கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) – நூல் அறிமுகம்
சதிக்கு சன்மானம் பெற்ற பார்ப்பனியம்
நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – பொன். குமார்
நூல் : கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹ 120/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எழுத்தாளர் மு. ஆனந்தன் ‘ யுகங்களின் புளிப்பு நாவுகள்’ என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தவர். எனக்கும் அறிமுகமானவர். இரண்டாவதானது முக்கிய தொகுப்பு ‘ சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’. இந்திய அரசின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி பி. எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கும் முனைவர் வே. வசந்தி தேவிக்குமான உரையாடல். ஆங்கிலத்தில் இருந்த இத்தொகுப்பை தமிழுக்கு மொழிபெயர்ப்பு தந்தார். இதுவோர் அவசியமான தொகுப்பு. அற்புதமான பணி. மூன்றாவதானது’ பூஜ்ய நேரம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு. இத்தொகுப்பிலும் திருநங்கைகள் மீது படிந்திருக்கும் குற்றப்பரம்பரை பொது புத்தி, கடவுளின் குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டுவது என்னும் கட்டுரைகள் திருநங்கையர் தொடர்பானது. தற்போது திருநங்கையர் உள்பட மாறிய பாலினர் குறித்து பதினொரு சிறுகதைகள் அடங்கிய ‘கைரதி 377 ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
தமிழில் திருநங்கையர் குறித்த முதல் சிறுகதை’ கோமதி’. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதியது. தற்போது அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்துள்ளன. ஒரு திருநங்கையான லிவிங் ஸ்மைல் வித்யா ஏழு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ‘ மெல்ல விலகும் பனித்திரை’ என ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தந்துள்ளார். இதுவே திருநங்கையர் குறித்த முதல் தொகுப்பு. ஆயினும் தொகுப்பு. பொன். குமார் – மு. அருணாசலம் ஆகியோர் இணைந்து ஐம்பது சிறுகதைகளைத் தொகுத்து ‘ திருவனம்’ என்னும் தலைப்பில் புது எழுத்து பதிப்பகம் மூலம் வெளியாகும் நிலையில் உள்ளது. இத்தொகுப்பிற்காக ஒரு சிறுகதைக் கேட்ட போது தானே திருநங்கையர்கள் குறித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வருவதாக தெரிவித்தார் மு. ஆனந்தன். தற்போது ‘ கைரதி 377’ என்னும் தலைப்பில் தந்துள்ளார். ஒரு தனிநபராக திருநங்கையர் குறித்த முதல் சிறுகதைத் தொகுப்பாக உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டபடி அலிகள் பெண் உடைகளை அணியக் கூடாது. 200 ஆண்டுகளுக்கு முன் மைசூர் சாம்ராஜ்யத்தில் அரசனின் படைவீரர்களிடம் சிக்கிக்கொண்ட இளம் பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள சுள்ளிகளில் தீ வைத்து அதில் இறங்கி உயிரை நீத்ததன் நினைவாக கொண்டாடப்படும் ஓலையக்கா நோன்பில் பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடிக்கும் கூட்டத்தில் பெண்களுடன் பெண்ணுணர்வுமிக்க ஆணான காளிச்சாமி என்னும் கைரதியும் கலந்து கொள்கிறான். ஊரார் எதிர்த்த போது அரவான் கதையைச் சொல்லி அலிகளோட பெருமையைக் கூறி சம்மதிக்க வைக்கிறார் காக்காமுள்ளு வேலிக்காரர். ஆனால் கும்மியாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கைரதியை அடையாளம் கண்டு சட்டப் படி அலிகள் பெண் உடைகளை அணியக்கூடாது என்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின் நடக்கும் இச்சம்பவத்திற்கு ஆங்கிலேயரின் சட்டம் செல்லாது என்று எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. லாக்கப்பில் நிர்வாணப்படுத்தி மானப்பங்ம் செய்ய காவலர்கள் முயல்கின்றனர். ” மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஓலையக்காளாக மாறினாள் கைரதி. தன் மீது தீ பற்ற வைத்துக் கொள்ள சுள்ளிகளைத் தேடினாள். சுற்றிலும் சு……. களாக இருந்தது” என்று கதையை முடித்து இதயத்தைக் கனக்கச் செய்கிறார். அந்த காலத்திலேயே அலிகளின் நிலை எவ்வாறு உள்ளது என விளக்கியுள்ளார். சட்டம், நோன்பு, காவல் துறை, காளிச்சாமி என்கிற அலி என அழகாக, அழுத்தமாக கதையை பின்னியுள்ளார். இது தொகுப்பின் முதல் சிறுகதை. தலைப்பு ‘ ஓலையக்கா லாக்கப்’.
‘ இதரர்கள்’ இரண்டாம் கதை. உச்சநீதி மன்றம் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தும் ஜவஹர்லால் பல்கலைக் கழகம் ஆண், பெண் இரண்டு பாலினத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. கைரதி கிருஷ்ணன் மாணவர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வெற்றி பெறுகிறான். ஆனால் கைரதி கிருஷ்ணன் படிப்பை முடித்து வெளியில் சென்றவுடன் பல்கலைக் கழகம் படிவத்தில் ‘ இதரர்கள்’ ( Others) என மாற்றி விடுகிறது. மூன்றாம் பாலினத்தவரை இதரர்கள் என்பது அதாவது மற்றவர்கள் என்பது அவமானப்படுத்தும் செயலாகும். மேலும் கைரதி கிருஷ்ணனை ” நீங்கள் அலியா, ஹிஜராவா, இல்லை யூனக்கா?” என்னும் கேள்விக்கு ” நான் ஒரு இன்டெர்செக்ஸ். தமிழில் இடைப்பாலினம்” என்கிறார். அதாவது இரண்டு உறுப்புகளுடன் இருப்பவர். இதே போல் இருனர், திரினர், பாலிலி எனவும் பாலினங்கள் உள்ளன என்கிறார். இச்சொற்கள் எல்லாம் ஆசிரியர் மு. ஆனந்தன் உருவாக்கியிருக்கலாம். அருமையான, அழகான, அர்த்தமுள்ளவை.
திருநங்கைக்கு பெண்களைப் போல் இருக்க வேண்டும், பெண்களைப் போல் வாழ வேண்டும் என்று விரும்புவர். உள்ளாடை முதல் மேலாடை வரை அப்படியே பின்பற்றுவர். பூ, பொட்டு வைப்பதிலும் மாற்றம் இராது. நாப்கினைப் பயன் படுத்திப் பார்ப்பதிலும் அப்படியோர் ஆனந்தம். அதற்காக கைரதி தான் சமையல்காரியாக வீட்டு வேலைச் செய்யும் எஜமானியின் மகள் பூர்வீகா வாங்கி வைத்திருந்த நாப்கினை தெரியாமல் எடுத்து பயன்படுத்துகிறாள். நாப்கினை பயன்படுத்தும் போது கைரதி அடைந்த மகிழ்வைக் கண்டு தனக்கு வாங்கும் போது ‘ கூடுதலாய் ஒரு நாப்கின்’ வாங்கி வைத்து விடுகிறாள். கைரதியும் தெரியாமல் எடுத்து பயன் படுத்தி வருவதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறாள். ஆனால் கைரதி நல்ல சமையல் செய்பவளாக இருந்தும் அவள் மீது கோபமாகவே இருப்பாள் பூர்வீகா. சமையல் கலையைத் தன் வீட்டிலேயே அம்மாவிடம் கற்று அம்மாவிடம் இறப்பிற்குப் பின் தொடர்ந்ததாகவும் தான் திருநங்கையானதால் வீட்டாரால் விரட்டிவிடப்பட்ட சோகக் கதையும் ‘ கூடுதலாய் ஒரு நாப்கின்’ கதையில் கூடுதலான ஒரு கதையாக உள்ளது. இதில் இன்னொரு கதையும் உள்ளது. மாதவிடாயின் போது வெளியில் பெண்கள் படும் அவஸ்தையையும் கூறுகிறது.
இந்த அவஸ்தை
தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு…
என்னும் அ.வெண்ணிலா கவிதையையும் எழுத்தாளர் பெண்ணியம் செல்வக்குமாரியின’ ஒழுகல் ‘ என்னும் சிறுகதையையும் நினைவுப்படுத்தியது. ஆசிரியர் பெண்ணின் பிரச்சனையையும் ஊடாக பேசியுள்ளார்.
‘ஜாட்ளா’ என்னும் ஒரு சிறுகதை ஒரு திருநங்கை அரசு உதவி பெறுவதற்காக திருநங்கை என்னும் சான்றிதழ் பெற படும் அவமானங்களைக் காட்டுகிறது. கைரதி என்னும் திருநங்கையை அவர்கள் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. முறைப்படி அங்கீகரிக்கிறது. திருநங்கைதான் என மனம் சொல்வதால் ஆண் உறுப்பை நீக்க வேண்டும் என்கிறாள். ஆனால் நாயக் ஆணுறுப்பை நீக்குவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை எடுத்துக்கூறி நீக்காவிட்டாலும் திருநங்கைதான் என்கிறாள். அரசு உதவி பெற திருநங்கை சான்றுக்காக மாவட்ட ஆட்சியர் முதல் மருத்துவமனை வரை அலைக்கழிக்கப்படுகிறாள். இறுதியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணுறுப்பைத் தட்டி பார்க்கும் போது கைரதிக்கு கோபம் வந்துவிடுகிறது. ” என் மனசுக்குத் தெரியாதா நா ஆம்பளையா, இல்ல பொம்பளயான்னு. நா பொம்பளைன்னு யாருக்கு நிரூபிக்கோணும்?” என கத்திக்கொண்டே வெளியேறிவிடுகிறாள். திருநங்கை என்பதற்கு அவள் மனமே சான்று என்கிறார் ஆசிரியர்.
ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது, துடிப்பது போல் ஒரு பெண் ஆணாக மாற விரும்புவதை, துடிப்பதைக் கூறும் கதை ‘ நஸ்ரியா ஒரு வேஷக்காரி’. அவள் பெண்ணாக பிறந்து இருந்தாலும் சிறுவயதிலிருந்தே ஆண் செய்யும் வேலைகளைச் செய்ய துடிக்கிறாள். ஓர் ஆணாகவே உடை அணிந்து கொள்ள விரும்புகிறாள். ஆணாக இருந்து பெண்ணாக விரும்புவருக்கு ஆண் குறி ஓர் இடைஞ்சல் போல் பெண்ணாக இருந்து ஆணாக விரும்புவருக்கு மார்பு ஒரு பெரும் இடைஞ்சல். நஸ்ரியா வீட்டில் பெண்ணாகவும் வெளியில் ஆணாகவும் இருக்கிறார். அவருக்கு உதவி புரிகிறார் ஒரு திருநங்கை. ஸ்கூட்டியில் நஸ்ரியாவாக சென்றவள் புல்லட்டில் மொஹமது நஸ்ருதீனாக பறக்கிறான். இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் நபருக்கு திருநம்பி என்று பெயர். முதன் முதலாக ஒரு தம்பியைக் குறித்து எழுதியுள்ளார். ஒரு முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரு திருநம்பி வருவதாக எழுதப்பட்டுள்ளது. திருநங்கையருக்கும் திருநம்பிக்கும் மதம் ஏது?
‘அழகன் என்கிற போர்க்குதிரை’ வரலாற்றை நினைவுப்படுத்தினாலும் சமகாலத்தில் திருநங்கைக்கு வாழ்க்கைக் கொடுத்த ஒருவனைப்பற்றி பேசுகிறது. எனினும் கணேசன் கைரதி அதாவது திருநங்கை ஆவதற்குள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் கூறுகிறது. வீட்டிலும் பிரச்சனை. குதிரை சவாரி செய்யுமிடத்திலும் அனுமதியில்லை. மாரி என்கிற மாரிமுத்து என்னும் கடலை வியாபாரி கைரதிக்கு ஆதரவாக பேசுகிறான். அவனே காதலிக்கிறான். கைரதி ஆணுறுப்பை நீக்கி முழு பெண்ணாவதற்காக அறுவைச் சிகிச்சைக்கு வீட்டை விற்று பணம் தருகிறான். கல்யாணமும் செய்து கொள்ளலாம் என்கிறான். கைரதிகளுக்கு வாழ்வு தர மாரிமுத்து போல மனிதர்கள் முன்வர வேண்டும். ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இக்கதையில அழகன் என்னும் குதிரையைப் பற்றி பேசியாக வேண்டும். காரணம் குதிரை பேசுகிறது. கைரதிக்கு குதிரையே துணை. இறுதியில் குதிரையே இருவரையும் ஏற்றிச் செல்கிறது. இந் நீண்ட கதையின் வரலாறைப் பற்றி எழுதினால் விமர்சனமும் நீண்டதாகி விடும்.
‘ ஓலையக்கா லாக்கப்’ பில் திருநங்கையைச் சுற்றி ‘ சு……’ களான இருந்தன என கதையை முடித்தவர் ‘ 377ஆம் பிரிவின் கீழ் கைரதி’ யில் அந்த ‘ சு…..’ கள் என்ன செய்தன புரியச் செய்துள்ளார். ஓர் ஓட்டலில் வேலை செய்து விட்டு இரவில் வெளியே படுத்திருந்த ஒரு கைரதியை காவல்துறையினர் பிடித்து வந்து லாக்கப்பில் வைத்து அவளின் பின்புறம் வழியாக பலாத்காரம் செய்து காயப்படுத்தி கிழித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டார் என குற்றம் சாட்டி தண்டனையும் பெற்றுத் தருகின்றனர் காவல் துறையினர். காவல் துறைக்கு மருத்துவ துறையும் உதவி. காவல் துறை செய்த காரியத்தால் கைரதியால் கூண்டில் கூட நிற்கமுடியாத நிலை. ஓட்டலில் பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவினாலும் திருநங்கைகளைக் காவல் துறையினர் வாழவிடுதில்லை என காவல் துறையைக் குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞரான ஆசிரியர் மு. ஆனந்தன். ” மீண்டும் சப் இன்ஸ்பெக்டர் தீரத்துடன் செயல்படத் தொடங்கினார். இந்த முறை சிரமமிருக்கவில்லை. மற்ற போலீஸ் காரர்களும் நிர்வாண சீருடையை அணிந்தார்கள். கட்டுப்பாட்டுடன் ஒருவர் பின் ஒருவராக இயங்கினார்கள்” என காவல் துறையின் ‘ தீரச் செயலை’ அவருக்கேயுரிய நடையில் எழுதியுள்ளார். ‘ கட்டுப்பாட்டுடன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
” புதனின் தாம்பத்ய வாழ்க்கை
வித்தியாசமானது. புதனின் மனைவி இலா பவானியும் காவேரியும்
சங்கமித்திருக்கும் கூடுதுறை போல் ஆணும் பெண்ணும்
சங்கமித்திருக்கும் இரு உயிரி. ஒரே உடலில் ஆண், பெண்
இரண்டு பாலினப் பண்புகள் தனித்தனியாக இருக்கும். சில
காலம் ஆணாகவும் சில காலம் பெண்ணாகவும் அதற்கேற்ப தங்களை உணர்வார்கள்.
வெளிப்படுத்திக்கொள்வார்கள். இலா
சிவன், பார்வதியால், ஒரு மாதம் ஆணாகவும் ஒரு மாதம்
பெண்ணாகவும் வாழ சபிக்கப்பட்ட பிறவி. பெண்ணாக வாழும்
போது புதனுக்கு மனைவியாக வாழ்கிறாள் என்கிறது புராணம் ” என்று கூறி இத்தொன்மத்தின் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை ‘ இலா’. கைரதன் என புஷ்பலதாவின் கணவனாகவும் கைரதி என வேலாயுதத்தின் மனைவியாகவும் வாழ்கிறான்/ள். வேலாயுதனுடன் வாழும் காலத்தில் வெளியூர் சென்றிருப்பதாக சொல்லிவிடுவான்/ள். ஆனால் வேலாயுதத்திற்கு உண்மைத் தெரியும். புஷ்பலதாவையோ காதலித்து குடும்பத்தாரையும் உறவினரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பிராமணப்பையன். புஷ்பலதா பிற்பட்ட வகுப்பினர். கதை நிகழுமிடம் நிஜமாக கண்முன் விரிகிறது. கதை நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை எனினும் ஆணாகவும் பெண்ணாகவும் ஒருவரே இருக்கிறார் என்பதைக் காட்டும் முயற்சியாக உள்ளது ‘ இலா’ என்னும் இக்கதை.
இயற்கை உபாதையைக் கழிக்க திருநங்கைகள் படும் அவஸ்தையைக் கூறிய கதை ‘ அடையாளங்களின் அவஸ்தை’. பொது இடங்களில் ஆண், பெண்ணுக்குக் கழிவறைகள் உள்ளன. திருநங்கையர்களுக்கு இல்லை. விழுப்புரம் வந்திறங்கியதிலிருந்தே உபாதையைக் கழிக்க அறையாவது எடுத்து போகலாம், கழிக்கலாம் என்றால் எவரும் தர மறுக்கின்றனர். இறுதியில் ஒரு விடுதியில் அறை கிடைக்க மலம் கழிக்கிறாள் கைரதி. ஆனால் ‘ நிராகரிப்பின் வலி மட்டும் அமைதியாக உள்ளே தங்கி விட்டது’ என நெஞ்சில் வலியை உணரச் செய்கிறார்.
ஆரோக்கியமான ஒரு கதை ‘ மாத்தாராணி கிளினிக்’. கடை கேட்கும் போது காவல் துறையினர் மாமூல் கேட்பார்கள் என்று பயந்து ஓடிய திருநங்கையர்களை பிடித்து வருகின்றனர். அதிலொருவர் சமீபமாக திருநங்கையான கைரதி. ஆய்வாளர் விசாரித்து வேலை வாங்கி தருவதாக கல்வித் தகுதியைக் கோருகிறார். அப்போது கைரதி ஒரு டாக்டர் என தெரிகிறது. கைரதியை குறித்து விசாரித்து டாக்டர் என உறுதி செய்து உதவி செய்யும் எண்ணத்துடன் காவல் ஆய்வாளர் வீட்டினரைக் கேட்ட போது அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பணிபுரிந்த மருத்துவமனையும் நிராகரிக்கிறது. ஆய்வாளர் ஓர் ஆரோக்கியமான முடிவெடுத்து டாக்டர் கைரதிக்காக ஒரு மருத்துவமனையைத் திறந்து தந்து புது வாழ்விற்காக வழிவகுக்கிறார் காவல் ஆய்வாளர். இதில் காவல் ஆய்வாளர் ஒரு பெண் என்பது கவனிப்பிற்குரியது. மற்ற ஆண் காவல்துறையினரை வழக்கம் போலவே சாடியுள்ளார். இக்கதையைக் காட்சிகளாக அமைத்துள்ளார்.
