குழந்தைகள் வயது 10 க்குள் கட்டுரை : சுதா

குழந்தைகள் வயது 10 க்குள் கட்டுரை : சுதா




இப்போ நிறைய பெற்றோர்கள் சொல்ற குறை என்னுடைய குழந்தை என்னோட பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது. நான் எது சொன்னாலும் எதுத்து பேசுற அடம் பிடிக்குது. எப்போ பாரு போன் வேணும்னு அடம் பிடிக்குது. படிக்க உட்கார்வது இல்லை. இப்படி நிறைய பேரு சொல்ல கேட்டிருக்கேன் ஒரு சின்ன டிப்ஸ். கட்டாயம் நேர்மறையான விளைவுகள் வரும்.

இரவு தூங்கும் பொழுது உங்கள் குழந்தையோடு நேரம் செலவிடுங்கள் தனியாக அவர்களைத் தூங்க விடாதீர்கள். நீங்கள் அருகில் இருக்க வேண்டும். அவர்களின் காலை பிடித்து விடுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு கால்களில் தடவி நன்றாக மசாஜ் பண்ணுங்க அப்படி மசாஜ் செய்யும் பொழுது நிறைய பேசுங்கள். நீங்கள் முதன் முதலில் இதைக் கையாளும் பொழுது உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதையோ உங்கள் செயல்பாட்டையும் கவனம் கொள்ளாது.

ஆனால் நாட்பட நாட்பட குழந்தைகள் உங்களோடு இணைந்து கொள்வார்கள். அன்றைய தினத்தில் உங்களின் செயல்பாடுகளை அதாவது ஆபீஸில் எனலாம் நடந்தது உங்கள் வேலை எவ்வளவு இயல்பாக நீங்கள் முடித்தீர்கள். உங்கள் கஷ்டங்களை அவர்களோடு சொல்வதைவிட நீங்கள் அந்த கஷ்டங்களிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அவர்கள் கவனிக்க மாட்டார்கள். உங்களின் சந்தோஷமான பக்கங்களையும் குதூகலமான பக்கங்களையும் பகிருங்கள் நீங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை சந்தோஷமாக இருந்தீர்கள் உங்களின் நட்பு பத்தி பகிருங்கள். வாரம் இரண்டு முறையேனும் உங்கள் குழந்தைகளின் கால்களுக்கு மசாஜ் செய்யுங்கள் செய்யும் பொழுது கட்டாயம் பேசுங்கள்.

கட்டாயம் மாற்றம் வரும் குழந்தைகளோடு நட்புக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.

-சுதா 

சக்திராணி கவிதைகள்

சக்திராணி கவிதைகள்




எப்படி மாறிடுச்சி!
**********************
என்னென்ன நினைச்சிருந்தோம்…
ஏழ்மையை விரட்ட…
வரம் வேண்டிக் காத்திருந்தோம்…

ஊர் காக்கும்…தெய்வத்தை…
ஊரைச் சுத்திக்காட்ட…
தேர் ஏற்றி வலம் வந்தோம்…

நொடிப்பொழுதில்…
என்ன நடந்ததென…தெரியலையே…
ஏதும் விளக்கம் கூற…மொழியில்லையே…

காலாற…நடந்தவக எல்லாம்…
கட்டையா…ஆனாக…கைப்பிடிச்சு
நடந்த வடத்தாலே…

ஒய்யாரமா ஏறி‌ வந்த…
சாமிக்கும் புரியலையோ…
இந்த ஊர்வலம் இறுதி ஊர்வலமா
அமையுமோ என…

என்ன சொல்லி தேத்த…
உறவை இழந்து தவிப்பவருக்கு…
சாமி தூக்க வந்தவங்க…
சாமியா…போனாங்கனு…

