Guthithadum kuzhandhai manam Shortstory by Karkavi. குதித்தாடும் குழந்தை மனம் குறுங்கதை - கார்கவி

குதித்தாடும் குழந்தை மனம் குறுங்கதை – கார்கவி

நினைவுகள் அலாதி… அந்த நிகழ்வை நினைத்து பார்க்கையில், இப்பொழுது என்னை அறியாது ஒரு இன்ப மழை மனதில் கொட்டி தீர்த்து விடும்….

அந்த இன்பத்தை அறிய சற்று பதினெட்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம்….

அன்று ஒர் அற்புதமான நாள்… ஆம், எனது குடும்பத்தின் இளவரசன் பிறந்தநாள்… ஆனால் நாங்கள் வைத்த பெயரோ விக்னேஷ் குமார்…..

அவனுக்கு முன்னே பிறந்த மூத்த இளவரசி நான் (வினி) என்பதில் பெருமை கொள்கிறேன்…

கதையின் கரு மகள் அடுத்ததாய் என் சகோதரி…..திவி

அவளின் அற்புத அறியாமையே இந்த கதையின் கரு…. கதைக்கு செல்வோமா…

பதினெட்டு வருடம் முன்பு செப்டம்பர் மாதம் 28 ம் நாள் வந்து குதித்தான் என் தம்பி விக்கி…

அவன் பிறந்து இரண்டாம் நாள்..அம்மாவின் வலி மெல்ல மெல்ல குறைய, அப்பாவின் ஆறுதலில் தேடி வருகிறாள் என் அம்மா….

தம்பியை பார்க்கும் ஆசையில் துள்ளலும் துடிப்புமாக மருத்துவமனை விரைந்தோம்..அப்பாவின் கைப்பிடித்து…

கட்டிலில் அம்மாவையும் தம்பியையும் கண்டு, ஆசை தீர கொஞ்சி தீர்த்தோம்…

அங்கு நடந்த சம்பவமோ…நினைத்தாலே சிரிப்புதான்….

தம்பியை கண்ட தங்கையின் மனம்…வன் கைப்பிடித்து ‘ என் விரல் பிடி” வா ஓடி விளையாடலாம் என்று விளையாட்டாய் பேசினால்…சிறிது நேரத்தில் அவள் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்..

இப்பொழுதே தம்பி எழ வேண்டும்,என் விரல் பிடித்து நடக்க வேண்டும். என்று அசட்டுத்தனமான விளையாட்டில் அடம் பிடித்தாள்…

இதை பார்த்த எங்களுக்கு சொல்ல முடியாத புன்னகை..சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது….

அப்பா வாங்கி கொடுத்த அனைத்து தீனிகளும் சாக்கடைக்கு விருந்தானது…

அடிப்பாவி என்னிடமாவது தரலாமே என அந்நாளில் என் மனம் ஏங்கியது….

தம்பியின் பிறந்தநாள் வந்தாலே இந்த சம்பவம் எங்களுக்கு புன்னகை விருந்து….

அழகான குடும்பத்தில் நான் கடந்து வந்த அற்புதமான இன்ப தருணமிது….

யதார்த்தமாக நினைத்து பார்த்த பொழுது பகிர்ந்து விட்டேன் தாங்களுடன்….புன்னகை வரிகளாய்…..

கரு-1
குழந்தைகள் அறியாமை மிக்கவர்கள்..அவர்கள் விரும்பும் எதுவும் நடைபெறுமா என யோசிக்க இயலாத வயதினை உடையவர்கள், நினைத்தது நடக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டு செயல்படுபவர்கள்…

குறிப்பாக சொன்னால்…”

*யானையை கூட பானையில் அடைக்கும் ஆசையும் அறியாமையையும் கொண்டவர்கள்*”

அதை சரி செய்து சாதாரண நிலைக்கு கொண்டு வருவது என்பது பெற்றோருக்கு உரிய திறமை….

அதையே என் பெற்றோர் கையாண்டனர்….

மேற் சொன்ன கருவில் பிள்ளைகளின் அறியாமை புலப்பட்டது…

அதையும் தாண்டி அற்புதமான நிகழ்வை நாம் உணரவேண்டும்…

கரு-2
“*அந்த சின்னஞ்சிறு வயதிலேயே தம்பியின் மீது அக்காள் கொண்ட விலையில்லா,கணக்கில்லா,எல்லையில்லா அன்பின் உச்சத்தை இந்த நிகழ்வு அவ்வப்போது நினைவு கூறுகிறது*”

“அக்கா அம்மாவின் மறுரூபமே..தம்பி தந்தையின் பிம்பமே”

குழந்தைகள் மனம் அறிவோம்…மகிழ்வாக வைத்திருப்போம்….

என் வாழ்வில் கடந்து வந்த அனுபவ புன்னகை வரிகள்….

தாங்களுக்காக…. இதோ…