1884ஆம் ஆண்டில் ஒரு திருமண வீட்டில் கைரதி என்ற திருநங்கையை இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டார் என சிறையிலடைத்தது பிரிட்டிஷ் இந்திய காவல் துறை. அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து விடுதலையும் பெற்றுள்ளார். திருநங்கைகளுக்காக முதன் முதலாக சங்கம் அமைத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்த தலைவியின் பெயரும் கைரதி. வரலாற்றில் இடம் பெற்ற இந்த கைரதி என்னும் திருநங்கைகள் நினைவாகவே கைரதி என்று பெயர் வைத்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திருநங்கையர் குறித்த அவரின் தேடல் புலப்படுகிறது. 377 என்பது சட்டப்பிரிவு. இயற்கைக்கு மாறான உடலுறவுக் கொண்டால் அந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவர். எனவே இச்சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பாக ‘ கைரதி 377’ என வைத்துள்ளார். ” கதிரவனுக்கு ரவி என்றும் பெயர் உண்டு. அதற்கு எதிர்ப்பதமாக சந்திரனை கைரவி என்கிறது தமிழ் அகராதி. இதற்கு அருகில் வரும் சொற்பிரயோகமான கைரதி திருநங்கைகளைக் குறிக்கும் பிறிதொரு சொல்லாக இனி விளங்கலாம்” என அணிந்துரையில் எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதியிருப்பது கவனிப்பிற்குரியது. எழுத்தாளர் மு. ஆனந்தனும் அனைத்து சிறுகதைகளிலும் திருநங்கைகளுக்கு, திருநம்பிகளுக்கு, மாறிய பாலினருக்கு கைரதி என்னும் பெயரையே சூட்டி ஒரு பொதுப்பெயரை உருவாக்கியுள்ளார்.
‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ என்னும் கவிதைத் தொகுப்பு, ‘ சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’ என்னும் ஒரு மொழிபெயர்ப்பு தொகுப்பு, ‘ பூஜ்ய நேரம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு,’ கைரதி 377 ‘ என்னும் சிறுகதைத தொகுப்பு என வகைக்கு ஒன்றாக தந்தவர் அடுத்து ஒரு புதிய தளத்தில் ஒரு நாவலைத் தருவார் என எதிர்பார்க்கச் செய்கிறது.
“மாறிய பாலினரின் உணர்வியலை, உடலியலை, வாழ்வியலை
கதைகளில் முழுமையாகவோ துல்லியமாகவோ சரியாகவோ
வெளிப்படுத்தியுள்ளேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கு
நெருக்கமாகவும் நியாயமாகவும் இருக்க முயற்சித்துள்ளேன்
” என்று தன்னுரையில் மு. ஆனந்தன் எழுதியுள்ளார். கதைகள் முழுமையாகவும் துல்லியாகவும் சரியாகவும் உள்ளன என்பதுடன் நெருக்கமாகவும் நியாயமாகவும் இருக்கின்றன. திருநங்கையர்களுடனும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
” இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின்
புதிய முகம், புதிய தொடக்கம், புதிய பாய்ச்சல் எனலாம். இது
தமிழ் இலக்கிய வெளியில் மிக முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்
எனக் கருதுகிறேன்” என ஒரு திருநங்கையும் எழுத்தாளருமான ப்ரியாபாவுவே எழுதியது ஒரு விருதுக்கு இணை. மேலும் மாறிய பாலினரில் வாழ்விலும் ஒரு வெளிச்சத்தை உண்டாக்கும்.
வழக்குரைஞராக இருப்பவர்களின் படைப்புகள் மக்கள் பிரச்சனையைப் பேசுவதாக இருக்கும். மக்களிடையே பேசப்படும். வழக்குரைஞர் ச. பாலமுருகன் காவல் துறையினரால் கடும் துன்பத்திற்குள்ளான மலைவாழ் மக்களைப் பற்றி ‘சோளகர் தொட்டி’ என்னும் நாவலை எழுதியுள்ளார். வழக்குரைஞர் சுமதி ‘ கல்மண்டபம்’ நாவலில் நசுங்கியும் நலிந்தும் யாராலும் மதிக்கப்படாத அல்லது அவமதிக்கப்படுகிற ஒரு வாழ்வினரை, முதன் முதலாக அடையாளம் காட்டியுள்ளார். வழக்குரைஞர் சவிதா முனுசாமி தன் சுயசரிதையை ‘ சேரிப் பெண் பேசுகிறேன் ‘ என சுயவலியை எழுதியுள்ளார். அவ்வகையில் வழக்குரைஞர் மு. ஆனந்தன் மாறிய பாலினரின் மாறாத வலிகளை ‘கைரதி 377’ என்னும் சிறுகதைத் தொகுப்பாக்கியுள்ளார்.
எழுத்தாளர் மு. ஆனந்தன் இந்து, முஸ்லிம், கிருத்துவர் என எல்லா மதங்களிலுமே மாறிய, மாறக்கூடிய பாலினர் உள்ளனர் என்கிறார். சமூகம் மாறிய பாலினத்தவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் போது அவமானப்படுத்தும் போது நிராகரிக்கப்படும் போது வீட்டை விட்டு வெளியேற்றும் போது பாதிக்கப்படும் போது உண்டாகும் வலிகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். எழுத்தாளர் மு. ஆனந்தனே ‘ மாறிய பாலினத்தவரின் மாறாத வலிகள்’ இக்கதைகள் என அடையாளப்படுத்தியுள்ளார். மு. ஆனந்தன் ஒரு வழக்குரைஞர் என்பதால் மாறிய பாலினத்தவர்களுக்காக வக்காலத்து வாங்கியுள்ளார். வழக்கில் வெற்றிப் பெறுவார். அவரின் இலக்கியப் பணியிலும் திருநங்கையர் குறித்த தொகுப்பிலும் ‘ கைரதி 377 ‘ ஒரு கி. மீ. கல். இச் சிறுகதைத் தொகுப்பிற்கான ஆசிரியர் மு. ஆனந்தனை இப்போது பாராட்டினாலும் இத்தொகுப்பிற்காக பெறும் விருதுகளுக்காக வாழ்த்த வேண்டிய காலம் வரும்.
– பொன். குமார், சேலம்
நன்றி: புதிய கோடாங்கி
சீடர்கள் கட்டுரை – பேரா. எ.பாவலன்
சீடர்கள் (COMRADES)
ஒவ்வொரு சமயமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டே தோற்றம் பெற்றது. அவ்வந்த சமயத்தின் கொள்கைக் கோட்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நல்வழிப்படுத்துவது சமயத்தின் முக்கிய நோக்கம். அதனால்தான், தன் ஒருவரால் மட்டும் எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதனால் அத்தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சீடர்கள் தேவைப்பட்டனர். முதலில் அந்த சீடர்களே அந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். அவர்களால்தான் உலகம் முழுவதும் சமயங்கள் பரவத் தொடங்கின.
ஒவ்வொரு சீடர்களும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணப்பட்டனர். ஒவ்வொரு ஊராகச் செல்லத் தொடங்கினர். பிந்நாளில் நாடு விட்டு நாடு தாண்டியும், கண்டம் விட்டு கண்டங்கள் தாண்டியும் சென்றனர். கிறிஸ்துவ சமயமும், பௌத்த மார்க்கமும், இஸ்லாமும், சமணமும், கன்பூசியஸ் உள்ளிட்டு பல சமயங்கள் அனைத்தும் இப்படி மக்களிடம் சென்று சேர்ந்ததில் சீடர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
பல சமயங்கள், அவர்களை சீடர் என்கின்ற பொதுச் சொல்லால் அழைக்கப்படுவதுண்டு. கிருத்துவ சமயத்தில் அப்போஸ்தலர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தில் தோழர்கள் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் COMRADES என்ற சொல்லால் அழைக்கப்படுவதையும் காணமுடியும்.
தமிழில் சீடர்கள், தோழர்கள் என்பது ஆங்கிலத்தில் Comrades என்ற சொல்லில் பயன்படுத்தப்பட்டாலும், Seed என்ற ஆங்கில சொல்லுக்கு விதை என்பது பொருள். ஒருவேளை ஆங்கிலச் சொல்லுக்கு விதை என்ற சொல்லில் சீடர்களைப் பொருள் கொள்ளலாம். காரணம் எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்யப்படுவாய் என்பது பொது தத்துவம். அந்த வகையில் இவ்வுலக மக்களிடம் ஒரு நல்ல விதையைகீ கையில் கொடுப்பதைப் போல இவ்வுலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் நற்கருத்துக்களை விதைக்கவே தோன்றின.
