின்ட், பி.டி.ஐ உள்ளிட்ட பிற ஊடக நிறுவனங்களும் வழக்குகளைத் தாக்கல் செய்தன. தகவல் தொழில்நுட்பச் சட்டம், அரசியலமைப்பு விதிகள் 14 (சட்டத்தின் முன் அனவரும் சமம்) மற்றும் 19(1)(ஜி) (எந்தவொரு தொழிலையும் மேற்கொள்வதற்கான சுதந்திரத்திற்கான உரிமை அல்லது தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமை) ஆகியவற்றை அந்த விதிகள் மீறுவதாக அவர்களுடைய மனுக்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப்பும் இந்த விதிகள் அரசியலமைப்பிற்கு, தனியுரிமைக்கான அடிப்படை உரிமைக்கு எதிரானவை என்று குறிப்பிட்டு விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

7. பெகாசஸ்Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ (NSO) குழுமத்தால் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டுள்ள உளவு மென்பொருள் மூலம் பத்துக்கு மேற்பட்டவர்களின் ஸ்மார்ட் போன்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, இலக்கு வைக்கப்பட்டன என்பதை தி வயர் மற்றும் உலகளாவிய அதன் ஊடகப் பங்காளிகள் தங்களுடைய பெகாசஸ் திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டறிந்தன. உலகம் முழுவதும் பெகாசஸின் இலக்குகளுக்கு ஆளானதாக தரவுத்தளத்தில் கசிந்த தொலைபேசி எண்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தனர்.

என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் உளவு மென்பொருளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்றிருக்கிறது.

பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் என்று ஐந்து பேர் உள்ளிட்டு மொத்தம் ஒன்பது மனுக்கள் இந்த விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டுமென்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அக்டோபர் 27 அன்று இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய அரசாங்கத்திடம் இருந்து உளவு மென்பொருளை வாங்கியதற்கும், பயன்படுத்தியதற்குமான குறிப்பிட்ட மறுப்பு எதுவும் வரவில்லை என்பதால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுயாதீன நிபுணர் குழு ஒன்றை அமைப்பதாகத் தெரிவித்தனர். குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், குடிமக்களின் தனியுரிமை, பேச்சு சுதந்திரத்திற்காக அரசியலமைப்பு வழங்கியுள்ள உத்தரவாத உரிமைகள் மீது அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

குழு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு விசாரணை துவங்கிய நாளிலிருந்து எட்டு வாரங்கள் கால அவகாசத்தை அந்த அமர்வு வழங்கியது – அதாவது தற்போது அந்தக் குழு தன்னுடைய பணிக்காலத்தின் பாதியை முடித்து விட்டது.

8. தேசத்துரோகம்
காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தை (இந்திய தண்டனைச் சட்டத்தின் 124Aஆவது பிரிவு) எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர்கள் கிஷோர்சந்திர வாங்கெம்சா, கன்னையாலால் சுக்லா, ஒன்றிய முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோரின் ஏழு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரர்கள் தேசத்துரோகச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர். தேசத்துரோகம் என்ற அந்த வார்த்தை தெளிவற்று இருப்பதாகவும், அதனால் போதுமான உறுதியுடன் கிரிமினல் குற்றத்தை வரையறுக்க முடியவில்லை என்றும் அவர்களுடைய வாதம் தொடர்ந்தது. மேலும் கூடுதலாக அந்த 124A ஆவது பிரிவு அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை மீறுவதாகவும் இருக்கிறது.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்

‘இந்தச் சட்டம் இன்னும் ஏன் தேவைப்படுகிறது’ என்று இந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியது. ‘சட்டம் பற்றிய இந்த சர்ச்சை சுதந்திர இயக்கத்தை நசுக்குவதற்காக இருந்த காலனித்துவ சட்டத்துடன் – மகாத்மா காந்தி, திலகர் போன்றவர்களை மௌனமாக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட சட்டத்துடன் – தொடர்புடையது. சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சட்டம் தேவைதானா?’ என்ற கேள்வியை தலைமை நீதிபதி என்.வி.ரமணா எழுப்பியிருந்தார்.

