சிறுவயது விளையாட்டுகள் கவிதை – சக்திராணி
பாவடை சட்டை போட்ட
வயதில்…பாதை
வீடாய்…ஒத்த வயதொத்த
குழந்தைகளே உலகமாய்…
ஓடித் திரிந்த காலத்தே…
விளையாடிய…விளையாட்டுகள்
அத்தனையும்…
நினைவுப்பெட்டகத்தில் பூட்டியிருக்க…இன்றே…
நினைவூட்டியில் தலைப்பால்
நினைவுகள் மலர…
செப்பு சாமானில் சோறாக்கி…
சேருமானருடன்…பகிர்ந்துண்டு…
சேலையில்…ஊஞ்சல் கட்டி…
உற்சாகமாய் ஆடி மகிழ்ந்து…
சோலையில்லா…தோட்டத்திலே…
பூப்பறிக்க பாட்டுப்பாடி…
மாதம் அனைத்தும் மனப்பாடமாய்…மனனம் செய்தே…
பகடை உருட்டி…தாயம் விளையாடி
ஏற்ற இறக்கம்…கற்றவராய்…
கடந்த பின்னும்…
கற்ற கல்வியின் கால்வாசியில்…
ஆசிரியராய்…உருமாறி…
பள்ளி விரும்பாத பருவத்தே…
வீட்டிற்குள் பள்ளிக்கூடம் நடத்தி…
ஊர்சுற்றா நேரத்தில்… ஓரிடத்தில்
பம்பரம் சுற்றி…சாட்டைக்கோர்
வேலை கொடுத்து…
பனை வண்டியில் ஊர் சுற்றி…
சைக்கிள் ஓட்டி…வளர்ந்த நிலையை…
அனைவருக்கும் எடுத்துக்காட்டி…
எடுப்பாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் போதும்…
சிறுவயது விளையாட்டுகள் அனைத்தும்…
நினைவின் மகிழ்வுகளே…