இங்கு பௌத்த சமயத்தையும் கிருத்துவ சமயத்தையும் ஒப்பிட்டு சீடர்களின் தொண்டையும், அவர்களின் பணியையும் வெளிக்கொணரும் தன்மையில் இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.
முதலில் பௌத்த சமயத்தின் தத்துவங்களையும், கிறிஸ்துவ சமயத்தின் தத்துவங்களையும் காணலாம்.
சமயம்
சமையம் என்கின்ற வேர்ச்சொல்லிலிருந்து சமயம் உருவானது. நாம் அனைவரும் உணவுப் பொருட்களை சமைத்து உண்ணுவதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறோம். உடல் வலிமை அடைகிறது. நலன் உண்டாகிறது. ஆற்றல் பெருகுகிறது. அதேபோல மனதை சமைப்பதற்காக சமயங்கள் தோற்றம் கண்டன. சமயத்தின் மிக முக்கியமான நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவதாகும்.. இவ்வுலகில் எங்கெல்லாம் பாவங்களும், கொடுமைகளும், அக்கிரமங்களும் தோன்றியதோ அங்கெல்லாம் சமயத்தின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக ஐரோப்பிய தேசத்தில் யூத மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மன்னன் நடத்திய கொடுமைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் உண்டானது தான் கிறிஸ்தவம். அதேபோன்று அரபு தேசத்தில் நடக்கும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவே அங்கு இஸ்லாம் மார்க்கம் தோற்றம் பெற்றது. ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சமணமும், பௌத்தமும் தோற்றம் பெற்றன. பௌத்தம் மனித முரண்பாடுகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்கும் நோக்கத்தில் தோற்றம் கண்டது. குறிப்பாக மக்களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் கொள்கையை எதிர்த்து உருவானது.
இயேசு கிறிஸ்துவம், நபிகள் நாயகமும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள். இதுவரை இவ்வுலகில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நபிகள் நாயகம் இறுதியாக வந்தவர். அவருக்கு முன்பாக இந்த பூமியில் தோன்றியவர் தான் இயேசுபிரான் என்று அந்த சமயத்தின் வேதங்கள் கூறுகின்றன.
பௌத்த சமயம்
பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு தத்துவம். பின்னாளில் அது சமயமாக மாற்றம் பெற்றது. பௌத்த மரபின்படி புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் இந்திய துணை கண்டத்தில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேரவாத பவுத்தம் (முதியோர் பள்ளி) மற்றும் மகா யான பௌதம் (பெரும் வாகனம்). தேரவாதம் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியா லவோஸ்,தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயானம் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் பின்பற்ற படுகிறது. இந்த இரண்டை திபெத்து மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வைச்சிரயான பௌதம் மூன்றாவது வகையாக குறிப்பிடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் நவையான பௌத்தத்தை தொடங்கி 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரிய புரட்சி ஏற்படுத்தியவர்.
பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கிலும் காணப்படுகின்றன உலகெங்கும் சுமார் 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் உலகில் மிக வேகமாக பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்று.
உலகின் தோற்றம்தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உடலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது. அதுவே பௌத்தத்தின் முடிவு. தேவையேற்படின் இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ?, எப்படி விதை மாத்தில் இருந்து வந்ததோ அப்படியே.
சார்பிற்தோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பௌத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்க. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் ஆங்கிலத்தில் Dependen Origination என்றும் கூறுவர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்;
எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ? இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து…. தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும், ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதவின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை,
முதற் காரணத்தை உடன்பட்ட கடவுள் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது.
கடவுள் கோட்பாடு
பௌத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை. அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது. அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பௌத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது – Anatta). துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை -Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும். அது பௌத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது
அனைத்தையும் உருவாக்கும் நிர்வாகிக்கும். அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமியசக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எளினும் பௌத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவுகள் இருக்கின்றார்கள், அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள்:
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பௌத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை. மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்
புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணம் அடைந்த பின்பு சீடர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த உபதேசங்களை எல்லாம் ஒருசேரத் தொகுத்து அந்தத் தொகுப்பை மூன்று பிரிவுகளாகச் செய்தார். அவை வருமாறு,
சுத்த பிடகம்
விநய பிடகம்
அபிதம்ம பிடகம்
இந்த மூன்று பிடகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஆயினும் ஒவ்வொரு பிடகமும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை
விவரிக்கிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம். இந்தோனேஷியா முதலிய நாடுகளில் நிலவும் பௌத்தம் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தது. இதைத் தேரவாதம் பௌத்தம் அதாவது பெரியோர் கடைப்பிடிக்கும் பௌத்தம் என்றுக் கூறுவர்.
பௌத்தர்களோ நிலையான ஆன்மா என்ற ஒன்று கிடையாது என்றும். பல்பொருள்கள் தன்னிச்சையாக ஒன்று சேரும்போது, உயிர் என்பது உண்டாகிறது என்றும், பிறகு மாற்றங்களின் காரணமாக அந்தப் பொருள்கள் பிரியும்போது பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு இருக்குமானால், அந்த உயிர் சூனிய நிலையை அடைகிறது என்றும். அதுவே நிர்வாணம் என்று கூறுகின்றனர்; பந்த பாசங்களலிருந்து விடுபடாத உயிர், தத்தம் கருமத்துக்கு ஏற்றவாறு புகழ் பரவிவரும் என்றும் கூறுகின்றனர்.
ஆகவே ஆன்மா பற்றியும், அது மோட்ச நிலை அடைவது குறித்தும் பௌத்தர்கள் கொண்டுள்ள கருத்து. மற்ற சமயந்தவர் கொண்டுள்ள கருத்துக்கு முற்றும் மாறுபட்டது. இந்த இரண்டு போக்குகளுமே தவறானவை என்று புத்தர் கருதினார். யானையைப் பார்த்திராத பார்வையற்றவர் நால்வர், தான் நொட்டுப் பார்த்த யானையின் உறுப்பையே யானை” என்று சாதித்ததைப் போல ஆன்மீகவாதிகளும் ஆன்மாவைப் பற்றிக் கூறுகின்றனர் என்று புத்தர் முடிவுக்கு வந்தார். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு, இடர்படுவது கூடாது என்று அவர் கருதினார்.ஆகவே, பயளற்ற ஆன்மாதத்தை விட்டு ஒழித்து மத்திய வழியை அவர் மேற்கொண்டார். அதனால் பௌத்த சமயத்தில் கேளிக்கை வாழ்வுக்கு இடம் இல்லை. சுய அனுபவத்தால் மட்டுமே. பேருண்மைகளை யாராலும் அறிய முடியுமேயன்றி, அனைத்தையும் அனைவராலும் அனுபவமில்லாமல் அறிய முடியாது. அவற்றை எவ்வளவு தான் விளக்கிச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது. அதைப் போலவே. நீர்வாணம் என்பது சுய அனுபியத்தால் தெளிந்து தெளிய வேண்டிய மனநிலை ஆகும் என்று பௌத்தம் போதனைச் செய்கிறது. கடவுள் ஒன்று உண்டு என்னும் கொள்கைமை. பௌத்தர்கள் ஏற்பது இல்லை. உலகில் காணப்படும் பயன்பாடுகள் யாவும் அவரவர் செய்யும் வினைகளின் பயனாய் ஏற்படுகின்றனவேயன்றி கடவுள் காரணம் அன்று என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை வாலிபன் ஒருவன் புத்தரை அணுகி, பெருமானே உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கு காரணம் என்ன? ஒருவன் அறிவாளியாகவும் மற்றொருவன் மூடனாகவும், ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் தீயவனாகவும், ஒரு நோயாளியாகவும் மற்றொருவன் திடக்காத்திரமாகவும், ஒரு ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரனாகவும் இருக்க காரணம் என்று கேட்டான்.
அதற்கு புத்தர் தாம்தாம் செய்யும் கருமங்களின் விளைவாகவே மாந்தர்களிடையே வேற்றுமைகள் நிலவுகின்றன. பிராமணர்கள் சத்திரியர்களும் தான் தத்துவ விகாரம் செய்ய தகுதி உடையவர்கள் என்னும் குறுகிய கருத்தை முதன்முதலாக தகர்த்தவர் புத்தபெருமான். இதில் சிறிதும் ஐயமில்லை. அறிவியல் தேடலும், ஆர்வமும் உள்ளவர்களுக்கும் பௌத்த சங்கத்தின் வாயில் திறந்து இறந்தபடியால் பல்வேறு சாதிப் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் ஆர்வத்துடன் பௌத்த சங்கத்தில் விரும்பி சேர்ந்தார்கள்.