2010 மற்றும் 2014க்கு இடைப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் – 2014 மற்றும் 2020க்கு இடையிலான காலகட்டத்தில் – ​​உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி தொடுக்கப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் 28% அதிகரித்திருப்பதாக ஆர்ட்டிக்கிள் 14 இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

9. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக 103ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு 2018 ஜனவரியில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை பொருளாதார நிலை மூலமாக மட்டுமே வரையறுக்க முடியாது என்றும், இந்த திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக இருக்கிறது என்றும் மனுதாரர்களின் வாதங்கள் இருந்தன.Modi government's Constitution Day celebration and nine pending cases in the Supreme Court on the fundamental rights of Indian citizens Article by Janavi sen in tamil translated by Tha Chandraguru. மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும்இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது என்று 2020 ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் முடிவு செய்தது. தாகக்ல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்ற சட்டத்தின் அடிப்படையிலான கேள்வியை எழுப்பியுள்ளதாக நீதிமன்ற அமர்வு கருதியது. ஆனாலும் அந்தச் சட்டம் இடைநிறுத்தி வைக்கப்படவில்லை.

அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்னும் விசாரணை தொடங்கவில்லை என்றாலும், பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான மற்ற வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான அளவுகோலாக ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாய் என்று ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று மிக சமீபத்தில் ஒன்றிய அரசிடம் கேள்வியை எழுப்பியது. இந்த வரம்பை மறுபரிசீலனை செய்வதாக இப்போது ஒன்றிய அரசு கூறியுள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு மேலும் தாமதமாகும் நிலைமையே உள்ளது.

https://thewire.in/law/constitution-day-court-challenges-basic-rights
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு




Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருசர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள திடீர் முடிவானது, இந்திய விவசாயத்தின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், மறுவடிவமைப்பதற்கும், என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியின் அதிகார மையமாக விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் அடிப்படைக் குறிக்கோளுடன் பொருளாதார வடிவமைப்பை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் முடிந்ததும் தலைமையின் முன்பாக இருக்கும்.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருபுதிய தாராளமயப் பொருளாதார வல்லுநர்கள் கூக்குரலிடுவார்கள் என்றாலும் விவசாயத்தை லாபகரமானதாக, பொருளாதார ரீதியாக நீடித்திருக்கக் கூடியதாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலையானதாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த உலகம் ஆரோக்கியமற்ற, நிலையற்ற உணவு முறைகளுக்கு தன்னை மாற்றிக் கொள்கின்ற அவசரத்தில் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழலியல் ரீதியாக பாதுகாப்பான, மக்களுக்கும், இந்த பூமிக்கும் தேவையான வியூகத்தை வடிவமைத்துத் தருகின்ற திறன் இந்தியாவிடம் இருக்கிறது. விவசாயத்துறையில் தன்னால் முன்மொழியப்பட்ட சந்தை சீர்திருத்தங்களை திரும்பப் பெறுவதில் பிரதமர் மோடியிடமிருந்த தைரியமான, ஆனால் தாமதமான முயற்சியால் வேளாண் சீர்திருத்தத்திற்கான முதல் அடி ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டு விட்டது.

