இந்தியாவின் முதல்,நோபல் பரிசாளர் சர். சி.வி. இராமன் கட்டுரை – பேரா.சோ.மோகனா

இந்தியாவின் முதல்,நோபல் பரிசாளர் சர். சி.வி. இராமன் கட்டுரை – பேரா.சோ.மோகனா




வானின் நீல வண்ணத்துக்கு காரணமும் பதிலும் தேடியவர் தமிழ்நாட்டின் காவிரிக்கரையின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சர்.சி.வி. இராமன். அவரின் பிறந்த நாள் இன்று நவம்பர் 7. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். அவர்தான்.  அவர் இராமன் விளைவு பற்றி உலக்குக்கு அறிவித்த தினம் பிப்ரவரி
28 .
1921., அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போதுகப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்போது அவரது மனதில்கடலுக்கு நீல நிறம் எப்படி வந்ததுவானத்தின் நிறமா, என்ற கேள்வி உருவானது. பின்னர் கடலின் நீலநிறம்   சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் என்பதைக் கண்டறிந்தார். .

ஆற்றல்..இழக்கும் ஒளி..!

ஒளியானது ஆற்றல் செலவு ஏதுமின்றி, எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணிக்கும்; எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதிபலிக்கும் என  இயற்பியலாளர்கள் நம்பினர். அந்த கருத்தை தனது அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் சுக்கு நூறாக்கியவர் இராமன் .ஒளி ஒவ்வொரு பிரதிபலிப்பின் போதும், ஒரு தளத்தின் மீது மோதுவதால், அதற்கு சக்தி இழப்பு உண்டாகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் சர்.சி. வி. இராமன். இந்த ஒளியின் சக்தி இழப்பானது, அந்த ஒளி பலநிற வண்ணத்தில் பிரியும்போது சரிகட்டப்படுகிறது., அப்போது, ஒளியின் அலை நீளம் ஒரு நுண்ணிய அளவில் குறைந்து நிறமாற்றம் அடைகிறது. அது நீல நிறத்தை நோக்கி பிரிகிறது. முடிவில், ஒளியின் பிரதிபலிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப, நீலமாக மாறுகிறது. இதுதான் இராமன் கண்டுபிடித்த சூட்சும மந்திரம்..

நீருக்கு நிறம் உண்டா?

இல்லை   வானின் வண்ணத்தை கடல் பிரதி பலிப்பதால் கடலும் நீல நிறமாகத் தெரிகிறது. பொதுவாக பிரதிபலிப்பின் போதும், பிரதிபலிக்கு முன்பும், பிரதிபலிப்புக்குப் பின்னும், வெளிப்படும் அலைகளின் நீளத்தில்  மாறுபாடு ஏற்படுகிறதுஇந்த வித்தியாசத்தைக் கொண்டு, பிரதிபலித்த  பொருளின்  தன்மை  என்ன  என்பதை  அறியமுடியும். இதுதான்  இராமன் விளைவு. அதாவது, ஒளியின் சிதறல் என்பது, ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் வழியே பயணிக்கும்போது, அதிலிருந்து பரவலாக வெளியேறும் மிகக் குறைவான அலை நீளம் உள்ள ஒளிக்கற்றைகள, அதிகம் சிதறடிக்கப்படுகின்றன. அதிலுள்ள போட்டான் (photon)  துகள்கள் சிதறி,வண்ணத்தை உண்டுபண்ணுகின்றன அவைதான்  சிதறடிக்கப்பட்டு பல வண்ணங்களில், அவற்றின் அலை நீளத்திற்குத் தகுந்தபடி தெரிகின்றன. இதுதான் இராமன் விளைவு(Raman Effect) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது

  1.  படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி(Rayleigh scattering causes the blue color of the daytime sky and the reddening of the Sun at sunset. வானின் நீல நிறத்துக்கும், சூரியனின் அஸ்தமனத்தின் போது உண்டாகும் சிவப்பு வண்ணத்துக்கும் காரணி : ராலே சிதறல்தான். )
  2.  முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
  3. முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள் 

தேசிய அறிவியல் தினம்..!

இந்திய அறிவியல் மேதை சர்.சி.வி இராமன்  தான் கண்டு பிடித்த அறிவியல் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த தினம் பிப்ரவரி 28 . ராமன் இந்த ஒளியின் சிதறலைக் கண்டுபிடித்ததனால், இது இராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இராமன் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கருதி, இந்திய அரசின் அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்துறையும் இணைந்து,1986 லிருந்து இராமனின் அறிவியல் கண்டுபிடிப்பின் நினைவாக, பிப்ரவரி 28  தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. இந்த நாள் இந்தியா முழுவதும், கல்விக் கூடங்களிலும்அறிவிலாளர்களாலும் கொண்டாடப்படுகிறது.