தான் மட்டும் ஈடேற்றம் பெற்று விட்டால் போதும் என்னும் கருத்து புத்தருக்கு இருந்ததில்லை. தான் பெற்ற அனுபவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் ஈடேற்றம் பெற வழிகாட்டும் வழி தமது முக்கிய கடமையாக அவர் கருதினார். பிக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் 60 என உயர்ந்தும், அவர்களை தம் அருகே வைத்துக் கொண்டு பெருமை அடைவதை அவர் விரும்பவில்லை. அவர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி பௌத்த சமயத்தைப் பரப்ப அவர் ஏற்பாடு செய்தார். பிக்குகளே தர்மத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லுங்கள். ஒரே வழியில் இருவர் சேர்ந்து செல்லாதீர்கள் என்ற யோசனை சொன்னார். சுவபாலன் என்னும் புலையனும், சுந்தன் என்னும் சிப்பந்தி வேலை செய்பவனும் பௌத்த சங்கத்தில் சேர்ந்து பெருமை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பௌத்த சங்கத்தை ஆதரிக்கவும் ஆர்வத்துடன் அதில் மக்கள் சேர்வதற்கு முக்கிய காரணம் சாதி வேற்றுமையை அகற்றியது மட்டுமல்ல புத்தரிடம் காணப்பட்ட வாதத்திறமையும் முக்கிய காரணங்களில் ஒன்று.
புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
- துன்பம் (துக்கம்) மனிதர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாது.
- பிறப்பு நோய் முதுமை இறப்பு ஆகியவை மனிதருக்கு துன்பத்தை தருபவை. பசி பகை கொலை வெகுளி இழப்பு மயக்கம் போன்றவையும் துன்பத்தை தருபவை.
- ஆசை/ பற்று துன்பத்திற்கான காரணம்.
- துன்பம் நீக்கல் – ஆசையை விட்டு விடுவதே துன்பத்தை நீக்கும் முறைமை.
எட்டு நெறிகள் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள்.
நற்காட்சி – RIGHT VIEW
நல்லெண்ணம் – RIGHT THOUGHT
நன்மொழி – RIGHT SPEECH
நற்செயகை – RIGHT CONTACT
நல்வாழ்த்துக்கள் – RIGHT LIVELIHOOD
நன் முயற்சி – RIGHT EFFORT
நற்கடை பிடி – RIGHT MINDFULNESS
நற் தியானம் – WRITE MEDITATION
இந்த எட்டு செயல்கள் செய்தாலே போதும் மக்கள் எப்பொழுதும் எந்த சிக்கலும் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான காரணம் என்று புத்தர் வலியுறுத்தினார்.
கிருத்துவம்
கிருத்துவ சமயம் மக்கள் வாழ்க்கையில் அக்கறைக் கொண்டது. இவ்வுலகம் எப்பொழுதும் உய்வுப் பெற வேண்டும் என்ற சிந்தனைக் கோட்பாடு கொண்ட சமயம். அதனால்தான் கிருத்துவம் சமாதானத்தை விரும்பும் சமயமாக விளங்குகிறது. எல்லோரிடமும் அன்பை போதிக்க கற்றுத் தருகிறது. அதன் தாக்கம் தான் இயேசுபிரான் ஒரு படி மேலே சென்று ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கனத்தை காட்டு என்ற உயர்ந்த தத்துவத்தை உலகறியச் செய்தவர். இயேசுபிரானை பற்றிய புரிதல் இவ்வுலகில் மிகப் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய சமயம் கிருத்துவமாக திகழ்வதற்கு இதுவே காரணம். இன்றைக்கு உலகில் அதிக சிலைகளை கொண்டவர் இயேசுவும் புத்தரும் அவர்.
அதனால்தான் நடைமுறை வாழ்க்கை தொடங்கி தமிழ் சினிமாக்களில் தாக்கம் நிறைந்தவர்களாக இவ்விருவரும் இருந்துள்ளன. ஒரு திரைப்படப் பாடலில் புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக என்ற அற்புதமான ஒரு தத்துவத்தை காணமுடியும்.
கிறிஸ்துவ மார்க்கத்தின் ஆராதனை முறைகள், ஆன்மீக போதனைகள், சட்ட திட்டங்கள், இம்மைக்குரிய வாழ்க்கை நெறிமுறைகள், மறுமைக்குரிய வாழ்வு பற்றிய வெளிபாடுகள் இவைகளைக் குறித்த ஆதார நூல்தான் வேதாகமம். இதை விவிலியம், பைபிள், திருமறை, என்றெல்லாம் அழைப்பர்.
கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கை உடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின் படி சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவரு சொற்களின் பொருளும் திருப்பொழிவு பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியில் இருந்தும், கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை.
சுமார் 24 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு ( 31.3%) உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியது. கிறிஸ்தவம் கிபி முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவுக்காக இருந்ததாலும் யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு எனும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இஸ்லாம் போலவே கிறிஸ்துவமும் தன்னை ஆப்ரகாம் வழிவந்த சமய நம்பிக்கையாக கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கை.
பத்து கட்டளைகள்
கிறிஸ்துவத்திலும் பத்து முக்கியமான கட்டளைகள் இருப்பதை அறிய முடிகிறது. பத்து கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரை தொகுப்புகளுல் முதன்மையானது. இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் இடம்பெறுகின்றது.
பத்து கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவுகளாக உள்ளன. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள். இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக் கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தில் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.
- உண்மையான கடவுளை நம்பி ஏறிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
- ஆண்டவரின் பெயரை வீணாக பயன்படுத்துதல் ஆகாது.
- ஓய்வு நாளை தூயதாகக் கடைபிடி
- உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
- கொலை செய்யாதே.
- விபச்சாரம் செய்யாதே
- களவு செய்யாதே
- பொய் சாட்சி சொல்லாதே.
- பிறர் மனைவியை விரும்பாதே
- பிறர் உடமையை விரும்பாதே.
இந்த 10 கட்டைகளை கிருத்துவ சபைகளுக்குள் வரிசை முறை மாறி இருப்பதை காண முடியும்.
சீடராகுதல் என்னும் சொற்கள் அதிக அளவில் கிருத்துவ மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. தங்களது சிந்தைக்கேற்ப அவர்கள் சொற்களுக்கு பல அர்த்தங்களை கொண்டு வருகின்றனர். ஆயினும் சீடர் ஆகுதல் என்பதை குறித்து இயேசுநாதர் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை உற்று காண வேண்டும்.
சீடர் என்பவர் ஒரு மாணவராக அதாவது கற்றுக் கொள்கின்ற ஒருவராக இருக்கிறார் என்று அறிய முடியும். குரு அல்லது ஆசிரியர் தம்முடைய மனதிற்கு தமது நடைமுறை பயிற்சி அளிக்கும் முறையையே சீடர் ஆகுதல் எனும் சொல் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசு தமது 12 சீடர்களை நியமித்த விதத்தை பார்க்கும் பொழுது அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் பிரசங்கம் பண்ணும் படியாக தான் அவர்களை அனுப்பவும் என்று எழுதி இருக்கிறது. அந்த மனிதர்கள் இரட்சகரோடு வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை கேட்டார்கள். அவருடைய வாழ்க்கை முறையை கண்டார்கள். அதன் பிறகு அவரது செய்தியை பரப்புகிறவர்களாக அவரிடம் இருந்து சென்றனர். அது செயல்முறைப் பயிற்சியாக விளங்கியது.
ஓர் ஆசிரியர் தான் அடைந்த நிலையைக் காட்டிலும் மேலான நிலையை தனது மாணவர் அடையும்படி வழிநடத்த முடியாது. சீடர் தன் குருவுக்கு மேர்ப்பட்டவன் அல்ல. தேறினவன் எவரும் தன் குருவைப் போல் இருப்பர் (லூக்6.40) நீ அறியாததை உன்னால் சொல்லித் தர முடியாது உனக்கு தெரியாத இடத்திற்கு உன்னால் வழி காட்ட முடியாது.
இயேசு கிறிஸ்துவின்சீடர்கள்
- சீமோன்
- அந்திரேயா
- யாக்கோபு
- பரிசுந்த யோவான்
- பிலிப்பு
- பர்த்தலேமியு
- தோமாக
- மத்தேயு
- யாக்கோபு
- பரிசுத்த ததேயு
- சீமோன்
- யூதாஸ் காரியோத்
புனித பேதுரு
புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும் இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு ” என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்.இப்பெயரின் தமிழ் வடிவம் பேதுரு இராயப்பர் என்பதாகும்.
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராசுத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார்.
கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திரு தூதராகிய பேதுரு முதல் திருத்தந்தை (Pope) என்று அறிக்கை கூறுகிறது. இயேசு தம் நெருங்கிய சீடராக தெரிந்து கொண்ட திருத்தூதர்கள் பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருக்கு அளிக்கப்பட்டது.
அந்திரேயா
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர். மீன்பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்தவர். பின்னர் இயேசுவோடு சேர்ந்தவர். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமூழுக்கு யோவான் அவரை சுட்டிக்காட்டி இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்றார். உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கு இணங்கி ஓர் இரவும், பகலும் அவரோடு தங்கினார். மறுநாள் தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தனர். இயேசு அப்பங்களை பலுக்கச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் உள்ளது என்று சொன்னவர் இவரே. கோயிலில் அழிவை முன்னறிவித்த போது அழிவு எப்போது வரும் எனக் கேட்டவர். இவரே தூய ஆவியின் வருகைக்கு பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டையன், மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தவர். பத்ராஸில் ‘X’ வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர். சிலுவையை கண்டதும் உன்னில் தொங்கி என்னை மீட்பவர் உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக என்றவர்.