வேளாண் சீர்திருத்தம் என்று அதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுவரையிலும் விவசாயத்தில் முன்மொழியப்பட்டுள்ள சந்தை சீர்திருத்தங்கள் பல நாடுகளிலும், கண்டங்களிலும் தோல்வியையே கண்டிருக்கின்றன. ஏற்கனவே நிலவுகின்ற விவசாய நெருக்கடியை அதிகரிக்க மட்டுமே அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, சிலியிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை உள்ள சந்தைகள் உதவியுள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள சந்தைகள் விவசாயக் கடன்களை அதிகரித்து, சிறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தின் முக்கிய பங்களிப்பாளராக விவசாயத்தை மாற்றியிருக்கின்றன எனும் போது, இந்தியாவில் அதே சந்தைகள் பேரதிசயத்தை நிகழ்த்தப் போவதாக வைக்கப்படுகின்ற வாதம் நிச்சயம் தவறானதாகவே இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக முதலீடுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அதிக உற்பத்தித்திறன், அதிநவீன சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் பரிணாமம் போன்றாவை வட அமெரிக்காவில் இருந்து வந்துள்ள போதிலும், அங்கே வேளாண் வருமானம் தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டில் இறுதி நுகர்வோர் விலையின் ஒவ்வொரு டாலரிலும் விவசாயிகளுக்கான பங்கு வெறுமனே எட்டு சென்ட்டுகளாகக் குறைந்து அழிவை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை கணித்திருக்கிறது.

சந்தைகள் உலகெங்கிலும் வேளாண் வருமானத்தை அதிகரிக்கத் தவறி விட்டன என்பது பொது விவாதத்திற்கு உட்பட்டதாக இருந்து வருகின்ற நிலையில், சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பது, விவசாயத்தின் பெருமையை மீட்டுக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பாதைகளைச் சீரழித்திருக்கும் நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகின்ற முடிவு பொருளாதார காரணங்களுக்காக எடுக்கப்பட்டதா அல்லது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதுதில்லியின் எல்லையில் தங்கியிருந்த ​​ஓராண்டு காலத்தில் மிகவும் மோசமான வானிலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் வெளிப்படுத்திய விடாமுயற்சி வேளாண் சமூகத்தின் அவலநிலையை நோக்கி நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை வெளியைக் கட்டியெழுப்புவதற்கும், என்றென்றைக்கும் நீடித்திருக்கும் ஆரோக்கியமான, துடிப்பான வேளாண் முறையை மறுவடிவமைப்பு செய்வதற்குமான நேரமாகவே இது அமைந்துள்ளது.

சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பது போரில் வென்றெடுத்துள்ள பாதி வெற்றியாகவே இருக்கின்றது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்பது தற்போதிருக்கும் நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும். அது ஏற்கனவே தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த கடுமையான விவசாய நெருக்கடியில் இருந்து விவசாயிகளுக்கு விடிவு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருப்பது நிச்சயமாக விவசாயிகளுக்கு முதல் சுற்றில் கிடைத்திருக்கும் வெற்றிதான். ஆனாலும் இந்தப் பந்தயம் இன்னும் முழுமையடையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்து தரப்படாத வரை, பொருளாதார வல்லுநர்கள் பலரும் நம்புவதைப் போல வழங்கல்-தேவை கொள்கைகளே விலையை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும் என்றிருப்பது விவசாயிகளை மேலும் சுரண்டுவதற்கு மட்டுமே வழிவகுத்துக் கொடுக்கும். வேளாண் வருமானத்திற்கு உத்திரவாதம் அளித்திடாமல் உணவு முறை மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இதுதான் விவசாயம் பெரிதும் எதிர்பார்த்து நிற்கின்ற சீர்திருத்தமாக இருக்கின்றது.