நிறப்பிரிகை.! 

சூரிய ஒளிமழைத் துளி என்ற முப்பட்டகத்தின் வழியே. 40 -42 பாகை கோணத்தில் விழும்போது, வானத்திரையில்சிவப்புஆரஞ்சு  மஞ்சள், பச்சை, நீலம்கருநீலம் மற்றும் வயலெட் என்னும் 7 வண்ணங்கள் கலந்த, வானவில் என்ற ஓவியம் தீட்டப்படுகிறது. வெள்ளை சூரிய ஒளியில் கலந்துள்ள வண்ணங்கள் ஒளி ஊடுருவும் பொருள் வழியே பாயும்போதுபல வண்ணங்களாகப் பிரிவதேநிறப் பிரிகை..இதனைக் கண்டுபிடித்தவர் சர் ஐசக்  நியூட்டன்.  ஆனால் இதே ஒளி சிலசமயம்சிலப் பொருள்கள் மூலம் ஒரே ஒரு நிறத்தை மட்டும் வெளியிடும். இது ஒற்றை நிற ஒளி எனப்படுகிறது 

 வெள்ளையின் வண்ணப்.பிரிவுகள்!    

 நாம் பார்க்கும் வெண்மை ஒளி , 7 வண்ணங்களாகப்  பிரிகிறது. ஆனால் ஒவ்வொன்றின் அலை நீளமும் வெவ்வேறாக இருக்கிறது. இந்த வண்ணப்பிரிகையில்வானவில்லின் மேல்பக்கம் உள்ள சிவப்பின் அலைநீளம், 720 நானோமீட்டர்(nm) . இதுதான் அதிக அலைநீளம் கொண்டது. வானவில்லின் அடிப்பகுதியில் உள்ள வயலெட்டின் அலைநீளம் 380  நானோமீட்டர்(nm) .இது குறைவான அலைநீளம் உள்ளது.இவைகளுக்கு இடையில்தான்மற்ற வண்ணங்கள் காணப்படுகின்றன. நமது கண்ணிலுள்ள விழித்திரையின், வண்ணவாங்கிகள் பெரும்பாலும்சிவப்புபச்சை மற்றும் நீலம் வண்ணத்தையே எளிதில் அடையாளம் காணும்  வகையில் உருவாக்கப்பட்டிரு க்கின்றன. இதனால்தான் நமக்கு வண்ணப்பார்வை சாத்தியமாகிறது. சிவப்பு,பச்சைநீலம் என்ற மூன்று வண்ணங்களேமுக்கிய நிறங்கள் (Primary colors) என அழைக்கப்படுகின்றன

அறிவியல்..கண்டுபிடிப்பும்….நோபல்..பரிசும்..! 

அறிவியல் வரலாற்றில்,இந்திய சரித்திரத்தில், 1928 , மார்ச் 16 ம் நாள் ஒரு முக்கியமான, தினம்... அன்றுதான் .  C.V.இராமன் பெங்களூரு, தென்னிந்திய அறிவியல் கழகம் மற்றும் மத்திய கல்லூரியின், அறிவியல் மன்றத்தின் ஒரு சிறப்பு விருந்தினராக பேச அழைக்கப்பட்டார்அங்கு தன் மாணவர்களானகிருஷ்ணன் மற்றும் வெங்கடேஸ்வரனுடன் இணைந்து தான் கண்டுபித்த,  இயற்கை ரகசியமான, தனது இயற்பியல் கண்டுபிடிப்பை முதன் முதல் உலகுக்குத் தெரிவித்தார்.  இது உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.. அதுவே இராமன் விளைவு என்றும் அழைக்கப் பட்டது. அலைக் கற்றையிலிருந்து   சிதறிய வரிகளும் ராமன் வரிகள் என்றே சொல்லப்பட்டன. ஒளி, போட்டான் (Photon) துகள்களால் ஆனவை என்று உறுதி செய்தது ராமன் விளைவு. இது. பல வித்தியாசமான பொருள்களின்மூலக்கூறு மற்றும் படிக அமைப்பு பற்றிய அறிவியல் ஆய்வில்தேடலில் மிகவும் உதவி செய்ததுராமன் விளைவுக்காக 1930 ல்சர். C.V.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

வானின்… நீல..நிறம்..!