பிலிப்பு
திருத்தூதரான புனித பிலிப்பு யேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறித்தவப் பாரம்பரியப்படி இவரே கிரேக்கம். சிரியா முதலிய நாடுகளுக்கு கிறித்தவத்தைக் கொண்டுச்சென்றவர். பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அம்மாடி
நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே ஆகும். இவரின் விழா நாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு மே மூன்றில் கொண்டாடப்படுகிறது.
பர்த்தலமேயு
புனித பத்துல மேயு அல்லது புனித நந்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர். யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நந்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு இவர் உண்மையான இஸ்ரேலியர், கபடற்றவர் என்று இவரை குறித்து கூறினார். மேலும் மத்தேயு மார்க் லுக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம்பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பு கண்டவர்களுள் இவரும் ஒருவர். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மேனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி
மத்தேயு
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்கள் ஒருவர். மேலும் இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் படி இயேசுவின் உழைப்புக்கும் விண்ணேற்றத்திற்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். இத்தகைய சூழலில் தான் இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார். இயேசுப்பாவிகளோடும் வரி தண்டுபவர்களோடும் உண்பதை பரிசேயரை சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு அவருடைய சீடரிடம் இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன் என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி நோயற்றவர்களுக்கு அல்ல நோய் உற்றவர்க்கே மருத்துவத் தேவை நேர்மையானவர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.
தோமா
புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர் இயேசு கிறித்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் சந்தேக தோமா’ (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் (யோவான் 20:30) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
உரோமைப் பேரரசுக்கு வெளியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா. இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் தற்போதைய கேரளம், தமிழ்நாடு பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் பாரம்பரியத்தின்படி திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு இல் திருமுழுக்கு 53 அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார்.
ததயு
சீமோன் அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி 1.13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவர் பெயரைத் தவிர விவிலியத்தில் இவரைப் பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைச்சாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேவின் கல்லரையினோடு வைக்கப்பட்டு இருக்கிறது.
பர்தலமேயு
புனித பர்த்தலமேயு, புனித பார்த்தொலொமேயு அல்லது புனித நத்தனியேல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெயர் டாலமியின் (Prolemy) மகன் எனவும் உழுசால் மகன் எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு. இவர் உண்மையான இஸ்ரயேலர். சுபடற்றவர் என்று இவரைக் குறித்துக் கூறினார். மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் நிருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி
மத்தேயு
திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். இவர் ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் உயிப்புக்கும். விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.
யூதாஸ் காரியோத்து:
சீடர்கள் பட்டியலில், கடைசியாய் இடம் பெரும் நபர். வேறு வழி இல்லாமல் நற் செய்தியாளர் இவரின் பெயரை கடைசியில் சேர்த்து, “துரோகி”, “காட்டிக் கொடுத்தவன் என்றும் குறிப்பிட்டனர். நான் செய்ய இருக்கும் காரியம் இன்னது என்று நன்கு தெரிந்தும், பலமுறை நம் ஆண்டவரால் எச்சரிக்கப் பட்டும், மனக்கடினம் கொண்டு தனது குருவை முத்தம் கொடுத்து காட்டி கொடுத்த செயல். அவர் தன்னை சாத்தானுக்கு முழுதும் விட்டு கொடுத்ததை காட்டுகிறது. பின்பு தான் செய்தது தவறு என்று அறிந்தபின் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்த கிடைத்த வாய்ப்பை தவற விட்டு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது நமக்கு சோசு நிகழ்வாய் – துக்கம் தருகிறது குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டிகொடுத்து விட்டேனே என அறிந்த யின் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பி இருக்கலாம் தவற்றை உணர்ந்தபின் பிரதான ஆசாரியனிடம் செல்லாமல், இயேசுவிடமே சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, இயேசுவை ஏற்காத, அவரை குற்றமற்றவர் என்று அறிய மறுத்த கூட்டத்திடம் சென்று தனது செயலுக்கு மனஸ்தாபப் பட்டது தவிர்க்க வேண்டிய செயல் உயிர் மூச்சு உள்ளவரை, சுய உணர்வு உள்ளவரை எவ்வளவு கொடிய பாவம் செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்டு மனம் திரும்ப மானிடர் நமக்கு வாய்ப்பு உள்ளது – மன்னிப்பதற்கு அவர் கிருபையும் தயவும் நிறைந்த ஆண்டவர். யூதாஸ் தான் செய்தது தவறு என உணர்ந்தார்; தான் பெற்ற அநீதியின் கூலியை விட்டெறிந்தார்.
தொடரும்…
பேரா. எ.பாவலன்
நூல் அறிமுகம்: ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்
நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கைரதி 377 என்ற தலைப்பில் கோவைக் கவிஞர் மு.ஆனந்தன் 11 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
120 பக்கங்களைக் கொண்ட மெலிந்த தொகுப்பு. ஆனால் சடசடவென்று வாசித்துக் கடந்துவிட முடியாத பேரரதிர்வுகளை உள்ளடக்கிய பக்கங்கள் அவை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதைகளே என்றாலும் ஆசிரியரின் தன் அனுபவக்கதைகள் போல் விரிந்து செல்கின்றன.
“மாத்தராணி க்ளினிக்” கின் கதைக்களம் மதுரை. எவ்வித வர்ணனைச் சொற்களும் இல்லாமல் மேலமாசி வீதி, பெரியார் – பழங்காநத்தம் பேருந்து நிலையங்கள், திடீர் நகர், மருத்துவக் கல்லூரி என மதுரையின் நிலவியலை மிகத் துல்லியமாக நடக்கச் செய்கிறார் இக்கோவைக்கார எழுத்தாளர். இப்படியே விழுப்புரம், கொங்குப் பகுதியின் மசக்கவுண்டன் பாளையம், தில்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி எனக் கதைக்களம் வெவ்வேறாகத் தாவிச் செல்கிறது. ஆனால் அத்தனை களங்களும் அதற்குள் நம்மைக் கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது.
கதையின் பாத்திரங்கள் ஒன்று இஸ்லாமியப் பின்னணி. இன்னொன்று கிருத்துவம், மற்றது பிராமணக் குடும்பம், கவுண்டர் சமூகம், ஆதிப் பழங்குடி தாசபளச்சிகர் என பலவாக இருந்தாலும் அவற்றின் புழங்கு மொழித் தனித்துவத்தோடு மெய்மையை அவரால் நிறுவ முடிகிறது.
இவையத்தனையிலும் உச்சம் நடு நீரோட்டத்தில் பெருமளவு விலக்கி வைப்பட்ட திருநர்களின் குழூவுச் சொற்களையும் நேர்த்தியாகத் தோழர் ஆனந்தன் கையாண்டிருப்பது. காலங்களிலும் 150 ஆண்டுகளுக்கு முன்னும், சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடத்திலும், இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும், தற்காலத்தினூடும் புரண்டு எழுந்து வரலாற்று வாசம் மணக்கக் கதைகளை நடத்திச் செல்கிறார்.
இவையெல்லாம் கூட எழுதுபவன் முனைந்து செய்து விடக் கூடியது தான். ஆனால் இவரது முதன்மைப் பாத்திரங்கள் அனைத்தும் அவரே சொல்வது போல திருநர்களாக இருப்பது, அவர்கள் பால் தனித்த கரிசனம் இல்லாத ஒருவரால் இப்படி எழுதி விடமுடியாது.
பொதுச் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாலினமான திருநர்களின் கதைகளை மட்டுமே கொண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரதான் கொண்ட கருத்தியலின் பால் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டவரால் மட்டுமே துணிந்து கொண்டு வர இயலும்.
மு.ஆனந்தன் பாத்திரங்களாகவோ, பாத்திரத்தின் பக்கச் சார்பாகவோ இல்லாமல் காட்சிகளை செட்டான மொழியில் படம் பிடிக்கிறார். வாசகன் திருநர் பக்கம் நிற்கும்படியாக அவற்றைத் தொகுத்து அளிக்கிறார். அவர்களது இயல்பான உரையாடல் மொழியின் வழியாகத் தனது தர்க்கத்தை நிறுவுகிறார். பத்திக்குப் பத்தி அலட்டல் இல்லாத (உரைநடை) முரண்டைத் தொழிற்படுகிறது. தலைப்பில் இருந்தே அது துவங்கி விடுகிறது, “மாறிய பாலினரின் மாறாத வலிகள்” என்று.
உண்மைத் தரவுகள், வரலாற்று மெய்மைகள், தனித்துவமான சொல்லாடல்கள், யூகித்தும் உணரமுடியாத வலியுணர்வுகள் என அத்தனைக் கைச்சரக்கு வைத்திருந்தாலும் எதையும் திகட்டி விடாத விகிதாச்சரத்துடன் மு.ஆனந்தனால் தூவ முடிந்துள்ளது. சற்றே பிசகினாலும் கொச்சையான பாலுணர்வுக் கிளர்ச்சியாக மாறி விடக்கூடிய களத்தில் நின்று வாசகனின் கண்களாகவும், மனமாகவும் செயல்படுகிறார்.
இவரது ஆழ்ந்த மனிதாய உணர்வுகளும், செய்நேர்த்தியும் (இவர் வக்கீலாக இருப்பதால்) வழக்கறிஞர்களின் தர்க்கத்தின்பாலும்
மரியாதையை ஏற்படுத்துகிறது.
