Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ
#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்
#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி
#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு
#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்
#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி
#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்
#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி
#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை
#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்