குறைவான நீளமுள்ள அலைநீளங்கள்தான் சிதறுகின்றன என்றால்வானம் வயலெட் ஆகத்தானே தெரிய வேண்டும். ஏன் நீலம் நிறம்.?   சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்கள்சரியான அலைநீளத்தில் தான் வருகின்றன. ஆனால்உயரத்தில் உள்ள வளிமண்டலத்தால்அவை உறிஞ்சப்படுகின்றன. எனவேநாம் பார்க்கும் ஒளியில் குறைவான வயலெட் வண்ணமே தெரிகிறது.  இது வினாவுக்கான பாதி பதில்தான். மீதி விடை. நமது கண்கள்தான் எப்படி..? வானவில்லில் அனைத்து நிறங்களும் தெரிகின்றன. நமது கண்ணின் செயல்பாடுதான்வானம் நீலமாக தெரிய காரணம். அதுதான்கண்ணின் விழித்திரைசிவப்புநீலம் மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களுக்கேஅதிக தூண்டுதல்  ஏற்படுத்துகின்றன. மேலும்வயலெட் நிறத்தை அவ்வளவாக கண்டுகொள்ளாமல், அருகில்  காணப்படும் நீலத்துக்கே முக்கியத்துவம் தருவதின் விளைவே வானம் நீல நிறமாகத் தெரிகிறது. அதனைப் பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாக உள்ளது. .  ஆனால்வளிமண்டலத்தில் நீங்கள் சுமார் 30 கி.மீ உயரத்துக்கு மேல் போய்இந்த வளிமண்டலத்தைப் பார்த்தால்,நீலமாகத் தெரியாதுமுழுக் கருப்பாகத்
தெரியும்.

பொருளின் நிறம்..!

ஒளி ஒரு பொருளின் மேல் பட்டு பிரதிபலிப்பதாலேயே அது இருப்பதை நாம் அறிகிறோம். ஒளிக்கதிர்கள் பொருளில் படும்போது, அதன் தலைகீழ் பிம்பம் கண்ணின் விழித்திரையில் விழுகிறது. மூளையின் உதவியுடன், பிம்பத்தை நேராகப் பார்க்கிறோம். பொருளின் உருவமும்,வண்ணமும் மூளையால் அறியப்படுகின்றன. ஒரு பொருள் தன் மேல் விழும் ஒளிக்கற்றைகளில், உட்கிரகித்தது போக, பிரதிபலிக்கும் நிறமே. பொருளின் நிறமாக நாம் உணர்கிறோம். இதுதான் உண்மை…

முக்கிய இடங்களில் சிவப்பு சிக்னல்..!

சிவப்புக் கதிர் மற்ற நிறங்களைவிட அதிக தொலைவு பயணிக்கும், மிகத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, சிவப்பு வண்ணமே முதலில் தென்படும். எனவேதான், முக்கிய இடங்களான, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவ மனை மற்றும் ஆபத்து என குறிக்கும் சமிக்ஞை. விளக்குகளை நாம் எளிதில். தொலைவிலிருந்தே கண்டறிய சிவப்பு வண்ண விளக்குகளே வைக்கப்படுகின்றன.

ராமனின் அரசுப்பணி :  

இராமன்1888, நவம்பர் 7 ம் நாள் வெங்கடேசுவர அய்யர் மற்றும் பார்வதி அம்மாளின் மகவாகப் பிறந்தார்தந்தை கணிதம் மற்றும்  இயற்பியல் பேராசிரியர். அவரது இயற்பெயர் :சந்திரசேகர வேங்கடராமன்.  சென்னை மாநிலக் கல்லூரியில், இராமன் 1902 ம் ஆண்டில்  பட்டப்படிப்பு(B.A) பயின்றார்; அதில் தங்கப் பதக்கம் பெற்றார். அதே ஆண்டில் இராமன் லோகசுந்தரி என்ற பெண்ணை மணம் முடித்தார். கொல்கொத்தாவில் அரசின் நிதி துறையில்இணை பொதுக்கணக்கியல் அதிகாரியாக சேர்ந்தார். ராமன் தனது அறிவியல் ஆர்வத்தை புதைத்துவிட்டு தன் தந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் எஃப்.சி. எஸ். தேர்வு எழுதினார். அதில்  இந்தியாவிலேயே முதலிடம் பெற்று அப்போதுதான் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

ராமனைப் பந்தாடிய பிரிட்டிஷ் அரசாங்கம்.!