வாழ்த்துகளுடன் – போப்பு
மு.ஆனந்தன்- 9443049987
நூல் அறிமுகம்: அ. மார்க்ஸின் ’இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்’ – சு. அழகேஸ்வரன்
பிளவுவாத அரசியலுக்கு எதிரான நூல்
சமீபத்தில் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் என்ற நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் 1970 களில் ஏற்பட்ட தாராளவாத பொருளாதாரவாதத்தின் வீழ்ச்சி, அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு குறித்த அச்சம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு முதலியவை மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறுகிறது. மேலும் தேசியம் என்பதின் மீதான ஈர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இடத்தை மதவாத தேசியம் கைப்பற்றியுள்ளது. இந்த மதவாத தேசியம் மதங்கள் தாம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அதிகாரம் பெறுவதாகவும், அதுவே சிறுபான்மையாக உள்ள இடங்களில் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி துன்புறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. எனவே மதங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்கிறது இந்த நூல் முன்னுரை.
அத்துடன் தமிழகத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடுகளைத் தாண்டி கல்வியைப் பொது சொத்தாகியதால் சிறுபான்மை மதத்திற்கும் பிறருக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியது. தவிரவும் திராவிட இயக்கம் சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை பேணியதால் தமிழகத்தில் சமயம் பொறை நிலவியது. இதுவே மதவாத சக்திகள் தமிழகத்தில் இன்று வரை காலூன்ற முடியாமல் தடுத்து வருகிறது என்று தொடங்கும் இந்நூல் மதங்களின் தோற்றம், பரவல் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த புதிய பார்வையை வழங்குகிறது.
இதற்கு பௌத்த மற்றும் இந்துமத ஆய்வாளர் டேவிட் கெல்னரின் மனித வாழ்வில் மதங்களின் பங்கு குறித்த கருத்துக்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மானுட வாழ்வில் மதத்தின் பங்கு இறை நம்பிக்கை, இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதுடன் முடிவடைவதில்லை. அதற்கும் அப்பால் பிறந்த குழந்தையை ஆசிர்வதித்து, பெயரிட்டு அதைச் சமூக உறுப்பினர்களில் ஒருவராக ஏற்று பின்னாளில் அவரது திருமணத்தை ஆசீர்வதித்து அந்த தம்பதியினரை குடும்பமாக அங்கீகரிக்கிறது. மதத்தின் அந்த ஏற்புகளுக்கு அரசும், சட்டங்களும் சட்டபூர்வ நிலைமை வழங்குகிறது. இவற்றையே நாம் கெல்னர் கருத்துக்களின் சுருக்கமாகக் கொள்ளலாம். மேலும் இவையெல்லாம்தான் மதத்தை எளிதில் முடிவுக்கு கொண்டுவர முடியாமைக்கான காரணங்களாக உள்ளதாகவும் இந்நூல் சுட்டுகிறது.
இந்து மதம்:
இந்து மதத்தின் ஆகப்பெரிய பலவீனம் அதன் தோற்றத்திலேயே அடங்கியுள்ளது. அது வருண வேறுபாட்டில் தொடங்கி சாதி, தீண்டாமை ஆகிய அனைத்திற்கும் நடைமுறையில் மட்டுமின்றி கோட்பாடு ரீதியாகவும் இடம் கொடுத்தது. மேலும் இந்து மதத்திற்கு மறைநூல் ஒன்று இல்லாததின் காரணமாக இந்து மதத்தை ஏற்றவர்கள் முன்வைத்த கருத்துக்களில் பெரிய வேறுபாடுகளைக் காண முடிகிறது என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.
மேலும் அயோத்தியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை முன்வைத்து, இராமர் கோவில் இடிக்கப்பட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று இந்துத்துவவாதிகளின் உற்சாகமாக வாதிட்டதை இந்நூல் மறுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைத்த தூண்கள் முதலானவை பௌத்த கட்டுமானங்களில் உள்ள தூண்களில் பானியிலேயே உள்ளன. எனவே அவற்றை பாதுகாத்து வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலுமிருந்து ஒலித்ததை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
அவற்றுடன் இந்துமத காப்பிய வர்ணனைகள் மற்றும் துர்கா பூஜை குறித்த சர்ச்சைகளுக்கும் இந்நூல் எதிர்வினை ஆற்றுகிறது. இந்துமதக் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் மிகவும் தொன்மையானவை. அவை மத நூல்கள் அல்ல. அந்த காப்பியங்களில் பெண்களின் அங்க அழகுகள் வர்ணிக்கப்பட்டுள்ளது ஒரு காப்பிய மரபின் அடிப்படையில்தான். இந்த மரபு தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும் தொடரத்தான் செய்கிறது. எனவே இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் குறித்த வர்ணனைகளை ஆபாசங்களாகப் பார்க்கக்கூடாது.
அதேவேளையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் அரசியல் சார்ந்தே இவற்றின்மீது விமர்சனங்களை வைத்தார்கள். அந்த அரசியலும் நமது சூழலுக்கு தேவையான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.
அதேபோல் அசுரகுலத் தலைவன் மகிஷாசுரனை கொன்றொழித்த மகிஷாசுர மர்தினியை (துர்கை) கொண்டாடும் வகையில் துர்கா பூஜை நடத்தப்படுகிறது. உண்மையில் ஓரங்கட்டப்பட்ட உள்நாட்டு மக்களை கொன்று ஒடுக்கியதை விவரிப்பதுதான் இந்த மகிஷாசுரன் மர்த்தினி வரலாறு. இதற்கு மாறான கதையைச் சொல்லி துர்கா பூஜை கொண்டாடுவது எம் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவே உள்ளது என்று பழங்குடியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களில் உரிமைகளுக்காக நிற்பவர்கள் சொல்லி வருகிறார்கள். அத்துடன் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் எல்லைப்பகுதிகளில் மகிஷாசுரனை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஆனால் இதே கருத்தை பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நியாயப்படுத்தி அன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி நாடாளுமன்றத்திலும் பேசினார். இவை அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது என இந்நூல் வாதிடுகிறது.
சமணம்:
உயிர்ப்பலிகளை ஏற்றுக்கொண்ட கங்கைச் சமவெளி வைதீகம், பௌத்தம்-சமண எழுச்சிக்கும் பிந்தைய காலத்தில் அவற்றை கைவிட்டன. உயிர்ப்பலி மறுப்பு எனும் கொல்லாமை உட்பட எளிய மக்களின் பசிப்பிணி அகற்றள், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைதள் ஆகிய கொள்கைகளை சமணம் மட்டுமே முழு உறுதிப்பாட்டுடன் கடைப்பிடித்தது. எனவே பிற மதங்களுடன் ஒப்பிடும்போது, சமணம் வீழ்ச்சி அடைவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. ஆனாலும் சமணம் இந்தியா முழுவதும் எண்னையும், எழுத்தையும் பரப்பியது. பிராமி எனும் தொல் வடிவ எழுத்தை இந்தியாவிற்கு கொடையாக அளித்தது போல் தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்களை வழங்கியது. பாட்டுக்களை சீர்களாகப் பிரிப்பது, எழுத்து, சொல்லாராய்ச்சி மற்றும் அகராதி உருவாக்கப் பணிகளை சமணமே செய்தது என்பதை இந்நூல் மீள் பதிவு செய்கிறது. மேலும் பாஜக எம்பி தருண் விஜயும், துக்ளக் ஆசிரியர் சோ வும் திருக்குறளை இந்துத்துவ வலைக்குள் கொண்டு வர முயற்சித்ததை சுட்டிக்காட்டி அது சமண நூல்தான் என்று நிறுவுகிறது.
பௌத்தம்:
பௌத்தம் நீண்டநாள் நீடித்ததற்கு காரணம், அதை மீளுருவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள், பண்டைய பொருளாதாரத்திலும், இலக்கண உருவாக்கத்திலும் பௌத்தத்தின் பங்களிப்புகளை இந்நூல் விளக்குகிறது.
தொடக்க கால பௌத்தம் இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்களை பொருத்தமட்டில் சமூக சடங்குகளுக்கும், பக்திக்கும் இடமற்ற மறுவாழ்வு ஒன்றை மட்டுமே முன்வைத்தது. ஆனால் அது வெகுஜனத் தன்மையை அடைந்தபோது சமூக ஏற்பை அளிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இருந்தது. எனவே இந்த காலியிடத்தை பூர்த்தி செய்ய பிற மதக் கருத்துக்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டது. இதன் காரணமாகவே பௌத்தம் ஒப்பீட்டு ரீதியில் அதிக காலம் நீடித்தது.