இன்னும் மாறவில்லை
***************************
கைப்பிடித்து நடந்த
குழந்தை…கை விட்டே…
பள்ளி செல்லும் போது
அழுகையைத் தன் துணைக்கு
அழைக்கிறது…இன்னும்
இதெல்லாம்…
மாறவில்லை…

மாலை அழைக்கும்…பெற்றோரின்
கரம் புகவே ஓடிச்சென்று…
உள்ளங்கையில்…தம்…அன்பை
புகுத்தும்…நிலை இன்னும் மாறவில்லை…

நடந்த கதையும்…
நடக்க இருக்கும் கதையும்…
மூச்சு விடாமல் சொல்லி முடித்தே…
பொழுதை நகர்த்தும்…குழந்தைகளின் மனம்
இன்னும் மாறவில்லை…

வீடு நிறைய தின்பண்டங்கள்
இடம் பிடித்திருந்தாலும்…
பாதையோரக் கடைகளில்…
தனக்குப் பிடித்த உணவைக்கேட்டு…
வாங்கி உண்ணும் குழந்தைகளின்
ருசி…இன்னும் மாறவில்லை…

வீட்டுப்பாடம் என்றதும்…
இல்லாத பசியும்…வராத தூக்கமும்…
தவறாமல் இடம் பிடித்தே…
காலம் நகர்த்த முயற்சிக்கும் பண்பும்…
இன்னும் மாறவில்லை…

குழந்தைகள்…குழந்தைகளாகத் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
மாறாமல்…

நாம் தான்…நம் எண்ணங்களை
குழந்தைக்கு ஊட்டி…மாறாமல்…
இருக்கின்றோம்… குழந்தைகள்
மாறவில்லையே…என்ற ஏக்கத்தில்…

உத்வேகம்
*************
வேண்டிய வேண்டுதல்
எல்லாம்…நிறைவேறா
வேண்டுதலாய்…
இறைவனுக்கு மேல்…
உயர்ந்து நிற்க…

வேண்டிய நபர்கள் எல்லாம்…
வேண்டாதவர் போல் என்னை
ஒதுக்கி செல்லும் வேளையில்…

வேண்டாத அனைத்தும் எண்ணி
மனமுறிவில் ஓர் அமைதியாய்…
இருக்கும் சமயத்தில்…

மனதை…உத்வேகம் கொள்ளச் செய்தே…
இசை பெறும் ஈடேற்றம்…

இணையாகாது…இறைக்கும்…
இரைச்சல்காரர்களுக்கும்…

விரதம்
*********
வேண்டாத தெய்வம்
இல்லை…
வேண்டி வேண்டி…நொந்து போன மனதை தேற்ற
இங்கோர் கடவுளுக்கோர்
இரக்கமில்லை…

நெய்யிட்டு…திரியிட்டு
நேரம் குறித்து விளக்கேற்றும்
விரதம் செய்து வேண்டியாச்சு…

நூற்றியெட்டு சுற்று…சுற்றி…
பாதம் நோக பணிந்து…
இறைவன் பாதம் பற்றி…
விரதமிருந்து வேண்டியாச்சு…

இன்னின்ன குறைக்கு…
இந்தந்த தெய்வமென…உண்ணா
முறைகள் அறிந்து…
முறையிட்டு வேண்டியாச்சு…

எத்தனை வேண்டினாலும்…
வேண்டுதல்கள்… நிறைவேறவில்லை…
விரதம் இருந்தும்…விதி மாற
வழியுமில்லை…

காலத்தோடு பயணிக்க…
மனம் விரும்பி…கடந்து செல்ல
பழகியாச்சு…
பழகுதலில்…பழகியவரின்
அறிவுரையும்…செவிமடுக்க
கேட்டாச்சு…

விரதமிருந்து விதி மாற்ற
நினைத்ததிலே…மதி கெட்டு
வாழ்க்கை போகும் பாதையிலே…
உனக்கு நீயே…துணையென்று
தெளிந்த பின்பே…விரதம்
என்பதே…மறந்தே போனதே!!!