இருபத்தி மூன்று பயிர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒப்பிடும்போது, விவசாயிகள் சராசரியாக நாற்பது சதவிகிதம் குறைவாகவே சந்தையில் பெறுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால். உற்பத்திச் செலவைக் கூட அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை என்பது தெரிய வரும். ​உண்மையில் தாங்கள் நஷ்டத்தையே அடைகிறோம் என்பதைக்கூட உணராமலேயே சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகள் இருக்கிறார்கள். கோதுமை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ளவர்களைத் தவிர, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தங்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. பதினேழு மாநிலங்களில் – ஏறத்தாழ நாட்டின் பாதிப் பகுதியில் – விவசாயிகளின் சராசரி வேளாண் வருமானம் ஆண்டுக்கு இருபதினாயிரம் ரூபாய் மட்டுமே என்று 2016ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு சூழ்நிலை மதிப்பீட்டு கணக்கெடுப்பு பயிர் சாகுபடியின் மூலம் கிடைக்கின்ற சராசரி பண்ணை வருவாய் ஒரு நாளைக்கு இருபத்தியேழு ரூபாய் என்பதாக நிர்ணயித்துள்ளது.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருகுறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கான சட்டப்பூர்வமான உரிமையாக மாற்றுவதே – அதாவது, தரநிலை விலைக்குக் கீழே வர்த்தகம் செய்யக் கூடாது என்பதுதான் – இந்திய விவசாயத்திற்குத் தேவையான உண்மையான சீர்திருத்தமாகும். அது வேளாண் சீர்திருத்தத்தின் இரண்டாவது படியாக இருக்கும். விவசாயிகளின் கைகளில் அதன் மூலம் அதிக அளவில் பணம் இருக்கும் என்பதால், பொருளாதார ரீதியாக லாபகரமானதாக விவசாயம் மாறுவது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். கிராமப்புற வாழ்வாதாரத்தை அது வலுப்படுத்தும், நகரங்களில் வேலைகளுக்கான தேவையைக் குறைக்கும், கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதுடன் பெருமளவிற்கு கிராமப்புறத் தேவையையும் உருவாக்கும். தொழில்துறைக்காக விவசாயத்தைத் தியாகம் செய்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற குறைபாடுள்ள பொருளாதார வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நேரமாக, மனித மூலதனத்தில் முதலீடு தேவைப்படுகின்ற, மக்களுக்காக வேலை செய்கின்ற பொருளாதாரத்தைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது..
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருகுறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தை வழங்குவது பெருமளவிலான விவசாய மக்களை விவசாயத்திற்குள் விட்டு வைக்கும். சந்தைப்படுத்தக்கூடிய உபரி எதுவுமில்லாத, ஆனாலும் வீட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகின்ற சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமர் உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற பலன்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டும்.

உலகிலேயே மிகப் பெரியதாக, மிக நீண்ட காலம் நடந்துள்ள இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகளாவிய கவனத்தைத் தன்வசம் ஈர்த்துள்ளது. விவசாயத்தை வறுமையில் வைத்திருப்பதையே நம்பியிருந்த காலாவதியாகிப் போன பொருளாதார சிந்தனைக்கு விவசாயிகளால் சவால் விடுக்க முடிந்துள்ளது. உண்மையில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். நேர்மையான மதிப்பீட்டுடன் இதனைத் தொடர்ந்தால், அது என்றென்றைக்குமான பசுமைப்புரட்சிக்கான விதைகளை விதைக்கும் திறன் கொண்டதாக இருக்கும். பாரம்பரிய அறிவு, இருக்கக்கூடிய பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை அழிக்காத வேளாண் நடைமுறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற உற்பத்தி முறையைக் குறிப்பிடும் வகையில் என்றென்றைக்குமான பசுமைப்புரட்சி என்ற சொல் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனால் உருவாக்கப்பட்டது.
Only half the battle of the peasants has been won and let us advance towards full victory Article by Devinder Sharma in tamil translated by Tha Chandraguru விவசாயிகளின் போரில் பாதி வெற்றி மட்டுமே கிட்டியுள்ளது முழு வெற்றியை நோக்கி முன்னேறுவோம் - தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுருவேளாண் முறைகளை மறுவடிவமைப்பு செய்தல், சந்தைகளை விவசாயிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வருதல், ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் வீட்டு உணவு விநியோக முறையை உருவாக்குதல் ஆகியவை மிகவும் அவசியம். ஆனால் நெருக்கடியை உருவாக்கியவர்களால் இதைச் சாதிக்க முடியாது. அதற்கு முற்றிலும் புதியதொரு அணுகுமுறை தேவைப்படும். முதலில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதன் மூலம் அதைச் சாத்தியமாக்கிடுவதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
https://www.tribuneindia.com/news/comment/a-battle-only-half-won-341193

நன்றி: ட்ரிப்யூன்
தமிழில்: தா.சந்திரகுரு