மேலும் தமிழகத்தில் பௌத்த மீளுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே கெல்னர் கூறிய கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
பௌத்தம் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களைப் பொருத்தமட்டில், அந்த காலத்தில் வணிகர்கள் தொலைதூரத்திலிருந்து வணிகம் செய்து வந்தனர். அவர்கள் பௌத்த துறவிகள் வசித்த குகைளுக்கு பொருளாதார உதவிகளை செய்தனர். பௌத்த மடங்கள் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாகவும், வணிகர்களின் பொருட் கிடங்குகளாகவும் இருந்தன. பின்னர் இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கியதில் பௌத்தம் முக்கியப் பங்காற்றியது. இந்த குடியிருப்புகள் வழியாக பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. இது அடிப்படை பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் தொலைதூரம் வணிகம் முடிவுக்கு வந்தது. எனவே தமது மதக் கடமைகளையும், பொருளாதாரச் செயல்பாடுகளையும் நிறைவேற்றி முடித்திருந்த பௌத்த மடங்கள் மறையத் தொடங்கின.
தமிழ் இலக்கண உருவாக்கத்தைப் பொருத்தமட்டில் பௌத்த மரபில் வந்த இலக்கண நூலான வீரசோழியம் எட்டு சுவைகளுடன் ‘சாந்தம்’ என்ற சுவையையும் கூடுதலாக இணைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் பௌத்த நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் ஏற்பட்ட மொழி மாற்றங்களை ஏற்று, தமிழ் இலக்கணத்தை இந்நூல் விளக்குகிறது.
சைவம்:
தமிழகத்தில் சைவ எழுச்சி பெற்ற பின்புலம், முஸ்லிம் மன்னர்களால் கட்டப்பட்ட காசி மடம் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளது.
சைவக் குரவர்களில் ஒருவரான குமரகுருபர சுவாமிகள் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு சைவ தத்துவங்களை விளக்கியதில் கவர்ந்த ஒளரங்கசீப்பின் தமையன் தராஷிகா காசியில் ஒரு மடத்தை கட்டிக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுவாமிகள் நேபாளத்தில் சாரங்கி என்ற ஊரில் துணை மடத்தை அமைத்தார். ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியால் உருவாக்கப்பட்ட குமரகுருபர மடம் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. ஆனால் சாரங்கி மடம், சைவ மடங்களின் உள்விவகாரங்களின் காரணமாக அவர்களது கையை விட்டு போய்விட்ட உண்மைகள் தமிழறிஞர் கு.அருணாச்சலத்தின் நூலை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என சித்தரித்ததுடன் சமண பௌத்த நூல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்கிற மும்மூர்த்திகள் மற்றும் மாணிக்கவாசகர், மெய்கண்டார் முதலான சைவர்களின் பணிகளில் காரணமாக தமிழ் சைவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் வசமானது. இந்தப் பின்னணியில்தான் சைவம் மடங்கள் பெரும் செல்வத்துடன் உருவாக்கப்பட்டது.
இஸ்லாம்:
இஸ்லாம் வணிகச் சூழலில் உருவான மதம். சம்பாதித்த பொருளில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அளவுக்கு மீறிய சொத்து சேகரிப்பு குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் சமூக சமத்துவத்தை பொறுத்தமட்டில் இஸ்லாமிற்கு நிகராக எந்த மதத்தையும் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் மேலை கிறிஸ்துவ வரலாற்றறிஞர்கள் ‘இஸ்லாம் வாளோடு மதம்’ என்று கதை பரப்பியதை தற்போது இந்துத்துவவாதிகள் செய்து வருகிறார்கள். உண்மையில் மதமாற்றம் என்பது இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒரு மதத்தில் ஈர்ப்பு கொண்டு அதை ஏற்பது முதல் கட்டம். இரண்டாவது நிலையில்தான் அவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகள் அனைத்தையும் மதித்து இறுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். இதன்படி பார்க்கும்போது இந்தியாவில் இஸ்லாம் படிப்படியாகத்தான் பரவியது. முஸ்லிம் அரசுகள் இஸ்லாம் பரவலில் பங்கேற்ற போதிலும் அதை வன்முறையில் செய்யவில்லை.
இன்று இஸ்லாம் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் அது இஸ்லாமுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய புனித நூல்கள் மறு வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் திருக்குர்ஆனில் தந்தைவழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என்று அஸ்மா பர்னால் முன்வைக்கும் வாதங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. மதத்தில் நின்று உரையாடுவதற்குரிய ஒரு உரைசார் உத்தியை இவரது வாசிப்பு வழங்குவதில் இதுவே முக்கியமான போக்காக இனம் குறிக்கப்படுகிறது.
அடுத்ததாக, இன்று உலகம் முழுவதும் பரவி வரும் தப்லிக் ஜமாத் இயக்கம் அரசியல் பற்றி பேசாமல் ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இவ்வாறாக அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று இஸ்லாம் அறிஞர்களில் சிலர் விமர்சித்து வருவதை இந்நூல் கவனப்படுத்துகிறது. ஆனால் இவ்வியக்கம் பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக உள்ளது என்று குற்றஞ்சாட்டி சவுதி அரேபிய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. எனவே இந்த இயக்கம் குறித்து கூடுதல் வாசிப்பு தேவை.
கிறிஸ்தவம்:
அடிமைப் பட்டவர்களின் மதமாக உருப்பெற்ற கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக, காலனியாதிக்க மதமாகத் தோற்றம் கொண்டு மிகப்பெரிய மானுட அழிவிற்கு காரணமானது என்று கூறும் இந்நூல், டால்ஸ்டாய் எழுதிய நூலை திருச்சபை ஏற்காததற்கான காரணங்களை விளக்குகிறது. இயேசுவிற்கு பிறகு உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தை தொடங்கியது. ஆனால் பின்னர் மத அதிகாரமும், அரசதிகாரமும் தனது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள மனிதர்களை அற வாழ்விலிருந்து விலக்கி பொருளாதாய வாழ்விற்கு உரியவர்களாக மாற்ற விரும்பியது. இயற்கை அதீதங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மீண்டும் புகுத்தி இயேசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவன் கட்டளைகளை கரைப்படுத்தியிருந்தன என்பதை டால்ஸ்டாய் கண்டுகொண்டார். எனவே இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை நீக்கி தூய்மை செய்து அதை ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்ற நூலாக எழுதினார். அதனால்தான் திருச்சபை அதை ஏற்கவில்லை.
அடுத்ததாக, தமிழகத்தில் சகோதரி லூசியானா திருச்சபையின் ஆதரவுடன் ஆற்றிய பணிகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேவையாற்றிய ஐம்பது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு யாரும் மாறவில்லை என்பதை கவனப்படுத்துகிறது. மேலும் பிரஷ்யாவிலில் பிறந்து, தரங்கம்பாடிக்கு வந்த ஸ்டுவர்ட்ஸ் பாதிரியார் பணிகளையும், அவரோடு தொடர்புடைய வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள ஆ.மாதவையாவின் ‘கிளாரிந்தா’ நாவல் குறித்த திறனாய்வும் இடம்பெற்றுள்ளது.
இறுதிப்பகுதி வா.வே.சு. ஐயரால் எழுதப்பட்டுள்ள நூல் குறித்தது. ஔரங்கசீப்பிற்கு எதிராக போராடிய குருகோவிந்த் சிங் குறித்து எழுதப்பட்டுள்ள அந்த நூல் இஸ்லாத்திற்கு எதிராக மத வெறுப்பையோ, அவதூரையோ வெளிப்படுத்தாமல், அந்த மதத்தின் நெறிகளுக்கு உட்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை விளக்குகிறது.
இவற்றையெல்லாம் தொகுத்து பார்க்கும்போது, இந்நூல் மதம் குறித்த மார்க்ஸ் கூறிய கருத்துக்களை இந்தியச் சூழலில் நின்று விளக்குவதாகவே இருக்கிறது. அறிவொளி காலத்தில் எழுந்த தத்துவப் போக்கு மதத்தையும், தத்துவத்தையும் பிரித்து நிறுத்த வேண்டும் என்றது. தத்துவியலார் எனில் துர்க்கைம் மதத்தின் இடத்தை தேசியம் கைப்பற்றி விட்டது என்றார். சமூகவியலாளர்களோ மதம் என்பதின் இடத்தை அரசியல் கைப்பற்றும் என்று நம்பினார்கள். ஆனால் மார்க்ஸ் மட்டுமே மதத்தை அவ்வாறு குறைத்து மதிப்பிட முடியாது என்றார். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் தொடரும் வரை மதமே நிவாரணியாக அமையும். எனவே மனிதத் துயரங்களை எதிர்ப்பதற்காக வர்க்க ஒற்றுமையைக் கூர்மைப்படுத்துவதுதான் நமது பணி என விளக்கினார் என்றும், அந்த கருத்து நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறது இந்நூல்.
மேலும் இந்நூல் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் மதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை நவீன கருத்தாக்கங்கள் ஊடாக விரிவுபடுத்தி புதிய எல்லைகளை கண்டடைகிறது. அத்துடன் இந்துத்துவவாதிகளாலும், பொதுப் புத்தியில் நின்று பேசுபவர்களாலும் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் போது, இடையீடு செய்யப்பட்டவைகளின் தொகுப்பாகவும் இந்நூல் திகழ்கிறது. எனவே பிளவுவாத அரசியலை முன்னெடுக்கத் துடிக்கும் சக்திகளை எதிர்கொள்வதற்கு இந்நூல் பயன்படும் மதிப்பு கொண்டது.
சு. அழகேஸ்வரன்
அலைபேசி – 9443701812
நூல்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
விலை: 190
பக்கங்கள்: 214