Vasanthadheepan Kavithaigal 16 வசந்ததீபன் கவிதைகள் 16

வசந்ததீபன் கவிதைகள்

சாத்தியங்களைப் பின் தொடர்ந்து…
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது பேருந்து
ஒடிந்து ஒடிந்து பயணிக்கிறேன் நான்
படித்துக் களித்து உறங்குவதற்கல்ல
வெடித்து கிளர்ந்து உக்கிரமாவதற்கே
கலை கவிதை எழுத்து எல்லாம்
மீதி சில்லறை வாங்கும் நான் அற்பம்
கொடுக்கத் தயங்கும் நீ மேன்மை
சல்லிக்காசானாலும் என்னுடமை ஏய்க்க அனுமதியேன்
பறக்கும் மனது
தவக்கும் உடல்
ஊரோ ரெம்ப தூரம்
எனக்கும் உனக்குமான இடைவெளி குறுகியது
யாராலும எதாலும் அதனை நிரப்பமுடியாது
நானும் நீயும் வேண்டுமானால் வார்த்தைகளால் இல்லாது செய்யலாம்.

மூடுதிரை
*************
எழுதும் மெளனத்துள்
பிரளய சப்தம்
திணறுகிறது
விடுபட
புல்லாங்குழல் ஏந்தியவன்
மனதில் பூந்தோட்டம்
மூங்கில் காட்டின்
மரண ஓலம் காற்றில்
மெளனமாய் இருக்கிறீர்களே !
பிணங்களா நீங்கள் ?
உயிர் உள்ளதென்று
சப்தமிடுங்கள் உரத்து
உழுதவனுக்கு மிச்சமாய்
பட்டினியும் பசியும்
உழைத்தவனுக்கு மீதியாய்
நோயும் நொம்பலமும்
சூடும் சுரணையும் ஆறிப்போச்சு
கொதிப்பும் ஆவேசமும் தணிஞ்சு போச்சு
சீக்கிரம் போயி முன்னால க்யூல நிக்கணும்
இசையும் கவிதையும் பணத்தை விளைவிக்கின்றன
கதையும் நாடகமும் காசுகளைத் தருவிக்கின்றன
நெல்லோ? புல்லோ?
மாடுகள் மேய்கின்றன
மது நெடியில் கவியரசர்கள் பிறந்தனர்
கஞ்சாப்புகையில் மகாகவிகள் உதயமாயினர்
வேர்வை வாசத்தில் மனிதக்கலைஞர்கள் உதித்தெழுந்தனர்.

Matravendum Poem By Shanthi Saravanan. மாற்றம் வேண்டும் கவிதை - சாந்தி சரவணன்

மாற்றம் வேண்டும் கவிதை – சாந்தி சரவணன்

மாற்றமில்லை மாற்றமில்லை
சமூகத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
மனிதனிடத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
அடிமைத்தனத்தில்
மாற்றமில்லை

மாற்றமில்லை மாற்றமில்லை
அடக்கி ஆளும் வர்கத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
ஜாதி பிரிவினையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பெண்னின் நிலையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பட்டினியில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பஞ்சத்தில்
மாற்றமில்லை!

முன்டாசு கவியே!
உன் புரட்சி சிந்தனைகளை ஏட்டில் மட்டுமே
நூற்றாண்டை கொண்டாடுகிறது இவ்வையகம்!
நம்பிவிடாதே!

மாற்றமே எழுச்சி
மாற்றமே மலர்ச்சி
மாற்றமே உயிர்ப்பு
நீ கண்ட நிஜ மாற்றத்தை
சமூகத்தில் சுடர்விட
சிந்தனை செழிக்க
ஓவ்வொரு பெண்ணின் கருவிலும்
கருவாய், உருவாய், உயிராய், சூடராய்
அக்கினி பிழம்பாய், தகதகவென ஜனித்து
வா பாரதி வா!