இராமனும்ஆஷூபாபுவும் சேர்ந்து எழுதிய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று 1908ல் லண்டன் ராயல் கழக  அறிவியல் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. பிரிட்டிஷ் அரசாங்கம்  இராமனை  முதலில் ரங்கூனுக்கும், பிறகு நாக்பூருக்கும்  தூக்கி   பந்தாடியது. 1917வரை அவர் பலமுறை பல ஊர்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். முடிவில் மனம் நொந்த இராமன், அந்த வேலையைத் தூரவீசிப்போட்டுவிட்டு, கல்கத்தா திரும்பினார். அப்போது டிராம் வண்டியில் பயணம் செய்த இராமன் . ஒரு கட்டிடத்தில் ‘விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார் நுழைந்தார்.. உடனே அங்கேயே தங்கிஅறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை உதறித் தள்ளி விட்டுஅறிவியல் ஆராய்ச்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார். இராமன் பின்னர். கல்கத்தா அறிவியல் கல்லூரியில் அஸ்தோஷ் முகர்ஜி மூலம் கல்லூரி ஆசிரியர் ஆனார்.ஆனால்  சம்பளம் முந்தைய வேலையைவிட பாதிதான் கிடைத்தது. ஆனால் அங்கு நிம்மதியாக பணி புரிந்தார்

நோபல் பரிசு 

நோபல் பரிசுக்கு இராமன் விண்ணப்பித்து விட்டு, அங்கு செல்ல பயணச் சீட்டும் எடுத்துவிட்டார். தனக்கு காட்டாயம் நோபல் பரிசு கிடைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை அவரிடம் இருந்தது. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை, நோபல் பரிசும் கிடைத்தது. ஆனால் நோபல் பரிசு கிடைத்ததை அறிவிக்கும் நோபல் கமிட்டியின் தந்தி இராமனுக்குப் போய் சேராமல் தாமதம் ஆனது. காரணம், அந்த தந்தியை இராமனிடம் கொடுக்க விருப்பம் இன்றி, வைஸ்ராய்  இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். தனது வெளிநாட்டு நண்பர்கள் மூலம்   தனக்குப் பரிசு கிடைத்த தகவலை  ராமன் அறிகிறார்நோபல் பரிசை நேரில் பெற வேண்டாம் என வெள்ளை அரசு ராமனிடம் கூறுகிறது. மேலும் .நோபல் பரிசுக்கு ஏற்புரை வழங்க இராமனுக்குத் தடையும்  விதிக்கிறது வெள்ளையர் அரசு. .ஆனாலும் கூட, இராமன், தடையை மீறி ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் சென்று நோபல் பரிசினைப்  பெறுகிறார்.   பரிசு பெற்ற இராமன், பேச அனுமதி கேட்டுநோபல் விழாவில் இராமன் பேசினார். அவர் நான் பெற்ற நோபல்பரிசை, அதற்கான பணத்தை, அங்கே இந்தியச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முழங்கினார். ஆனால் அவருக்கும் இன்னும் ஒரு சோகம். அன்று இராமன் நோபல் பரிசு பெற்ற நிகழ்வை  யாருமே படம் பிடிக்கவில்லை.

நோபல் பரிசு நிகழ்வு..!

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.  நோபல் பரிசு வழங்கும் தினம். அங்கு ஓர் இந்தியரும்அவரது மனைவியும் வந்திருந்தனர்... வந்திருந்தோர் அனைவரும் அவரை இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தவர் என்றே நினைத்தனர்.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்காக  இராமன் பெயர் அறிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டார்.. பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.ஏனெனில் இதுவரை வெள்ளையர் இல்லாத யாரும் நோபல் பரிசு பெற்றதே இல்லை. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி இராமன்தான்..!

1930  ஆண்டு நோபல் பரிசுக்கு பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். அப்போது ஒளியைப்பற்றி ஆராய்ந்தவர் இராமன் ஒருவர்தான். நோபல் அறக்கட்டளை  கொள்கைப்படி, நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காகவும், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனபதே.. இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டுபிடிப்பு “ராமன் விளைவுமட்டுமே! இதுவே  இராமனுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்ததுஉலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் ஆய்வு செய்து முடித்து –(இரண்டு ஆண்டுகள்- நோபல் பரிசு பெற்றவர் இராமன் அவர்கள் தான்!

ராமனும் ஆல்கஹாலும்..!  

