கூட்டாஞ்சோறு சிறுகதை – சக்திராணி
தெருவெல்லாம் எப்போதும் சிறார்களின் கலகலப்பு சப்தம்…
“யாருமே…வீட்டிற்குள்ள விளையாட மாட்டோம்…”
“மண் கலந்த புழுதியோடு தான் எங்க விளையாட்டு ஆரம்பமாகும்…”
எல்லா விளையாட்டும் விளையாடி முடிஞ்ச அப்புறம் பசி வந்த பிறகும்… எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அவங்க அவங்க வீட்ல செஞ்ச சாப்பாடெல்லாம் வாங்கி வந்து…
ஒண்ணா அமர்ந்து… கதையெல்லாம் பேசி முடிச்சு சாப்பிட்டு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சா… நைட்டு தான் வீட்டுக்குள்ளேயே போவோம்…”
என்று தன்னுடைய சின்ன வயது நினைவுகளை தன் மகனுக்கு கதையாக கூறினாள் அகல்யா…
“அம்மா கதை கேட்கவே…ஜாலியா இருக்கு…”
இதெல்லாம் என் லைஃப் ல இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும்…
“ஆமாமா…தங்கம்…ஜாலி தான்”
“எனக்கும் ஆசையா இருக்கு…ஆனா…இப்போ…நீ…நான்…அப்பா மட்டும் தான் சேர்ந்து சாப்பிடுறோம்…”
“அப்பப்போ…அப்பா கூட வேலை வேலைன்னு வெளியில போயிடுறாரு…”
“எனக்கு விளையாட ஃப்ரண்ட்ஸ் இல்லை அம்மா…”
“சரி…சரி…யு…டோண்ட் வொர்ரி…ஓ.கே…அம்மா தான் உன் கூடவே இருக்கேனே…”
“ம்ம்ம்…யு ஆனா மை பெஸ்ட் ம்ம்மி…”
இருவரும் புன்னகைத்தே தூங்கச் செல்கின்றனர்.
விழிகள் தூங்கினாலும் அகல்யாவிற்கு தன் மகனின் ஏக்கம் தூங்க விடாமல் தடுத்தது… சூரிய உதயம் வரும் முன்னே… எழுந்து…குளித்து…பையில் தேவையான பொருட்கள் என அத்தனையும் எடுத்து வைத்தாள்…
ராம்…எழுந்திரிடா…சீக்கிரம்…
“என்னம்மா…இவ்வளோ… சீக்கிரம் எழுப்புற…’
“எங்க போறோம்…என்றே பாதி விழிகள் திறந்தும் திறக்காத வாய் கேட்க…”
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்…”
‘சர்ப்ரைஸா…என்ன அம்மா… சீக்கிரம் சொல்லு…’
“ கார் வந்துடுச்சு….கண்ணு…வா…வா கிளம்பலாம்…
‘கா…ரா….என்று கேட்பதற்குள் அவனைத்தூக்கி குளிப்பாட்டத் துவங்கினாள்.’
“என்னம்மா…புது ட்ரெஸ் லாம் எடுத்துருக்க…”
“எல்லாமே…உனக்கு தான் டா…வா..வா என்றே அவசரப்படுத்தி கிளம்பினாள்…”
“ஜன்னலோர பயணத்தில் சில்லென்ற காற்றில்…இயற்கை இரசித்தே…இருவருக்குமான பயணத்தில் புறப்பட்டனர்.”
“ஏம்மா…எங்க போறோம்…இப்போதாவது சொல்லேன்…அப்பா கூட வரல நம்ம கூட…”
“அப்பாக்கு…எப்போதும் போல வேலை டா…நேர நாம் எங்க போறோமோ அங்க வந்துருவாரு…
“ம்ம்…ம்ம்…எல்லாம் ஃப்ளான்…பண்ணி தான் நடக்குது… ஓ.கே…ஓகே…” என்றே ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கத் துவங்கினான்…
சிறிது நேரத்தில் கார் ஓர் இடத்தில் நின்றது…’ ஆர்வமாய் கதவுகளைத் திறந்து வெளியில் வந்தான்…ராம்”
“ அம்மா…இது என்ன இடம்…இங்க நிறையா மரங்கள்…பூக்கள் லாம் இருக்கே…”
‘சூப்பர் மா…நீ…”
“ஆமா..டா…வா…உள்ளபோலாம்…
உனக்காக நிறைய பேர் வெயிட் பண்றாங்க…”
“எனக்காகவா…அப்போ வா ம்ம்மா…உள்ள போலாம்..”
“கர ஓசை அதிர…ராம் உள்ளே அழைக்கப்பட்டான்…”
‘’வேகமாக நடந்த நடையில் சற்றே தயக்கம்…சுற்றும்…முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான்…” அம்மாவின் கரங்களை இறுகப்பற்றினான்…
“அம்மா…இவங்கலாம் யாரு???”
இவங்க…நம்ம பாட்டி…தாத்தா…
“பாட்டி…தாத்தாவா…நிறையா பேர் இருக்காங்க…”
ஆமா…டா…அம்மா நேத்து சொன்னேன்ல…இவங்களும் கூட்டாஞ்சோறு சாப்பிடத்தான் சேர்ந்து இருக்காங்க…
‘என்னம்மா…சொல்ற.
கூட்டாஞ்சோறு சாப்பிடவா…”
ஆமா….இன்ன்க்கு நாம இவங்க கூட சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடலாம்…”
“எல்லாரும் சேர்ந்து சாப்பிட போறோமா…ரொம்ப ஹேப்பி மா…என்றே சத்தமாக புன்னகைத்தான்…”
அம்மாவின் கதை போல் அவர்களோடு சேர்ந்து விளையாடி…ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தான்… பொழுதும் விரைவாக ஓடியது…இன்று ராமுக்கு…
நேரமாயிட்டு…
ராம்…கிளம்புவோமா…
வேண்டாம்மா…இங்கேயே இருக்கலாம்…
இன்னொரு நாள்…வருவோம் டா…
விடை பெறும்நேரம் கையசைத்தும்…முத்தமிட்டும் பிரியாவிடை அளித்த ராம்…
“காருக்குள் ஏறிய பின்னும்…ஜன்னல் வழியாக அவர்களை இமைக்காமல் பார்த்தான்…”
இந்த இடத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்றே சிந்திக்கும் நொடியில் “முதியோர் இல்லம்”வரவேற்கிறது என்ற பலகை விழிகளில் கடந்து…சிந்தனையைத் தூண்டியது…. கூட்டாஞ்சோறு மகத்துவம் நிறைந்ததென….
– சக்தி ராணி