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்தான். அவரை  இங்கிலாந்து அரசாங்கம் அழைத்து சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. அப்போது அறிஞர்கள் ஒன்று கூடி அவரை விருந்துக்கு அழைத்தனர். அங்கு ராமனுக்கும் ஒரு கோப்பை மது வழங்கப்பட்டது.” “ஐரோப்பியரின்   கவுரவச் சின்னம் மது. அருந்துங்கள்!” என்றனர். “ஆல்கஹால் மீது இராமன் விளைவைப் பார்த்துவிட்டீர்கள். இப்போது இராமன் மீது ஆல்கஹால் விளைவைப் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று சொல்லிச் சிரித்தஇ ராமன்.” மன்னிக்க வேண்டும்.அருந்துவதற்கில்லை” என்று கறாராகக் கூறி மறுத்து விட்டார் இராமன்.

உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.

இராமன் தனது  பிற்காலத்தில் ஒரு  கல்விமையம் அமைக்க எண்ணினார். எனவே  மொத்த பணத்தையும்கோபாலராவ் வங்கிஎன்ற தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார், நிறுவனம் திவாலாகிப் போனது.மொத்த பணத்தையும்..இராமன் இழந்தார்.

: ராமனின் கண்டுபிடிப்பு பயன்பாடு & பெருமை 

தோல் வாத்தியக்கருவிகளின் அதிர்வுஒலிஅகஒலி பற்றியும் சர். C.V.ராமன் ஆராய்ச்சி செய்திருக்கிறார்

  •  சர்.C .V .இராமனுக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. 
  •  இத்தாலி நாட்டின் உயர்பதக்கமானமேட்யூச்சிபதக்கம், 1929 ஆம் ஆண்டில் ராமனுக்கு வழங்கப்பட்டது.
  • , பிரிட்டிஷ் பேரரசால்நைட் ஹீட்என்ற பட்டம், கொடுக்கப்பட்டது 
  •  இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டமும் இராமனுக்கு வழங்கப்பட்டது. 
  • , 1935ல் மைசூர் அரசர்ராஜ்சபாபூசன்பட்டம்,மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டது. 
  •  1941 ல், பிலிடெல்பியாநகர் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கான “ பிராங்க்ளின் பதக்கம்” தரப்பட்டது. 
  •  1954 ல் இந்தியாவின் உயர் விருதான  பாரத  ரத்னா வழங்கப்பட்டத.
  •  1957 ல்லெனின் அமைதிப்  பரிசு இராமனை  வந்தடைந்தது. 

 சர்.  C.V.ராமன்  1943ல் Dr.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து  ‘Travancore Chemical and Manufacturing Co. Ltd-ன்னு ஒரு கம்பெனி தொடங்கினார்.  அதன் மூலமாக தென்னிந்தியாவில்  4 தொழிற்சாலைகள் உருவாயின.. 

சர். சி.வி. இராமன்.1970 , நவம்பர் 21 ல் இயற்கை எய்தினார்.

– பேரா.சோ.மோகனா

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்




1. மூங்கில் காடே
புல்லாங்குழலாகியது
வண்டுகளின் ரீங்காரம்!

2. கொழுந்து விட்டெறிந்த
வயிற்றுத்தீயை அணைத்தது
கைப்பிடிச்சோறு!.

3. கொட்டிய மழையிலும்
அழியாத வண்ணங்கள்
வானவில்!.

4. பொதுத்தேர்வு முடிவுகள்
தூக்குமேடையாகின
மின்விசிறிகள்!.

5. விலை போகாத பூக்கள்
வாடியது
வயிறு!.

6. எவ்வளவு உடைத்தாலும்
உண்மையை மட்டுமே சொல்கிறது
கண்ணாடி!.

7. குளத்தில் தூண்டில் வீசியதும்
மாட்டியது
நெகிழி!.

8. விழிநீரின் சுமை தாங்காமல்
கனத்தது
இதயம்!.

9. ஒட்டாத பக்கங்களுக்கும்
ஒட்டிய வயிறும் காத்திருந்தன
உலைக்கு!.

10. நிலத்தை விற்றதும்
வாசலில்
கடன்காரன்!.

– ரா.சிவக்குமார்
சென்னை
9884824086

நீலமீன்கள் கவிதை – அப்துல் வதுத்

நீலமீன்கள் கவிதை – அப்துல் வதுத்




கண்ணாடிக் குடுவையின்
மறுபுறம் அமர்ந்து
வண்ண வண்ணமாய்
நீந்தும் மீன்களை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்..
துள்ளி விளையாடும் மீன்களுடன்
சேர்ந்து விளையாடும்
உன் நீலமீன் கண்களை
நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

– அப்துல் வதுத்
ஓமன்